சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

Wednesday, October 31, 2012

பாட்ஷா வெற்றியும் துப்பாக்கி தோல்வியும்


ரஜினியின் பாட்ஷா படம் மெகா ஹிட்டானதற்கும் அண்மையில் சில படங்கள் (ஓரளவு நல்லா இருந்தும்) தோல்வியானதற்கும் காரணம் ஒன்றே ஒன்றுதான். அது இணையம் என்பதனை ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி என்றாலும் தகும்.

ஏனெனில் இணையப் பாவனை என்பது அந்தளவிற்கு எம்மிடையே பரந்துகிடக்கின்றது (என்ன பண்ண பேஸ்புக்கும் கூகுளும்தான் இணையம் என்கிற ஒரு கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது). இதனால் ஏராளமான நன்மைகளும் கூடவே சில தீமைகளும் வளர்ந்துகொண்டே இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனாலும்; முடிந்தவரை நன்மைகளைப் பெற நாம் முயற்சிப்போம்.

வளர்ந்து நிற்கும் இணையத்தினால் இன்று தமிழ் இணையத்தளங்கள் மற்றும் ப்ளொக்கர்கள் அதிகரித்துள்ளமை வரவேற்கத்தக்கவைதான். ஆனால் இந்த வளர்ச்சியானது தேவையான விடயங்களில் கிளர்ச்சியை ஏற்படுத்தினால் பரவாயில்லை அதற்குப் பதில் சில பல விடயங்களின் வீழ்ச்சிக்கு காரணமாவதே வருத்தம்.

குறிப்பாக, மாட்டித்தவிக்கும் பிரதான அம்சங்களில் ஒன்றுதான் தமிழ்சினிமா. இணையத்தின் வளர்ச்சியால் பல தேவையான விடயங்களை அறிந்துகொள்ள ஒரு நடுநிலையாளனாய் இருந்து வந்த ப்ளொக்கர்ஸ் மத்தியில் இன்று பல்லாயிரக்கணக்கான ஈயடிச்சான் ப்ளொக்கர்ஸ் ஊடுருவியதில் பல படங்களுடன் சேர்த்து பல தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் ஈயடித்துக்கொண்டிருக்கின்றனர் என்பதில் சொந்தச் சரக்கை எழுதும் ஒவ்வொரு ப்ளொக்கர்ஸுக்கும் வருத்தமே.

அந்த வகையில் இந்த வருடமும் கடந்த வருடமும் அதிகளவிலான தமிழ் திரைப்படங்கள் தோல்வியடைய இணையத்துடன் சேர்ந்து ஈயடிக்கும் தொழில்நுட்பம் வளர்ந்ததும் ஒரு காரணம். (தமிழ் பட நாயகர்கள் மற்றும் இயக்குனர்களிடையேயும் இந்த தொழில்நுட்பம் ரொம்பவே அதிகம்தான்)

உண்மையில் ஓரளவு நல்ல படங்களையும் சிறந்த மொக்கை படங்களாக்கிய பெருமை பரந்தளவில் வெளியாகும் ஈயடிக்கும் விமர்சனங்களுடன குறித்த நடிகர்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுமே.


அஜித், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், கார்த்தி போன்ற முன்னணி நாயகர்களுக்கு எதிராகவும் அவர்களின் படங்களுக்கு எதிராகவும் குறி வைத்து பேஸ்புக்கில் ஆரம்பிக்கப்படுகின்ற குரூப்கள் அனைத்தும் ஒரு படத்தினை சாதாரணமாக திரையரங்கு களிலிருந்து விரைவில் வெளியேற்றுவதற்கு காரணமாகின்றது.

அண்மையில் இவ்வாறு வெளியான மயக்கம் என்ன, 3, சகுனி, பில்லா 2, தாண்டவம், மாற்றான் என இந்த வரிசை மிக நீளமானது. இந்த படங்கள் எதுவும் படு மொக்கை திரைப்படங்கள் இல்லையென்றாலும் இணையத்தளங்களில் வெளியான மோசமான விமர்சனங்களே இப்படங்களை தோல்வியாக்கியது. (ஆனாலும் இந்த வரிசையில் இல்லாத சில படங்கள் ஓடவில்லை என்றாலும் போஸ்டரில் 100 நாட்கள் ஓடிவிட்டது... அது வேறு கதை)

உண்மையில் பாட்ஷா படமும் தோல்வியை சந்தித்திருக்கும், அப்போது இணையம் இருந்திருந்தால் ஏனெனில் பாட்ஷா படத்திற்கு ஏராளமான பத்திரிகைகள் எதிர்மறை விமர்சனங்களை அள்ளி வீசியது பலருக்கும் நினைவிருக்கும் (தெரியாதவங்க கேட்டு தெரிஞ்சிக்கங்க). ஆனாலும் பாட்ஷா மெகா ஹிட்.

ஆனால் அன்று இணையம் வளர்ந்திருந்தால் ஈயடிக்கும் வல்லமை படைத்தவர்களும் ரஜினி ஹேட்டர்ஸ்ஸும் இணைந்து படத்தை துவம்சம் செய்திருக்கலாம் (பாபாவுக்கு நடந்த மாதிரி... ஆமா... பாபா நல்ல படமா? கெட்ட படமா?). ஏனெனில் நடிகர்களின் ஹேட்டர்ஸ் மற்றும் ஈயடிப்பவர்களை தாண்டி மக்களை திரையரங்குக்கு வரவழைப்பது அத்தனை கடினமான காரியம்.

இருப்பினும் சில மொக்கை படங்கள் விமர்சனங்களால் ஓரளவு தப்பித்தும் இருக்கிறது (இதுக்கு உதாரணம் வேணாமே... சிலர் மனம் வருத்தப்படும்).

அதேவேளை சில சமயங்களில் இத்தனை தடைகளையும் தாண்டி சில படங்கள் வெற்றிபெற்றுள்ளது. உதாரணமாக எதிர்மறையான பல விமர்சனங்களை கடந்து பில்லா ஒன்று, எஸ்.எம்.எஸ் போல வெகு சில படங்களே வெற்றி பெற்றுள்ளது. இந்த வரிசை தொடர வேண்டும் அவை நல்ல படங்களாக இருந்தால்.

அந்த வகையில்  விரைவில் வெளியாவுள்ள துப்பாக்கி படத்திற்கும் விஜய்க்கும் எதிராக இன்று பேஸ்புக்கில் வேலைகள் ஆரம்பமாகிவிட்டது (இதெல்லாம் விஜய்க்கு புதுசா... ஏன்னா பேஸ்புக்கில் அதிகமா கலாய்க்கப்படுற நடிகர் இவர்தான் இத நான் சொல்லல்ல போய் பாருங்க). எனவே துப்பாக்கி ஒரு நல்ல படமாக இருந்தால் அதற்கெதிரான வேலைகள் அத்தனையும் ஏற்றுக்கொள்ள முடியாதவையே!. (விஜய்க்கிட்ட இருந்து நல்ல படமா? நடக்காதே... இப்படியெல்லாம் சொல்லப்படாது)


ஏற்கனவே பாடல்கள், போஸ்டர் மற்றும் ட்ரெய்லரை தாரளமாக கிண்டல் செய்து எதிர்மறை எண்ணத்தையும் தோற்றுவித்துவிட்டனர். மேலும் படம் வெளியானதும் முதலாவது விமர்சனத்தை ஈயடிக்கவும் இணையத்தளங்கள் தயார். அந்த விமர்சனம் எதிர்மறை எனில் செத்தாண்டா சேகர் நிலைமைதான் துப்பாக்கி படத்திற்கும்.

எனவே ஈயடிக்கும் இணையத்தளங்கள் இனிமேலாவது வருகின்ற படங்கள் மீது கொஞ்சம் கருணை காட்டுங்க சாமி மேலும் ஈயடிக்கும் தொழில்நுட்பத்தை குறைக்க முயற்சி எடுங்க.

இப்போ தெரியுதா துப்பாக்கி எப்படி தோல்வியடைப்போகுதுன்னு... அப்ப பார்த்து சூதானமா நடந்துக்குறீங்களாண்ணா... கொஞ்சோண்ணு ஸ்லிப்பாச்சு சாங்குதாண்டியோவ்!!!

சாதா கதைகளை மெகா கதைகளாக்கும் ஊடகங்கள் : பீதியை கௌப்புறாய்ங்களே...


பிந்திய செய்திகளை முந்திங்கொண்டு தரும் ஊடகங்கள் பல இன்றைய நாட்களில் தேவையான செய்திகளை எமக்கு தெரியப்படுத்துவதை விட சாதா செய்திகளை மெகா செய்திகளாக்கி பீதியை வரவழைக்கும் ஊடகங்கள் எதிர்பார்ப்புக்கள்தான் என்ன? எதற்காக இந்த ஷங்கர் பட ஸ்டைல்?

ஊடகங்கள் உண்மையில், உண்மைகளை மக்களிடத்தில் சேர்ப்பதை விட மக்களை ஊடகங்களை நோக்கி சேர்ப்பதிலேயே கவனம் செலுத்துகின்றது என்பது அண்மைய கால பல செய்திகள் உறுதி செய்கின்றது.

தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையச்செய்திகள் என எவ்வகை செய்தி ஊடகங்களை எடுத்துக்கொண்டாலும் கடந்த ஒரு வாரமாக தங்களது ஊடகங்களின் பக்கம் எம்மை ஈர்க்க பெரும்பாலான ஊடகங்கள் பயன்படுத்தி வருகின்ற விடயம் 'காலநிலை மாற்றம்' என்பதை நீங்களும் அவதானித்திருப்பீர்கள்.

வங்களா விரிகுடாவில் தாளமுக்கம் இதனால் மக்கள் பீதி, நாடுபூராகவும் அடை மழை அடுத்த 3 நாட்களும் காற்றும் இடிமின்னலுடன் கூடிய மழை என்ற பாணியிலமைந்த செய்திகள் இடம் பெறாத ஊடகங்களே இல்லை எனலாம் அதுவும் இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக திரைக்கு வந்து... என்பது போல ஹை பிட்ச்சில் உச்சரித்து நல்லாத்தான் கௌப்புறாய்ங்கடா பீதிய... (ஆனா எங்களுக்கிட்ட நடக்குமா? நாங்கெல்லாம் சுனாமியில ஸவிம்மிங் போடுறவங்க ஆச்சே)

காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்னவோ உண்மைதான் இருப்பினும் இவை சீரற்ற காலநிலை மாற்றமோ அச்சத்தை ஏற்படுத்தும் மாற்றங்களோ என்றால் இல்லை என்பதே நிதர்சனம். சாதரணமாக பருவப்பெயர்ச்சிக் காலத்தில் ஏற்படுகின்ற சீரான மாற்றங்களும் மழையுமே.

ஆனாலும் குறிப்பாக இந்திய மற்றும் இலங்கை ஊடகங்கள் இக்காலநிலை மாற்றத்திற்கு அளவுகடந்த முக்கியத்துவம் கொடுத்து அலாட்டாகிக்கடா ஆறுமுகம் என்று அலார்ட் பண்ணுறதுதான் கொஞ்சம் ஓவரா தெரியுது.

இதனால் மக்கள் அநாவசியமாக அச்சத்திற்குள்ளாகி இருப்பதே வருத்தமாக உள்ளது. இதற்கா காலநிலை மாற்றம் பற்றிய செய்திகள் வேண்டாம் என்று சொல்லவில்லை. நடைபெறும் மாற்றங்களை மட்டும் தெரியப்படுத்தினால் போதும் ஏனெனில் ஒன்றை ஒன்பதாய்ச் சொல்ல ஏற்கனவே பலர் இங்கே இருக்கிறார்கள்.

2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமிக்கு பின்னர் எம்மவர்கள் கடலினை அதிகமாகவே அவதானிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். காரணம் கடலிலிருந்து சிறிய சிப்பி கரையொதுங்கினால் போதும் அதிசயம், ஆச்சரியம் என்று சொல்லிக்கொண்டு அதனை பார்க்க சும்மா கூட்டம் பிச்சுக்குது.

2004 இற்கு முன்னரும் பலமுறை வெள்ளமும், பாரிய மழை, பாரிய வெயில், பெரிய காற்று, வங்களா விரிகுடாவில் தாளமுக்கம் என ஏராளமான சம்பவங்கள் நடந்தேறியாகிவிட்டது. ஆனால் அப்போது இப்போதுள்ள அளவிற்கு மக்கள் அச்சம் கொள்ளவில்லை. காரணம் அப்போது நிறைய ஊடகங்களும் இல்லை போட்டியும் இல்லை.

ஆனால் இன்று ஊடகங்களிடமிருந்து அறிவுறுத்தல்களுக்கு பதில் அச்சுறுத்தல்கள் வெளிவருவது ஊடகங்களின் வளர்ச்சி அல்ல செய்திகளுக்கான வரட்சி என்பது தெளிவாகின்றது.

மேலும் காமச் செய்திகளில் சிக்கியிருந்த ஊடகங்கள் காலநிலைச் செய்திகளிற்கு தாவி ஆறுதலளிப்பார்கள் என்ற நினைப்பில் மழையை அள்ளிப்போட்டு மக்களிடையே பீதிய கௌப்புறாய்ங்களே...

கோடை என்டா வெயிலடிக்கிறதும் மாரி என்டா மழையடிக்கிறதும் சகஜம்தானே... இதுக்கெதுக்கு புதுப் புரளிய கௌப்புறீங்க...

Saturday, October 27, 2012

Iron Man 3 - Teaser Trailer and an Overview

தமிழில் முதலாம் பாகம், இரெண்டாம் பாகம் என்று இதுவரை இரண்டு திரைப்படங்களே வெளிவந்துள்ளது. அதில் பில்லா 2 இற்கு பிரம்மாண்டமான ஆரம்பம் கிடைத்திருந்தாலும் அதனைத் தக்கவைக்க முடியாது போனது. சிம்பு மன்மதன் 2 எடுக்கப்போவதாக பல வருடங்களாக கூறிக்கொண்டு இருக்கிறார்.வெளி வந்தால்தான் உண்மை. அது வரைக்கும் வரும் ஆனா வராது தான். 



ஆனால் Hollywood திரைப்படங்களைப் பொறுத்தவரையில் இரண்டாம், மூன்றாம் பாகங்கள் என்று தொடர்ந்து வெளியிடும் நோக்கத்திலேயே அனைத்து திரைப்படங்களும் எடுக்கப்படுகின்றன. அவை வெற்றியும் பெறுகின்றன. அத்திரைப்பட கதாபாத்திரங்களுடன் நாமும் வருடக்கணக்காக கூடவே பயணிப்பது போன்ற ஒரு தாக்கத்தை அவை ஏற்படுத்துவதே அவற்றின் வெற்றிக்கான காரணம். 

அந்த வரிசையில் Iron Man 3 அடுத்ததாக வரவிருக்கும் அமெரிக்காவின் Super Hero திரைப்படம். Marval Comics இனால் உருவாக்கப்பட்ட Iron Man Comics கதாபாத்திரத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் இது. 

ஏற்கனவே வெளியான Iron man 1 (2008), Iron Man 2 (2010) இன் தொடர்ச்சியாக இது வெளிவர இருக்கிறது. இதனைப் பற்றிய முழு விபரங்களும் திரைப்படம் வெளிவந்ததும் உங்களுக்கு விரிவாகத் தரப்படும். எனக்குப் பிடிக்காத Super hero திரைப்படம் இது. ஆனாலும் வெளியான இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றி அடைந்துள்ளன. 

Tony Stark (Iron Man) இற்கு நெருக்கமானவர்களை வில்லன், அவரைப் பழிவாங்க கடத்தியதும் அவர்களை மீட்கும்போது அவரது ஹீரோயிசத்திற்கும், வெற்றிக்கும் காரணம் அவரது super hero உடையா அல்லது தனக்குள் இருக்கும் மனித நேயமும் நம்பிக்கையும், திறமையுமா என்பதை Iron Man உணர்வதுதான் மூன்றாம் பாகத்தின் கதை.
தற்போதைக்கு 2013 இல் வெளிவர இருக்கும் மூன்றாம் பாகத்தின் Teaser Trailer உங்களுக்காக...

Thursday, October 25, 2012

கடவுள் இருக்கா? இல்லையா? : விடைதருமா ஹிக்ஸ் பொஸன் ஆராய்ச்சிகள்?



உலக வல்லரசுகளை சீண்டிப்பார்ப்பதற்கு தேவையான தைரியத்தினை விட எல்லாம் வல்ல அரசனான கடவுளை தீண்டிப்பார்க்கவே அசாத்திய தைரியம் வேண்டும். அவ்வாறானதொரு அசாத்திய தைரியம் தான் 'ஹிக்ஸ் பொஸன்' (Higgs Boson) ஆராய்ச்சிகளில் கால்பதிக்கத் தேவை. காரணம் இவை கடவுளின் துகளினை நோக்கிய ஆராய்ச்சிகள் என்பதே.

அண்டங்களை உருவாக்கி தன்கட்டுப்பாட்டுக்குக் கீழ் வைத்திருக்கும் மிகப்பெரிய சக்தியே கடவுள் என்கிறார்கள் தெய்வ நம்பிக்ககை கொண்டோர். ஆனால் தற்போதைய நவீன உலகை தன்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் விஞ்ஞானமோ பெரு வெடிப்பிலே (Big Bang) அண்டங்கள் உருவானதாக ஸ்டேன்டர்ட் மொடல் தியரி (Standard Model Theory) ஊடாக சொல்கின்றது.

இருப்பினும் கடவுள் நம்பிக்கையினடிப்படையில் இது முற்றிலும் மாறுபட்டதுடன் ஏற்றுக்கொள்ள முடியாததும் கூட. நம்பிக்கைகள் என்பது மாறுபட்டிருப்பதில் ஒன்றும் தவறில்லை. ஏனெனில் விஞ்ஞானத்திலும் நம்பிக்கைகளுண்டு அவை கொள்கைகளாவே இருக்கும் ஆனால் குறித்த கொள்கை உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே விதியாகும். அவ்வாறே தற்போதுள்ள அண்டம் உருவானதன் அடிப்படையை விளக்கும் கோட்பாடும் கொள்கையளவிலேயே உள்ளது எனவே இதிலுள்ள நம்பிக்கைளும் மாறலாம் அல்லது மாறாமலும் போகலாம்.

உயிரின் படைப்பு, கருந்துளை (Black Hole) போல இன்று வரையில் விஞ்ஞானத்திற்கு சவால்விட்டுக்கொண்டிருக்கும் அம்சங்களில் ஒன்றுதான் இந்த அண்டம் உருவான விதம். இருப்பினும் இதற்கெல்லாம் சோடை போகவில்லை தற்கால விஞ்ஞான வளர்ச்சியும் விஞ்ஞானிகளும் எனவே விரைவில் தீர்வினை வழங்குவர் என எதிர்பார்க்கும் அளவிற்கு இன்றைய கண்டுபிடிப்புக்களும் ஆராய்ச்சிகளும் அமைந்துள்ளது.

அவ்வாறு நம்பிக்கையளிக்கும் கண்டுபிடிப்புக்களில் ஒன்றுதான் 'ஹிக்ஸ் பொஸன்' எனப்படும் அடிப்படைத்துகளின் கண்டுபிடிப்பும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. மனிதனின் ஆளுகைக்கு எப்போது ஒரு அம்சம் அடங்கவில்லையோ அப்போதிலிருந்து அது கடவுள் சார்பாக நோக்க ஆரம்பிப்பது மனிதர்களின் வழக்கமாகிவிட்டது. இதனை தகர்த்தெறிவென்பது இயலாத காரியம். இவ்வாறான வழக்கம் விஞ்ஞானத்திலும் உண்டென்பதை உணர்த்தும் ஒரு அம்சம்தான் இந்த ஹிக்ஸ் பொஸன் எனும் அடிப்படைத் துகள்.

இந்த அடிப்படைத் துகளின் மறுபெயர் 'கடவுளின் அணுத் துகள்'. இவ்வாறானதொரு பெயரமைந்ததிலிருந்தே இது ஆராய்ச்சியாளர்களின் எண்ணங்களிலிருந்தும் ஆளுகையிலிருந்தும் எவ்வளவு தூரத்தில் உண்டென்பதை நாமும் புரிந்துகொள்ளலாம்.

உண்மையில் 'கடவுளின் துகள்' என்றால் என்ன? ஏன் இதற்கு இத்தனை தூரம் ஆராய்ச்சியாளர்கள் தங்களது மூளையை கசக்கிப் பிளிகின்றனர் என்றெல்லாம் எமக்கு கேள்விகள் எழலாம் ஒரு வகையில் அது நியாயமும் கூட.

கடவுளால் ஆக்கப்பட்டது உலகம் என்ற அடிப்படையின் அடிமடியில் கை வைக்கும் வியடம்தான் இந்த ஹிக்ஸ் பொஸன். காரணம் ஹிக்ஸ் பொஸன் எனப்படும் கடவுளின் துகள்களிலிருந்தே இந்த பேரண்டம் தோன்றியதாக விஞ்ஞானம் வியாக்கினம் கூறுகின்றது.

பெரு வெடிப்பு (Big Bang) மூலம் எவ்வாறு அண்டங்கள் உருவானதென விஞ்ஞானிகள் இவ்வாறு விளக்குகிறார்கள் ஒரு சிறு மணி அளவிலான அணுவாகவே இந்த பேரண்டம் காணப்பட்டது இந்நிலையில் அவ்வணுவில் ஏற்பட்ட பெரு வெடிப்பினைத் தொடர்ந்தே அணுக்களும், மூலக்கூறுகளும், இந்த பூமி, சூரியன்கள், எரிகற்கள், கிரகங்கள் மற்றும் இந்த பேரண்டமும் (Universe) உருவானது.

மேலும் இன்னும் இவை பிரிந்துகொண்டே இருக்கிறது இதனால் மேலும் பல அண்டங்கள், கூடவே கருந்துளைகளும் உருவாகிக்கிக்கொண்டுதான் இருக்கிறது. பெரு வெடிப்பு நிகழ்ந்த கணத்தில் அணுக்கள் ஒளியை விட அதி வேகத்தில் அனைத்து திசைகளிலும் சிதறுண்டன. அப்போது வெளியான எந்த அணுக்களுக்கும் நிறை (Mass) இல்லை. ஆனால், ஹிக்ஸ் பொஸன் எனப்படும் அடிப்படை துகளுடன் இணைந்து கொண்ட பிறகே, வெளியான அந்த அணுக்களுக்கு நிறை கிடைத்தது. இதுவே இந்த பேரண்டம் உருவானதன் அடிப்படை இதனை விளக்கும் கொள்கையே ஸ்டேன்டர்ட் மொடல் தியரி.

இக்கோட்பாட்டின்படி பேரண்டம் உருவாக 12 வகையான அணுத்துகள் அடிப்படையாக இருந்துள்ளது. இதில் 11 அணுக்கள் ஏற்கனவே ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனால் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் அந்த ஒரு அணுவே கடவுளின் துகள் என்பதே ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை.

இதனை நிரூபணமாக்க விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் முயற்சியின் வடிவமே ஹிக்ஸ் பொஸன் ஆராய்ச்சிகளின் ஆரம்பம். இதற்காகவே கொள்கையிலுள்ளதைப் போன்ற அமைப்பை செயற்கையாக பிரான்ஸ் - சுவிஸ் எல்லைக்கு ஜெனீவாவிற்கு கொஞ்சம் பக்கத்தில் அமைத்து கடவுளின் துகளுக்கான சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டது.

அதாவது பெரு வெடிப்பு கொள்கையில் சொல்லப்பட்டுள்ளதை நடைமுறைக்கு சாத்தியமானதாக மாற்றும் ஆபத்து மிக்க சோதனையே இது. இதனால் ஆரம்பத்திலிருந்தே இந்த ஆராய்ச்சிக்கு பெரும் எதிர்ப்பு காணப்பட்டது. இந்த சோதனை மூலம் கருந்துளை உருவாகலாம் மேலும் கடவுளுக்கு சவால் விடும் ஆராய்ச்சி என்பதால் பலரும் தங்களது எதிர்ப்பினை இச்சோதனை மேல் கொட்டித் தீர்த்தனர்.

ஆரம்பத்திலிருந்தே அறிவியல் கண்டுபிடிப்புக்கள் ஒவ்வொன்றையும் எதிர்த்ததோடு அதனை கண்டுபிடித்த விஞ்ஞானிகளின் உயிரையும் குடித்த அறிவுமிக்க சமூகமாயிற்றே எம் மனித சமூகம் அவ்வாறிருக்கையில் நேரடியாக கடவுளுடன் சம்மந்தப்பட்ட இந்த சோதனைக்கு அத்தனை இலகுவில் பச்சைகொடி காட்டிவிடுவோமா? என்றிருந்தது அந்த எதிர்ப்புக்கள் யாவும்.

பின்னர் அத்தனை எதிர்ப்புக்களையும் மீறி சோதனைகள் 2008 இல் ஆரம்பமானது. தற்போது வரை இந்த சோதனை திட்டத்திற்காக 7.5 பில்லியன் யூரோக்கள் செலவிடப்பட்டுள்ளதுடன் 100 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் விஞ்ஞானிகள் மற்றும் பொயியலாளர்கள் பயன்படுத்தப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த சோதனைகளை மேற்கொள்வென கிட்டத்தட்ட 300 அடி ஆழத்தில் 27 கி.மீ. தூரத்துக்கு வட்டமான சுரங்கம் அமைத்து அதற்குள் புரோத்திரன்கள் மற்றும் நியூத்திரன்கள் மோதிக் கொள்ளுவதற்கென Large Hadron Collider  (LHC) என்ற வட்ட வடிவ குழாயினை 5.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டு 5 ஆயிரம் விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியில் அணு மற்றும் கதிர்வீச்சுக்கள் என பலவற்றை தாங்கும் வல்லமையுடன் உருவாக்கப்பட்டது.

1800 'சுப்பர் கண்டக்டிங்' காந்தங்கள் புரோத்திரன்களை ஒளியின் வேகத்தில் 27 கி.மீ. வளையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொலய்டரில் சுற்றவிடப்பட்டு அது முழு வேகத்தை அடைந்தவுடன் புரோத்திரன்களையும் நியூத்திரன்களையும் விநாடிக்கு 600 மில்லியன் முறை நேருக்கு நேர் மோத விடப்பட்டுள்ளது. அதாவது ஒரு விநாடியில் இந்த 27 கி.மீ. தூரத்தை புரோத்திரன்கள் 11,245 முறை சுற்றி வந்துள்ளது. இந்த வேகத்தினை பெற சுமார் ஒன்றரை வருடங்கள் தேவைப்பட்டுள்ளது.

மேலும் இந்த சுரங்க ஆய்வகத்தின் உள் வெப்பநிலை, -271.3 பாகை செல்சியஸ் ஹீலியம் வாயுவைக் கொண்டு கிரையோஜெனிக் அமைப்பை பயன்படுத்தி இந்த குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இந்த அமைப்பில் ஏற்பட்ட ஒரு சிறு கோளாறு காரணமாக ஆராய்ச்சிகள் 1 வருடம் தள்ளிப்போனது.

உண்மையில் இந்த குளிர்ச்சியை பேண ஏன் விஞ்ஞானிகள் இத்தனை சிரத்தை எடுத்துக்கொண்டார்களென்றால் புரோத்திரன்கள் மோதும்போது சுரங்க ஆய்வகத்தின் உள்ளே சூரியனின் வெப்பத்தை விட 100000 மடங்கு வெப்பம் உருவாகும் அதற்காகவே 1 ஆண்டுகாலம் விஞ்ஞானிகள் உழைத்திருக்கின்றார்கள்.

ஏனெனில் உண்மையில் இதுவே சுமார் 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பெரு வெடிப்பு உருவான போது இருந்த சூழல்  என நம்பப்படுகிறது. அதனை ஒத்த சூழலையே இந்த சுரங்க ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் உருவாக்கிப் பார்த்துள்ளனர். முன்னேற்பாடுகள் தவறானால் சில வேளை கருந்துளைகள் உருவாகலாம் என்ற அச்சம் நிலவியது அதற்காகவே விஞ்ஞானிகள் ஒவ்வொரு விடயத்தையும் மிகவும் சிரத்தையுடன் மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் இந்த சோதனையால் எந்த ஆபத்தும் வராது என்று நம் காலத்திய மாபெரும் இயற்பியல் விஞ்ஞானியாகக் கருதப்படும் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் கருத்து வெளியிடுகையில், இந்த புரோட்டான் கதிர்வீச்சு கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் போனால், அதிகபட்சமாக அது 27 கிலோ மீட்டர் வட்டப் பாதையில் அமைந்துள்ள Large Hadron Collider ஆய்வுக் கருவியைத் தான் சிதறடிக்கும். மற்றபடி கருந்துளை எல்லாம் ஏற்பட்டுவிடாது என்று கூறியிருக்கிறார்.

என்ன இருந்தாலும் ஏன்? எதற்காக இந்த கரணம் தப்பினால் மரணம் என்பது போன்ற முயற்சியில் ஈடுபடவேண்டும் என சாதாரணமாக நாம் நினைக்கலாம். ஆனால் விஞ்ஞானிகளுக்கு அண்டங்கள் உருவானதை நிரூபிக்ககூடிய வழி இதுவே என பூரணமாக நம்புகின்றனர்.

உண்மையில் அந்த நம்பிக்கை வெற்றிபெறும் தருணத்தினை தற்போது விஞ்ஞானிகள் அடைந்திருக்கின்றார்கள் என்றே சொல்லவேண்டும். ஏனெனில் ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழக (CERN) விஞ்ஞானிகள் நடத்திய மேற்படி சோதனையில் நியூத்திரோன்-புரோத்திரன்களின் அதி பயங்கர மோதலில் வெடித்துச் சிதறிய பல்வேறு அணுத் துணைத் துகள்கள், கதிர்வீச்சுகளுக்கு இடையே ஹிக்ஸ் பொஸனையும் அதன் நிறையையும் கண்டுபிடித்துள்ளனர்.

ஸ்டேன்டர்ட் மொடல் கொள்கையில் படி ஹிக்ஸ் பொஸனின் நிறை 125 ஜிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் (புநஏ) என்ற அளவில் இருக்க வேண்டும் ஆனால் ஊநுசுN விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் 125.310 புநஏ நிறை கொண்ட வழக்கத்துக்கு மாறான ஒரு வகை துகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இது 99.999மூ ஹிக்ஸ் பொஸனே என்று அடித்துக்கூறுகிறார்கள் ஆய்வாளர்கள் ஏனென்றால் இதே அமைப்பு கட்டுப்பாட்டுப் பரிசோதனைகளுக்காக இன்னுமொரு குழுவை ஏற்பாடு செய்திருந்தது அந்த குழுவிற்கும் இதே முடிவு கிடைத்திருக்கின்றது. அதுவே ஆய்வாளர்களின் நம்பிக்கை மேலோங்க காரணம்.

ஆனபோதும் இன்னும் மிகச் சிறியளவிலான சந்தேகங்கள் காணப்பட்டாலும் ஹிக்ஸ் பொஸன் எனும் கடவுளின் துகள் இருப்பதினை உறுதி செய்து கடவுளை அடைந்திருப்பதாகவே பல அறிவியலாளர்கள் நம்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனவே அவ்வாறான நம்பிக்கையாளர்களின் கடவுள், ஹிக்ஸ் பொஸன் இருப்பதினை கூடிய விரைவில் விஞ்ஞானிகள் உறுதிசெய்வார்கள் என்பதே தற்போதைய அறிவியல் உலகின் நம்பிக்கை!

-அமானுல்லா எம். றிஷாத்



Wednesday, October 24, 2012

சில்லுன்னு ஒரு சந்திப்பு - ட்ரெய்லர்


ஓவியா - விமல் - தீபா ஷா நடித்திப்பில் அறிமுக இயக்குனர் ரவி  லல்லின் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் சில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

ஓவியா மற்றும் விமல் இணைந்து நடிக்கும் மூன்றாவது படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் கெமிஸ்ட்ரியே இப்படம் சற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் காரணமானது. மேலும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஏற்பட்ட பரபரப்பில் படம் பத்திக்கிச்சு. (அதாங்க விமல்தான் ஓவியாவை சஜஸ்ட் பண்ணுறதா...)

இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ட்ரெய்லரில் பெரியளவில் வித்தியாசமாக எதுவும் படத்தை பற்றி எதிர்பார்ப்பை தூண்டச்செய்யவில்லை. ஆனாலும் 2 நாயகிகள் ஒரு நாயகனை வைத்துக்கொண்டு இது ஒரு முக்கோணக் காதல் கதை அல்ல என்று அறிமுகப்படுத்தியுள்ளது சற்று வித்தியாசமாக உள்ளது. (ஒரு வேளை 2 விமலோ!)

மேலும் வழக்கமான முக்கோண காதல் கதை படங்களில் இடம்பெறும் காட்சியமைப்பே இதிலும் காண்பித்திருப்பது போல தெரிகிறது. படத்தில் ஏதாச்சும் இருந்தா சரி...

எதுக்கும் விமல் கொஞ்சம் அலாட்டாகிக்கிறது நல்லது




ரஜினியும் தமிழக அரசியலும்!


வண்டியோட சக்கரங்கள்
இரண்டு மட்டும் வேண்டும் அந்த
இரண்டில் ஒன்று சிறியதென்றால்
எந்த வண்டி ஓடும்
என்ற கண்ணதாசனின் கவி வரிகள் வாழ்க்கையில் எந்தளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு தமிழக அரசியலுக்கும் தமிழ் சினிமாவிற்குமான உறவில் உண்மை என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமேயில்லை.

அறிஞர் அண்ணாத்துரையின் ஆட்சிக்காலத்திலிருந்து தமிழக அரசியலில் சினிமா துறையினரே ஆதிக்கம் செலுத்தி வருவதை யாரும் அறிந்திராமலில்லை. அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் மு. கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலிதா என வரிசையாக தமிழக முதலமைச்சர்களாக சினிமா துறையை சார்ந்தவர்களே ஆட்சியை கைப்பற்றி சாட்சியாகின்றனர்.

சினிமாவிலிருந்து அரசியலுக்கான பாதையில் எம்.ஜி.ஆர் வழி தனி வழியாகவே இருந்தது என்றால் ஆச்சரியம் ஏதுமில்லை. இவரின் ஆதிக்கம் இன்றளவிலும் தமிழக அரசியலில் இருந்துகொண்டுதான் இருக்கிறது என்பதற்கு ஜெயலலிதாவின் வெற்றியே பறை சாற்றி நிற்கின்றது.

இவரைப் பின்பற்றி அன்று முதல் இன்று வரை சினிமா நடிகர்கள் பலரும் தமிழக ஆட்சியைக் கைப்பற்ற முனைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இதுவரையிலும் அந்தக்கனவு எந்த நடிகர்கருக்கும் நனவனாகமல் ஏமாற்றிக்கொண்டே இருக்கிறது.

தமிழ் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தினை அடைந்தவுடன் கூடவே தமிழக முதல்வர் கனவும்நடிகர்களுக்கு ஆரம்பமாகிவிடுகிறது. காரணம் எம்.ஜி.ஆர் பெற்ற வெற்றிகளே. இதனாலேயே தமிழ் சினிமாவில் ஜெயித்த பலரும் தமிழக அரசியலிலும் களம் இறங்கி வந்தனர் இன்னும் வருகின்றனர்  மேலும் வரவுள்ளனர். இதில் முதல்வராக வெற்றி பெற்ற நடிகர்கள் எவருமே இல்லை.

எம்.ஜி.ஆர் சாதித்ததை ஒரு வெற்றிப்படத்தின் மூலம் சாதிக்க நினைப்பது எவ்வளவு நகைப்புக்குரிய விடயம் என்பதை அறியாமல் இருப்பது ஆச்சரியம் தான். இன்றைய தலைமுறை நடிகர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை விடவா புகழ்பெற்ற நடிகர்களாக மாறிவிட்டனர்.

குறித்த காலப்பகுதியில் எம்.ஜி.ஆருக்குப் போட்டியாக புகழ்பெற்று விளங்கியவர் நடிகர் சிவாஜி கணேசன். ஆனாலும் சினிமாவில் கிடைத்த மக்கள் கூட்டத்தினால் அரசியலில் இவரால் வெற்றிபெற முடியாமல் போய்விட்டதே. இதுதான் எம்.ஜி.ஆருக்கும் ஏனனய நடிகர்களுக்குமான வித்தியாசம்.

சினிமாவிலிருந்து எம்.ஜி.ஆருக்குப் பிறகு சிவாஜி முதல் ரித்திஸ் வரை எத்தனையோ நடிகர்கள், தங்களின் அரசியல் முகங்களைக் காட்டினர். இவர்களில் எத்தனை முகங்கள் வெற்றி பெற்றன என்றால் கேள்விக்குறிதான்!

இவ்வாறு நடிகர்கள் பலரும் தமிழக முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்பட்டுக் கொண்டிருந்தாலும் குறித்த சில நட்சத்திர அந்தஸ்து நடிகர்கள் அரசியலில் தங்களின் முகங்களைக் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. குறிப்பாக தமிழகத்தின் உச்ச நடிகர் அந்தஸ்து பெற்ற சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் குறிப்பிடத்தக்க நடிகர்.

தமிழக அரசியல் அலையில் ஒரு முறையல்ல ஒவ்வொரு முறையும் சிக்குபவர் என்றால் அது ரஜினி காந்த் தான். 1990ஆம் ஆண்டிற்கு பிறகு விரும்பியோ விரும்பாமலோ அரசியல் சாயம் ரஜினி மீது பூசப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

'அம்மா ஆட்சிக்கு வந்தால் தமிழ் நாட்டை அந்தக் கடவுளால் கூடக் காப்பாற்ற முடியாது' என்று ரஜினி கூறியதன் பின்னர் அம்மா ஆட்சிக்கு வரவில்லை என்றாலும் ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை.

சினிமாவில் வெற்றி பெற்ற அனைவரினாலும் அரசியலில் வெற்றி பெற முடியாது என்பதை நன்கு உணர்த்திருக்கிறார் ரஜினி. ஏனெனில் இன்று வரை அரசியலுக்கு வருவீர்களா? வரமாட்டீர்களா? என்ற கேள்விக்கு ரஜினியின் பதில் வருவேன் ஆனால் வரமாட்டேன் என்ற பாணியில் தான் அமைந்துள்ளது.

தமிழக மக்கள் இன்னுமொரு எம்.ஜி.ஆரைத்தான் எதிர்பார்க்கிறார்களே தவிர ரஜினியை அல்ல என அவருக்கு நன்கு தெரியும். இதனாலேயே என்னவோ 'கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது கஷ்டப்படாமல் கிடைக்கிறது என்றைக்குமே நிலைக்காது 'என்ற அவரது 'பன்ச்' வசனத்தினை படத்தில் மட்டுமல்ல அவரது அரசியல் வாழ்க்கையில் எடுத்தியம்புகிறார் போல தெரிகிறது.

ஆனாலும் ரஜினிக்கு அரசியலில் ஆசை இல்லை என்று சொல்வதற்கில்லை. ஏனெனில் 1990ஆம் ஆண்டிற்கு பின்னரான அவரது படங்களில் அதிகளவில் அரசியல் நெடி பறக்கும். பாடல்களிலும் தன் கருத்துக்களை சொல்லிக்கொண்டே இருக்கிறார். இருப்பினும் நேரடியாக இதுவரை அரசியல் பிரவேசம் குறித்து ஒருபோதும் கருத்துத் தெரிவித்ததே இல்லை.

இருப்பினும் ரஜினி பேசிய, சாமானிய மனிதனும் பேசக்கூடிய அரசியல் கருத்துக்களை பெரிது படுத்தியதில் தமிழக ஊடகங்களுக்கு முக்கிய பங்குண்டு. 1996ஆம் ஆண்டில் ரஜினியின் வார்த்தையே ஆட்சி மாற்றத்திற்கு காரணம் என்ற தொனியில் அன்று ஊடகங்கள் பலவும் ரஜினியின் அரசியல் வருகையின் எதிர்பார்ப்பை உணர்த்தின.

இதன் பின்னர் தமிழகத்தில் இடம்பெற்ற பல்வேறு சமூகப் பிரச்சினைகளின் போதும் ரஜினின் பெயர் பெரியளவில் பேசப்பட்டது. காவேரி நீர் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை, ஓகேனல் குடி நீர்த்திட்டம் என வரிசையாக தமிழகத்தில் இடம்பெற்ற அனைத்து பிரச்சினைகளின் போதும் ரஜினியை அரசியலுக்குள் கொண்டு சென்றது.

மேற்படி குறித்த சில சமூக பிரச்சினைகளின் போது ரஜினி வெளியிட்ட கருத்துக்கள் சிலவற்றுக்கு தமிழக மக்கள், கேரள மக்கள் மற்றும் கன்னட மக்கள் எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது ரஜினி மன்னிப்புக் கோரி தனது பெருந்தன்மையினை வெளிப்படுத்தியிருந்தார்.

மேலும் தேர்தல்களின் போது ரஜினி யாருக்கு வாக்களித்தார் என்பது முதல் கொண்டு ஊடகங்களும் அரசியல்வாதிகளும் பெரிதும் ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில் வெளிப்படையாகவே 1996ஆம் ஆண்டில் ரஜினி தனது ஆதரவினை தி.மு.க விற்கு வழங்கியதால் ஏற்றபட்ட குழப்பம் காரணமாக தேர்தல்களின் போது அவரது கருத்துக்களை பகிரங்கமாக வெளிப்படுத்துவதை சில காலம் தவிர்த்து வந்தார்.

பின்னர் 2004ஆம் ஆண்டில் தான் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க விற்கு வாக்களித்ததாக தெரிவித்து அரசியல் அலையை மீண்டும் ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து தேர்தல் காலங்களின் போது சற்று அவதானமாகவே இருந்து வந்தார் ரஜினி.

2007ஆம் ஆண்டு இடம்பெற்ற 'பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா' என்ற நிகழ்சியில் அன்றைய முதல்வர் மு. கருணாநிதி முன்னிலையில் 'சமூக பிரச்சினை சார்ந்த விடயங்களுக்கு எங்களை வலுக்கட்டாயமாக அழைக்கிறார்கள்' என அஜித்தின் வெளிப்படையான பேச்சுக்கு எழுந்து நின்று கை தட்டி ஆதரித்தார் ரஜினி. இதனால் மறுபடியும் அரசியல் சர்ச்சைகளில் மாட்டிகொண்டார். இருப்பினும் இதனை அரசியலாக்க முயன்ற பலரின் முயற்சிகளுக்கு கலைஞர் கருணாநிதியுடனான நட்பின் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினி.

இவ்வலை ஓய்வதற்குள் தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது ரஜனி வாக்களித்ததைப் படம் பிடித்து வெளியிட்டதனால் பெரும் பரபரப்பில் சிக்கித் தவித்தார். இவ்வாறு தமிழக அரசியலில் இவரது செயற்பாடுகள் தொடர் கதையானது.

இவற்றுக்கு தீர்வு காணும் வகையில் ரஜினி எந்திரன் படத்திற்கு பின்னர் தனது அரசியல் பிரவேசம் குறித்து பேசுவேன் எனக் கூறியிருந்தார். ஆனால் வழக்கம் போல எந்திரன் வெளியாகி ஓராண்டு கடந்தும் மௌனம் காத்தே வந்தார். இச் சந்தர்ப்பத்தில் அவருக்கு உடல் நலம் பாதிப்படைந்து சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

சிகிச்சைகளுக்கு பின்னர் பூரண குணமடைந்த நிலையில் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தவுடன் அரசியல் பிரவேசம் குறித்த செய்திகளும் ஆரம்பமாகின.
அதேவேளை சென்னையில் இடம்பெற்ற அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்திற்கு ராகவேந்திரா மண்டபத்தை வழங்கியதனையடுத்து ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பரபரபான தகவல்கள் வெளியாகிக்கொண்டிருந்தது.

ஏனெனில் பொதுவாக ராகவேந்திரா மண்டபத்தில் தான் சம்பந்தப்படாத எந்த நிகழ்வுகளிலும் ரஜினி கலந்து கொள்வதில்லை. இருப்பினும் அன்னா ஹசாரே ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டு அவர்களது தேவைகளை அறிந்து செயற்பட்டு இன்ப அதிர்ச்சி அளித்தார் ரஜினி.

இது போதாதென்று உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளவும் தயாராக இருந்தாராம் ரஜினி. ஆனால் தேவையில்லாத பரபரப்பு உண்டாகும் என்ற காரணாத்தால் ரஜினி கலந்து கொள்ளாமல் தவிர்த்தகாகக் கூறப்படுகிறது. மேலும் இம்முறை எழும் அரசியல் அலை கண்டிப்பாக தலைவரை அரசியல் எனும் கடலுக்குள் இழுத்துவரும் என்று ரசிகர்கள் நம்பிக்கையில் இருந்தனர்.

ஆனபோதும் ரஜினி வழக்கமான தனது மௌனத்தையே  இதுவரையிலும் பதிலாக்கிக்கொண்டிருக்கிறார். ரஜினியின் அரசியலும் சினிமாவும், முள்ளில் சிக்கிய சேலை போல  இருப்பதனால் பக்குவமாக அதனை பிரித்தெடுக்கவே முயற்சிக்கிறார். ஆனால் ரஜினியின் ரசிகர்களின் ஆதங்கமோ, விஜயகாந்தினால் எதிர்க்கட்சித் தலைவராக வர முடியுமென்றால் ரஜினியால் முடியாதா? என்பதே.

மேலும் புதிய கட்சியின் சேவை தமிழகத்திற்கு தேவைதானா என ரஜினி சிந்திப்பதாக வைரமுத்து பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் தற்போது கருணாநிதியின் வீழ்ச்சி ரஜினிக்கு எழுச்சியாகக் கூட அமையலாம் என்பதால் இனிவரும் தேர்தல்களில் ரஜினியின் முடிவு அரசியலுக்கு சாதகமாக அமைய வாய்ப்புண்டு என எதிர்பார்க்கலாம்

விரைவில் எம்.ஜி.ஆர் வழியில் அரசியலில் களம் புகுந்து தமிழக ஆட்சியை கைப்பற்ற முனைவாரா? இல்லை தன் பாணியில் விரலை மேலே உயர்த்திவிடுவாரா? காலத்தின் மாற்றத்தில் ரஜினிதான் பதில் கூறவேண்டும்.

-அமானுல்லா .எம்.றிஷாத் 




Tuesday, October 23, 2012

சிட்டி ஸ்டைலில் இருதய சத்திரசிகிச்சை : இங்கிலாந்தில் வைத்தியர்கள் சாதனை (காணொளி இணைப்பு)


எந்திரன் படத்தில் வசீகரனின் கண்டுபிடிப்பான சிட்டி பிரசவம் பார்த்து வெற்றிபெற்றது போன்று நிஜத்தில் ரோபோ ஒன்றினால் இருதய சத்திரசிகிச்சை ஒன்றை வெற்றிகரமாக மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர் பிரித்தானிய விஞ்ஞானிகள். நம்மூர் பாணியில் சொன்னால் இட் இஸ் எ மெடிக்கல் மிரேக்கல் என்னால நம்பவே முடியல.

சிட்டிக்கு பதில் இங்கு சிகிச்சை மேற்கொண்ட ரோபோ 'டாவின்சி' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரோபோவிற்கு 4 கைகள் உண்டு. இச்சத்திரசிகிச்சையின் போது டாவின்சியை ரிமோட் ஒன்றினூhடாகவே கட்டுப்படுத்தியுள்ளனர். (வசீகரன் கண்டுபிடிச்ச மாதிரி ஒரு ரோபோ கண்டுபிடிக்க வெள்ளைக்காரர்களுக்கு இன்னும் காலம் இருக்கு)

இதன்போது நோயாளியின் இதயத்தினை அதி துல்லியமான முப்பரிமாண கெமராவின் ஊடாக வைத்தியர்கள் அவதானித்துள்ளனர்.

வழமையாக மார்பை கிழித்தே இருதய சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் (மாற்றானிலும் அப்படித்தானே காட்டினார்கள்) இருப்பினும் குறித்த அறுவைச்சிகிச்சை டாவின்சியின் கரங்களை நோயாளியின் விலா எலும்புகளுக்கிடையே செலுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உல்வர்ஹெம்டன் பகுதியில் அமைந்துள்ள நிவ் குரஸ் வைத்தியசாலையிலேயே இச் சத்திரசிகிச்சை இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சிகிச்சைக்குட்படுத்தப் பட்டவர் ஸ்டவுர்பிரிச்சைச் சேர்ந்த 22 வயதான நடாலி ஜோன்ஸ் என்ற பெண் ஒருவர்.

சுமார் 9 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட இச்சத்திர சிகிச்சையின் போது வலி குறைவு இருந்ததாகவும் விரைவாக குணமடையும் சாத்தியம் அதிகம் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

ரோபோ மூலமான இருதய சத்திரசிகிச்சைகள் ஏற்கனவே சுவீடன் மற்றும் பின்லாந்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால் பிரித்தானியாவில் ரோபோ மூலம் மேற்கொள்ளப்பட்ட முதல் இருதய சத்திரசிகிச்சை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.



Monday, October 22, 2012

வாங்க பழகலாம்... : Software இல்லாமல் Folder ஒன்றிற்கு Password கொடுப்பது எப்படி?


Folder, Lock, Advanced File Lock, dirLock, Folder Security Personal, Folder Latch, Folder Guard, Folder Access Pro, Lock and Hide Folder என கோப்புக்களை (Folders) குறிச்சொல்  (Password) மூலம் பாதுகாப்பதற்கு ஏராளமான மென்பொருட்கள் (Software) இருந்த போதிலும் அவற்றை உங்களது கணனியில் நிறுவியே (Install செய்தே) பயன்படுத்த முடியும். இதனால் நீங்கள் கோப்புக்களை மறைத்து வைத்திருப்பதை நிறுவப்பட்டுள்ள மென்பொருள் காட்டிக்கொடுத்துவிடும். எனவே வேறு ஒரு பயனர் அந்த மென்பொருளின் குறிச்சொல்லினை (Password) கேட்கையில் சங்கடங்கள் ஏற்படுகின்ற வாய்ப்புக்கள் அதிகம்.

ஆனால் Software இல்லாமல் பயன்படுத்தும் இம்முறையில் இவ்வாறான சங்கடங்களை தவிர்த்துக்கொள்ளலாம் (அத நாங்க பார்த்துக்கிறம் மேட்டருக்கு வாடி... என்று முணுமுணுக்காதிங்க மேட்டருக்கு வந்துட்டன்). அதாவது ஒரு .bat உருவாக்குவதன் மூலம் இலகுவாக கோப்பு ஒன்றுக்கு குறிச்சொல்லினை ஏற்படுத்த முடியும். அது எவ்வாறெனில்,

கீழே உள்ள இந்த html CodeஇனைCopy செய்து Note Padஇல் Paste செய்து கொள்ளுங்கள்

html Code :

cls
@echo off
title Folder Locker
IF EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B303­09D}" GOTO UNLOCK
IF NOT EXIST Locker GOTO MDLOCKER
echo Folder Created.
:CONFIRM
echo Are you sure you want to lock the folder? (Y/N)
set/p "cho="
IF %cho%==Y GOTO LOCK
IF %cho%==y GOTO LOCK
IF %cho%==N GOTO END
IF %cho%==n GOTO END
echo Invalid Choice.
GOTO CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B303­09D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B303­09D}"
echo Folder Locked.
GOTO END

:UNLOCK
echo Enter password to unlock the Folder :
set/p "pass="
IF NOT %pass% == YourPasswordHere GOTO FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B303­09D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B303­09D}" LOCK
echo Folder Unlocked Successfully.
GOTO END
:FAIL
echo Invalid Password!
GOTO END

:MDLOCKER
md Locker
echo Folder created.

GOTO END
:END
PAUSE


பின்னர் இதில்YourPasswordHere (பார்க்க, படம் - 1) என்பதை உங்களுடைய Password (Eg : 1234) ஆக மாற்றிக்கொண்டு  இதனை .bat என்ற பெயரில் (File name - .bat) Save as (பார்க்க, படம் - 2) முறையில் உங்களுக்கு தேவையான இடத்தில் (Local Disk (C:, D: ) / Desktop / My document ) செய்துகொள்ளுங்கள்.
படம் - 1
படம் - 2
தொடர்ந்து நீங்கள் உருவாக்கிய .bat Fileஇனை Open செய்யும் போது DOS Menu (பார்க்க, படம் - 3, மேலும் இந்த மெனுவை எதாவது ஒரு கீயை அழுத்தி மூடிக்கொள்ளவும்;) ஒன்றுடன்.bat File உள்ள அதே இடத்தில் Locker என்ற பெயரில் ஒரு Folder உம் உருவாகும். இந்த Folderக்குள் நீங்கள் மறைக்க விரும்பும் Fileகளை சேகரிவித்துட்டு மீண்டும் நீங்கள் உருவாக்கிய .bat Fileஇனை Open செய்யுங்கள்.

படம் - 3
இப்போது தோன்றும் Menuவில் (பார்க்க, படம் - 4)  ''Y'' என்பதை டைப் செய்து Enter பண்ணுங்கள் அவ்வளதுதான் இப்போது Locker என்ற Folder மறைந்துவிடும். ஆனால் இதனை Folder Option மூலம் வெளியில் கொண்டுவர முடியாது.
படம் - 4
இனி உங்களுக்கு தேவையான நேரத்தில் நீங்கள் உருவாக்கிய .bat Fileஇனை Open செய்யும் போது DOS Menu ஒன்று தோன்றி Password இற்காக காத்திருக்கும் (பார்க்க, படம் - 5). அதில் உங்கள் குறிச்சொல்லினை (Passwordஇனை) கொடுத்து Enter பண்ணுங்கள். இப்போது நீங்கள் மறைத்துவைத்த கோப்பு Lock என்ற பெயரில் தோன்றும்.
படம் - 5
அவ்வளவுதான் இலகுவான படிமுறைகள் விளக்கப்படங்களின் உதவியுடன் முயற்சித்துப்பாருங்கள். அத்துடன் படம் பார்த்து கதை சொல்லும் முறையும் புரியவில்லை எனில் கேளுங்கள் பதில் கிடைக்கும்!

குறிப்பு : .bat  Fileஇனை அழித்து விட்டாலும் ஏற்கனவே நீங்கள் பயன்படுத்திய Passwordஇனை கொடுத்து மீண்டும் .bat Fileஇனை உருவாக்கி உங்களது மறைக்கப்பட்ட Fileகளை பெற்றுக்கொள்ளலாம்.


Sunday, October 21, 2012

ஆரோகணம் : புதிய ட்ரெய்லர்

பெண் இயக்குனர்களின் வருகை எப்போதுமே இந்திய சினிமாவில் ஒரு எதிர்பார்ப்பினை ஏற்படுத்துவது வழக்கம் அந்த வகையில் நடிகையாக இருந்து தற்போது இயக்குனராக மாறியிருக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள ஆரோகணம் படத்திற்கும் பெரியளவிலான எதிர்பார்ப்புக்கள் உள்ளன.

ஆனாலும் பெண் இயக்குனர்கள் முதல் படத்திலேயே பெண்ணியம் பேசுவது போல் படம் எடுத்து சொதப்புவது வழமை. இருப்பினும் அண்மைக்காலமாக இதில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி நம்பிக்கை அளித்தவர்கள் வெப்பம் படத்தின் இய்குனர் அஞ்சனா அலி கான் மற்றும் இங்கிலிஸ் விங்கிலிஸ் படத்தின் இயக்குனர் கௌரி ஷின்டே ஆகியோர் இதனால் ஆரோகணம் படத்தில் லக்ஷ்மியும் தடம் பாதிக்கலாம்.

மேலும் பாத்திரத்திற்கான நடிப்பை வழங்கக்கூடிய நடிகர்களான ஜெயபிரகாஷ், கவிதாலயா கிருஷ்ணன் மற்றும் சம்பத் போன்றவர்களுடன் நடிகை குயிலியும் படத்திற்கு பலம் சேர்ப்பர் என நம்பலாம்.

அத்துடன் வரும் 26ஆம் திகதி வெளியாவுள்ள ஆரோகணம் படத்தின் புதிய ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. அந்த ட்ரெய்லர் பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்பது போலே தோன்றுகிறது. இருந்தாலும் ட்ரெய்லர் அமைந்துள்ள விதம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை சற்று அதிகரிக்கவே செய்கிறது.

அந்த ட்ரெய்லர் இதோ...

காற்றிலிருந்து பெற்றோலை தயாரிக்கும் தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு


வட இங்கிலாந்திலுள்ள நிறுவனம் ஒன்று காற்றிலிருந்து பெற்றோலை தயாரிக்கும் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்து தொழில்நுட்ப உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இத் தொழில்நுட்பத்தின் முதற்கட்டமாக சோடியம் ஐதரொட்சைட்டை காபனீரொட்சைட்டுடன் இணைத்து பெறப்படும் சோடியம் காபனேற்றை மின்னேற்றி தூய காபனீரொட்சைட் பெறப்படும். அதனைத் தொடர்ந்து நீராவியை மின்னேற்றி பெறப்படும் ஐதரசன் வாயுவை காபனீரொட்சைட்டுடன் இணைத்து மெதனோல் பெறப்படும். அது மண்ணெண்ணெய் எரிபொருள் பிறப்பாக்கியூடாக செலுத்தப்பட்டு பெற்றோல் தயாரிக்கப்படுகின்றது.

சிறிய எரிபொருள் சுத்திகரிப்பு சாலை ஒன்றில் 3 மாதங்களுக்கும் குறைந்த காலப்பகுதியில் இத் தொழில்நுட்பத்தினூடாக 5 லீற்றர் பெற்றோலை தயாரித்துள்ளதாக வளி எரி பொருள் ஸ்தாபனம் என்ற மேற்படி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளொன்றுக்கு ஒரு தொன்னுக்கும் அதிகமான பெற்றோலை காற்றைப் பயன்படுத்தி தயாரிக்க தங்களது தொழில்சாலையை பாரிய அளவில் விருபடுத்த வே;ண்டும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இநநிலையில் இந்த தொழில்நுட்பத்துக்கு பிரித்தானிய இயந்திர பொறியிலாளர் நிறுவனம் ஆதரவளித்துள்ளது.

அதுமட்டுமன்றி இத்தொழில்நுட்பமானது இந்த வாரம் லண்டனில் இடம்பெறவுள்ள பொறியியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளவை குறிப்பிடத்தக்கது.

அப்படின்னா அடுத்த சந்ததிக்கும் பெற்றோல் உண்டென்பது மகிழ்ச்சிதான் ஆனால் அரசாங்கங்கள் காற்றுக்கு வரியுடன் கூடிய விலை விதித்தால்... எப்பா தாங்காதுடா சாமி.






Saturday, October 20, 2012

World Eleven vs Pakistan XI - Live Stream

World Eleven மற்றும் Pakistan XI அணிகளுக்கிடையேயான இருபதுக்கு இருபது போட்டியின் நேரலையை வொண்டர்ஸினூடாக கண்டு மகிழுங்கள்...






World Eleven vs Pakistan XI Live stream 

Friday, October 19, 2012

விலங்குகள் அனர்த்தங்களை எதிர்வுகூறுமா... கடல்வாழ் உயிரினங்கள் சுனாமியை உணர்த்துமா?


ஆறறிவு என்று கூறப்படும் விலங்குகளான மனிதர்கள் தவிர ஏனைய விலங்குகள் இயற்கை அனர்த்தங்களை எதிர்வுகூறும் திறன் படைத்தது என்ற நம்பிக்கை எம்மில் பரவிக்கிடக்கின்றது. இது உண்மையா பொய்யா என்பது குறித்த பல்வேறு ஆராய்ச்சிகள் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

உண்மையில் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய தேவை ஒன்று தற்போது ஏற்பட்டுள்ளதைத் தவிர்க்க முடியவில்லை. ஏனெனில் அண்மைக்காலமாக இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் தற்போது மீன்கள் அதிகளவில் பிடிபடுவதுடன் ஒரு சில பிரதேசங்களில் கடவாழ் (கடல் பாம்பு, காடலாமை, மீன்கள்) உயிரினங்கள் கரையொதுங்கின்றது.

இதனால் அப்பகுதி மக்களிடையே ஒரு வகையான அச்சம் காணப்படுகின்றது. 2004இல் ஏற்பட்ட சுனாமிக்கு முன்னரும் இவ்வாறே அப்பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் கரையொதுங்கியதுடன் ஏராளமான மீன்களும் பிடிக்கப்பட்டது. இதனால் மீண்டுமொரு சுனாமி எம்மை நோக்கி வருகிறதா என்ற சந்தேகம் அப்பகுதி மக்களிடையே நிலவுகின்றது. அதுவொரு வகையில் நியாமும் கூட.

ஏனெனில் அப்பகுதி மக்களே ஏற்கனவே 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் அதிகளவு உயிர்கள் மற்றும் உடைமைளை இழந்தவர்கள் என்பதே அதற்குக் காரணம். (ஆனாலும் அவர்களின் நிலைமைகளை படம் பிடித்து வேறு பிரதேசத்தினை போல் சித்திரித்து உலக நாடுகளுக்கு காட்டினார் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மின்னல் நாயகனும் என்பது வேறு கதை. அப்பகுதி மக்களுக்காவது உதவினாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது! ஐயய்யோ நமக்கெதுக்கு அரசியல்... ஒரு ஆதங்கத்தில் பேசித் தொலைச்சிட்டன்)

சரி அப்படியானால் தற்போது கிழக்கில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் சுனாமி, சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான அபாயச் சங்குகளா என்றால் நிச்சயமாக இல்லை என்கிறார்கள் ஆராய்சியாளர்கள்.

அவ்வாறெனில் பல சந்தர்ப்பங்களில் விலங்குகளின் செயற்பாடுகள் அனர்த்தங்களை எச்சரிப்பதாக அமைந்துவிடுகிறதே அது ஏன்? 2004ஆம் ஏற்பட்ட சுனாமியின் போது கடலோரத்தில் இருந்த பல விலங்குகள் உயிர்பிழைத்திருந்தது ஏன்? இவற்றையெல்லாம் விட சுனாமியை எச்சரிப்பது போல சுனாமி ஏற்படுவதற்கு முன்னர் கடலை விலத்திய விலங்குகளின் நகர்வுகள், ஏராளமான மீன்கள் கரையை வந்தடைந்தது போன்றவை ஏற்படக்காரணம் என்ன? என்ற ஏராளமான கேள்விகளுக்கு ஆராய்ச்சியாளர்களின் தேடலின் முடிவுகள் இவ்வாறு அமைகிறது.
கரையொதுங்கிய மீன்கள்

விலங்குகளால் காலநிலை மாற்றங்களை உணர்ந்துகொள்ள முடியும். இதனால் சூடு, குளிர், அமுக்கம், மனிதர்களுக்கு கேட்கமுடியாத சத்தங்கள், வாயுக்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள் என பலவற்றை உணரக்கூடிய ஆற்றல் உண்டு. இவை ஒவ்வொரு வகையான இனங்களுக்கும் வித்தியாசப்படும்.

இவ்வாறான மாற்றங்களை உணரும் சந்தர்ப்பங்களில் குறித்த விலங்குகள் தங்களுக்கு ஏதுவான வாழும் சூழல் இல்லை என்பதை புரிந்துகொண்டு இடம்பெயர ஆரம்பிக்கும். தவிர விலங்குகளுக்கு அனர்த்தங்களை உணரக்கூடிய எந்தவித விஷேட சக்திகளும் இல்லை என்பதே உண்மை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இவர்களின் விளக்கங்களும் நியாயமாகவே உள்ளன. ஏனெனில் எமது வீடுகளில் மேல் நோக்கி எறும்புகள் பயணிக்கும் போது மழை வரப்போகிறது என்று எதிர்வுகூறுவார்கள் சில வேளைகளில் மழை வரலாம் வராமலும் போகலாம் ஆனால் எறும்புகள் எறிக்கொண்டுதான் இருக்கிறது. எனவே காலநிலை மாற்றத்தினை உணர்ந்துகொண்ட எறும்புகள், தமது பாதுகாப்பை உறுதி செய்கிறதே தவிர மழை வருவதை அவை உறுதி செய்யவில்லை என்பது தெளிவாகின்றது.

இதே போலவே கடலிலும் ஏற்படுகின்ற மாற்றங்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றது. இதன் விளைவே கரையை நோக்கி அவை படையெடுக்க ஆரம்பித்திருக்கிறதே அன்றி சுனாமி அல்லது வேறு அனர்த்தங்களுக்கான எச்சரிக்கை அல்ல என்பது உறுதி என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
உயிருடன் மீன்கள் கரையை நோக்கி...

மேலும் கடலில் ஏற்படுகின்ற எண்ணெய்க்கசிவு, சிறியளவிலான நில அதிர்வுகள் போன்ற காரணிகளும் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் இதனால் இறந்தும் கடல் வாழ் உயிரினங்கள் கரையொதுங்க வாய்ப்புக்கள் உள்ளது. அத்துடன் உயிருடன் உள்ளவை கரையை நோக்கி நகரும் இந்நிலையே மீனவர்களுக்கு அதிகளவிலான மீன்கள் சிக்கக் காரணமாகின்றது.

எனவே மீன்கள் அதிகளவில் கிடைப்பது மற்றும் கரையொதுங்குவது தொடர்பில் அச்சம் கொள்ளவேண்டிய அவசியமில்லை என்கிறது விஞ்ஞானம். மேலும் வதந்திகள் மூலம் அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என்போம் நாம்.

மொட்டு வெடிச்சாலும் சரி கள்ளன் குதிச்சாலும் சரி நாய் குரைக்கத்தான் செய்யும். ஆனால் அது பேய், பிசாசுக்களை பார்த்துத்தான் குரைக்கின்றது என்ற மூடநம்பிக்கைளில் எம்மவர்கள் மூழ்கியது போன்று மீன்கள் கரையொதுங்கினால் சுனாமி வரும் என்ற மூடநம்பிக்கை ஏற்படாமல் இருப்பதே நல்லது.

ஏனெனில் சுனாமி ஏற்படுதவதற்கு முன்னர் மீன்கள் கரையொதுங்கலாம் ஆனால் மீன்கள் கரையொதுங்கும் போதெல்லாம் சுனாமி ஏற்படாது.

குறிப்பு : படங்கள் யாவும் இலங்கையின் கிழக்குப் பகுதிகளில் (காத்தான்குடி, சாய்ந்தமருது, மருதமுனை, காரைதீவு) இடம்பெற்றவை.

காரைதீவு பிரதேசத்தில் பிடிபட்ட மீன்கள்


காத்தான்குடியில் கரையொதுங்கிய ஆமை




Can animals predict the natural disaster?


Most of us believing that animals can predict the natural disaster excluding 6 sense animal of human. Researchers have been trying to clarify that is it true or not for a long time.  This is the right time to concentrate on it as dead sea life such as tortoise, new kind of strange fishes, sea snakes washing up on shore in eastern part of Sri Lanka.

After the tsunami when fisherman catch unusual amount of fish that makes people afraid of natural disaster in this region.