Total Pageviews

Tuesday, October 16, 2012

குட்டிக்கதை அதுவும் ஐன்ஸ்டீன் பற்றி... அவருக்கேவா இப்படி நடந்தது?

இதற்கு முதலும் ஏராளமான குட்டிக்கதை கேட்டிருப்பீங்க ஐன்ஸ்டீனைப் பற்றிய கதைகளும் கேட்டிருப்பீங்க எனவே இந்த கதை உங்களுக்கு தெரிந்திருந்தால் இந்தப் பாவியை மன்னியுங்கள்.

ரஜினி சொன்னா மட்டும் கேட்கிறீங்க (அது ரஜினி இப்படியெல்லாம் மைண்ட் வொய்ஸ் வரப்படாது) அப்படியே நான் எழுதுவதையும் கொஞ்சம் வாசிச்சிக்கிறது.

20ஆம் நூற்றாண்டின் இணையற்ற விஞ்ஞானியாக கருதப்படுபவர் அல்பேட் ஐன்ஸ்டீன். சார்புக்கொள்கை விளக்கும் E=mc2 என்ற சமன்பாட்டின் மூலம் அறிவியல் உலகையே தன்பக்கம் ஈர்த்தவர். (இந்த ஒன்னுதான் உருப்படியாக அறிவியலில் பழம் திண்டு கொட்டை போட்வர்களுக்கும் விளங்கியது ஏனையவை இன்னும் ச்சீசீ... அந்தப் பழக்கம் புளிக்கும் என்றே இருக்கிறது)

இதற்காக நோபல் பரிசை வாங்கி அந்த விருதுக்கு பெருமை சேர்த்தார். ஆனாலும் இவரின் அரிய கண்டுபிடிப்பு அணு குண்டையும் பல உயிர்களையும் காவுகொள்ள காரணமானது அவருக்கும் வருத்தமே. மனித குலத்திற்கு நன்மை பயக்க வேண்டிய அவரது கண்டுபிடிப்பு அழிவுக்கு இட்டுச்செல்ல எவ்வகையிலும் ஐன்ஸ்டீன் காரணமில்லை என்பது மட்டும் உறுதி.

இனி அந்த ஐன்ஸ்டீன் குட்டிக்கதைக்கும் அது தருகின்ற பாடத்திற்கும் (எது பாடத்திற்கா?) போவோமா!

ஒரு ஊர்ல.... ஐய்யய்யோ வழக்கம்போல ஆரம்பிச்சிட்டன்!!! பரவாயில்லை.... அப்படித்தான் ஆரம்பிக்கணும். ஒரு நாள் ஐன்ஸ்டீன், தான் குடியிருந்த சாலை வழியாக சென்றிருக்கிறார்.

வழக்கமாக அவர் பயணிக்கும் பாதை என்றாலும் அவரது கவனம் ஒரு போதும் அதற்கு முதல் அந்த வீதியிலமைந்திருந்த அப்பிள் தோட்டத்தின் பக்கம் போயிருக்கவில்லை. ஆனால் ஒரு நாள் அதனை கண்டு அதிர்ச்சியடைந்து அந்த இடத்திலேயே சிந்தனையில் மூழ்கியிருந்தார்.

இநிலையில் அந்த வழியாக வந்த சிறுவன் தன்னை அவதானிக்கொண்டிருப்பதை உணர்ந்து ஆழ்ந்த சிந்தனையிலிருந்து சற்று வெளியே வந்த ஐன்ஸ்டீன் சிறுவனைப் பார்த்து 'இந்த அப்பிள் தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களிலும் அப்பிள் காய்த்திருக்கிறது ஆனாலும் (மரத்தைக்காட்டியவாறே..) இந்த ஒரே ஒரு மரத்தில் மட்டும் ஒரு அப்பிள் கூட காய்க்கவில்லையே அது ஏனென சிந்தித்துக்கொண்டிருக்கின்றேன்' என்றார். (ஏன் அந்த சிறுவனிடம் ஐன்ஸ்டீன் இதனை கூற வேண்டும் என எடக்குமொடக்கா சந்ததேகம் வந்தால் அதுக்கு நான் பொறுப்பல்ல (அதுசரி அதென்ன எ.மொ!!! எப்பூடி...))

இனி அங்கு சம்பாசனைகள் இவ்வாறு அமைந்துள்ளது,
சிறுவன் : அதற்கான காரணம் எனக்கு தெரியும்...
ஐன்ஸ்டீன் : அப்படியானால் காரணத்தை சொல் உனக்கு பணம் தருகிறேன்
சிறுவன் : பணத்தை கொடுத்தால் பதில் சொல்வேன்
என்று சொல்ல பணத்தை கொடுத்துவிட்டு மறுபடியும் ஐன்ஸ்டீன் காரணத்தை கேட்டுள்ளார்.

சிறுவனோ ஐன்ஸ்டீனை விட்டு சற்றே தூரம் சென்று 'அது அப்பிள் மரம் இல்லை ஓக்கிட் மரம்' என்று சொல்விட்டு சிரித்துக்கொண்டே சிட்டாய் பறந்திருக்கின்றான் சிறுவன். பிறகென்ன ஐன்ஸ்டீனோ வடை போச்சே பாணியில் அந்த இடத்தை விட்டு நகர்ந்திருக்கிறார். (இதிலிருந்து என்ன விளங்குது (அஆ...) எந்தவொரு விஷயத்தை ப்ளான் பண்ணி பண்ணனும் இல்லைன்னா இப்டித்தான் நடக்கும்)

உண்மையில் இந்தச் சம்பவம் நடந்ததா இல்லையா என்பது உறுதியாக தெரியாது. ஐன்ஸ்டீனைப் பற்றிய குட்டிக்கதைகளில் இதுவும் ஒன்று. ஆனாலும் இந்தக் கதையிலிருந்து படிப்பினைகளை மட்டும் எடுத்துகொள்ளலாம்.

ஐன்ஸ்டீனாக இருந்த போதும் சின்னவொரு விடயத்தை பெரிதாக எண்ண ஆரம்பித்தால் சிறியவர்கள் என்ன மூளை இல்லாதவனிடமும் தோற்றுப்போகலாம். எனவே எந்தவிடயமானாலும் ஆழமாக சிந்திப்பதை விடுத்து இலகுவாக சிந்திக்கும் போது விடைகளும் இலகுவாவே இருப்பது எமக்கும் புரியும்.

ஐன்ஸ்டீனுக்கேவா இது தெரியாமல் போச்சு! அதாங்க எல்லாம் தெரிஞ்ச ஆளே இல்லை ஆனால் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும் என்று நினைக்கிற ஆளுங்க இருக்கிறார்கள்... அவர்கள் வரவேற்கப்படவேண்டியவர்களே!