பெண் இயக்குனர்களின் வருகை எப்போதுமே இந்திய சினிமாவில் ஒரு எதிர்பார்ப்பினை ஏற்படுத்துவது வழக்கம் அந்த வகையில் நடிகையாக இருந்து தற்போது இயக்குனராக மாறியிருக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள ஆரோகணம் படத்திற்கும் பெரியளவிலான எதிர்பார்ப்புக்கள் உள்ளன.
ஆனாலும் பெண் இயக்குனர்கள் முதல் படத்திலேயே பெண்ணியம் பேசுவது போல் படம் எடுத்து சொதப்புவது வழமை. இருப்பினும் அண்மைக்காலமாக இதில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி நம்பிக்கை அளித்தவர்கள் வெப்பம் படத்தின் இய்குனர் அஞ்சனா அலி கான் மற்றும் இங்கிலிஸ் விங்கிலிஸ் படத்தின் இயக்குனர் கௌரி ஷின்டே ஆகியோர் இதனால் ஆரோகணம் படத்தில் லக்ஷ்மியும் தடம் பாதிக்கலாம்.அத்துடன் வரும் 26ஆம் திகதி வெளியாவுள்ள ஆரோகணம் படத்தின் புதிய ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. அந்த ட்ரெய்லர் பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்பது போலே தோன்றுகிறது. இருந்தாலும் ட்ரெய்லர் அமைந்துள்ள விதம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை சற்று அதிகரிக்கவே செய்கிறது.
அந்த ட்ரெய்லர் இதோ...






