Total Pageviews

Sunday, October 21, 2012

காற்றிலிருந்து பெற்றோலை தயாரிக்கும் தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு


வட இங்கிலாந்திலுள்ள நிறுவனம் ஒன்று காற்றிலிருந்து பெற்றோலை தயாரிக்கும் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்து தொழில்நுட்ப உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இத் தொழில்நுட்பத்தின் முதற்கட்டமாக சோடியம் ஐதரொட்சைட்டை காபனீரொட்சைட்டுடன் இணைத்து பெறப்படும் சோடியம் காபனேற்றை மின்னேற்றி தூய காபனீரொட்சைட் பெறப்படும். அதனைத் தொடர்ந்து நீராவியை மின்னேற்றி பெறப்படும் ஐதரசன் வாயுவை காபனீரொட்சைட்டுடன் இணைத்து மெதனோல் பெறப்படும். அது மண்ணெண்ணெய் எரிபொருள் பிறப்பாக்கியூடாக செலுத்தப்பட்டு பெற்றோல் தயாரிக்கப்படுகின்றது.

சிறிய எரிபொருள் சுத்திகரிப்பு சாலை ஒன்றில் 3 மாதங்களுக்கும் குறைந்த காலப்பகுதியில் இத் தொழில்நுட்பத்தினூடாக 5 லீற்றர் பெற்றோலை தயாரித்துள்ளதாக வளி எரி பொருள் ஸ்தாபனம் என்ற மேற்படி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளொன்றுக்கு ஒரு தொன்னுக்கும் அதிகமான பெற்றோலை காற்றைப் பயன்படுத்தி தயாரிக்க தங்களது தொழில்சாலையை பாரிய அளவில் விருபடுத்த வே;ண்டும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இநநிலையில் இந்த தொழில்நுட்பத்துக்கு பிரித்தானிய இயந்திர பொறியிலாளர் நிறுவனம் ஆதரவளித்துள்ளது.

அதுமட்டுமன்றி இத்தொழில்நுட்பமானது இந்த வாரம் லண்டனில் இடம்பெறவுள்ள பொறியியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளவை குறிப்பிடத்தக்கது.

அப்படின்னா அடுத்த சந்ததிக்கும் பெற்றோல் உண்டென்பது மகிழ்ச்சிதான் ஆனால் அரசாங்கங்கள் காற்றுக்கு வரியுடன் கூடிய விலை விதித்தால்... எப்பா தாங்காதுடா சாமி.