சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

Monday, February 25, 2013

உணவு விஷம் என பரிசோதிக்க 15 பெண்களைப் பயன்படுத்தினார் ஹிட்லர் : பாதிக்கப்பட்ட ஜேர்மனிய பெண் அதிர்ச்சித் தகவல்

ஜேர்மன் நாட்டின் முன்னாள் ஆட்சியாளர் சர்வாதிகாரியான அடோல்ப் ஹிட்லர் உண்ணும் உணவுகளில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என பரீட்சிக்க 15 பெண்களைப் பயன்படுத்தியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஹிட்லரின் உணவில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என பரீட்சிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட 15 பெண்களில் ஒருவரான 95 வயதான மார்கொட் வெயல்க் என்ற ஜேர்மனியப் பெண்ணொருவரே மேற்படி தகவலினை வெளியிட்டுள்ளார்.

இப்பெண்ணுடன் சேர்த்து மேலும் 14 பெண்கள் பல வந்தமாக இப்பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். குறித்த இப்பணிக்காக 2 வருடங்கள் மார்கொட் பயன்படுத்தப்பட்டுள்ளார்.

ஹிட்லர் உண்ணும் உணவுகளை அவர் உண்பதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்பாகவே குறித்த 15 பெண்களுக்கும் உணவு வழங்கப்படும். அவ்வுணவுகள் அனைத்தும் சைவ உணவுகளாகவே இருக்கும். ஏனெனில் ஹிட்லர் அவற்றையே உண்பார். இவ்வாறே அங்கு நடைமுறை காணப்பட்டது என அப்பெண் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்இ அங்கு வாழவே பயமாக இருக்கும். நாங்கள் உண்ணுகின்ற உணவில் விஷம் கலக்கப்பட்டிருந்தால் எங்களின் நிலைமை அவ்வளவுதான். எங்களுக்கென தெரிவுகள் எதுவும் கிடையாது.

இந்த வாழ்க்கையிலிருந்து 1946ஆம் ஆண்டு நான் விடைபெற்றேன். ஒரு மூத்த படை வீரர் என்னை தப்பிக்க வழியமைத்தார். ஏனைய பெண்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்கிறேன். அவர்கள் யாரும் இத்தகவலை வெளியிடவில்லை.

மேலும் படை வீரர்களால் நான் பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்தப்பட்டேன். இதன்போதும் பொறுமையுடன்  துன்பங்களுக்கு  முகம்கொடுத்தேன் என தெரிவித்துள்ளார்.

ஹிட்லர் மறைவிற்கு பின்னர் அவரைப் பற்றி ஏற்கனவே பலதரப்பட்ட அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் புதிதாக இத்தகவல் வெளியாகியுள்ளது.

By AM. Rizath/Metro News

Friday, February 22, 2013

அகிலத்தை அச்சுறுத்தும் அஸ்டரொய்ட்டுக்கள் : விஞ்ஞானிகளை விஞ்சுகிறது!


எதிர்பார்ப்புக்குரிய விருந்தாளியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் அழையா விருந்தாளியாய் எதிர்பாராமல் வந்து எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது போல் அமைந்துவிட்டது ரஷ்ய வான் பரப்பில் வெடித்துச் சிதறிய எரிகல் விடயம்.

கடந்த 15ஆம் திகதி வானியல் தொடர்பான அத்தனை பேரும் 2012 DA14 என்ற அஸ்டரொய்ட் தொடர்பாக கவனம் செலுத்திக்கொண்டிருந்தனர். இந்நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக ரஷ்யாவின் செலியாபின்ஸ்க் பிரதேசத்திலுள்ள யுரல் மலைத்தொடரின் மேலாக அழையாக விருந்தாளியாக வந்த எரிகல்லொன்று வெடித்துச் சிதறியது. கூடவே விஞ்ஞானிகளின் கணிப்புக்களும் தான்.

எரிகல் வெடித்த குறித்த பகுதியில் மக்கள் சனத்தொகை மிகக் குறைவு என்பதனால் ஆபத்துக்கள் குறைவாவே ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு எரிகல் வெடித்ததில் சிறு காயங்கள் உட்பட 1200 மேற்பட்டோர் காயங்களுக்குள்ளாகினர். இதில் மூவர் கவலைக்கிடமாக உள்ளனர்.

வெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து பாரிய தொழிற்சாலையொன்றின் 6ஆயிரம் சதுர அடியுடைய கூரையொன்று முற்றாக சேதமடைந்துள்ளது. மேலும் அப்பகுதியிலுள்ள ஏராளமான வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கூரைகளும் ஆங்காகங்கே நொறுங்கிக் காணப்படுகின்றது என ரஷ்யாவின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

வானிலிருந்து வேகமாக வந்த எரிகல்லானது புவிலிருந்து சுமார் 50 கி.மீ. உயரத்தில் பாரிய சத்தத்துடன் தீப்பிளம்புகள் பிரம்மாண்டமாக வெடித்துள்ளது. இதில் சுமார் 32 மைல் பரப்பில் துகள்கள் சிதறியுள்ளது. இதன்போது யுரல் மலைப்பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் அதிர்வுக்குட்பட்டுள்ளது.

இவ்வதிர்வுகளினால் அப்பகுதியிலுள்ள பெரும்பாலான கட்டிடங்களின் கண்ணாடிகள் வெடித்துள்ளது. இதனாலேயே அங்குள்ள பெரும்பாலானர்வர்கள் காயங்களுக்குள்ளாகினர்.

ஏற்பட்டுள்ள சேதங்களைப் பார்த்தால் இந்த எரிகல் ஆபத்தானது தான் என்றாலும் பெரியளவில் ஆபத்து என்று சொல்லுமளவிற்கு இல்லை என எண்ணிவிட வேண்டாம். வானில் வெடித்த அதே எரிகல் புவின் மேற்பரப்பில் மோதி வெடித்திருக்குமானால்.... நினைத்துப் பார்க்கவே முடியாதுள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சுமார் 68 வருடங்களுக்கு முன்னர் 2ஆம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஸிமா நகரை உலுக்கியது 'சின்னப் பையன் (Little Boy)' எனும் அணுகுண்டு. இதன் தாக்கம் சொல்லிப் புரியவேண்டியதில்லை. வருடா வருடம் அணுகுண்டு வெடித்த தினமான ஓகஸ்ட் 6ஆம் திகதியை கொண்டாடியே உலகிற்கு உணர்த்திக்கொண்டிருக்கிறது ஜப்பான்.

அமெரிக்காவின் அதி புத்திசாலித்தனமான வேலையில் அணு விதைக்கப்பட்ட ஹிரோஸிமாவின் பூமியில் இன்றளவிலும் வீரியமிக்க அடுத்த சந்ததியின் விதைகளான குழந்தைகள் உருவாக முடியாமலே உள்ளது. 

இவ்வாறு ஹிரோஸிமாவை உலுக்கிய அணுகுண்டைப் போன்று 30 மடங்கு அதிக வலுவுடைய எரிகல்லே ரஷ்யாவின் வான் பரப்பில் வெடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ரஷ்யாவின் 1908ஆம் ஆண்டில் பாரிய எரிகல் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 1200 வருடங்களுக்கு ஒரு முறை பாரிய வெடிப்பில் ஒரு சம்பவமே அது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

எரிகல்லிற்கு காசு
இந்தளவிற் ஆபத்தை விளைவிக்கக் கூடிய எரிகல் என்பதனால் ஆராய்சிக்காக இக்கல்லிற்கு ஆராய்ச்சியாளர்களிடையே கேள்வி நிலவுகின்றது. வெடித்து எரிகல்லின் சிதறல்கள் கிடைக்கப்பெற்றவர் அவற்றை விற்பனை செய்துள்ளனர். சுமார் 6500 அமெரிக்க டொலர்கள் வரை விற்பனை செய்வதாக தகவல்கள் வெளியானது.

இதனால் குறித்த பிரதேசத்திற்கு எரிகல் வேட்டைக்கென ஏராளமானவர்கள் வந்துள்ளனர். இதனை ரஷ்ய பாதுகாப்புப் படை தடை செய்துள்ளதுடன் கல்லினை வெறுங் கையினால் தொடுவதை தவிர்க்குமாறும் எச்சரித்துள்ளனர்.

ஆபத்துக்கள் எதுவுமின்றி புவியைக் கடந்தது அஸ்டரொய்ட் 2012 DA14 
இதேவேளை அன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட் 2012 DA14 எனும் அஸ்டரொய்ட் பூமிக்கு எதுவித ஆபத்துக்களையும் ஏற்படுத்தாமல் புவியைக் கடந்து சென்றது.

பூமிக்கு மிக அண்மையாக அஸ்டரொய்ட் ஒன்று கடந்து செல்லும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்தது. எனவே இக்கல் புவியைக் கடக்கும் போது அஸ்டரொய்ட் தொடர்பான ஆராய்ச்சிகளும் அடுத்த கட்டத்திற்கு நகரும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.

150 அடி நீளமானதும் 130,000 தொன் நிறையுடையதுமான (உதை பந்தாட்ட மைதானத்தின் பாதி அளவு) 2012 DA14 அஸ்டரொய்ட், சுமாத்ரா தீவிற்கு மேலாக கடந்த 15ஆம் திகதி இரவு சுமார் 11.55 மணியளவில் 28,000 கி.மீஃமணி வேகத்தில் புவியுடன் மோதாது சுமாத்ரா தீவுகளுக்கு மேலாக 27,700 கி.மீ தூரத்தில் புவியைக் கடந்து சென்றுள்ளது.

ஆய்வாளர்களின் கணிப்பினை பொய்யாக்காமல் குறித்த அஸ்டரொய்ட் புவியைக் கடந்தது. இதன் பின்னர் உண்மையில் இக்கல் புவியை மோதுவதற்கு மிகச் சிறியளவில் வாய்ப்பு இருந்தது. அவற்றை நாங்கள் வெளியிடவில்லை என விஞ்ஞானிகள் கூறினர் எனத் தகவல்கள் வெளியாகின.

மேலும் இவ் அஸ்டரொய்ட் பூமியில் மோதியிருந்தால் 800 அடிக்கும் மேல் சுனாமி ஏற்பட்டிருக்கும். மேலும் மீண்டும் சின்னப் பையனுடனேயே இதுவும் ஒப்பிடப்பட்டுள்ளது. அதாவது 2012 DA14 அஸ்டரொய்ட் புவியுடன் சின்னப் பையன் அணுகுண்டினை விட 1000 மடங்கு ஆபத்தை விளைவித்திருக்கும் என விஞ்ஞானிகள் தெரவித்துள்ளனர்.

வருடத்திற்கு ஆகக் குறைந்தது 500 ஆயிரம் அஸ்டரொய்ட்டுக்கள் பூமியைக் கடந்து செல்கிறது. இவற்றில் ஒரு சிலவற்றை விஞ்ஞானிகளினால் கண்டுபிடிக்க முடிகிறது நாசாவினையும் சேர்த்து. 2012 DA14 அஸ்டரொய்ட் ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் நாசா இது தொடர்பில் மக்களுக்கு அறிய உதவியிருந்தது. அத்துடன் 2012 DA14 அஸ்டரொய்டின் நகர்வினையும்  http://eyes.nasa.gov/index.html என்ற இணையத்தளத்தில் நேரடியாக காண வழிசெய்தமை குறிப்பிடத்தக்கது. (இந்த அஸ்டரொய்ட் தொடர்பில் 2013.02.08ஆம் திகதி மெட்ரோவில் பார்க்கலாம்.)

இந்த இரண்டு விடயங்களையும் ஒப்பிடுகையில், அஸ்டரொய்ட்டுக்கள் மற்றும் எரிகற்கள் என்ற விடயம் தொடர்பில் விஞ்ஞானிகளின் நிலைப்பாடுதான் என்ன? என பொதுவான ஒரு கேள்வி எழச் செய்வதைத் தவிர்க்க முடியவில்லை என்பது உண்மைதான்.

இந்நிலையில் அஸ்டரொய்ட்டுக்கள் மற்றும் கற்களை அவதானிக்கவும் அவற்றிலிருந்து புவியை காக்கவும் புதிய சட்டலைட் மூலம் சூரியக் கதிர்கள் மூலம் கற்களை அழிக்கும் நடவடிக்கைகளை தற்போது புதிதாக முன்னெடுக்க அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தயாராகி வருகின்றனர்.

எனவே எதிர்வரும் நாட்களிலும் பல்லாயிரக் கணக்கான கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி பாய்ந்து வந்து கொண்டிருக்கும் அஸ்டரொய்ட்டுக்களுக்கு விஞ்ஞானத்தின் விடை என்ன என்பதை பொறுத்திருந்து பார்போம்.

அமானுல்லா எம். றிஷாத்

இக்கட்டுரையானது மெட்ரோ நியுஸ் பத்திரிகையில் 22.02.2013 அன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

Monday, February 18, 2013

துவிச்சக்கர வண்டியில் உலகைச் சுற்றிய ஜோடி விபத்தில் மரணம்

துவிச்சக்கர வண்டியில் உலகைச் சுற்றிவரும் இங்கிலாந்தைச் சேர்ந்த மேரி தோம்ஸ் (34) மற்றும் பீட்டர் றூட் (34) ஜோடி தாய்லாந்தில் வீதி விபத்தொன்றில் உயிரிழந்துள்ளனர்.

இந்த ஜோடி  2011ஆம் ஆண்டு ஜுலை 12ஆம் திகதி தங்களது பயணத்தை ஆரம்பித்து ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் சீனா போன்ற நாடுகளின் ஊடாக பயணம் மேற்கொண்டிருந்தது.

இப்பயணத்தின் போது ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், கஸகஸ்தான் மற்றும் ஈரான் உள்ளிட்ட 23 நாடுகளை இறக்கும் வரையில் பயணித்துள்ளனர்.

இந்நிலையில்இ கடந்த 13ஆம் திகதி பேங்கோக்கிலிருந்து சுமார் 70 மைல் தொலைவிலுள்ள வீதியொன்றில் ட்ரக் வண்டியுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக தாய்லாந்து பொலிஸ் இன்று திங்கட் கிழமை அறிவித்துள்ளது.

தாய்லாந்திலுள்ள பிரிலௌஸ் எனப்படும் பிரபல்யமான வீதியிலே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஆண்டொன்றிற்கு 13 ஆயிரம் இவ்வீதியில் ஏற்படும் விபத்துக்களால் உயிரழப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து ஏற்பட காரணமான இருந்தார் என ட்ரக் வண்டியின் சாரதி கைது செய்பட்டார். தற்போது அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும் சாரதி மீதான குற்றங்கள் நீரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 670 டொலர் தண்டப்பணம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்துள்ள குறித்த ஜோடி தங்களையும் தங்களது பயணம் குறித்த தகவல்களைறறற.வறழழகெழரசறாநநடள.உழஅ எனும் இணையத்தளத்தில் தரவேற்றியுள்ளனர்.

By AM.Rizath


Friday, February 15, 2013

தொழில்நுட்பக் காதலர்களே... காதலர் தின வாழ்த்துக்கள்!


ஆணும் பெண்ணும் சமமென்று வாழும் இக்காலத்தில் கூட ஆணையும் பெண்ணையும் ஒருவருக்கொருவர் அடிமையாக்கி எதிர்பார்ப்புக்களை தாண்டிய அன்பால் உணர்வுகளை இணைக்கும்  திறன்மிக்க 'காதல்' என்ற உணர்பூர்வமான விடயத்தை கொண்டாடிய அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.

நிலையான மாற்றத்தினில் நிலைமாறும் உலகியல் விடயங்களில் காதலர்களும் தொழில்நுட்பத்துடனான மாற்றத்தினில் காதல் பயணத்தை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.

கதைகளில் படித்தது போன்று காடுகளை தாண்டி தூது சென்ற புறாக்களின் சிறகுகளில் வளர்ந்தது அன்றைய காதல்கள். அதுவே கண்டங்களைத் தாண்டி இலத்திரனியல் அலைகளில் வளர்கிறது இன்றைய காதல்கள். இதனால்தான் என்னவோ இயற்கையை சுவாசித்து வாழ்ந்த காதல்கள் உருவாக்கிய காவியங்களை இப்போது படைக்கமுடியவில்லை.

என்றாலும் காதலினை வளர்க்கூடிய பல சாதனங்களை தொழில்நுட்பங்கள் படைத்துவிட்டது என்றால் வலைக் காதலர்கள் உட்பட ஏனையவர்களும் ஒருமித்த குரலில் ஒப்புக்கொள்வார்கள். ஏனெனில் குதிரை, புறா, ஓலை, தபால் என்றிருந்த காதல் போய் பேஜர், குறுஞ்செய்தி, எம்.எம்.எஸ், ஈமெயில், சமூகவலைத்தளங்கள் என்றல்லவா வளர்ந்து நிற்கிறது.

தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் தொடர்பாடலின் மூலம் உலகிலுள்ள அத்தனை துறையினரும் பயன்பெறுகின்றனர். ஆனால் காதலர்கள் உச்சப் பயனை அடைவதை தனிமையில் இனிமையாய் சிரித்துப்பேசும் ஒவ்வொருவரும் எமக்கு உணர்த்தத் தவறவில்லை.

காதலித்துப் பார் கவிதை வரும் என்றார் கவிஞர் வைரமுத்து. ஆனால் காதலித்துப் பார் கையடக்கத் தொலைபேசி வரும் என்பதே இப்போதைய உண்மை நிலைமை.

3ஜீ, 4ஜீ என்ற சந்ததியினருக்கு முன்னர் வாழ்ந்த சந்ததியிடம் காதல் பற்றிக் கேட்டால் அந்த சுகமான சந்தோசங்கள், காத்திருப்புகள், வலிகள் என எல்லாவற்றையும் லயித்துப் போய்க் கூறுகிக்கொண்டே இருக்கிறார்கள். அது கேட்போரையும் காதல் கொள்ளத் தூண்டும் வகையில் உண்மையாகவும் உணர்பூர்வமாகவும் இருக்கிறது.

ஆனால் இன்றை தொழில்நுட்பக் காதலர்களின் கதையானது அவர்களது காதலைப் போலவே மிகச் சுருக்கமானது. அதாவது கைப் பேசியின் மின்கலத்தில்  (Battery) இருக்கும் சார்ஜின் நேரமே காதலின் நேரமாகவும் அமைந்துவிடுகிறது. இதை விடக்கொடுமை என்னவென்றால் இவர்களது மகிழ்ச்சி, வேதனை, முத்தம் என அனைத்தையும் சொந்தம் கொண்டாடுகிறது இந்த கையடக்கத் தொலைபேசிகள்.

நிலைமை இவ்வாறே நீடித்தால் எச்சில் எந்தன் முத்தம் சர்ச்சை இன்றி ஒப்புக்கொள்வாயா? என்ற மதன் கார்க்கியின் வசனங்களும் நிஜமாகிவிடுமோ என அச்சமும் ஏற்படுகிறது.

இல்லை, இல்லை இப்போதும் கடலை விட ஆழமான, வானை விட நீளமான காதல் என்னுடையது என்பவர்களிடம் இதுவெல்லாம் ஹோர்மோன்ஸ் செய்யும் வேலை என்றால் ஏற்றுக்கொள்ளவா போகிறார்கள்!

இருந்தாலும் காதலுக்கென நேரத்தை ஒதுக்கி ஈ-வாழ்த்து அட்டைகள் மற்றும் அப்ளிகேஷன்ஸ் மூலம் காதலைப் பரிமாறிக்கொண்டிருக்கையில், பெபரவரி 14ஆம் திகதியையும் சேர்த்து 8 நாட்கள் காதலர் தினத்தினை கொண்டாடுகிறார்கள். இக்கொண்டாட்டங்கள் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகின்றது. அதேவேளை சீனா (சில பகுதிகளில்) உட்பட பல நாடுகளில் காதலர் தினம் என்றால் என்ன? என்று கேட்கும் நிலைமைகள் இன்றளவிலும் காணப்படுவதாக அதிர்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெப்ரவரி 7ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையில் ரோஸ் தினம், ப்ரொபோஸன் தினம், சொகோலேட் தினம், டெடி (டெடி பியர்) தினம், பிரொமிஸ் தினம், ஹக் தினம், கிஸ் தினம் என காதலர்கள் கொண்டாடுகிறார்கள்.

இவ்வகையான கொண்டாட்டங்கள் தற்போது கீழத்தேய நாடுகளிலும் தற்போது அதிகளவில் பரவி வருகின்றது. என்றாலும் மேலயத்தேய நாடுகளிலேயே பரவலாக காணப்பாடுகிறது. அவ்வாறான குறித்த சில நாடுகளில் இவ்வாறு அமைகிறது.

அமெரிக்கா 
ஆடல் பாடல் களியாட்டாம் என திருவிழாவாக கொண்டாடுவார்கள். காதலர்கள் தங்களுக்குள் வண்ணமயமான லித்தோகிராப், கையால் வண்ணம் தீட்டிய வாழ்த்து அட்டைகளை பரிமாறிக்கொள்வார்கள். மேலும் விதைகள், சிப்பிகள் போன்றவற்றினால் அணிகலன் உருவாக்கி மாட்டிக்கொள்வார்கள். மாணவர்களும் தங்களது வகுப்பறைகளில் காதலைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

லண்டன்
ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்தவர்கள் வித்தியாசமாக தமது அன்பினை வலன்டைன் பாதிரியாரின் பெயரில் பகிர்ந்துகொள்வார்கள். ஒரு குழுவினர் இதற்காக பாடல்களை தயார் செய்து சிறுவர்களைக் கொண்டு பாடவைத்து இனிப்பு பரிசுகளை வழங்குவதுடன் காதலர் தினத்திற்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பண் ஒன்றையும் வழங்கி மகிழ்வனர்.

பிரான்ஸ்
இங்கு வித்தியாசமாக காதலர்கள் ஆண்கள், பெண்களாக தனி அறையில் சென்று அடுத்த சென்றுவிடுவார்கள். பின்னர் பெண்கள் ஆண்களை அழைக்க வேண்டும். இதில் ஈர்க்கபடாத ஆண்கள் காதலில் தோல்வியுற்றவராகிவிடுவர். தொடர்ந்து படங்களை எதிர்த்து ஆண்களை பெண்கள் திட்டித்தீர்த்துக்கொள்வர். தற்போது இம்முறை பிரான்ஸ் அராசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது.

ஜப்பான் 
காதலர் தினம் இங்கு பெப்ரவரி மற்றும் மார்ச் 14ஆம் திகதிகளில் கொண்டாடப்படும். பெப்.14இல் பெண்கள் ஆண்களுக்கு சொகொலேட் போன்ற பரிசுகளை வழங்குவர். இத்தினங்களை வெள்ளை தினம் என அழைப்பர். பதிலுக்கு மார்ச் 14இல் ஆண்கள் தங்களது பதில் பரிசை வழங்கு தங்களது அன்பை பரிமாறிக்கொள்வர். இது 1960ஆம் முதல் இவ்வாறு கொண்டாடப்படுகிறது.

கொரியா
முற்றிலும் வித்தியாசமாக ஆண்டில் ஒவ்வொரு மாத்தின் 14ஆம் திகதியும் இங்கு காதலர் தினத்தினை கூரும் வகையில் ஏதாவது செய்துகொண்டே இருப்பார்களாம். ஜப்பானைப் போலவே இங்கும் காதலை வெளிப்படுத்திக்கொள்வார்கள். பின்னர் ஏப்ரல் 14ஆம் திகதி காதலில் தோல்வியடைந்தவர்கள் கறுப்பு தினத்தினை கொண்டாடுவார்கள். இதன்போது காதல் தோல்வியடைந்த பலரும் ஒன்றாக இணைந்து ஜஜாங் எனும் கறுப்பு நூடுல்ஸை உண்பார்கள்.

இவ்வாறெல்லாம் கொண்டாட்டங்கள் இடம்பெற்றது தற்போதும் சில இடம்பெறுகிறது. என்றாலும் இவற்றையெல்லாம் தூர எறியச்செய்து தொழில்நுட்பத்தினால் இணைக்கும் காதல் அதனாலே பிரிவது வருத்தமே.

இவற்றையெல்லாம் கடந்து உண்மைக் காதலை தொழில்நுட்பத்திலும் வெளிப்படுத்தும் ஆத்மார்த்தமான காதலர்களுக்கு இந்த காதலர்கள் தினம் சிறப்பாகவே அமைந்திருக்கும் என்பது உறுதி. அவ்வாறான தொழில்நுட்பக் காதலர்கள் அனைவரும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

ஏ.எம்.ஆர்

Wednesday, February 13, 2013

விஸ்வரூபம் - விமர்சனம் (இலங்கையில் வெளியிட்டதன் பின்னர்)


சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகள் பல கடந்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்களை சுமந்து இலங்கையிலும் வெளிவந்திருக்கிறது உலக நாயகன் கமல் ஹாசன் தயாரித்து, இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம்.

இந்திய உளவுத்துறை ரோ அமைப்பின் அதிகாரியினால் அமெரிக்காவிற்கு எதிராக செயற்படும் ஆப்கான் தீவிரவாதிகளின் செயற்பாடுகளை தடுப்பதுவே விஸ்வரூபம் படத்தின் கதை.

இதற்காக இஸ்லாம், கடவுள், அல்கொய்தா, கலை, மொழி மற்றும் விஞ்ஞானம் என ஏராளமான விடயங்களை புகுத்தி சாமானிய ரசிகர்களின் தலைகளை சுற்றவிட்டிருக்கிறார் இயக்குனர் கமல் ஹாசன்.

மணவாட்டியே மணாளனின் பாக்கியம் என ஒரு வகை நழினத்துடன் வாழ்கிறார் கதக் நடன ஆசிரியர் விஸ் எனும் விஸ்வநாத் (கமல்). இவரின் மனைவியாக வயதில் குறைந்த நிருபமா (பூஜா குமார்). நிருபமா தான் வேலை செய்யும் நிறுவனத்தின் முதலாளியுடன் காதல் வயப்படுகிறார்.

இதனால் தன்மீது கழங்கம் உள்ளது போல விஸ் மீதும் ஏதாவது குறை இருந்தால் கழற்றிவிட இலகுவாக இருக்கும் என தீர்மானிக்கிறார். இதற்காக தனியார் துப்பறியும் நிபுணரின் உதவியை நாடுகிறார். இதன்போது விஸ்வநாத் ஒரு முஸ்லிம் எனத் தெரியவருகிறது.

இந்நிலையில் துப்பறியும் நிபுணர் தீவிரவாதிகளால் கொலை செய்யப்படுகிறார். தொடர்ந்து தீவிரவாதிகள் துப்பறியும் நிபுணருடன் சம்மந்தப்பட்டவர்களை விசாரிக்கும் போது நிருபமாவின் முதலாளி கொலையுடன் ஆரம்பமாகிறது படத்தின் கதை. தொடர்ந்து நிசாம் அஹ்மத் கஷ்மீரியாக விஸ்வரூபம் எடுத்து அத்தனை பேரையும் துவசம் செய்து மனைவியையும் காப்பாற்றி நிருபமாவுடன் சேர்த்து ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்துகிறார் கமல்.

அதுவரையில் அமெரிக்காவில் அசுர வேகமெடுத்த கதைக்களம் பின்னர் ஆப்கானிஸ்தானில் நகர ஆரம்பிக்கிறது. ஏன்? எதற்காக? எப்படி? யார் என்ற கேள்விகளுக்கான விடைகளை மீதிக் கதையில் சுட்டுக்காட்டுகிறார் 'ரோ' அதிகாரியான நிசாம் அஹ்மத் கஷ்மீரி.

படம் முழுக்க நடிகர் மற்றும் இயக்குனராக கமலின் உழைப்பு தெரிகிறது கூடவே கமலிஸமும். தான் உலக நாயகன் என்பதனையும் தமிழ் சினிமா தனக்கு பல வருடங்கள் பின்நிற்பதையும் பறைசாற்றி நாயகனாகவும் இயக்குனராகவும் வெற்றி பெற்றிருக்கிறார் கமல் ஹாசன்.

ஆனால் வழக்கம்போல கமல் படம் என்றால் தெளியாத குட்டையாக இருக்கும் என்ற மாயை இந்தப் படத்தில் அங்காங்கே தெளியவிட்டு சாதாரண ரசிகர்களையும் கவர முயற்சித்திருக்கிறார். ஆனாலும் பல மொழி, திரைக்கதை, வசனம் மற்றும் தன் கருத்துக்கள் போன்றவற்றில தனது முந்தைய படங்களான ஹேராம், விருமாண்டி, அன்பே சிவம் போன்ற படங்களை நியாபகமூட்டுகிறது.

இயல்பான வசனங்கள் மூலம் சில இடங்களில் யோசிக்கவும் செய்திருக்கிறார். கடவுள் காப்பாற்றுவார் என்றதும் எந்த கடவுள்? என்பதாகட்டும், 4 கைகள் கொண்ட கடவுள் என நிருபமா திணறும் காட்சியாகட்டும் வசனகர்த்தா தானே என்பதை உறுதிப்படுத்துகிறார் கமல்.

இங்கிலாந்துக்கு எதிரான மருதநாயகம் கதையை இங்கிலாந்துகாரர்களை கொண்டே படமாக எடுக்கத் துணிந்த கமலா இப்படி ஒஸ்காருக்கு ஆசைப்பட்டு அமெரிக்காவிடம் மண்டியிட்டிருக்கிறார் என்றால் நம்பமுடியவில்லை.

கமல் தவிர படத்தில் வில்லானாக வரும் ராகுல் போஸ் சத்தமில்லாமல் மிரட்டுகிறார். ஏனையவர்களில் நாசர், சலீமாக வரும் ஜெய்டீப் என ஒரு சிலரே பாத்திரத்தில் நிலைத்து நிற்கிறார்கள். மீதிப்பேர் கதைக்கு தேவையாக இருந்தாலும் சொல்வதற்கில்லை.

நாயகிகளாக வரும் பூஜா குமார் இள வயது என்கிறார்கள். கமலிற்கு முன் வயதானவராகவே தெரிகிறார். அன்ரியா நியாபகத்தில் வைத்திருக்கும் அளவிற்கு படத்தில் தலைகாட்டவில்லை. காட்சிகள் சில தொக்கி நிற்பதைப் போலவே அன்ரியாவும். பாகம் 2 இன் தேவைகளா இருக்கலாம்.

தொழில்நுட்பத்தில் இன்னுமொரு பரிணாமத்தினை அடைந்திருக்கிறது இப்படம். ஒளிப்பதிவாளர் சானு வர்கீஸ் நியூயோர்க் நகரின் அழகையும் ஆப்கானிஸ்தானின் அழுக்கையும் அழகாக படம் பிடித்திருக்கிறார்.

எடிட்டிங்கில் மஹேஸ் சில இடங்களில் கோட்டை விட்டிருக்கிறார். முதல் பாதியிலிருந்த வேகமும் இரண்டாம் பாகத்தில் சற்றே குறைந்துவிடுகிறது. ஷங்கர் எசான் லோயின் இசையமைப்பில் படத்திற்கு தேவையான பாடல்கள். அனேகமாக பின்னணியிலேயே வருகிறது. பின்னணி இசையில் பல இடங்களில் மௌனமாகி அசத்துகிறது. குறிப்பாக முதல் சண்டைக் காட்சியில் அசத்தல் ரகம்.

சண்டைக் காட்சிகள் அத்தனையும் ஹொலிவூட் ரகம். சண்டைக் காட்சிகளில் கமலின் விஸ்வரூபம் 50 வயதைத் தாண்டிவிட்டார் என்பதனை நம்பமறுக்கச் செய்கிது. கிரபிக்ஸ் காட்சிகள், ஆப்கானிஸ்தானுக்காக போடப்பட்ட செட் (கலை) எல்லாம் அசலையும் நகலையும் பிரித்தறிய முடியாதுள்ளது.

இவ்வாறெல்லாம் தொழில்நுட்பத்தில் பிரமாதப்படுத்தியிருந்தாலும் பாகம் 2 எடுக்கும் எண்ணத்தினாலோ என்னவோ கதை ஆங்காங்கே தொக்கி நிற்கிறது. இதுதான் நடந்தது என வரும் காட்சிகளையும் சேர்த்து.

மொத்தத்தில் ஒஸ்காருக்காக ஹொலிவூட் தரத்தில் கமல் எடுத்திருக்கும் விஸ்வரூபமே இந்த விஸ்வரூபம்.

-அமானுல்லா எம். றிஷாத்


நாளை பூமியை நெருங்கும் மற்றுமொரு அஸ்டரொய்ட்! : பூமியுடன் மோதுவற்கு வாய்ப்பே இல்லை


காதலில் காதல் கொண்டவர்கள் காதலர் தினத்தினை எதிர்பார்த்துக்கொண்டிருக்கையில் விண்வெளியில் காதல் கொண்ட விண்வெளி ஆய்வாளர்களோ அதற்கடுத்த நாளானான பெப்ரவரி 15ஆம் திகதிக்காக ஆவலாய் காத்திருக்கிறார்கள்.

அன்று பூமிக்கு மிக அண்மையாக 2012DA14 அஸ்டரொய்ட் எனப்படும் பறக்கும் கல்லொன்று பூமியைக் கடந்துசெல்லவுள்ளது. இதனை எதிர்நோக்குவதற்காக பல்வேறு நாட்டிலுமுள்ள விண்வெளி ஆராய்வாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனா.

ஏனெனில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறையே இது போன்ற ஒரு சம்பவம் நிகழும் அதேவேளை 1200 வருடங்களுக்கு ஒரு முறை மோதல் அல்லது வெடிப்பு சம்பவங்கள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முதல் 1908ஆம் ரஷ்யாவில் ஒரு பகுதியில் அவ்வாறானதொரு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இருப்பினும் பெப்ரவரி 15ஆம் திகதி அவ்வாறெல்லாம் எந்தவொரு அசம்பாவிதமும் இடம்பெறாது. என்றாலும் பூமியுடன் மிக நெருக்கமாக பறக்கும் கல்லொன்று கடந்து செல்லும் இவ்வாறானதொரு அரிய சந்தர்ப்பத்தினை நழுவவிட விஞ்ஞானிகள் யாரும் தயாரில்லை. ஏனெனில் 2046ஆம் ஆண்டிலேயே கல்லொன்று பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லும்.

பூமியை மிக மிக அண்மையில் கடந்து செல்லவுள்ள 2012DA14 என்றழைக்கப்படும் அஸ்டரொய்டானது கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டது.

அப்போது குறித்த அஸ்டரொய்டானது பூமியை கடந்து சென்று 7 நாட்கள் ஆகிவிட்டது. இதன் பிறகே இந்த அஸ்டரொய்ட் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கண்களுக்கு தென்பட்டது. தொடர்ந்து மேற்கொண்ட ஆராய்ச்சிகளின்போதே இது தொடர்பிலான மேலதிக தகவல்கள் அறிவியல் உலகிற்கு தெரியவந்தது.



2012DA14 அஸ்டரொய்ட் வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி பூமியை அதன் மேற்பரப்பிலிருந்து வெறும் 27,700 கீ.மீ. (பூமியின் மத்தியிலிருந்து 34,100 கீ.மீ) தூரத்தில் கடந்து செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2012DA14 இனை ஒத்த அளவுடைய ஒரு அஸ்டரொய்ட் மிக நெருக்கமாக கடந்து செல்லும் முதல் சந்தர்ப்பமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

27,700 கீ.மீ. என்பது சாதாரணமாக எமக்கு பெரியதோர் தூரமாக தெரியலாம். ஆனால் இது விண்வெளி சம்மந்தமான ஆய்வுகளுடன் ஒப்பிடும் போது மிக மிக கிட்டிய தூரமே. அத்துடன் தொலைக்காட்சி, ஜீ.பீ.எஸ் போன்றவற்றிற்காக பயன்படுத்தப்படும் செயற்கை கோள்கள் அமைந்துள்ள தூரத்தினை விட இது குறைவாகும்.

இந்தளவிற்கு அண்மையில் வரும் போதிலும் ஏறத்தாள 45 மீற்றர் அகலாமனதும் 130 ஆயிரம் மெற்ரிக் தொன் நிறையுடைதுமான ஒரு காற்பந்து மைதானத்தின் பாதி அளவுடைய இந்த அஸ்டரொய்டினை வெற்றுக் கண்ணால் அவதானிக்க முடியாது. . பைனா குலர் மற்றும் சக்தி வாய்ந்த டெலஸ்கோப் போன்றவற்றினாலேயே பார்க்கமுடியும் .

கிழக்கு இந்தியப் பெருங்கடலில் இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவுக்கு மேலாக 27, 700  கீ.மீ. தூரத்தில் முற்பகல் 11.55 மணிக்கு பூமியை 17,450 மைல்/மணி வேகத்தில்  கடந்து செல்லும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த அரிச சந்தர்ப்பந்தினை எல்லோரும் பார்க்கும் விதமாக நாஸா இணைத்தினூடாக ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக  http://eyes.nasa.gov/index.html எனும் பக்கத்தை ஆரம்பித்துள்ளது. இதன் கல்லின் அசைவுகளை நேரடியாக காணலாம்.

ஏற்கனவே 2012DA14 அஸ்டரொய்டானது ஜனவரி 9ஆம் திகதி பூவியை கடந்து செல்லும் என கணிக்கப்பட்டிருந்தது. தற்போது பெப்ரவரி 15ஆம் திகதியன்றே இச் சம்பவம் நடைபெறும் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை இக்கல்லானது எந்த சந்தர்ப்பத்திலும் பூமியுடன் மோதுவதற்கு வாய்ப்பே இல்லை என நாசா விண்வெளி ஆய்வு மையம் தெள்ளத் தெளிவாக தெரிவித்துள்ளது.

இது குறித்து நாசா விஞ்ஞானி கலாநிதி டொன் யொமன்ஸ் கருத்து வெளியிடுகையில், இந்த கல்லின் பயணம் எவ்வாறு அமையும் என்பதுடன் நிச்சயமாக பூமியுடன் மோதவும் மாட்டாது என்பது உறுதி.

ஆனால் வரலாற்றில் அறிந்தவகையில் 2012DA14 அஸ்டரொய்ட் அளவிலான அஸ்டரொய்ட் ஒன்று பூமியை மிக நெருக்கமாக கடக்கும் அஸ்டரொய்ட் இதுவே. எனவே இதன் மீதான ஆராய்ச்சிகள் பிற்காலத்திற்கு உதவியாக இருக்கும்.




உண்மையில் ஒரு வருடத்தில் இதே மாதிரியான ஏறத்தாள 500 ஆயிரம் அஸ்டரொய்ட்டுகள் பூமியை நெருங்கிச் செல்கின்றது. ஆனால் அவை அனைத்தையும் எம்மால் அவதானிக்க முடிவதில்லை என்றார்.

இந்த அஸ்டரொய்ட் பூமியை நெருங்கும் வேளையில் நாசா அதனுடன் தொடர்புகொள்ளும் நடவடிக்கைகள் அத்தனையை தற்போது பூர்த்தி செய்துள்ளதாகவும் இதனால் பூமிக்கு ஆபத்தோ வெடிப்பு மற்றும் மோதல் சம்வங்களோ இடம்பெற மாட்டாது என நாசா தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் இன்னும் சில நாட்களில் பூமி சந்திக்கவுள்ள இந்த அஸ்டரொய்டினால் பூமி நிச்சயமாக அதிரமாட்டாது என்பது தெளிவாகிறது. ஆனாலும் இது தொடர்பிலான வதந்திகள் பூமியை குறிப்பாக எமது பிராந்தியங்களை அதிரச் செய்யலாம். எனவே முடிந்த வரை உண்மைகளை உரைப்போம் வதந்திகளை மறைப்போம்.



-அமானுல்லா எம். றிஷாத்

இணையத்துடன் இணையும் உயர்ரக கார்கள்



அடுத்த ஆண்டு முதல் உயர்ரக கார்களை இணையத்துடன் இணைக்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பல பில்லின்கள் முதலீட்டில் எதிர்காலத்திற்கான மோட்டார் கார்களை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இதற்காக ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் வாகனங்களை செலுத்தும் போதே வாகன ஓட்டுனரின் ஒலிக்கேற்ப இயங்கும் இணைய வசதியினை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

பாதைகளுக்கான வழிகாட்டி, பார்கிங் வழிகாட்டி, ரெஸ்டுரன்ட் விமர்சனங்கள், சமூக வலைத்தளங்கள் என இணைய வசதியினை வாகனம் செலுத்தும் போதே தொடுகைகள் எதுவுமின்றி குரள் கட்டளையில் இயங்கும் வண்ணம் அனுபவிக்கலாம். மேலும் இத்திடத்தினை அடுத்த ஆண்டிலேயே வெற்றிகரமாக இத்திட்டம் நிறைவேறிடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஏ.எம்.டபள்யூ, ஓடி, மெர்ஸிடெஸ் போன்ற கார் நிறுவனங்களது தங்களது மோட்டார் வாகனங்களில் இணையத்தை வழங்குவதற்கு தயாராகிவருகின்றது. இதுமட்டுமன்றி தன்னியக்க கார்களை தயாரிக்க எண்ணியிருப்பதாக ஓடி நிறுவனம் தெரிவித்திருந்தது.

தற்போது கையடக்கத் தெலைபேசிகளினால் சுமார் 25 வீதமான விபத்துக்கள் ஏற்படுகின்றது. இருப்பினும் மக்களால் தொலைபேசி பாவனையை கட்டுப்படுத்தி விபத்துக்களை தவிர்க்க முடிவதில்லை. ஆனால் வாகன உற்பத்தி நிறுவனங்களினால் மேம்படுத்தப்பட்ட வசதிகளின் மூலம் விபத்துக்களை குறைக்கும் நடவடிக்கைளில் ஒன்றே இது என வாகன உற்பத்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.