Total Pageviews

Wednesday, February 13, 2013

இணையத்துடன் இணையும் உயர்ரக கார்கள்



அடுத்த ஆண்டு முதல் உயர்ரக கார்களை இணையத்துடன் இணைக்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பல பில்லின்கள் முதலீட்டில் எதிர்காலத்திற்கான மோட்டார் கார்களை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இதற்காக ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் வாகனங்களை செலுத்தும் போதே வாகன ஓட்டுனரின் ஒலிக்கேற்ப இயங்கும் இணைய வசதியினை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

பாதைகளுக்கான வழிகாட்டி, பார்கிங் வழிகாட்டி, ரெஸ்டுரன்ட் விமர்சனங்கள், சமூக வலைத்தளங்கள் என இணைய வசதியினை வாகனம் செலுத்தும் போதே தொடுகைகள் எதுவுமின்றி குரள் கட்டளையில் இயங்கும் வண்ணம் அனுபவிக்கலாம். மேலும் இத்திடத்தினை அடுத்த ஆண்டிலேயே வெற்றிகரமாக இத்திட்டம் நிறைவேறிடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஏ.எம்.டபள்யூ, ஓடி, மெர்ஸிடெஸ் போன்ற கார் நிறுவனங்களது தங்களது மோட்டார் வாகனங்களில் இணையத்தை வழங்குவதற்கு தயாராகிவருகின்றது. இதுமட்டுமன்றி தன்னியக்க கார்களை தயாரிக்க எண்ணியிருப்பதாக ஓடி நிறுவனம் தெரிவித்திருந்தது.

தற்போது கையடக்கத் தெலைபேசிகளினால் சுமார் 25 வீதமான விபத்துக்கள் ஏற்படுகின்றது. இருப்பினும் மக்களால் தொலைபேசி பாவனையை கட்டுப்படுத்தி விபத்துக்களை தவிர்க்க முடிவதில்லை. ஆனால் வாகன உற்பத்தி நிறுவனங்களினால் மேம்படுத்தப்பட்ட வசதிகளின் மூலம் விபத்துக்களை குறைக்கும் நடவடிக்கைளில் ஒன்றே இது என வாகன உற்பத்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.