Total Pageviews

Wednesday, October 10, 2012

அப்பிளின் ஐபேட் மினி பற்றி படங்களுடன் தகவல்கள் கசிந்தது


அப்பிள் ஐபேட் மினி தொடர்பாக வலைத்தளங்களில் ஏற்கனவே நிறைய தகவல்கள் உத்தியோகபூர்வமற்ற முறையில் வெளிவந்துவிட்டது ஆனாலும் இம்முறை சற்றே அதிகமாக படங்களுடனேயே வெளிவந்திருப்பதே அதிர்ச்சி.

9வழ5அயஉ.உழஅ என்ற இணையத்தளத்தளமே குறித்த விடயங்கள் மற்றும் படங்களை கசியவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி இணையத்தளம் வெளியிட்டுள்ள தகவல்களில் அடிப்படையில் அப்பிளின் ஐபேட் மினி கொண்டுள்ள தொழில்நுட்ப வசதிகள் தொடர்பில் இவ்வாறு அமைந்துள்ளது.

7.85 இன்ச் தொடுதிரையினை கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அப்பிள் இதுவரை வெளியிட்டுள்ள ஐபேட்களின் தொடுதிரையை விடச் சிறியது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் இந்த ஐபேட் மினி 3ஜி மற்றும் 4ஜி வலையமைப்புக்களுக்கு ஏதுவாக அமையாது மாறாக வைபை வசதியை மட்டுமே கொண்டிருக்குமாம். தற்போது வெளிவரும் அனேக டெப்லட்கள் 3ஜி மற்றும் 4ஜி வலையமைப்புக்களுக்கு ஏதுவாக அமைந்துள்ள இந்நிலையில் இவ்வாறானதொரு வசதியினை ஏன் அப்பிள் கண்டுகொள்ளவில்லை என்பது அப்பிளிற்கு மட்டுமே வெளிச்சம்.

3ஜி மற்றும் 4ஜி வசதியை பெற முடியாது என்பது ஏமாற்றமாக இருப்பினும் இது அதிகார பூர்வமான அறிவிப்பும் இல்லை என்பதனால் பொறுத்திருந்தே இது தொடர்பில் அறியமுடியும்.


இது மட்டுமல்லாது அப்பிள் ஐ போன் 5இல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சார்ஜ் செய்வதற்கான கெனக்டர் மற்றும் போர்ட்களில் ஏற்படுத்திய மாற்றங்களை ஒத்த அம்சங்களையே இதிலும் காணப்படுகிறதாம்.

மேலும் இந்த ஐபேட் மினியில் ஏ 6 புரொசசர், நனோ சிம் ட்டரே, முகப்பு கெமரா என பல்வேறு அம்சங்களையும் கொண்டுள்ளதோடு 32 ஜிபி மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட பதிப்புக்களையும் பெறலாம்.

அத்துடன் இதன் இயங்குதளம் ஐ.ஓ.எஸ் 6 என்ற புதிய பதிப்பினையும் கொண்டுள்ளதாக கூறப்படுகின்ற இதேவேளை 10 மில்லியன் ஐபேட் மினியினை தயாரித்துள்ளதோடு இம்மாதம் 17 திகதி அறிமுகம் செய்து நவம்பர் மாதம் 2ஆம் திகதி முதலே விற்பனைகளை மேற்கொள்ள அப்பிள் நிறுவனம் எதிபார்த்திருப்பதாவும் கூறப்படுகின்றது.

அப்பிள் உற்பத்திகளுக்கு விளம்பரம் என்பது தேவையில்லை போல் தெரிகிறது ஏனெனில் ஒவ்வொரு உற்பத்திகளுக்குமான கிசுகிசுக்களே அந்த பணியை செவ்வனே நிறைவேற்றிக்கொள்கிறதே!