Download link : Expendables 2 Blue ray with subtittle
(கட்டுரையின் முடிவில் பார்க்கவும்.)
உலகளாவிய action திரைப்பட ரசிகர்களுக்கான தீனியாக வெளிவந்த திரைப்படம் இது. கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் 13 ஆம் திகதி வெளிவந்த Expendables இன் தொடர்ச்சியாக இது வெளி வந்தது.
$100 மில்லியன் செலவில் பல்கேரியா, ஹொங்-கொங் மற்றும் நியூ ஒர்லண்ட்ஸ் ஆகிய நாடுகளில் 14 வாரங்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு இந்த வருடம் 17 ஆம் திகதி ஆகஸ்டு மாதம் உலகெங்கும் திரையிடப்பட்டது. இது வரை Expendables 2 குவித்துள்ள வசூல் $285.7 மில்லியன்.
வெளியிடப்பட்ட டிரைலர் இனை விட திரைப்படம் மிக அற்புதமாக உள்ளது. அதனால் தான் இத் திரைப்படம் Hollywood இல் Stallone's Adrenaline Pumping Action Ride என அழைக்கப் படுகிறது.
உலகத்து திரைப்பட ரசிகர்களில் பெரும்பாலானோர் Action திரைப்பட ரசிகர்களே. அதனை நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார் Sylvester Stallone .
இவரே உலகெங்கும் Rambo என அறியப்பட்ட பிரபல கதாபாத்திரத்தில் Action விருந்து படைத்தவர்.
Hollywood திரைப் படங்களின் நாயகன் எப்போதும் அதன் இயக்குனர்தான் என்பதை Expendables 1 மூலம் உணர்ந்து கொண்ட Sylvester Stallone இந்த முறை இயக்குனர் பொறுப்பை Tomb rider, The Mechanic மற்றும் பல திரைப்படங்களை இயக்கிய அனுபவ இயக்குனராகிய Simen West இடம் கொடுத்து விட்டு தனது வேலையை மாத்திரம் கையில் எடுத்துள்ளார்.
Expendables 2 இல் Sylvester Stallone இன் தனிப்பட்ட வாழ்கையில் நண்பனும் தொழில் முறையில் எதிரியும் ஆன Arnold Schwarzenegger (Commando, Termonator, predator மற்றும் பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் மூலம் அறியப்பட்டவர்) தன் பிரபலமான பஞ்ச் டயலாக் " I'm Back" உடன் அறிமுகம் ஆகாமல் Stallone ஆல் காப்பாற்றப்படும் காட்சியுடன் அறிமுகம் ஆகிறார். அந்த இடத்தில் "நான் உன்னிடம் கடன் படுவதை வெறுக்கிறேன்" என்று கூறிவிட்டு பின்னர் Stallone இன் Team இனை படத்தின் பாதியில் காப்பாற்றி "I'm Back" என்று தன் கடனைத் தீர்த்துக் கொள்கிறார். அவர்களின் ரசிகர்கள் நிச்சயம் ரசித்து இருப்பார்கள்.
இவ் வசனம் 1991 இல் வெளிவந்த James Cameron (Titanic மற்றும் Avatar இனை எழுதி தயாரித்து இயக்கியவர்) இன் Terminator 2 : The Judgement Day இற்காக Arnold Schwarzenegger இனால் பேசப்பட்டது.
இவ் வசனம் அஜித் குமார் இனால் பில்லா வில் பேசப்பட்டு தமிழில் பிரபலம் ஆனதும் கூட.
Expendables 2 இல் அந்தந்த நாயகர்களின் பிரபலமான வசனங்களுடன் நகைசுவையைக் கலந்து அதிரடியாக தந்துள்ளனர்.
அந்தந்த நாயகர்களின் தனித்தன்மையும் தெளிவாகத் தெரிகிறது.
ஒரே கதையாய் இருந்தாலும் ஒரே பாணியாய் இருந்தாலும் அதில் எப்படி வித்தியாசம் காட்டி ரசிகர்களுக்கு தங்களின் தனித் தன்மையுடன் விருந்து படைக்கலாம் என்பதற்கு இந்த நட்சத்திரங்களின் குழு ஓர் உதாரணம்.
ஒரு இடத்தில் துப்பாக்கி ரவைகள் முடிந்தவுடன்
Arnold : I am almost out. I'll be back
Bruce : You've been back enough. I'll be back
அந்த இடத்தில் Arnold இன் முகத்தைப் பார்க்க வேண்டும். ஹஹ்ஹஹ்ஹா... Yippee-ki-yay.
வழமை போல் Arnold இனால் இதிலும் சிரிக்க முடியவில்லை. Terminator 2 இல் சிறுவன் John corner, தன் காவலன் Terminator (Arnold) ஐ சிரிக்கச் சொல்லி விட்டு, அவர் சிரித்த பிறகு "நீ சிரிப்பதை விட சிரிக்காமல் இருப்பதே மேல்" என்று சொன்னதை அவ்வளவு இலகுவில் மறந்து விடுவோமா என்ன.
Expedables 2 இன் சிறப்பம்சே அதன் நடிகர்கள்தான். Classical action நாயகர்களுடன் தற்போது பிரபலமாக அறியப்பட்ட, Hollywood Action நாயகன் Jason Statham உம் இணைந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார். Transpoter மூலம் இவர் பிரபலமானவர். அதற்கு பிறகு அவரின் ஆர்ப்பாட்டம், அலட்டல் இல்லாத Action இற்கு Hollywood ரசிகர்கள் அடிமையாகிப் போனார்கள். நானும்தான்.
முதன் முதலாக Van Damm வில்லன் வேடத்தில் மிரட்டியுள்ளார். இதுவரை அவர் செய்து வந்த ஹீரோயிசம் கலந்த stylish action இதில் கொடூரமாகத் தெரிகிறது. பிரதான வில்லனாய் இருந்தாலும் ஒரு சில நிமிடங்களே வருகிறார். அதிலும் அவர் தன் ரசிகர்களை ஏமாற்றவில்லை.
Stallone உடன் மோதும் போது அவரை வீழ்த்தி விட்டு "over so soon? I want my money's worth" என்கிறார். அக் காட்சி அவரிற்கு போதுமான தீனி படத்தில் இல்லை என்பதை ரசிகர்களுக்கு உணர்த்துகிறது.
அவரின் அறிமுகக் காட்சியில் Billy ஐக் கொல்லும்போது... waahh.... செம stylish..
Billy இன் சோக முடிவிற்குப் பிறகு Bruce Willis இடம் பணத்திற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேலை, ஒரு நல்ல திறமையான இளம் பையனின் ஆத்ம சாந்திக்கான பழிவாங்கல் படலமாக மாறுகிறது.
அந்த இடத்தில் Stallone சொல்வார் "Track 'em, Find 'em, kill 'em." அந்த மாஸ் தலைகளின் கூட்டத்திற்கு அவர் தலையாக இருப்பதற்கு தகுதியானவர் என்பதை எந்த மாற்றுக் கருத்தும் இன்றி ஏற்றுக் கொள்ள முடிகிறது.
what a guts....!!!
இதில் மிகப் பிரபலமான இரண்டு ஆண் Action நாயகர்களும் இரண்டு பெண் Action நாயகிகளும் உள்ளடக்கப்படவில்லை.
Vin Diesel ( XXX மற்றும் Fast and Furious தொடரின் மூலம் அறியப்பட்டவர்). மற்றையவர் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை தன் குறும்பு மற்றும் அப்பாவித்தனம் கலந்த Action மூலம் உலகத்தைக் கவர்ந்த சூப்பர் ஸ்டார் Jackie chan.
பெண்களில் Milla Javovich (Resident Evil தொடரின் நாயகி) மற்றும் அழகான இரத்தக் காட்டேரி Kate Beckinsale (Underworld தொடர் மற்றும் Van Helsing மூலம் மிகப் பிரபலமானவர்.)
இது அவர்களின் ரசிகர்களுக்கு ஒரு தாங்க முடியாத ஏமாற்றமே.
Expendables 3 வெளியிடப்பட்டால் அதில் இவர்களும் உள்ளடக்கப் படுவார்கள் என அவர்களின் ரசிகர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
Stallon அவரின் classical ரிவால்வர், classical பைக், classical கத்தியுடன் உங்களால் Classic ஐத் தவிர்க்கவே முடியாது என்று வந்து நிற்கிறார். அவரின் அந்தப் பழைய ரிவல்வரால் தற்போதைய pistol மாதிரி தொடர்ந்து சுட முடியாது. ஒவ்வொரு தடவை சுடும் போதும் re-load செய்ய வேண்டும். அதனை அவர் செய்யும் பாணி அவருக்கே உரியது. அவரின் ரசிகர்கள் தமிழர்களாய் இருந்திருந்தால் எழுந்து நின்று விசில் அடித்து இருப்பார்கள்.
Statham அவரின் இறுதி சண்டைக் காட்சியில் Scott Adkinson இன் தலை Air Craft இன் பின் பக்க விசிறிக்குப் பலி கொடுத்து விட்டு "can't beat the classic" என்பார். உண்மைதான்.
செம பஞ்ச்.....
படம் முழுவதும் Stallone, Statham இற்கிடையிலான சம்பவங்களும் உரையாடல்களும் ரசிக்கும்படியவே உள்ளன. காட்டிற்குள் பெட்டகத்தைத் தேடிப்போகும்போது Statham இற்கு அவரின் காதலியிடம் இருந்தது போன் வரும். அதற்கு Stallone "Hallo, dear" என்பார் Statham ஐப் பார்த்து. Nice humor sense.
இறுதிக் காட்சியில் காயம்பட்ட Stallone முகத்தைப் பார்த்து Statham "ஒரு நண்பனா ஒனக்கு ஒண்டு சொல்றன். எப்பிடி சண்டை போடுறது எண்டு நீ கட்டாயம் படிக்கணும்" என்பது வரை அது தொடர்கிறது.
Chuck Norris இன் அறிமுகத்தின் பின் Stallone அவரிடம் Booker இனை நாக பாம்பு கடித்த வதந்தி பற்றிக் கேட்கும் காட்சி, ரஜினியின் "கடிச்சிது, ஆனா வெஷம் ஏறெல்ல" காட்சியையும் வடிவேலுவின் "கடிக்காதேங்க... கடிக்காதேங்க..." காட்சியையும் ஒரு சேர ஞாபகமூட்டுகிறது.
அந்த பழைய Russian Army base இல் Expendables இன் உரையாடல் அருமையான நகைச்சுவைப் பாணி. Gunner இன் குறட்டைச் சத்தம், இறப்பதற்கு முன் அவர்கள் சாப்பிட விரும்பும் சாப்பாடு பற்றிப் பேசுவது, classic இசைப் பின்னணி சண்டை.. ரசித்து செதுக்கி இருக்கிறார்கள்.
இறுதியில் Stallone அவரின் classical air craft ஐ இழந்ததற்குக் பதிலாக Bruce Willis ஒரு பழைய air craft ஐப் பரிசாக அளிப்பார். அதற்கு Stallone "அது மியுசியத்தில் இருக்க வேண்டியது" என்பார்.
அதற்கு Arnold சொல்வார் "நாம் எல்லோரும்தான்" என்று.
நீங்கள் என்ன நினைக்கிறீகள்? இப்படை அதற்குத் தகுதியானதா..!!?
Click here to download the full movie in blue ray
றிபாஸ்
சிங்கப்பூரில் இருந்து....