சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

நாங்கள் பிரசுரித்த, உங்கள் தேடலுடன் தொடர்புடைய செய்திகள்....!!!
Here are the articles we written related to your search..!!!

Tuesday, May 10, 2016

Worst Horror Movies of 2016

-AM. RIFFAZ

Horror movies have existed for more than a century. Hollywood has produced many horror movies in the past that have really terrified us.
Movies like Nightmare on Elm Street, The Babadook, The Ring, Omen and many other films that have really makes the hair on the back of your neck stand up!

As a horror movie fan I am so disappointed about what Hollywood has produced in the last few years.
The number of horror movies is increasing year by year but most of these films fail to induce the audience's primal fears.

Worst Horror Movies I Watched

Let's forget the past. I never miss a horror movie. From the beginning of 2016 until this date I did not miss a movie which was released under the horror genre.

After watching these movies, I now want to help you save some time and money by listing the three worst horror movies I’ve watched from the beginning of this year – January 01, 2016 – until now - April 26, 2016.

So you can stay away from these worst horror movies and enjoy your time watching or doing something else.

01. Little Dead Rotting Hood

Produced by: David Michael Latt, David Rimawi, Paul Bales
Directed by: Jared Cohn
Starring: Eric Balfour, Bianca Santos, Heather Tom, Romeo Miller
Release Date: 5 January 2016 (USA)

This was surely my bad luck. My 2016 horror movies’ journey started with this low budget silly movie. Little Dead Rotting Hood was released in the first week of January 2016. Actually, it was the movie title that made me want to watch this ‘garbage’.

Right after the movie’s opening scene I felt this was going to be nothing but a waste of time. And, it was!
The movie was like a short home movie clip made by some kids. Actually, nowadays kids make some good short movies that are much better than this Little Dead Rotting Hood.

What makes this movie one of the worst? Everything except the story. I kind of like the story.
Everyone knows the classic story of Little Red Riding Hood. They changed the story and took only just a single slight line from the story we knew.

This list includes the worst horror movies I watched in January and February 2016


Sunday, January 12, 2014

வீரம் - விமர்சனம்

கோட் சூட், கூளிங் கிளாஸ் என நகரத்தில் வில்லத் தனமாக சுற்றிக்கிட்டு இருந்த அஜித் வெள்ளை வேஷ்டி சட்டையில் பாசக்கார அண்ணனாக கிராமத்தில் வீர(ம்) நடை போடுகிறார்.


தம்பிக்களுக்காக வாழ்கிற அண்ணன் விநாயகம் (அஜித்). அண்ணனுக்கு வாழ்க்கை ஏற்படத்தத் துடிக்கும் 4 தம்பிகள். இவர்கள் பக்கம் நியாயம் இருந்தால் எதிரிகளுக்கு சாப்பாடு போட்டு காயம் ஏற்படுத்தி வாழ்கிறார்கள். 

இந்த பாசமான குடும்பத்தில் பிரிவு ஏற்பட்டுவிடும் என்பதால் திருமணம் செய்யாமலேயே தானும் தம்பிகளுமாக இருக்கும் விநாயகத்தின் வாழ்க்கையில் கோப்பெரும் தேவியை (தமன்னா) இணைக்க தம்பிகளும் இவர்கள் கூடவே இருக்கும் சட்டத்தரணியாக வரும் சந்தானமும் முயற்சிக்கிறார்கள்.

தமன்னா - அஜித் ஒருவருக்கு ஒருவர் காதல் கொள்கிறார்கள். முன் ஜாமின் எடுத்து தப்பு செய்யும் அஜித் குடும்பமும் அமைதிக்காகவே வாழும் தமன்னாவின் குடும்பமும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதை விறுவிறுப்பான பதைபதைப்பும் பாசமும் என கலந்து விருந்து படைக்கிறது மீதிக் கதை.



90களில் வந்த கதையாகவும் ஹரியின் சாயலாகவும் இருந்தாலும் ரசிக்கும் படி படமாக்கி ரசிகர்களிடம் ஷபாஸ் பெறுகிறார் இயக்குநர் சிவா.
முதல் பாதி முழுவதும் திரையரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்துகிறார் சந்தானம். விரசம் இல்லாத வசனங்கள் திருப்தி. அலுப்பில்லாமல் நகர்கிறது. இடைவேளையில் பரபரக்கும் சண்டைக் காட்சியுடன் எதிர்பார்ப்பும் எகிறுகிறது.

பிற் பாதியில் சண்டை, குடும்பப் பாசம், நகைச்சுவை என அதிரடியாக படம் வேகமெடுக்கிறது. முற்பதியிலிருந்த வேகம் சற்றே குறைந்தது போல் ஓர் உணர்வு. நீண்ட இடைவேளைக்கு பின்னர் சீ சென்டர் மற்றும் குடும்பங்களை கவர்கிறதொரு அஜித் படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் சிவா. 

படத்தினை பிரேம் பை பிரேமாக அஜித்துக்காக உருவாக்கி இருந்தாலும் வீணாக அஜித் புகழ்பாடமல் பார்த்திருப்பது வரவேற்கத்தக்கது. முடிஞ்சா என்ன தாண்டி தொட்றா பார்க்கலாம் என சவால் விடும் காட்சி, தொழில் போட்டி எதிரியிடம் பேசும் இடம், வில்லன்கள் தம்பிகளை துரத்திவர ஆர்ப்பாட்டமில்லாமல் ஊஞ்சல் ஆடும் அஜித் என பல இடங்களில் அஜித்துக்கான மாஸ் காட்சிகளையும் படத்தின் லொஜிக் மீறல்களை மறைக்கும் விதமான வேகமான திரைக்கதை அமைப்பிலும் இயக்குநர் வென்றிருக்கிறார்.



அஜித்தின் நரை முடிக்கும் ஒரு காரணத்தை வைத்து திருப்திப்படுத்துகிறார். அஜித் ரசிகனாகவே வீரம் படத்தை தான் எடுத்ததாக கூறிய சிறுத்தை சிவா இனி வீரம் சிவா என அழைக்கப்பட்டாலும் ஆச்சரிமில்லை.

படத்தில் ஒரு சில காட்சிகைத் தவிர அனைத்து காட்சிகளிலும் பல நட்சத்திரங்கள் இருந்தாலும் அஜித் உச்சமாக ஜொலிக்கிறார். முதல் பாதியில் அதிரடியாக ஆர்ப்பாட்டம் செய்து பிற்பாதியில் அமைதியாக அதிரடி காட்டுகிறார். 

மதுரை மண் வாசனையை மறக்காமல் தமிழிலேயே படம் முழுவதும் பேசுகிறார். காதல், பாசம் என உருக்கம் காட்டுகிறார். மாட்டு வண்டி, வேஷ்டி சட்டையிலும் அஜித் கச்சிதமாப் பொருந்துகிறார். பல இடங்களில் பாசத்தாலும் வருடுகிறார். மொத்தத்தில் புது அவதாரத்தில் மிளிர்கிறார்.

தம்பிகளாக வரும் விதார்த், பாலா, முனிஸ், சந்தோக் என அனைவரும் படம் முழுவதும் வருகிறார்கள். விதார்த் மற்றும் பாலாவுக்கு நடிக்க வாய்ப்பு அதிகம். இறுதிவரை அண்ணனை ஏமாற்றாமலும் இறக்காமல் இருப்பது மகிழச்சி.

என்றென்றும் புன்னகையைத் தொடர்ந்து வீரத்திலும் மீண்டெழுந்துள்ளார். டைமிங்கில் டைவடிக்கிறார். தம்பி ராமையாவுடன் தன் பங்கிற்கு சிரிக்க வைக்க முயற்சித்துள்ளார்.

3 வருட இடைவெளிக்கு பிறகு நாயகி தமன்னா ரசிக்க வைக்கிறார். பாடலுக்கு மட்டுமன்றி நடிக்க அதிக வாய்ப்பு. காதல் காட்சிகளில் அஜித்துக்கு சேலையுடன் வரும் தமன்னாவை ரசிக்கலாம்.



பாடல்கள் காட்சிகளையும் கிராமத்தில் இயல்பாக காட்டியிருக்கலாம். வெளிநாட்டில் நடக்கும் பாடல் காட்களில் தமன்னா - அஜித் டூயட் குறைபாடுதான்.

நாசர் வழக்கம்போல பாத்திரத்தின் தேவையை உணர்த்துகிறார். வில்லன்களாக வரும் பிரதீப் ராவத் நல்ல தேர்வுதான். ஆனாலும் வழக்கம்போல விறைப்பாக வந்து சிரிப்பாகிப் போகிறார். ரசிக்கலாம். அத்துல் குல்கர்னி கொலை வெறியாக அலைகிறார். அவினாஸ் சிறுத்தையை தொடர்கிறார். 

இவர்கள் தவிர தேசிய விருது நடிகர் அப்புக்குட்டி அஜித்தின் கூடப்பிறக்காத தம்பியாக வந்து கண்கலங்க வைக்கிறார். ரமேஷ் கண்ணா, இளவரசு, மயில்சாமி, தேவதர்ஷினி, அபினயா, மனோசித்ரா, வித்யூலேகா என பலர் பாத்திரத்தின் தெரிவுகளாக உள்ளனர். அஜிதுடன் நெருங்கிப் பழகும் அந்த குழந்தை திணிக்கப்படாத பாசம் நெகிழ்ச்சி.


படத்தில் பல லொஜிக் ஓட்டைகள் இருந்தாலும் ஸ்க்ரீன் பிரசன்ஸ் மூலம் அஜித்தும் திரைக்கதை மூலம் சிவா மறைத்ததில் நிச்சயம் வெற்றி. 

பின்னணி இசை பல இடங்களில் ரசிகர்களை துள்ள வைக்கிறது. மாஸ் படத்துக்கு தேவையானது. முதல் பாடல் ஆட்டம் போட வைக்கிறது. ஏனையவை பெரிதாக ஈர்க்கவில்லை. பாஸ் மார்க் வாங்குகிறார் டி.எஸ்.பி.

பாடல் வரிகளில் விவேகா தன்பங்கை சிறப்பாக செய்துள்ளார்.
கிராமத்தை ரம்மியமாகவும் அதிரடியாகவும் காண்பித்துள்ளார் ஒளிப்பதிவாளர் வெற்றி. காசி விஸ்வநாத்தின் எடிட்டிங் படத்தின் வேகத்தை அதிகரிப்பதில் பக்க பலமாகவுள்ளது. 

சண்டைக் காட்சிகளில் சில்வா பலரையும் பறக்கவிட்டுள்ளார். டூப் இல்லாத அஜித்தின் ரயில் சண்டைக் காட்சி சிலிர்க்க வைக்கிறது.

பன்ச் வசனங்கள் இல்லை. ஆனால் வசனங்கள் பன்ச்சாகவுள்ளது. பரதனின் வரிகளுக்கு அஜித் சிறப்பாக உயிர்கொடுத்துள்ளார். குறிப்பாக உழைக்கிற ஜாதிடா..., சோறு போட்டா தாய் சொல்லிக்கொடுத்தா தகப்பன் போன்ற பல வசனங்கள் நச் நகரம்.

பொங்கல் ஜல்லிக் கட்டில் காளையாக குதித்துள்ளது வீரம் படத்தில் ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர்., ரஜினியை காட்டிவிட்டு அஜித்தின் 'வீரம்' படத்துக்கு வரும் நாகி ரெட்டியின் விஜய ப்ரொடக்ஷன் தயாரிப்பு நிறுவனம் ஏதோ சொல்லாமல் சொல்லிவிட்டது. 

நீண்ட நாட்களுக்கு பின்னர் ஏ, பீ, சீ என அனைத்து சென்டர்களிலும் புதியதோர் அவதாரத்தில் அஜித்தை வீர நடை போடச் செய்துள்ள இந்த வீரம்.

-ஏ.எம்.ஆர்

ஜில்லா - விமர்ச்சனம்

விமர்சனங்களாலும் வணிக ரீதியாகவும் மட்டுமன்றி விஜயின் அரசியல் தலைவர் கனவுக்கும் தலைவலியாக அமைந்த தலைவா திரைப்படத்தினைத் தொடர்ந்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளிடையே இளைய தளபதி விஜய் மற்றும் மோகன் லால் நடிப்பில் வெளியாகியுள்ளது 'ஜில்லா'.


தலைவாவில் இழந்ததை ஜில்லாவில் நிலைநிறுத்த தீயா வேலை செய்யணும் என்பதை காட்டும் வகையில் இளைய தளபதியில் வரும் 'தி' இல் தீ எரிந்தவாறு படம் ஆரம்பமாகின்றது.

பின்னரே தெரிகிறது படம் பார்க்க வந்த எமது காசுக்கு வைத்த தீ அதுவென்பது. இன்னும் தடவைதான் ஏமாறப்போகின்றோமோ?

சிவனிடம் (மோகன்லால்) வேலை செய்யும் சக்தியின் (விஜய்) அப்பா பொலிஸ் அதிகாரியால் கொலை செய்யப்பட அந்த இடத்திலிருந்து காக்கியை வெறுக்கும் நாயகன், வளர்ப்புத் தந்தை சிவன், அவரது மனைவி, மகள், மகன் மீது பாசத்தை கொட்டி வளர்கிறார்.

தவறு எனத் தெரியாமலேயே தவறுக்கு துணை போகிறார் சக்தி. ஒரு கட்டத்தில் சிவன் தனது குற்றச் செயல்களை தடையின்றி மேற்கொள்ள காக்கி என்றாலே வெறுக்கும் சக்திக்கு பொலிஸ் வேலையை வாங்கிக் கொடுக்கிறார். பின்னர் அந்த பொலிஸ் வேலையே சிவனுக்கு எமனாகிறது.

குற்றங்கள் அதிகரிக்கிறது பலர் பலியாகக் காரணமாகின்றார் சிவன். தவறுக்கு துணை போவதை உணர்ந்து தந்தைiயும் திருத்தி எதிரிகளிடமிருந்து குடும்பத்தையும் நாயகன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதை சுவாரஷ்யமில்லாத ஓட்டைத் திரைக்கதையில் பொறுமையை சோதிக்கிறார் இயக்குநர் நேசன்.


ஆரவாரமாக விஜய்யை வரவேற்ற ரசிகர்களின் ஆர்ப்பாட்டம், படம் ஆரம்பமாகி 10 நிமிடங்களுக்குள் அடங்கிவிடுகிறது. ஆரம்பமே நம்ப மறுக்கும் காட்சியுடன் கல் வீசும் சிறு வயது விஜய்க்கு கைதட்டல் வரவேற்பு இல்லாதது ரசிகர்களின் ரசனை உயர்ந்திருப்பதை தெளிவுபடுத்துவதாய் அமைந்தது.

திரைக்கதையினால் படத்தை விறுவிறுப்பாக நகர்த்துவதில் கோட்டை விட்டுள்ளார் இயக்குநர். மதுரையில் கதை நகர்ந்தாலும் மதுரை (மீனாட்சி கோவிலைத் தவிர) வாசனை எங்கும் தெரியவில்லை. பரப்பான காட்சிகள், திருப்பங்கள் என நினைக்கும் காட்சிகள் திரையில் வருவதற்கு முன்பே எளிதாக கண்டுபிடித்து கூச்சலிடுகின்றனர் ரசிகர்கள்.


முதல் பாதியில் நகைச்சுவையுடன் கரையேறி இடைவேளையில் சூடு பிடித்தது. 2 ஆம் பாதி ஆர்வமாக அமர்ந்தால் மீண்டும் முதலிருந்து ஆரம்பமாகி சண்டை... சண்டை... சண்டை... என தவள்கிறது. இடையில நடுவுல வழக்கமான மானே தானே போட்டுக்கங்க!

படம் முடிந்துவிட்டதாக நினைத்து ரசிகர்கள் எழுந்த பின்னர் சுமார் 5 நமிடங்களுக்கு மேல் படம் நீள்கிறது. (கண்ணக் கட்டுதே...!)

தீனாவையும் விஜயின் பழைய படங்கள் உடை, நடை போன்றவை ஞாபகத்துக்கு வருவதை தவிர்த்திருக்கலாம். ஓவர் நைட்டில் ஓபாவாகிறது போல ஒரே நேரத்தில் மதுரையிலுள்ள ரௌடிகளை ஜஸ்ட் லைக் தட் என அள்ளுகிறார். நாயகனின் செயல் ரசிகர்களை கொல்கிறது. படத்தில் இருக்கும் லொஜிக் ஓட்டைகளை சொல்லப்போன ஓட்டையில கொஞ்சமும் படத்தை காணோம் என்றுதான் வரும்.

கம்ப்ளீட் அக்டர் மோகன்லால் கம்பளீட்டாக வீணடிக்கப்பட்டுள்ளார். கேரளத்து தமிழில் சிவன்டா சிவன்டா என கத்துகிறார் அதுவே படத்துக்கு எமன்டா... என எதிரொலிக்கிறது. ஏராளமான காட்சிகளில் தோன்றினாலும் ஜில்லாவில் பெரிய சக்தியாக சிவன் இருப்பதாக சொல்லாவிட்டால் புரியாது. விஜய்க்கு சமமாக காட்சிகள் அமைப்பதில் ஏற்பட்ட தடுமாற்றமாற்றம் போல தெரிகிறது.

படத்தினை தனது ரசிகர்களுக்காக மட்டுமே விஜய் தாங்கிப்பிடிக்கிறார். தாடியில் மாற்றம் செய்திருப்பது திருப்தி. ஒரு சில காட்சிகளில் முகபாவனையும் ரசிக்க முடிகிறது. சண்டைக் காட்சிகளில் ஆக்ரோசம். முதல் பாதியில் வரும் பாடல் வசனங்களிலும் காட்சிகளிலும் பலரைச் சீண்டுகிறார்.

ஆனாலும் விஜயின் அத்தனை உடல் மொழிகளும் ஏற்கனவே பார்த்து பழகியவை சலிப்படிக்கிறது. துப்பாக்கி, தலைவாவை ஞாபகப்படுத்துகிறது. நகைச்சுவை காட்சிகளில் பொதுவான ரசிகர்ளை எரிச்சலூட்டுகிறார். மீண்டும் ஒரு சுறா தராமல் விடமாட்டார் போலிருக்கிறதே?

விஜய் பொலிஸாக வருவதே கெக்கப்புக்க கெக்கப்புக்க சிரிப்பு வர நாயகி காஜல் அகர்வால் பொலிஸாக (சிரிப்பு பொலிஸ்?) கிச்சுக்கி மூட்டுகிறார். 3 பாட்டுக்கும் 4 சீனுக்கு வந்துபோகிறார். சூரி படத்துக்கு பெரும் ஆறுதலாக இருக்கிறார். அவர் வரும் காட்சிகள் பலவற்றுக்கு திரையரங்கில் சிரிப்பலை. இரட்டை அர்த்த வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். போதாக் குறையாக விஜயின் பின்புறத்தை காஜலும் காஜலின் பின்புறத்தை விஜயும் தடவுவது விரசம். ஜோக்காமா...

வில்லனும் விஜயும் துரத்தும் காட்சியில் ஒரு சில விநாடிகள் மட்டும் பதபதைக்க வைக்கும் ஒர காட்சி தவிர நடிக்க வாய்ப்பில்லை. பின்னால் நின்று செல்கிறார். வில்லனாக சம்பத் நல்ல தேர்வு. பொருத்தமாக இருக்கிறார். அத்துடன் பிரதீப் ராவத், பூர்ணிமா, நிவேதா, தம்பி ராமையா, ஆர்.கே என பலர் வந்து போகிறார்கள். இவர்கள் தவிர படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்திரியின் மகன்களான ஜீவா மற்றும் ஜித்தன் பாடலொன்றுக்கு ஆடிச்செல்கிறார்கள்.

பாடல்கள் ஹிட்டடித்தாலும் திரையில் கண்டாக்கி மட்டுமே ரசிக்கும் படி உள்ளது. பின்னணி இசை அசத்தல். வசனங்கள் பல இடங்களில் இயல்பாக உள்ளமை ஆறுதலளிக்கிறது. ஒளிப்பதிவு படத்துக்கு பலமாகவுள்ளது. படம் முழுவதும் வண்ண மயமாக உள்ளது. எடிட்டிங் இன்னும் கவனித்து கத்தரித்திருக்கலாம்.

சில்வாவின் சண்டைக்காட்சிகள் ரசிக்கும்படியாகவுள்ளது. விஜய் அடித்து நொறுக்குகிறார். தலைவா பிரச்சினையில் கைகட்டி பேசியது போல நின்றுகொண்டு விஜய் போடும் சண்டை அரசியல் பன்ச். (அதான் நிஜத்தில பம்முறிங்களே அப்புறம் எதுக்கு வெட்டி சீன்)  ஒப்பனையில் விஜயின் முகத்தில் பொங்கலுக்கு வெள்ளையடித்தது அப்பட்டமாக தெரிகிறது. ஆடைகள் பொருத்தமாக இருக்கிறது.

யானை இரண்டை பூனை சுமந்தது போல் இரு மாநில சுப்பர் ஸ்டார்களை சுமந்து செல்லத் தடுமாறிய இயக்குநர் நேசன் படத்தின் நேர்த்தியை தவறவிட்டதில் தீவிர விஜய் ரசிகர்களை மட்டுமே திருப்திப்படுத்துகிறது இந்த ஜில்லா.

எனக்கு பயமில்லை என்ற சீன்களை கவனமாக மறக்காமல் வைத்து அடுத்தவனை சீண்டி நிஜத்தில் அடிவாங்குவதற்கு பதிலாக நல்ல கதைகள் தேர்ந்தெடுப்பதில் மறக்காமல் கவனம் செலுத்தலாங்கண்ண....

சுறாவுக்கு சில படி மேலேயும் தலைவாவுக்கு பல படி கீழேயுமுள்ள இந்த ஜில்லா ரசிகர்களை ஏமாற்றிவிட்டது நல்லா!


இந்த பதிவை ஈயடிச்சா தயதுசெய்து இந்த வலைத்தள முகவரியையும் கொடுங்க... http://aachariyam.blogspot.com/2014/01/blog-post.html

சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ்தான்...
விஜயும் நேசனும் சேர்ந்தா தமாஸுடா...
படம் பார்க்கிற நாங்க லூஸுடா...

-ஏ.எம்.ஆர்

Sunday, September 29, 2013

ராஜா ராணி - விமர்சனம்

கதை, திரைக்கதை, இயக்கம் - அட்லி
நட்சத்திரங்கள் - ஆர்யா, நயன்தாரா, சந்தானம், ஜெய், நஸ்ரியா, சத்தியராஜ், சத்யன்
இசை - ஜீவி. பிரகாஷ்
ஒளிப்பதிவு - ஜோர்ஜ். சீ. வில்லியம்ஸ்
எடிட்டிங் - அன்டனி எல். ரூபன்
தயாரிப்பு - பொக்ஸ் ஸ்ரூடியோ

ஆர்யா - நயன்தாரா திருமண அழைப்பிதழிலிருந்து விளம்பரமும் கூடவே எதிர்பார்ப்பையும் நயன்தாராவின் இரண்டாவது இன்னிங்ஸையும் சுமந்து வந்திருக்கும் திரைப்படம் ராஜா ராணி.



ட்ரெய்லர் மற்றும் விளம்பரங்களில் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை படம் நிறைவேற்றி இருக்கிறதா? இல்லையா? என்றால் நிச்சயமாக நிறைவேற்றியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

Made for each other என்று யாரும் பிறக்கிறதில்லை. அது வாழ்ந்து காட்டுறதுலதான இருக்கிறது என்பதுதான் ராஜா ராணி படத்தின் கதை.

ஆர்யா - நயன்தாரா திருமணத்தில் படம் ஆரம்பமாகிறது. ஆரம்பத்திலிருந்தே ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் ஒத்துப்போகவில்லை. அது ஏன்? எதுக்காக என்கிற விடயத்தை திரைக்கதையில் சிறப்பாக சொல்லி அசத்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் அட்லி.

ஆர்யா - நயன் இருவரும் திருமணத்தின் பின்னர் ஒருவரை ஒருவர் பிடிக்காமல் வாழ்கிறார்கள். தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் ஆர்யாவும் சோகமாகவே இருக்கும் நயன்தாராவும் ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்கிறார்கள்.



தங்களது குடும்பத்திற்காக திருமணம் செய்தவர்கள் அதுவரையில் ஒருவருக்கொருவர் எதிரும் புதிராகவும் இருந்த இருவருது காதலும் பிளாஷ்பெக்கில் தெரியவருகிறது.

இதில் சந்தோஷமான நயன் - ஜெய் காதலில் ஜெய் இறக்கிறார். நயன் சோகத்தில் ஆழ்கிறார். கலகலப்பான ஆர்யா - நஸ்ரியா காதலில் நஸ்ரியாவை கண் முன் பறிகொடுத்து தவிக்கிறார் ஆர்யா.

இருந்தாலும் கண்களை கசக்கிக்கொண்டே இல்லாமல் ஆர்யா, நயன், சந்தானம், ஜெய், நஸ்ரியா, சத்யன் என அனைவரும் கலகப்பூட்டுகிறார்கள்.

ஆர்யா - நயன்தாரா காதல், ஆர்யா - நஸ்ரியா காதல், நயன்தாரா - ஜெய் காதல் இம்மூன்று காதலையும் அலுப்பில்லாமல் அசரடிக்க வைக்கிறது படம். மூன்று காதல் என்றாலும் உலகத் தரம் என்ற பெயரில் திரைக்கதையில் மண்டையை காயவிடாமல் தெளிவாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.



கொமடியை எதிர்பார்த்துப்போன படத்தில் எதிர்பாராமல் நல்ல கதையையும் அதில் ஒரு நல்ல செய்தியையும் சொல்லி ரசிகர்களை ஆட்சி செய்கிறார்கள் ராஜா ராணி குழுவினர்.

அறிமுக இயக்குநர் அட்லி முதல் படத்திலேயே முத்திரை பதித்துள்ளார். ஷங்கரின் உதவி இயக்குநர் என்பதை காட்டவோ என்னவோ அடிக்கடி சிவாஜி படத்தினை ஞாபகப்படுத்திறார். ஷங்கரைப்போலவே பாடல் காட்சிகளை ரசிக்கும் வகையில் அமைத்திருக்கிறார். திரைக்கதையும் சிறப்பாக நகர்த்தியிருக்கிறார்.

வலுக்கட்டாயமான சண்டைகள் இன்றி வலுவான திரைக்கதையில் அசத்துகிறார் அடலி. வெல்கம் டூ கொலிவூட்.



வசனங்களும் பல இடங்களில் ரசிக்கும்படி உள்ளது. குறிப்பாக ஒரு பொண்ணு அழுதா ஏமாத்தப்போறான்னு அர்த்தம். அதுவே ஒரு பையன் அழுததான்னா ஏமாந்துட்டான்னு அர்த்தம், யார் அழுதா கண்ணு வேர்க்குது,  நண்பன்ல ஏது நல்ல நண்பன் கெட்ட நண்பன் என்டாலே நல்லவன்தான் போன்ற வசனங்களுக்கு திரையரங்கில் விசில் பறக்கிறது.

நாயகன் ஆர்யா கல்யாணத்துக்கு முன் பின் இரண்டிலும் உடல் மொழி வேறுபாட்டில் அழகாகவும் இளமையாகவும் இருக்கிறார். பல இடங்களில் சிரிக்கவும் சில இடங்களில் அழவும் வைக்கிறார்.

நயன்தாரா நீண்ட இடைவெளியின் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸிலும் அசரடிக்கிறார். வந்து போகும் நாயகியாக இல்லாமல் ரெஜினாவாக பிரதிபலிக்கிறார்கள். சிரிப்பிலும் அழுகையிலும் அழகிலும் கொள்ளைகொள்கிறார்.



ஜெய் - நயன் ஜோடி பெரியளவில் பொருந்தவில்லை என்றாலும் ரசிக்கும்படி உள்ளது. ஜெய் சிரிக்க வைத்துச் செல்கிறார். ஆனால் கதையில் எதிர்பார்த்த முடிவாக இவரது பாத்திரம் அமைந்துள்ளது.

பல இடங்களில் இன்னுமொரு நயன்தாராவாகத் தெரிகிறார் நஸ்ரியா. நன்றாக நடிக்க வாய்ப்பு. சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். பிரதர் பிரதர் என ஆர்யாவையும் ரசிகர்களையும் கிறங்கடிக்கிறார். இனி பெண்கள் பிரதர் என அழைத்தால் பசங்க சந்தோஷப்படுவார்கள்.

சந்தானம் வழக்கம் போல பல இடங்களில் கலகலப்பூட்டுகிறார்கள். குணச்சித்திர கதாபாத்திரம் போல பின்னப்பட்டள்ளது. இவரது வசனங்கள் பலவற்றுக்கு அரங்கில் நல்ல வரவேற்பு.

சத்தியராஜ் தனது கதாபாத்திரத்தினை சிறப்பாக செய்துள்ளார். அளவாகவே வந்து போகிறார். சத்தியனும் அதுபோலவே.

ஜீ.வி. பிரகாஷின் பின்னணி இசை மற்றும் பாடல்களில் அசத்தல் ரகம். தேவையான இடங்களிலமைந்த பாடல்களால் யாரும் வெளியேறவில்லை. ஜோர்ஜின் ஒளிப்பதிவு படத்தினை மெருகூட்டுகிறது. ரூபனின் எடிட்டிங்கும் நச்சென்று இருக்கிறது. காட்சிகள் தொய்வாகத் தெரியவில்லை.

ஆர்யாவும் நயனும் ஏன் முதல் நாளிலிருந்தே முறைக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இது போன்ற ஓரு சில குறைகள் இருந்தாலும் நிறைகள் அதிகமாக உண்டு.

மொத்தத்தில் எதிர்பார்த்த கொமடியில் எதிர்பாராத திரைக்கதை மற்றும் கதையால் திருமணமானவர்கள், காதலர்கள் என அனைவரையும் குடும்ப ஆட்சி செய்கின்றது இந்த ராஜா ராணி.

-அமானுல்லா எம். றிஷாத்

இந்த விமர்சனம் மெட்ரோ நியூஸ் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
http://www.metronews.lk/article.php?category=entertainment&news=2326

Thursday, July 11, 2013

சிங்கம் 2 - விமர்சனம்

கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் - ஹரி
நட்சத்திரங்கள் - சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, விவேக், சந்தானம்
இசை - தேவி ஸ்ரீ ப்ரசாத்
ஒளிப்பதிவு - பிரியன்
எடிட்டிங் - வி.டி.

சிங்கம் படத்திற்கு பின்னர் மீண்டும் சூர்யா - ஹரி கூட்டணியில் பலத்த எதிபார்ப்புகளுக்கு மத்தியில் தனியாக திரையரங்குகளை வேட்டையாட வந்திருக்கிறது இந்த சிங்கம் 2.

தூத்துக்குடி துறைமுகத்தைப் பயன்படுத்தி ஹெரோயின் கடத்துகின்ற ஒரு கும்பலை துரைசிங்கம் என்ற பொலிஸினால் தடுத்து நிறுத்தப்படுவதே படத்தின் கதை.

இதற்காக தென்னாபிரிக்கா வில்லன், ஹன்சிகாவின் பாடசாலைக் காதல், துரைசிங்கத்தின் தனிப்பட்ட வாழ்க்கை, விவேக், சந்தானம் ஆகியோரின் நகைச்சுவை என்பவற்றையும் சரியான கலவையில் சேர்த்து ரசிக்க வைக்கிறார் ஹரி.

மிகச் சிறிய கதைக்கு மிகப்பெரிய பலமான திரைக்கதையில் வழக்கம் போலவே இயக்குனர் ஹரி அசத்தியிருக்கிறார். சிங்கம் 1 இனை எழுத்தோட்டமாக காண்பித்துவிட்டு அதன் முடிவிலிருந்து சிங்கம் 2 படம் ஆரம்பமாகிறது. என்னவொன்று பாகம் ஒன்றில் ஒன்றரை டொன்னில் ஓங்கி அடித்த சூர்யா இதில் 10 டொன்னில் பாய்ந்தடிக்கிறார்.

அஞ்சலியின் குத்தாட்டத்துடன் ஆரம்பமாகும் போது அலுப்படையச் செய்யும் வழக்கமாக மசாலா திரைப்படம் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது படம். ஆனால் இதனையடுத்து இடம்பெறும் ஒரு சண்டைக்காட்சிக்கு பிறகு திரைக்கதை சூடு பிடிக்கிறது.

சிங்கம் 1இல் மக்களுக்கு மத்தியில் பதவியை இராஜினாமா செய்யும் துரைசிங்கம், மறைமுகமாக தனது டி.எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று சம்பளமின்றிய பொலிஸ் வேலையை என்.சி ஆசிரியராக தூத்துக்குடியிலுள்ள பாடசாலை ஒன்றிலிருந்து தொடர்கிறார்.

இங்கிருந்து கடத்தல் காரர்களின் நடவடிக்கைகளை அவதானிக்கிறார் துரைசிங்கம். கடத்தல்காரர்களின் அனைத்து தகவல்களையும் அறிந்துகொண்டு டி.எஸ்.பியாக பதவியேற்க நினைக்கும் துரைசிங்கம் எதிர்பாராதவிதமாக திடீரென பதவியேற்க வேண்டி ஏற்படுகிறது.

இதன் பின்னர் எவ்வாறு எதிரிகளை எதிர்கொண்டு அடித்துநொறுக்குகிறார். ஹன்சிகாவின் காதலுக்கு என்னவாகின்றது? அப்பாவின் சம்மதத்துடன் எவ்வாறு அனுஷ்காவை கரம்பிடிக்கிறார் என்பதை படு வேகமான பரபரப்பான திரைக்கதையில் துப்பாக்கி, அருவாள் என சத்தமிட்டுக்கொண்டே சூர்யாவை வைத்து கர்ஜிக்கிறார் இயக்குனர் ஹரி.

படம் முழுவதும் மிடுக்கான பொலிஸாகவே வாழ்ந்து மொத்தப்படத்தையும் ஆக்கிரமிக்கிறார்  சூர்யா. காதல், பாசம், அதிரடி சண்டை, நடனம் என அனைத்து இடங்களில் ரசிகர்களைக்கொள்ளை கொள்கிறார். வழக்கம் போல குடும்ப ரசிகர்களும் ரசிக்கும் விதமாகவே கர்ஜிக்கிறார்.

அடிக்கடி மூக்கு வீங்க, கழுத்து நரம்பு புடைக்க கத்துமிடங்களுக்கு ஆங்காங்கே கத்தரி போட்டிருக்கலாம்.

ஒரு முழுமையாக வணிக ரீதியான படத்தை எவ்வாறு கையாள்வது என்ற யுக்தியை ஹரியிடமிருந்து பல இயக்குனர்கள் அறிந்துகொள்ளலாம்.

முதன் முறையாக வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை மேற்கொண்டிருக்கும் ஹரி தயாரிப்பாளருக்கு மொட்டை போடாமல், தேவையானதை செய்துகாட்டியிருக்கிறார். படத்திலுள்ள ஓட்டைகளை அவதானிப்பதற்கு கூட இடமளிக்காமல் திரைக்கதையை நகர்த்தி இருப்பதே ஹரியின் வெற்றி. மேலும் இயல்பான வசனங்களாலும் ரசிக்க வைக்கிறார்.

ஆனால் 3ஆம் பாகத்தினை மனதில் வைத்து படத்தினை நகர்த்தியிருப்பதால் இறுதிக் காட்சி, படத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறுகிறது. மேலும் வழக்கமாக வில்லன்களுக்கு முடிவு கட்டும் ஹரி இப்படத்தில் வில்லன்களுக்கு என்னவாகின்றது என பாகம் 3இல் பாருங்கள் என்றவாறு அமைத்துள்ளார்.

அதிரடிக் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் அவ்வப்போது விவேக்கும் சந்தானமும் திரையரங்கை சிரிப்பலைகளால் அதிரச் செய்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்தவாறு நகைச்சுவை காட்சிகள் இல்லை.

குறிப்பாக பாடசாலை ஆசியர்களை கேலி செய்து விட்டு பிதாவின் பெயரால் மன்னிப்புக் கேட்பது, விஸ்வரூபம் சண்டையை ஞாபமூட்டும் நகைச்சுவைக் காட்சிகள் போன்றன அட்டகாசமாய் அமைந்திருக்கிறது.

நாயகி அனுஷ்கா சில காட்சிகளுக்கு வந்து போவதுடன் கவர்ச்சியாக பாடல்களுக்கு நடனமும் ஆடுவதோடு அவரது பங்கு முடிந்தது. பாடசாலை மாணவியாக வரும் ஹன்சிகாவுக்கு ரசிகர்களின் மனதை நெருடும் வகையிலான ஓரளவு முக்கியத்துமிக்க காட்சிகள் உண்டு.

வில்லன்களாக வரும் டேனி, ரஹ்மான், முகேஷ் ரிஷி, ராஜேந்திரன் ஆகியோர் தங்களது பாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஆனால் மிரட்டும் பாணியில் அறிமுகமாகி சாதாரணமாக அடங்கிப் போகிறது இவர்களது சத்தம்.

இவர்கள் தவிர நாசர், ராதாரவி, மனோரமா, நிழல்கள் ரவி போன்றோரும் வந்து போகிறார்கள்.

ஹரியின் படங்களுக்கே உரித்தான ஒளிப்பதிவை வழங்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரியன். தேவி ஸ்ரீ ப்ரசாத்தின் இசையில் பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இருப்பினும் பின்னணி இசையில் படத்திற்கு கைகொடுத்திருக்கிறார்.


நீண்ட படத்தின் வேகத்திற்கு திரைக்கதைக்கு அடுத்தபடியாக வீ.டி. விஜயனின் எடிட்டிங்  காரணம் என்றால் தகும். தேவையான இடங்களில் கத்தரி போட்டு குறைகளை மறைக்க வழி செய்திருக்கிறார்.

சாதாரண மாசாலா திரைப்படத்தை படு விறுவிறுப்பாக கூறி ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றுக்கொள்ளும் இந்த சிங்கம், பரபரப்பை மிஞ்சும்!

அமானுல்லா எம். றிஷாத் / Metronews.lk


Friday, June 21, 2013

தீயா வேலை செய்யணும் குமாரு - விமர்சனம்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சுந்தர் சி.
நட்சத்திரங்கள் - சித்தார்த், ஹன்சிகா, சந்தானம்
ஒளிப்பதிவு - கோபி
எடிட்டிங் - பிரவீன் - ஸ்ரீகாந்த்

காதலில் சொதப்புவது எப்படி என்பதை தெரிந்துகொள்ளுவதற்கு பதில் சுந்தர் சி.யின் இயக்கத்தில் காதலில் வெற்றிபெற எப்படி தீயா வேலைசெய்யணும் என்பதை சித்தார்த்துடன் இணைந்துந்து சந்தானம் கலகலப்பூட்டுவதே 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தின் கதை.

பரம்பரை பரையா காதல் திருமணம் செய்த குடும்பத்தில் பிறந்த குமார், சிறு வயதிலிருந்தே பெண்களென்றெலாலே நாமக்கு சரிப்பட்டு வராது என ஒதுங்கியிருக்கிறார். இவர் எப்படி காதலில் தீயா வேலை செய்து காதலியை கரம் பிடிக்கிறார் என்பதை அரங்கமே சிரிக்கும் திரைக்கதையில் சிறப்பாக தந்திருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி.

கலகலப்பு படத்தின் அதேபாணியில் இவருதாங்க இவரு என்ற அறிமுகத்தோடு படம் ஆரம்பாவது முதல் சிரிப்பலையும் ஆரம்பமாகிறது. ஐ.டி நிறுவனமொன்றில் அப்பாவியாக நாயகன் குமாரு வேலைபார்க்கிறார். அவரை அடப்பாவியாக மாற்ற சஞ்சனாவாக வேலைக்கு புதிதாக இணைகிறார் ஹன்சிகா.

அதுவரையில் ஐ.டி நிறுவனத்தை சுற்றி வந்த கதை சஞ்சனாவையும் குமாரையும் கூடவே சந்தானத்தையும் சுற்றத் தொடங்குகிறது. வழக்கம்போல பார்த்த நொடியிலேயே பாடல் ஒன்றையில் கனவில் பாடி காதலில் விழுகிறார் நாயகன்.

பின்னர் எப்படி சஞ்சனாவை காதலிக்க வைப்பது என்ற ஒரே சிந்தனையில் சுற்றுகிறார். இதற்காக காதலில் சேர்க்கிறது பிரிக்கிறது என சல்மான்கானுக்கே திட்டம் கொடுப்பதையே தொழிலாக செய்யும் சந்தானத்திடம் செல்கிறார் குமார்.

இந்த இடத்தில் மோக்கியா என்ற பாத்திரத்தில் அறிமுகமாகும் சந்தானத்திற்கு திரையரங்கில் கிடைக்கும் கைதட்டல் வரவேற்பு அடங்க சில நிமிடங்களாகின்றது. ஆனால் நாயகன் சித்தார்த் அறிமுகமகும் காட்சி குண்டூசி விழுந்தா கேட்கிற அளவுக்குக்குதான் இருந்தது. அதற்கேற்ப சந்தானத்தின் அறிமுகமும் அதற்கேற்றாற் போல நாயகன் ரேஞ்சுக்கே உள்ளது.

இனி என்ன சந்தானத்தின் கல கல சிரிப்புடன் குமாரு காலில் வெற்றியடைகிறார். அப்போது பெரிய திருப்பமாக தனது திட்டத்தில் குமாரு காதல் வலையில் விழுந்த சஞ்சனா தனது தங்கை என்பது தெரியவருகிறது. பின்னர் இவர்களது காதலை எப்படியாவது பிரிக்கணும் என தீயா வேலை செய்கிறார் சந்தானம்.

இவற்றையெல்லாம் தாண்டி குமார் எப்படி காதலியை கரம்பிடித்து சுபம் போடுகிறார்கள் என்பதே மீதிக்கதை. கதை என்பதை விட திரைக்கதையே இங்கு படத்தினை சுவாரஸ்யமாக மாற்றுகிறது. படத்தில் குறைகளும் உண்டு ஆனால் அவையும் ரசிகர்களின் சிரிப்பில் மறைந்தே விடுகிறது. அதுவே இயக்குனர் சுந்தர் சி.யின் வெற்றியும் கூட.

படத்தின் நாயகன் சித்தார்த் தேவையான அளவுக்கு நடித்து ரசிகர்களை தன்பங்கிற்கு அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். அதேபோல நாயகி கவர்ச்சி உத்தரவாதமாக இளைஞர்களை கிறங்கடிப்பதோடு பாத்திரத்திற்கு பொருந்திப்போகிறார். கணேஷ் வெங்கட் ராமன், தேவதர்ஷினி, பாஸ்கி, சித்ரா லக்ஷமன் என ஏனைய பாத்திரங்களும் அளவாக நடித்து அளவுக்கதிமாக சிரிப்பை ஏற்படுத்த உதவுகிறார்கள்.

ஆனால் இவர்கள் அனைவரையும் தாண்டி நிற்கிறார் சந்தானம். நீண்ட நாட்களின் பின்னர் இரட்டை அர்த்த வசனங்களை மிக மிக குறைத்துப் பேசி முகஞ்சுழிக்க வைக்காமல் சிரிக்க வைக்கிறார்.

பாடத்திற்கு தேவையான பின்னணி இசை. படத்துடன் இணைந்து பாடல்கள் என்றாலும் பெரிதாக மனதில் நிற்கும்படி இல்லை. கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு நன்று. அதேபோல பிரவீன் - ஸ்ரீகாந்த் எடிட்டிங்கும் படத்தினை சிரிப்பூட்டுவதாக சிறப்பாக உள்ளது.
ஆர்ப்பாட்டமாக வந்து அடங்கிப்போகிற படங்களுக்கு மத்தியில் அமைதியாக வந்து அசத்தியிருக்கிறது இந்த தீயா வேலை செய்யணும் குமாரு.

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் அக்மார்க் சுந்தர் சி. படமாக உருவாக்க தீயா வேலை செய்திருக்கிறார் சுந்தர் சி.

மொத்தத்தில் தீயா வேலை செய்யணும் குமாரு... வயிறு வலிக்க சிரிக்க வைக்கிற குமாரு.

-அமானுல்லா எம். றிஷாத்

Wednesday, February 13, 2013

விஸ்வரூபம் - விமர்சனம் (இலங்கையில் வெளியிட்டதன் பின்னர்)


சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகள் பல கடந்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்களை சுமந்து இலங்கையிலும் வெளிவந்திருக்கிறது உலக நாயகன் கமல் ஹாசன் தயாரித்து, இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம்.

இந்திய உளவுத்துறை ரோ அமைப்பின் அதிகாரியினால் அமெரிக்காவிற்கு எதிராக செயற்படும் ஆப்கான் தீவிரவாதிகளின் செயற்பாடுகளை தடுப்பதுவே விஸ்வரூபம் படத்தின் கதை.

இதற்காக இஸ்லாம், கடவுள், அல்கொய்தா, கலை, மொழி மற்றும் விஞ்ஞானம் என ஏராளமான விடயங்களை புகுத்தி சாமானிய ரசிகர்களின் தலைகளை சுற்றவிட்டிருக்கிறார் இயக்குனர் கமல் ஹாசன்.

மணவாட்டியே மணாளனின் பாக்கியம் என ஒரு வகை நழினத்துடன் வாழ்கிறார் கதக் நடன ஆசிரியர் விஸ் எனும் விஸ்வநாத் (கமல்). இவரின் மனைவியாக வயதில் குறைந்த நிருபமா (பூஜா குமார்). நிருபமா தான் வேலை செய்யும் நிறுவனத்தின் முதலாளியுடன் காதல் வயப்படுகிறார்.

இதனால் தன்மீது கழங்கம் உள்ளது போல விஸ் மீதும் ஏதாவது குறை இருந்தால் கழற்றிவிட இலகுவாக இருக்கும் என தீர்மானிக்கிறார். இதற்காக தனியார் துப்பறியும் நிபுணரின் உதவியை நாடுகிறார். இதன்போது விஸ்வநாத் ஒரு முஸ்லிம் எனத் தெரியவருகிறது.

இந்நிலையில் துப்பறியும் நிபுணர் தீவிரவாதிகளால் கொலை செய்யப்படுகிறார். தொடர்ந்து தீவிரவாதிகள் துப்பறியும் நிபுணருடன் சம்மந்தப்பட்டவர்களை விசாரிக்கும் போது நிருபமாவின் முதலாளி கொலையுடன் ஆரம்பமாகிறது படத்தின் கதை. தொடர்ந்து நிசாம் அஹ்மத் கஷ்மீரியாக விஸ்வரூபம் எடுத்து அத்தனை பேரையும் துவசம் செய்து மனைவியையும் காப்பாற்றி நிருபமாவுடன் சேர்த்து ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்துகிறார் கமல்.

அதுவரையில் அமெரிக்காவில் அசுர வேகமெடுத்த கதைக்களம் பின்னர் ஆப்கானிஸ்தானில் நகர ஆரம்பிக்கிறது. ஏன்? எதற்காக? எப்படி? யார் என்ற கேள்விகளுக்கான விடைகளை மீதிக் கதையில் சுட்டுக்காட்டுகிறார் 'ரோ' அதிகாரியான நிசாம் அஹ்மத் கஷ்மீரி.

படம் முழுக்க நடிகர் மற்றும் இயக்குனராக கமலின் உழைப்பு தெரிகிறது கூடவே கமலிஸமும். தான் உலக நாயகன் என்பதனையும் தமிழ் சினிமா தனக்கு பல வருடங்கள் பின்நிற்பதையும் பறைசாற்றி நாயகனாகவும் இயக்குனராகவும் வெற்றி பெற்றிருக்கிறார் கமல் ஹாசன்.

ஆனால் வழக்கம்போல கமல் படம் என்றால் தெளியாத குட்டையாக இருக்கும் என்ற மாயை இந்தப் படத்தில் அங்காங்கே தெளியவிட்டு சாதாரண ரசிகர்களையும் கவர முயற்சித்திருக்கிறார். ஆனாலும் பல மொழி, திரைக்கதை, வசனம் மற்றும் தன் கருத்துக்கள் போன்றவற்றில தனது முந்தைய படங்களான ஹேராம், விருமாண்டி, அன்பே சிவம் போன்ற படங்களை நியாபகமூட்டுகிறது.

இயல்பான வசனங்கள் மூலம் சில இடங்களில் யோசிக்கவும் செய்திருக்கிறார். கடவுள் காப்பாற்றுவார் என்றதும் எந்த கடவுள்? என்பதாகட்டும், 4 கைகள் கொண்ட கடவுள் என நிருபமா திணறும் காட்சியாகட்டும் வசனகர்த்தா தானே என்பதை உறுதிப்படுத்துகிறார் கமல்.

இங்கிலாந்துக்கு எதிரான மருதநாயகம் கதையை இங்கிலாந்துகாரர்களை கொண்டே படமாக எடுக்கத் துணிந்த கமலா இப்படி ஒஸ்காருக்கு ஆசைப்பட்டு அமெரிக்காவிடம் மண்டியிட்டிருக்கிறார் என்றால் நம்பமுடியவில்லை.

கமல் தவிர படத்தில் வில்லானாக வரும் ராகுல் போஸ் சத்தமில்லாமல் மிரட்டுகிறார். ஏனையவர்களில் நாசர், சலீமாக வரும் ஜெய்டீப் என ஒரு சிலரே பாத்திரத்தில் நிலைத்து நிற்கிறார்கள். மீதிப்பேர் கதைக்கு தேவையாக இருந்தாலும் சொல்வதற்கில்லை.

நாயகிகளாக வரும் பூஜா குமார் இள வயது என்கிறார்கள். கமலிற்கு முன் வயதானவராகவே தெரிகிறார். அன்ரியா நியாபகத்தில் வைத்திருக்கும் அளவிற்கு படத்தில் தலைகாட்டவில்லை. காட்சிகள் சில தொக்கி நிற்பதைப் போலவே அன்ரியாவும். பாகம் 2 இன் தேவைகளா இருக்கலாம்.

தொழில்நுட்பத்தில் இன்னுமொரு பரிணாமத்தினை அடைந்திருக்கிறது இப்படம். ஒளிப்பதிவாளர் சானு வர்கீஸ் நியூயோர்க் நகரின் அழகையும் ஆப்கானிஸ்தானின் அழுக்கையும் அழகாக படம் பிடித்திருக்கிறார்.

எடிட்டிங்கில் மஹேஸ் சில இடங்களில் கோட்டை விட்டிருக்கிறார். முதல் பாதியிலிருந்த வேகமும் இரண்டாம் பாகத்தில் சற்றே குறைந்துவிடுகிறது. ஷங்கர் எசான் லோயின் இசையமைப்பில் படத்திற்கு தேவையான பாடல்கள். அனேகமாக பின்னணியிலேயே வருகிறது. பின்னணி இசையில் பல இடங்களில் மௌனமாகி அசத்துகிறது. குறிப்பாக முதல் சண்டைக் காட்சியில் அசத்தல் ரகம்.

சண்டைக் காட்சிகள் அத்தனையும் ஹொலிவூட் ரகம். சண்டைக் காட்சிகளில் கமலின் விஸ்வரூபம் 50 வயதைத் தாண்டிவிட்டார் என்பதனை நம்பமறுக்கச் செய்கிது. கிரபிக்ஸ் காட்சிகள், ஆப்கானிஸ்தானுக்காக போடப்பட்ட செட் (கலை) எல்லாம் அசலையும் நகலையும் பிரித்தறிய முடியாதுள்ளது.

இவ்வாறெல்லாம் தொழில்நுட்பத்தில் பிரமாதப்படுத்தியிருந்தாலும் பாகம் 2 எடுக்கும் எண்ணத்தினாலோ என்னவோ கதை ஆங்காங்கே தொக்கி நிற்கிறது. இதுதான் நடந்தது என வரும் காட்சிகளையும் சேர்த்து.

மொத்தத்தில் ஒஸ்காருக்காக ஹொலிவூட் தரத்தில் கமல் எடுத்திருக்கும் விஸ்வரூபமே இந்த விஸ்வரூபம்.

-அமானுல்லா எம். றிஷாத்


Friday, January 18, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா? - விமர்சனம்

நடிப்பு: சந்தானம், சீனிவாசன், சேது, விசாகா
இசை: தமன்
தயாரிப்பு: ராம நாராயணன், சந்தானம்
இயக்கம்: மணிகண்டன்

சந்தானம் - பவர் ஸ்டார் கூட்டணியில் ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா? படத்தின் கதை பாக்கியராஜின் இன்று போய் நாளை படத்தின் கதேயே.

எதிர்வீட்டுக்கு புதிதாய் குடிவரும் குடிவருகிறார் நாயகி விசாகா யாருக்கு என்ற போட்டியில் இணைபிரியா தோழர்களான சந்தானம், பவர் ஸ்டார் மற்றும் அறிமுக நாயகன் சேது இணைந்து அனைவரையும் சிரிக்க வைத்து இறுதியில் விசாகா யாருக்கு என்பதே கண்ணா லட்டு தின்ன ஆசையா? ஒரு வரிக் கதை.

ஹீரோயினைக் கவர்வதற்காக பாக்கியராஜின் படத்தில் வரும் கதாபாத்திரங்களாக வருபவர்களைப் போல இதிலும் இந்த மூவரும் நாயகியின் அம்மா, அப்பா, தாத்தா மூலம் விதவிதமான யுக்திகளைக் கையாண்டு நாயகியைக் கவர முயற்சிக்கும் அத்தனை காட்சிகளிலும் அரங்கமே அதிர்கிறது. ஆனாலும் இன்று போய் நாளை வா காலத்தின் ரசிகர்களும் பாக்கியராஜின் விசிறிகளுக்கும் இந்த காட்சிகளிலெல்லம் ஒரு உயிரோட்டம் இல்லை என்றே சொல்கிறார்கள்.

ஆனாலும் இவ்றையெல்லாம் தாண்டி திரையரங்கை சிரிப்பொலியில் அதிரச்செய்கிறது சந்தானம்-பவர் ஸ்டார் கூட்டணி. வழக்கம் போல சந்தானம் அசத்துகிறார். நம்ம பவர் ஸ்டார் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து படத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் படம் முழுக்க சந்தானத்துடன் சேர்ந்து கலகலக்க வைக்கிறார். இனி பவர் ஸ்டார் வாழ்கையில் நிச்சயம் ஒரு பவர் இருக்கும்.

மூன்றாவது நாகயனாக வரும் சேதுவுக்கான வேலை குறைவு அதனை ஓரளவே பயன்படுத்தியும் இருக்கிறார். படத்தின் நாயகி விசாகா நீண்ட இடைவெளியின் பின்னர் தமிழ்சினிமாவில் தலைகாட்டியிருக்கிறார். தன்பங்கையும் சிறப்பாக செய்திருக்கிறார் விசாகா.

இவர்கள் தவிர படத்தில் ஏனைய அம்சங்களான இயக்கம், இசை, ஒளிப்பதிவு மற்றும் வசனம் உள்ளிட்ட அனைத்து துறைகளைச் சார்ந்தவர்களும் படத்திற்கு தேவையானதை வழங்கி சிரிப்புக்கு உத்தரவாதமளிக்கிறார்கள்.

என்னதான் வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்தாலும் 'இன்று போய் நாளை வா' படத்தின் பாதிப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிவது உரிமையாளர்களுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். மேலும் படம் முடியும் போது இன்று போய் நாளை வா படம் பார்த்த சந்தானத்தின் ரசிகர்களும் பாக்கியராஜின் திரைக்கதையிலமைந்த படத்திலிருந்த உயிரோட்டோம் இதில் சற்றே குறைவுதான் என முணுமுணுக்க வைக்கிறது.

இருப்பினும் கதை திருட்டு மற்றும் ஒப்பீடு எல்லாவற்றையும் மறக்கச் செய்து பொங்கலுக்கு வெளிவந்திருக்கும் இனிப்பான லட்டே இந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா?

நன்றி - ஏ.எம். றிஷாத்/வீரகேசரி

Wednesday, December 5, 2012

இனி அவன் - விமர்சனம்


கடந்த மாதம் 30ஆம் கொழும்பில் ஆரம்பமான யுரோப்பியன் பில்ம் பெஸ்டிவலில் காணக்கிடைத்த இனி அவன் திரைப்படத்தின் விமர்சனம் இங்கே. இவ்விமர்சனம் வீரகேசரி இணையத்தளத்திலும் பத்திரிகையிலும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இனி அவன் - விமர்சனம்

இலங்கையர்களால் தயாரிக்கப்பட்ட தமிழ் திரைப்படமான 'இனி அவன்'  இம்முறை கொழும்பில் இடம்பெறும் 2012ஆம் ஆண்டுக்கான ஐரோப்பா திரைப்பட விழாவில் முதல் படமாக காண்பிக்கப்பட்டது. இது தவிர ஏற்கனவே கேன்ஸ் திரைப்பட விழா, டொரொன்டோ திரைப்பட விழா, லண்டன் திரைப்பட விழா போன்றவற்றிலும் இப்படம் திரையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய சினிமா என்ற மாயையிலிருந்து விடுபட்டு இப்படத்தினை பொறுத்தளவில் ஒப்பீடு கடந்த பார்வை எம்மவர்களை வளர்க்க உதவும். ஏனெனில் சினிமா தொழில்நுட்பங்களில் பின்தங்கிய நிலையில் இருக்கும் இலங்கையில் இவ்வாறானதொரு முயற்சி நிச்சயம் வரவேற்கப்படவேண்டியவை என்பதை மனதில் நிறுத்த முயற்சிப்பது நன்று.

அசோக ஹெந்தகமவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இத்திரைப்படம், யுத்தத்திற்கு பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து உயிருடன் திரும்பி வந்து தனது ஊரிலேயே சாதாரணமான வாழ்க்கையை தொடரவிரும்பும் ஒரு இளைஞனின் கதை.

பஸ் ஒன்று மெதுவாக யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு கிராமத்திற்குள் நுழைய ஆரம்பிப்பதுடன் படமும் மெதுவாக நகருகிறது. முன்னாள் போராளியான இளைஞனுக்கு (தர்ஷன் தர்மராஜ்) அவனது ஊரில் தாயை அவனது காதலியையும் தவிர ஏனையவர்கள் அவனது மனநிலையை புரிந்துகொள்ளாமல் நடந்துகொள்கிறார்கள்.

ஆனால் எப்படியாவது தனது குடும்பத்துடன் சேர்ந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ போராடுகிறான். இந்நிலையில் நகைக்கடையொன்றில் இவனது வீரத்தின் பரிசாக வேலை ஒன்று கிடைக்கிறது. பின்னர் அக்கடை முதலாளியும் வெளிநாடுகளில் வாழும் இவனது பழைய நண்பர்களும் இணைந்து மீண்டும் ஆயதக்கலாச்சரத்திற்கு நாயகனை தள்ளிவிடுகிறார்கள்.

தொடர்ந்து நாயகன் அதிலிருந்து மீண்டானா? அல்லது துரோகிகளுடன் சேர்ந்து மாண்டானா? என்பதை நேர்த்தியான திரைக்கதை மூலம் சொல்லிமுடித்திருக்கிறார் இயக்குனர்.

படத்தின் பிரதான கதாநாயகனாக மிளிர்கிறது ஒளிப்பதிவு. யாழ்ப்பாணத்தினை காட்டிய விதம் படம் முழுவதிலும் இயற்கையுடன் ஒன்றிப்போகச் செய்கிறது. இதனால் படம் என்ற உணர்வை தாண்டி நிற்பதுடன் மனதையும் கனக்கச்செய்கிறது. இரவு நேர கடற்கரை காட்சி ஒன்றில் இடம்பெற்றுள்ள லைட்டிங் தவிர ஏனையவை சிறப்பு.

அத்துடன் முன்னாள் விடுதலைப் போராளியாக வரும் கதையின் நாயகனின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் அனைவரையும் கவருகிறது. அளவான பேச்சினால் ஒரு சில இடங்களில் திரையரங்கில் சிரிப்பலையை ஏற்படுத்துவதுடன் தான் அடக்கி வைத்திருக்கும் உணர்வுகள் மற்றும் ஆதங்கங்களை வெளிப்படுத்திய விதமும் அருமை. மீண்டும் தவறுதலாக ஆயுதக் கலாச்சாரத்திற்கு சென்றதை உணர்ந்துகொண்ட போது ஏற்படுகின்ற பரிதவிப்பையும் சிறப்பாக காட்டுகிறார்.

இவர்கள் தவிர ஏனைய கதாபாத்திரங்களும் தேவையானதை செய்து படத்தினை ரசிக்க உதவியிருக்கிறார்கள். குறிப்பாக சுபாஷினி பாலசுப்ரமணியம், நிரஞ்சனி சண்முகராஜா பாத்திரத்தினை உள்வாங்கிருக்கியிருக்கிறார்கள். படத்தின் இசையும் மொழிமாற்றம் செய்யப்பட்ட ஆங்கில வசனங்களும் சில இடங்களில் படத்துடன் ஒன்றிப்போகவில்லை. திரையரங்கில் ஏற்பட்ட கோளாறு போலவும் தெரிந்தது. இருப்பினும் ஒன் லொக்கேசன் இசை படத்திற்கு உயிரோட்டமாய் அமைகிறது.

வசனங்கள் குறைவு என்றாலும் யதார்த்தமாகவும் அர்த்தம் பொதிந்தவையாகவும் இருக்கிறது. குறிப்பாக பிரபாகரனை கேள்வியா கேட்டிங்க?, பிரபாகரன் வென்றிருக்கலாம் என்ற இடங்கள் பன்ச் ரகமாய் அமைகிறது.

நிறைகள் அதிகமிருந்தபோதிலும் சில குறைகளும் இருக்கத்தான் செய்கிறது. இயக்குனரின் திரைக்கதையிலிருக்கும் நேர்த்தி முதல் அரை மணி நேரத்திற்கு எடிட்டிங்கில் இல்லாமல் போனது திரைக்கதையை மிக மெதுவாக நகரச்செய்வது வருத்தம்.

இதுமட்டுமன்றி ஒப்பனை ஒரு சில இடங்களில் செயற்கை என்பது அப்பட்டமாக தெரிகிறது. அதிலும் நிரஞ்சனி சண்முகராஜாவின் மேல் பூசப்பட்டுள்ள கருப்பு சாயம் பட்டும் படாமல் இருக்கிறது. இயல்பான படமொன்றிக்கு ஒப்பனையில் இன்னும் கொஞ்சம் அதிகமாவே உழைத்திருக்கலாம்.

இயக்குனரின் தமிழர்களின் மீதான பார்வை பல இடங்களில் சிறப்பாக பளிச்சிடுகிறது. மோட்டார் சைக்கிள் பழுதடைந்த நிலையில் நாயகனுக்கு உதவ ஒரு சிங்கள வாகன ஓட்டுனர் கேட்க பதிலேதும் இல்லாமல் திருத்த வேலையை தொடர மோட்டார் சைக்கிளின் கோளாறும் திருத்தப்பட்டுவிடும். பின்னர் அந்த சிங்கள நண்பருக்கு நன்றி சொல்லி வழியனுப்புகிறார்கள். இந்த இடத்தில் நாயகனுடன் சேர்த்து தமிழர்களின் தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாய் ஒரு உணர்வை ஏற்படுத்தியிப்பது மகிழ்ச்சி.

அத்துடன் ஊசியால் குத்தி இரத்தத்தினால் பொட்டு வைத்து விதவைக்கு வாழ்வளிக்கும் காட்சி என தமிழர்களின் என வீரத்தையும் உணர்வுகளையும் ஒரு சிங்கள இயக்குனராக இருந்தும் அவற்றை கையாண்டுள்ள விதம் வரவேற்கத்தக்கது.

ஆனாலும் தமிழர்கள் அழிவதற்கு அவர்களே காரணமாகின்றனர் என நாசுக்காக காட்டியிருக்கும் இயக்குனர் இறுதியில் மீண்டும் யுத்தத்தை முன்னெடுக்கும் முயற்சிகளை கைவிட்டதாக காட்டாமல் போனது சற்றே நெருடலை ஏற்படுத்துகிறது. மேலும் படத்தின் முடிவில் வரும் எழுத்தோட்டத்தில் இனியவன் என்று சிங்களத்தில் வருவதை கவனத்தில் எடுத்திருக்கலாம்.

மொத்தத்தில் யுத்தத்தினை அனுபவித்தவர்கள் மீண்டுமொரு யுத்தத்தினை விரும்பவில்லை என்பதை உணர்த்தி நாயகன் ஒரு பக்கம் விரைந்து செல்ல கெமரா வானத்தை நோக்கி சென்று ஓங்கி வளர்ந்திருக்கும் பனமரங்களை காட்டியவாறு தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ்வார்கள் என்பதை உணரவைத்து இனியவனாய் முடிகிறது இந்த 'இனி அவன்'.

அமானுல்லா எம். றிஷாத்



Wednesday, November 28, 2012

உலக super star இன் இறுதி அதிரடி திரைப்படம் : CZ 12 --Trailer மற்றும் கதைச் சுருக்கம்--

Marital arts அதாவது தற்காப்புக் கலையினை உலகெங்கும் எடுத்துக் காட்டிய Bruce Lee இன் இடத்தைப் பிடிப்பார் என நினைத்தால் அதற்கும் மேலாக ஒரு இடத்தைப் பிடித்தவர் Jacki Chan.

எத்தனை ஆயிரம் பேர் எதிரிகளாய் வந்தாலும் அவர்களைப் பந்தாடும் அசகாய சூரராக மிகைப்படுத்தப்பட்ட பாத்திரங்களில் நடித்த Bruce Lee இன் பாணியிலிருந்து விலகி தனக்கென ஒரு பாதையை Comedy, சிறந்த நடிப்பாற்றலுடன் உருவாக்கி அதிலே நடந்து வெற்றி பெற்றவர் இவர்.
தன் முதல் படத்திலிருந்து இன்று வரை தன் சண்டைக்காட்சிகளை தானே அமைத்துக்கொள்கிறார்.
உலகெங்கும் ரசிகர் பட்டாளம் உள்ள Jacki Chan இனை சென்னை தமிழ் பேச வைத்து இலங்கை மற்றும் இந்திய விலும் பிரபலப் படுத்தியுள்ளனர்.

Animation உச்சக் கட்டத்தில் இருக்கும் இன்றைய கால கட்டத்தில் கூட Real Action இனை மட்டுமே கடைப்பிடித்து animation இனை விட சிறந்த தரத்தில் சண்டைக்காட்சிகளை தருவதால் அதிக ஆபத்துக்களை சந்திக்கும் Jackie Chan "நான் இன்னும் இள வயதில் இல்லை. எதற்க்காக இந்த மாதிரியான விடயங்களுக்காக என் சொந்த உயிரை இனியும் நான் பணயம் வைக்க வேண்டும்? என்னால் இயன்றதை நான் இனியும் செய்வேன். ஆனாலும் நான் எனது வாழ்கையை ஆபத்துக்குள்ளாக்கி சக்கர நாற்காலியில் உடகார்வதை விரும்பவில்லை" என்று கூறியுள்ளார். எனவே, தானே தயாரித்து, இயக்கி நடிக்கும் தனது அடுத்த படமாகிய CZ 12 (Chinese Zodiac 2012) இனை தனது இறுதி Action திரைப்படமாக அறிவித்துள்ளார்.

எனினும் சண்டயினைப் பிரதானப்  படுத்தாத படங்களில் நடிப்பார் என்பது ஓரளவு அவரது ரசிகர்களுக்கு ஆறுதலே. ஏற்கனவே பல படங்களில் தன்னால் நன்றாக நடிக்க முடியும் என்பதை Jacki நிருபித்துள்ளதால் சண்டைக்காட்சிகள் இல்லாமலும் அவரது படங்களைப் பார்க்க முடியும் என்பது தெளிவு.

சரி இனி CZ 12 இற்கு வருவோம்.

CZ 12 விடுமுறைக்கு விருந்தாக அளிக்கப்படுகிறது. 12.12.12 இல் வெளியிடப்பட இருக்கிறது. 5  கண்டங்களையும் உள்ளடக்கி உலகின் பல முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

கதை ஆசியக் கழுகு எனப்படும் Chan ஐச் சுற்றி நடக்கிறது.
புதையல் வேட்டைக்காரர் ஒருவர் Jackie இனை பிரான்ஸ் இன் மாளிகை ஒன்றில் 1980 களில் வைக்கப்பட்டு  காணாமல் போன நான்கு வெண்கல சிலை தலைகளை கண்டு பிடிக்க வாடகைக்கு அமர்த்துகிறார்.
சீன இராசி சக்கரத்தில் இருக்கும் 12 விலங்குளின் 4 தலைகள் காணாமல் போகின்றன. அந்த இராசி சக்கரம்  சீனாவின் தேசிய சின்னமாகவும் புதயலாகவும் இருக்கிறது. அவற்றை Jackie தேடிக் கண்டு பிடிப்பதே கதை.

பிரதான நடிக நடிகையர்கள்  
Yao Xingtong, Hallyu star மற்றும்  Kwon Sang-woo.

பல மில்லியன் செலவில் எடுக்கப்படும் இவ்வாறன திரைப்படங்களே கதையை  சொல்லிய பின்பே வெளியிடப்படுகிறது. ஆனால் தமிழ் படங்கள்?? ஏன்?

இறுதி Action படம் என்பதால் முன்னைய படங்களை விட Jackie இதில் மிகக் கவனம் செலுத்தி இருப்பார்.

இன்னும் 2 வாரங்களே.... பொறுத்திருந்து பார்ப்போம்....!!!

அதுவரையில் இதோ trailer உங்களுக்காக......


Friday, November 23, 2012

போடா போடி பிந்திய விமர்சனம்


பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டு தீடிரென தீபாவளிக்கு வெளியானது. துப்பாக்கி வெடித்த சத்தத்தில் போடா போடி என்ற கூச்சல் குறைவாக மக்களின் காதுகளுக்கு கேட்பது உண்மை. என்றாலும் ஒஸ்தி கொடுத்த விளம்பரத்தில் பாதியை இதற்கு கொடுத்திருந்தால் படம் அடுத்த விண்ணைத் தாண்டி வருவாயா என்று சொல்லாவிட்டாலும் ஒஸ்தியை மிஞ்சியிருக்கும்.

கல்யாணத்திற்கு பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும் என விரும்பும் தமிழ் கலாச்சார பையனுக்கும் தான் விரும்பிய மாதிரித்தான் இருப்பேன் என்கிற மேலயத்தேய பொண்ணுக்குமிடையிலா வாழ்க்கையில் மோதலால் போடா போடி என்று கூறிக்கொண்டு பிரிந்தவர்கள் வாடா வாடி என்று எவ்வாறு இணைகிறார் என்பதே படத்தின் கதை.

இவர்களின் வாழ்க்கையில் இடம்பெறும் 4 காலங்களை ஆரம்பத்திலிருந்து இறுவரையிலும் சலிப்பை ஏற்படுத்தாமல் திரைக்கதை நகரச்செய்து வெற்றி பெற்றுள்ளார் அறிமுக இயக்குனர் விக்னேஷ். வரவேற்கத்தக்க புதுவரவு.

வெளிநாடுகளில் வாழும் எம்மவரினை நிறைய இடங்களில் பிரதிபலிக்கிறது படம். லண்டன்ல வாழ்ந்தாலும் நாம தமிழர்கள்கள் என்கிற இடம் அருமை. வசனங்கள் அத்தனையும் இயல்பாக இருக்கிறது.

சரத்குமாரின் மகள் வரலட்சுமியின் முதல் படமா இது என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது அவரது நடிப்பு, நடனம். முதல் படத்திலேயே குழந்தை குட்டி என்று காட்டினாலும் ஏமாற்றமில்லாத பாத்திரத் தேர்வு. போஸ்டர்களில் சிம்புவுக்கு இவர் ஜோடியா எனக் கேட்க வைத்தாலும் படம் முழுக்க இந்த ஜோடி சலிப்பை ஏற்படுத்தவில்லை. தமிழ்சினிமாவில் இவருக்கான இடம் நிச்சயம் உண்டு.

முதல் பாதி முழுக்க நகைச்சுவையாகச் பயணிக்கிறது படம் பிற்பாதியில் நகைச்சுவை, சென்டிமென்ட், காதல் என எல்லா உணர்வுகளையும் தாங்கி நிற்கிறது.

சிம்புவுக்கு பொருத்தமான கதையாகவே இருக்கிறது. எவ்வளவு எளிதாக சிரிக்வைக்கிறாரோ அதே அளவு எளிதாக சில இடங்களில் அழவைத்துவிடுகிறார். உள்ளுக்குள்ள பெரிய நடிகனேயே வைத்திருக்கிறார் சிம்பு. ஆனாலும் விரல் வித்தைகளில் காலந்தள்ளுவது ஏனோ?

எனக்கே விரலா என்று ஒரு இடத்தில் சிம்பு கேட்பார். அது சிம்பு விமர்சனங்களை கவனத்;திற்கொண்டு இலகுவாக செயற்படுத்துவதாக வெளிப்படுத்துவதாக அமைகிறது.

பின்னணி இசை மற்றும் பாடல்களில் சிறப்பாகவே செயற்பட்டிருக்கிறார் தமன். ஆனால் 2 பாடல்கள் இடம்பெற்ற இடம் கொஞ்சம் நெருடல். பாடலுடன் ஆரம்பித்து படம் பாடலுடன் முடிகிறது என்பதை நன்றாகவே உணர்ந்திருக்கிறார் தமன்.

ஒளிப்பதிவு லண்டனை அழகாக சுற்றிக்காட்டுகிறது. இவர்களை தவிர்த்து வீடிவீ  கணேஷ் மட்டுமே சிறப்பாக செயற்பட்டிருக்கிறார். அவர் வரும் பெரும்பாலான இடங்கள் கலகலப்பூட்டுகிறது.

ஏனையர்களில் மோஜோ என்ற கதாபாத்திரமும் ஷோபனாவும் அடிக்கடி எரிச்சலூட்டுகிறார்கள். ஆனாலும் சிம்புவும் வரலட்சுமியும் மொத்தப்படத்தை சிறப்பாக இறுதிவரை தாங்கிச்சென்று வெற்றிபெறுகிறார்கள்.

போடா போடி திருமணமாகதவர்களை வாடா வாடி என்றணைக்கச்செய்கிறது.

ஏற்கனவே ஏராளமான விமர்சனங்கள் வெளியாகிவிட்டதனால் சற்று சுருக்கமாக அமைகிறது இந்த விமர்சனம்.

Saturday, October 27, 2012

Iron Man 3 - Teaser Trailer and an Overview

தமிழில் முதலாம் பாகம், இரெண்டாம் பாகம் என்று இதுவரை இரண்டு திரைப்படங்களே வெளிவந்துள்ளது. அதில் பில்லா 2 இற்கு பிரம்மாண்டமான ஆரம்பம் கிடைத்திருந்தாலும் அதனைத் தக்கவைக்க முடியாது போனது. சிம்பு மன்மதன் 2 எடுக்கப்போவதாக பல வருடங்களாக கூறிக்கொண்டு இருக்கிறார்.வெளி வந்தால்தான் உண்மை. அது வரைக்கும் வரும் ஆனா வராது தான். 



ஆனால் Hollywood திரைப்படங்களைப் பொறுத்தவரையில் இரண்டாம், மூன்றாம் பாகங்கள் என்று தொடர்ந்து வெளியிடும் நோக்கத்திலேயே அனைத்து திரைப்படங்களும் எடுக்கப்படுகின்றன. அவை வெற்றியும் பெறுகின்றன. அத்திரைப்பட கதாபாத்திரங்களுடன் நாமும் வருடக்கணக்காக கூடவே பயணிப்பது போன்ற ஒரு தாக்கத்தை அவை ஏற்படுத்துவதே அவற்றின் வெற்றிக்கான காரணம். 

அந்த வரிசையில் Iron Man 3 அடுத்ததாக வரவிருக்கும் அமெரிக்காவின் Super Hero திரைப்படம். Marval Comics இனால் உருவாக்கப்பட்ட Iron Man Comics கதாபாத்திரத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் இது. 

ஏற்கனவே வெளியான Iron man 1 (2008), Iron Man 2 (2010) இன் தொடர்ச்சியாக இது வெளிவர இருக்கிறது. இதனைப் பற்றிய முழு விபரங்களும் திரைப்படம் வெளிவந்ததும் உங்களுக்கு விரிவாகத் தரப்படும். எனக்குப் பிடிக்காத Super hero திரைப்படம் இது. ஆனாலும் வெளியான இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றி அடைந்துள்ளன. 

Tony Stark (Iron Man) இற்கு நெருக்கமானவர்களை வில்லன், அவரைப் பழிவாங்க கடத்தியதும் அவர்களை மீட்கும்போது அவரது ஹீரோயிசத்திற்கும், வெற்றிக்கும் காரணம் அவரது super hero உடையா அல்லது தனக்குள் இருக்கும் மனித நேயமும் நம்பிக்கையும், திறமையுமா என்பதை Iron Man உணர்வதுதான் மூன்றாம் பாகத்தின் கதை.
தற்போதைக்கு 2013 இல் வெளிவர இருக்கும் மூன்றாம் பாகத்தின் Teaser Trailer உங்களுக்காக...

Sunday, October 14, 2012

மாற்றான் - விமர்சனம்


ஒட்டிப்பிறந்த சகோதரர்கள் மற்றும் ஜெனட்டிக் பற்றிய தமிழ்சினிமாவிற்கு பெரியளவில் அறிமுகமற்ற புதிய கதையில் சினிமா மசாலாக்களை கலந்து கே.வி. ஆனந்த் சொதப்ப சூர்யா அசத்தியிருக்கும் படமே மாற்றான்.

பால்மா உற்பத்தியில் பெயர் பெற்று விளங்கும் சூர்யாக்களின் தந்தையான சச்சின் கடேகர் தவறான பதையில் பணம் சம்பாதிப்பது பிள்ளைகளுக்கு தெரியவர தந்தையின் தவறுகளை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டி வெற்றி பெற்றார்களா? இல்லையா? என்பதே கதை. இதற்காக ஜெனட்டிக், ஒட்டிப்பிறந்த சகோதரர்கள், உக்வேனியா, காதல், உறவுகள் என சினிமா சாயம் பூசியிருக்கிறார் இயக்குனர்.

ஓர் இயதம் ஈருடலாக பிறக்கும் குழந்தைகளில் ஒருவர் உயிர்பிழைக்க ஒருவரை கொல்ல வேண்டி ஏற்படுட தாயின் விருப்பத்தினால் பிரிக்கப்படாமல் ஓருயிர் ஈருடலாக அகிலன் மிளகு ரசம் குடிக்கும் பிள்ளையாக வளர விமலன் சரக்கடிக்கும் பிள்ளையாக வளர்கிறார்.

படத்தில் கொமடியன் இல்லை என்ற குறை தெரியாமல் பார்த்துக்கொள்கிறார் சூர்யா. நகைச்சுவை காட்சிகளில் சூர்யாவின் டைமிங் கொமடிகள் அத்தனையும் அரங்கத்தை சிரிப்பொலியில் அதிரச் செய்கிறது. இதனால் முதல் பாதி நீளமானபோதும் ரசிக்கும்படி வேகமாகவும் கலகலப்பாகவும் நகர்கிறது திரைக்கதை.

ஒரு கட்டத்தில் சீரியஸான சூர்யாவிற்கு அப்பாவின் தவறுகள் தெரியவரும் போது அவரை வில்லன்கள் கொன்றுவிட இதயமாற்று சிகிச்சை மூலம் விமலன் பிழைக்க அதிலிருந்து திரைக்கதை ரசிகர்களை ரசிகர்களை கொல்ல ஆரம்பிக்கின்றது. மேலும் விமலன் இறந்தபோதும் அது பெரிதாக இதயங்களை கனக்கச்செய்யவில்லை இத்தனைக்கு அந்த இடங்களில் சூர்யாவின் நடிப்பு அபாராம் என்றாலும் இயக்குனர் கோட்டை விடுவது ரசிகர்களுக்கு சோகம்.

பின்னர் இரண்டாம் பாதி முழுக்க முழுக்க ஒரு சூர்யாவுடன் பயணிக்கிறது கதை. விமலன் இன்றிய அகிலனின் தவிப்பு மட்டுமே இரண்டாம் பாதியில் ரசிக்கக்கூடியதாக உள்ளது. இன்னொரு நாட்டின் மனச்சாட்சியே இல்லாத தீர்மானங்கள், ஜெனட்டிக் என புதுக்களத்தில் கதை சென்றாலும் படம் எப்போது முடியும் என நீண்ட நேரமாக எம்மை சோதிக்கும் திரைக்கதையில் கே.வி. ஆனந்த் இயக்குனராக தோற்றுப்போகிறார். அது எப்படி என்பதை நீங்களே திரையில் பார்த்துக்கொள்ளுங்கள்.

மேலும் இது எம்.ஜி.ஆர் படங்களை போன்ற படம் என சூர்யா தெரிவித்திருந்தார் அது உண்மை என நிரூபிப்பது போல இரண்டாம் பாதியில் காட்சிகள் அமைந்துள்ளமை ஒரு பழைய படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துவதை தடுக்க முடியவில்லை.

உலகம் சுற்றும் வாலிபனில் எம்.ஜி.ஆர் எங்கே போனாலும் அங்கே வில்லனில் அடியாட்கள் அசோகனிடம் பாஸ் அவங்க  வந்துட்டாங்க, பாஸ் அவங்க போய்ட்டாங்க என வில்லனிடம் தகவல்கொடுப்பது போன்ற அடியாட்கள் சிலரையாவது தவிர்த்திருக்கலாம். மேலும் அதில் இடம்பெறும் வசனங்களையாவது கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். எனக்கு இதயம் இல்லைன்னாலும் ஈரம் இருக்கும்மா என ஓரிரு வசனங்களே மனதை வருடுகிறது.

முழுப்படத்தையும் கடைசிவரை இழுத்துச்செல்வது படத்தின் நாயகன் சூர்யா மட்டுமே. ஒவ்வொரு சீனிலும் மனிதன் அசத்துகிறார். நகைச்சுவை உட்பட அனைத்து விதமான நடிப்பிலும் பட்டையை கிளப்புகிறார். சின்ன சின்ன அசைவுகளும் ரசிக்கக்கூடியதாக உள்ளது. சில காட்சிகளில் எத்தனை இலகுவாக எம்மை அழச்செய்கிறாரோ அத்தனை இலவுவாக சிரிக்கவும் செய்வதுடன் இரட்டையர்களாகவே வாழ்ந்திருப்பது சூர்யாவின் அபார உழைப்பு ஆனாலும் அவை அத்தனையையும் தவிடுபொடியாக்கிறது திரைக்கதை என்பதே வருத்தம்.

நாயகி காஜலுக்கு படம் முழுக்க வரும் கதாபாத்திரம் சிறப்பாகவே செய்திருக்கிறார். அவ்வப்போது தமிழ் படங்களில் தலைகாட்டினாலும் பழகிய முகமாக கொள்ளை அழகுடன் ஜொலிக்கிறார். ரொமன்ஸ் காட்சிகளும் ரசிக்கலாம். படம் முடியும் வரை மொழிமாற்றம் செய்துகொண்டே இருப்பதுவே உறுத்தல்.

நாயகன் சூர்யாக்களுடன் சேர்த்து முதல் பாதி முழுக்க மூன்றாவது நாயகனாக கிராபிக்ஸ் காட்சிகள் கண்ணை உறுத்தாது பயணிப்பது பாராட்டும் விதமாக உள்ளது. இதுவே ஒட்டிப்பிறந்த சகோரர்களை சூர்யாவுடன் சேர்த்து எம்மை நம்ப வைக்கிறது.

இந்த மூவரையும் தாண்டி ஒளிப்பதிவாளர் மட்டுமே ஆறுதல் அளிக்கிறார். நோர்வேயின் அழகை மேலும் அழகுபடுத்துகிறது சௌந்தரின் கைவண்ணம். அயனில் பார்த்த பல கோணங்கள் இயக்குனரின் கெடுபிடியாக இருக்கலாம். உச்சிகளில் பாடல்களை படமாக்குவதை தவிர்த்திருக்கலாம் காரணம் கே.வி. ஆனந்தின் படங்களில் ஏற்கனவே இடம்பெற்ற பாடல்களை நினைவுபடுத்துகிறது.

நாயகன் நாயகி தவிர சூர்யாவின் அப்பாவாக வரும் சச்சின் கடேகர் மட்டுமே மனதில் நிற்கிறார் ஏனையவர்கள் எவரும் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை.

அடுத்தது சண்டைக்காட்சிகள் சூர்யாவின் முயற்சிகளை சிதறடிக்கிறது அவற்றின் நீளம். இரண்டாம் பாதி கிட்டத்தட்ட சண்டை காட்சிகள் மட்டுமே உள்ளது போல் தோன்றச்செய்கிறது. 3 படங்களின் சண்டைக்காட்சிகளை ஒரே படத்தில் பார்த்த உணர்வு.

இசை ஹாரீஸ் ஜெயராஜ் பாடல்கள்தான் எதுவும் மனதில் நிற்கவில்லை என்றால் பின்னணி இசையும் எரைச்சலால் எரிச்சலூட்டுகிறது. சுட்டாச்சும் நல்லாத்தான் இசையமைத்துக் கொண்டிருந்தார் அண்மைக்காலமாக என்னாச்சு என்றே புரியவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக படத்தின் பின்னணியில் நிஜமான நாயகனாக இருக்க வேண்டிய இயக்குனரே படத்திற்கு வில்லனாகிவிட்டார். படத்தின் கதை சிறப்பாக அமைந்தபோதிலும் திரைக்கதையில் கோட்டை விட்டதில் சினிமா ரசிகர்கள் அனைவரையும் ஏமாற்றிவிட்டார் கே.வி. ஆனந்த். மேலும் முந்தைய படங்களின் பாதிப்பிலிருந்தும் மீளவில்லை என பல இடங்களில் நிரூபிக்கிறார்.

4 வருடங்கள் உட்கார்ந்து எழுதிய கதை என்றார்கள் ஆனால் 4 வருடங்களில் ஏகப்பட்ட படங்களை பார்த்து எழுதிய கதை என்பது இப்போது புரிகின்றது. போதாதற்கு சூர்யாவின் கடைசித் தோல்வி 7ஆம் அறிவு போலவும் சில காட்சிகள். சூர்யாவுக்கு படம் முடிந்து எழுத்தோட்டத்துடன் விருது வழங்கும் இரண்டாவது படம் இது. சூர்யாவின் வெற்றியே வித்தியாசமான கதைத்தேர்வுகளே எனவே அடுத்தடுத்த கட்ட நகர்வுகள் சூதானமாக அமையட்டும் சூர்யா!

மாற்றான் வழக்கத்துக்கு மாற்றமான கதையானாலும் ரசிகர்களின் ரசனையை மாற்றான்!

- அமானுல்லா எம். றிஷாத்


Sunday, October 7, 2012

Expendables 2 - Blue ray rip - Free download - இலவசப் பதிவிறக்கம் மற்றும் விமர்சனம்

Download link : Expendables 2 Blue ray with subtittle
(கட்டுரையின் முடிவில் பார்க்கவும்.)

உலகளாவிய action திரைப்பட ரசிகர்களுக்கான தீனியாக வெளிவந்த திரைப்படம் இது. கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் 13 ஆம் திகதி வெளிவந்த Expendables இன் தொடர்ச்சியாக இது வெளி வந்தது.

$100 மில்லியன் செலவில் பல்கேரியா, ஹொங்-கொங் மற்றும் நியூ ஒர்லண்ட்ஸ் ஆகிய நாடுகளில் 14 வாரங்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு இந்த வருடம் 17 ஆம் திகதி ஆகஸ்டு மாதம் உலகெங்கும்  திரையிடப்பட்டது. இது வரை Expendables 2 குவித்துள்ள வசூல் $285.7 மில்லியன்.

வெளியிடப்பட்ட டிரைலர் இனை விட திரைப்படம் மிக அற்புதமாக உள்ளது. அதனால் தான் இத் திரைப்படம் Hollywood இல் Stallone's Adrenaline Pumping Action Ride  என அழைக்கப் படுகிறது.

உலகத்து திரைப்பட ரசிகர்களில் பெரும்பாலானோர் Action திரைப்பட ரசிகர்களே. அதனை நன்கு பயன்படுத்திக்  கொண்டுள்ளார் Sylvester Stallone .
இவரே உலகெங்கும் Rambo என அறியப்பட்ட பிரபல கதாபாத்திரத்தில் Action விருந்து படைத்தவர்.

Hollywood திரைப் படங்களின் நாயகன் எப்போதும் அதன் இயக்குனர்தான் என்பதை Expendables 1 மூலம் உணர்ந்து கொண்ட Sylvester Stallone இந்த முறை இயக்குனர் பொறுப்பை Tomb rider, The Mechanic மற்றும் பல திரைப்படங்களை இயக்கிய அனுபவ இயக்குனராகிய Simen West  இடம் கொடுத்து விட்டு தனது வேலையை மாத்திரம் கையில் எடுத்துள்ளார்.

Expendables 2 இல் Sylvester Stallone இன் தனிப்பட்ட வாழ்கையில் நண்பனும் தொழில் முறையில் எதிரியும் ஆன Arnold Schwarzenegger (Commando, Termonator, predator மற்றும் பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் மூலம் அறியப்பட்டவர்) தன் பிரபலமான பஞ்ச் டயலாக் " I'm Back" உடன் அறிமுகம் ஆகாமல் Stallone ஆல் காப்பாற்றப்படும் காட்சியுடன் அறிமுகம் ஆகிறார். அந்த இடத்தில் "நான் உன்னிடம் கடன் படுவதை வெறுக்கிறேன்" என்று கூறிவிட்டு பின்னர் Stallone இன் Team இனை படத்தின் பாதியில் காப்பாற்றி "I'm Back" என்று தன் கடனைத் தீர்த்துக் கொள்கிறார். அவர்களின் ரசிகர்கள் நிச்சயம் ரசித்து இருப்பார்கள்.

இவ் வசனம் 1991 இல் வெளிவந்த James Cameron (Titanic மற்றும் Avatar இனை எழுதி தயாரித்து இயக்கியவர்)   இன் Terminator 2 : The Judgement Day இற்காக Arnold Schwarzenegger இனால் பேசப்பட்டது.

இவ் வசனம் அஜித் குமார் இனால் பில்லா வில் பேசப்பட்டு தமிழில் பிரபலம் ஆனதும் கூட.

Expendables 2 இல் அந்தந்த நாயகர்களின் பிரபலமான வசனங்களுடன் நகைசுவையைக் கலந்து அதிரடியாக தந்துள்ளனர்.
அந்தந்த நாயகர்களின் தனித்தன்மையும் தெளிவாகத் தெரிகிறது.

ஒரே கதையாய் இருந்தாலும் ஒரே பாணியாய் இருந்தாலும் அதில் எப்படி வித்தியாசம் காட்டி ரசிகர்களுக்கு தங்களின் தனித் தன்மையுடன் விருந்து படைக்கலாம் என்பதற்கு இந்த நட்சத்திரங்களின் குழு ஓர் உதாரணம்.

ஒரு இடத்தில் துப்பாக்கி ரவைகள் முடிந்தவுடன் 
Arnold : I am almost out. I'll be back
Bruce : You've been back enough. I'll be back

அந்த இடத்தில் Arnold இன் முகத்தைப் பார்க்க வேண்டும். ஹஹ்ஹஹ்ஹா... Yippee-ki-yay.

வழமை போல் Arnold இனால் இதிலும் சிரிக்க முடியவில்லை. Terminator 2 இல் சிறுவன் John corner, தன் காவலன் Terminator (Arnold) ஐ சிரிக்கச் சொல்லி விட்டு, அவர் சிரித்த பிறகு "நீ சிரிப்பதை விட சிரிக்காமல் இருப்பதே மேல்" என்று சொன்னதை அவ்வளவு இலகுவில் மறந்து விடுவோமா என்ன. 

Expedables 2 இன் சிறப்பம்சே அதன் நடிகர்கள்தான். Classical action நாயகர்களுடன் தற்போது பிரபலமாக அறியப்பட்ட,  Hollywood Action நாயகன் Jason Statham உம் இணைந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார். Transpoter மூலம் இவர் பிரபலமானவர். அதற்கு பிறகு அவரின் ஆர்ப்பாட்டம், அலட்டல் இல்லாத Action இற்கு Hollywood ரசிகர்கள் அடிமையாகிப் போனார்கள். நானும்தான். 

முதன் முதலாக Van Damm வில்லன் வேடத்தில் மிரட்டியுள்ளார். இதுவரை அவர் செய்து வந்த ஹீரோயிசம் கலந்த stylish action இதில் கொடூரமாகத் தெரிகிறது. பிரதான வில்லனாய் இருந்தாலும் ஒரு சில நிமிடங்களே வருகிறார். அதிலும் அவர் தன் ரசிகர்களை  ஏமாற்றவில்லை.
Stallone உடன் மோதும் போது அவரை வீழ்த்தி விட்டு  "over so soon? I want my money's worth" என்கிறார். அக் காட்சி அவரிற்கு போதுமான தீனி படத்தில் இல்லை என்பதை ரசிகர்களுக்கு உணர்த்துகிறது. 

அவரின் அறிமுகக் காட்சியில் Billy ஐக் கொல்லும்போது... waahh.... செம stylish..

Billy இன் சோக முடிவிற்குப் பிறகு Bruce Willis இடம் பணத்திற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேலை, ஒரு நல்ல திறமையான இளம் பையனின் ஆத் சாந்திக்கான பழிவாங்கல் படலமாக மாறுகிறது.

அந்த இடத்தில் Stallone சொல்வார் "Track 'em, Find 'em, kill 'em." அந்த மாஸ் தலைகளின் கூட்டத்திற்கு அவர் தலையாக இருப்பதற்கு தகுதியானவர் என்பதை எந்த மாற்றுக் கருத்தும் இன்றி ஏற்றுக் கொள்ள முடிகிறது. 
what a guts....!!! 

Expendables 2 இன் நாயகர்கள் : Sylvester Stallone, Jason Statham, Jet Li, Dolph Lundgren, Chuck Norris, Randy Couture, Terry Crews, Liam Hemsworth, Jean-Claude Van Damme, Bruce Willis, and Arnold Schwarzenegger.

இதில் மிகப் பிரபலமான இரண்டு ஆண் Action நாயகர்களும் இரண்டு பெண் Action நாயகிகளும் உள்ளடக்கப்படவில்லை.

Vin Diesel ( XXX மற்றும் Fast and Furious தொடரின் மூலம் அறியப்பட்டவர்). மற்றையவர் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை தன் குறும்பு மற்றும் அப்பாவித்தனம் கலந்த Action மூலம் உலகத்தைக் கவர்ந்த சூப்பர் ஸ்டார்  Jackie chan.

பெண்களில் Milla Javovich (Resident Evil தொடரின் நாயகி) மற்றும் அழகான இரத்தக் காட்டேரி  Kate Beckinsale (Underworld தொடர் மற்றும் Van Helsing மூலம் மிகப் பிரபலமானவர்.)

இது அவர்களின் ரசிகர்களுக்கு ஒரு தாங்க முடியாத ஏமாற்றமே.

Expendables 3 வெளியிடப்பட்டால் அதில் இவர்களும் உள்ளடக்கப் படுவார்கள் என அவர்களின் ரசிகர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

Stallon அவரின் classical ரிவால்வர், classical பைக், classical கத்தியுடன்  உங்களால் Classic ஐத் தவிர்க்கவே முடியாது என்று வந்து நிற்கிறார். அவரின் அந்தப் பழைய ரிவல்வரால் தற்போதைய pistol மாதிரி தொடர்ந்து சுட முடியாது. ஒவ்வொரு தடவை சுடும் போதும் re-load செய்ய வேண்டும். அதனை அவர் செய்யும் பாணி அவருக்கே உரியது. அவரின் ரசிகர்கள் தமிழர்களாய் இருந்திருந்தால் எழுந்து நின்று விசில் அடித்து இருப்பார்கள்.

Statham அவரின் இறுதி சண்டைக் காட்சியில் Scott Adkinson இன் தலை Air Craft இன் பின் பக்க விசிறிக்குப் பலி கொடுத்து விட்டு "can't beat the classic" என்பார். உண்மைதான். 
செம பஞ்ச்.....

படம் முழுவதும் Stallone, Statham இற்கிடையிலான சம்பவங்களும் உரையாடல்களும் ரசிக்கும்படியவே உள்ளன. காட்டிற்குள் பெட்டகத்தைத் தேடிப்போகும்போது Statham இற்கு அவரின் காதலியிடம் இருந்தது போன் வரும். அதற்கு Stallone "Hallo, dear"  என்பார் Statham ஐப் பார்த்து. Nice humor sense. 
இறுதிக் காட்சியில் காயம்பட்ட Stallone முகத்தைப் பார்த்து Statham "ஒரு நண்பனா ஒனக்கு ஒண்டு சொல்றன். எப்பிடி சண்டை போடுறது எண்டு நீ கட்டாயம் படிக்கணும்" என்பது வரை அது தொடர்கிறது. 

Chuck Norris இன் அறிமுகத்தின் பின் Stallone அவரிடம் Booker இனை நாக பாம்பு கடித்த வதந்தி பற்றிக் கேட்கும் காட்சி, ரஜினியின் "கடிச்சிது, ஆனா வெஷம் ஏறெல்ல" காட்சியையும் வடிவேலுவின்  "கடிக்காதேங்க... கடிக்காதேங்க..." காட்சியையும் ஒரு சேர ஞாபகமூட்டுகிறது. 

அந்த பழைய Russian Army base இல் Expendables இன் உரையாடல் அருமையான நகைச்சுவைப் பாணி. Gunner இன் குறட்டைச் சத்தம், இறப்பதற்கு முன் அவர்கள் சாப்பிட விரும்பும் சாப்பாடு பற்றிப் பேசுவது, classic இசைப் பின்னணி சண்டை.. ரசித்து செதுக்கி இருக்கிறார்கள்.

இறுதியில் Stallone அவரின் classical air craft ஐ இழந்ததற்குக் பதிலாக Bruce Willis ஒரு பழைய air craft ஐப் பரிசாக அளிப்பார். அதற்கு Stallone "அது மியுசியத்தில் இருக்க வேண்டியது" என்பார்.

அதற்கு Arnold சொல்வார் "நாம் எல்லோரும்தான்"  என்று

நீங்கள் என்ன நினைக்கிறீகள்? இப்படை அதற்குத் தகுதியானதா..!!?


Click here to download the full movie in blue ray


றிபாஸ்
சிங்கப்பூரில் இருந்து....