Total Pageviews

Friday, May 20, 2016

மீண்டும் உயிர் பெறும் வூலி மமத்!!!

பூமியில் அழிவடைந்த உயிரினங்களான டைனோஸர்கள், வுலி மமத், டூடோ போன்றவை மீண்டும் பூமியில் புத்துயிர் பெற்று வாழ ஆரம்பித்தால் எப்படி இருக்கும்?

கற்பனைகளை நாம் தவளவிடும்போதே விஞ்ஞானிகள் அதனை நடக்க வைக்க திட்டமிட்டுவிட்டார்கள்.

பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் பூமியிலிருந்து முற்றாக அழிவடைந்துவிட்ட உயிரினங்கள் தொடர்பாக பல்வேறு தகல்களை வெளியிட்டு வரும் ஆராய்ச்சியாளர்கள் விரைவில் அவற்றை பூமியில் புத்துயிர் பெற வைக்கும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளனர்.



டைனோசோர்கள், டூடோ, வூலி டைனோஸர் போன்ற பல விலங்குளின் எச்சங்களைக் கொண்டு அவ்வுயிரினம் தொடர்பில் நீண்டாகலமாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இதில் சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் முற்றாக அழிவவடைந்துவிட்டதாக நம்பபப்படும் வூலி மமத் என அழைக்கப்படும் மயிர்களைக்கொண்ட ஒரு வகை யானையும் ஒன்று.

2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்ததாக அறிவியில் உலகம் நம்பபும் டைனோஸோர்களின் எச்சங்கள் கிடைப்பது போல விஞ்ஞான ரீதியாக அண்மையில் அதாவது சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் வரையில் வாழ்ந்த வூலி மமத்களின் எச்சங்களும் மீட்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்த வூலி மமத்தினையும் மீண்டும் உயிர்கொடுத்து பூமியில் நடமாடவிடும் முயற்சியினை ஆரம்பித்துள்ளனர். இத்திட்டத்தினை ரஷ்ய மற்றும் கொரிய விஞ்ஞானிகள் முன்னெடுக்கின்றனர்.

குளோனிங் முறையில் மனிதனை உருவாக்க முடியாது. அது கடவுள் நம்பிக்கை மற்றும் வேறுபல காரணங்களால் தடை செய்யப்பட்டுள்ளது. மறைந்த உயிரினத்தினத்திற்கு புத்துயிர் இந்த திட்டத்திற்கு எதிர்காலத்தில் எதிர்ப்புக்ள வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உலகின் முதலாவது குளோனிங் முறையிலான 'டோலி' எனும் ஆட்டை உருவாக்கிய தண்டுக் கலம் தொடர்பான விஞ்ஞானி சேர் இயன் வில்மட் இத்திட்டம் தொடர்பில் கூறுகையில், வரலாற்றுக்கு முந்தைய விலங்கினை நவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

ஜுரஸ்ஸிக் பார்க் திரைப்படத்தின் மூலமாகவே இந்த சிந்தனை தோன்றியதாகவும் இத்திட்டத்தினால் அழிவடைந்த விலங்கினை மீண்டும் உலகில் நடமாடச் செய்யமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலைமையில் மீட்கப்பட்டுள்ள மமத்தின் எச்சங்களிலிருந்து செயற்திறன்மிக்க டி.என்.ஏ.யினை பெறுவது சவாலான ஒரு வியடம். ஆனால் இதனை மீறி அவற்றைப் பெற்றால் பிரயோசமானதும் ஆர்வமானதுமான விடயங்களை மேற்கொள்ள முடியும்.



கடந்த வருடம் சைபீரியாவிலிருந்து குளிரில் உறைந்த நிலையில் மீட்கப்பட்ட மமத்கள் கண்டெடுக்கப்பட்டன.

இவற்றில் சிறந்த நிலையில் பாதுகாக்கப்பட்ட யூகா என்ற குழந்தை பெண் மமத் ஒன்று உள்ளது. இதுவே சுமார் 39 ஆயிரம் வருடங்கள் பழைமையானது. தற்போது இந்த யூகா ஜப்பானில் கட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மாதிரிகள் சிலவற்றை தென் கொரியா மற்றும் ரஷ்ய ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த மாதிரிகளில் பல ஆயிரம் வருடங்களாக பனியில் உறைந்தவை. குளிரில் விரைவாக டி.என்.ஏ சிதைவடையக்கூடியது. எனவே இம்மாதிரிகளிலிருந்து செயற்திறனான டி.என.ஏ.யை பெறுவது ஆராய்ச்சியாளர்களுக்கு சவாலாக அமையும் எனத் கூறியுள்ளார் சேர் இயன் வில்மட்.

முளைய வளர்ப்பு முறையினை விட நவீன தண்டுக் கல தொழில்நுட்பத்தினால் உறைந்த கலங்களிலிருந்து சிறந்த கலங்களை பிரித்தெடுக்கலாம். இந்த முறையில் ஏற்கெனவே எலி உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தண்டுக் கல தொழில்நுட்பம் 50 வருடங்களுக்கு முன்னர் வளர்ச்சி பெற்றிருந்தால் வூலி மமத்தினை உருவாக்கியிருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை உறைந்த உடலிலிருந்து சிறந்த கலங்கள் பிரித்தெடுக்க முடியாவிட்டால் மீண்டும் உலகிற்கு கிடைக்கும் வாய்ப்பு கிட்டுவதற்கான சாத்தியம் குறைவு எனக் கூறப்படுகின்றது.

இருப்பினும் இத்திட்டம் சாத்தியப்பட்டால் பாடப் புத்தகங்களில் மட்டும் பார்த்தறிந்த வூலி மமத்தினை நாம் நேரிலும் கண்டு மகிழும் வாய்ப்பு உருவாகும் என்பது அறிவியல் உலகின் எதிர்பார்ப்பாக உள்ளது.

(இவ்வாக்கம் ஏற்கனவே பாத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.)

-அமானுல்லா எம். றிஷாத்.
(இந்த வலைப்பூவிலிருந்து ஈ அடிக்கும் பட்சத்தில் எழுதியவரின் பெயரையும் சேர்ந்து ஈயடிக்குமாறு ஈயடிச்சான் தொழில்நுட்பவியலாளர்களை கேட்டுக்கொள்கிறேன்.)