சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

நாங்கள் பிரசுரித்த, உங்கள் தேடலுடன் தொடர்புடைய செய்திகள்....!!!
Here are the articles we written related to your search..!!!

Wednesday, May 11, 2016

அப்போது விக்கிலீக்ஸ், இப்போது பனாமா பேப்பர்ஸ் லீக்ஸ்

உலகயே அதிர்ச்சிக்குள்ளாக்கி தற்போது பேசு பொருளாக மாறியுள்ள பனாமா பேப்பர்ஸ் எனும் பணப்பதுக்கலுடன் தொடர்புடையவர்களின் பெயர் விபரங்கள் ஓப்சோர்லீக்ஸ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விக்கிலீக்ஸ் ஏற்படுத்திய அதே அளவிலானதொரு அதிர்ச்சியையே இந்த பனாமா பேப்பர்ஸ் ஏற்படுத்தியுள்ளது.




முழுமையான தகவலுக்கு தமிழில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த காணொளியைப் பார்க்கவும்.














Wiki leaks then, The Panama Papers now

The Panama papers create shocking waves all over the word as revealed the names that connect with the most controversial panama papers by The international consortium of investigation journalism via offshore website, last night.


for more information watch this video.

Tuesday, May 28, 2013

வர்த்தக மயமாகியுள்ள கிரிக்கெட்டில் மலிந்து வரும் ஊழல்

22 வீரர்கள் குறித்த சில விதிகளுக்கு உட்பட்டு எல்லைக்கோடு, பந்து, விக்கெட், துடுப்பு மட்டை போன்றவற்றைக்கொண்டு  திறமைகளை வெளிப்படுத்தி  விளையாடி,11 பேர் வெற்றிபெற பல்லாயிரம் பேர் திருப்தியுடன் மகிழ்வுறும் கிரிக்கெட்,  சில காலத்திற்கு முன்பு வரையில் கனவான்களின் விளையாட்டாக விளையாடப்பட்டது.

சில காலத்திற்கு முன்பு வரையிலா, இப்போதும் கிரிக்கெட் எனும் விளையாட்டு விளையாடப்படுகிறதுதானே என்று கேட்டால்  ஏமாற்றம் மட்டுமே எமக்கு பதிலாய் அமையும்.

உண்மையில் கிரிக்கெட் என்ற விளையாட்டு, வர்த்தக மயமாக மாறி பல காலமாகிவிட்டது. ஆனால் அந்த கொடுமையை பேசி முடிப்பதற்குள் சூதாக மாறிவிட்டமையே கிரிக்கெட்டை விளையாட்டாகவும் புரிந்துகொண்ட ரசிகர்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது.

டெஸ்ட், ஒரு நாள் போட்டி, இருபதுக்கு20, ஐ. பி.எல் என அமைய வேண்டிய கிரிக்கெட்டின் தரம் அப்படியே தலை கீழாக இன்று மாறியுள்ளது. அத்தனைக்கும் காரணம் பணம் என்ற ஒரு விடயம் மட்டுமே.

உலகின் சனத்தொகை அதிகமான பகுதியான ஆசியாவிலேயே கிரிக்கெட் விளையாட்டு சொர்க்கமாகவும் அதில் பங்குபெறும் வீரர்கள் கடவுளாக மாற்றம் பெற்றனர்.

இதனை நன்கு உணர்ந்துகொண்ட வர்த்தக நிறுவனங்கள் மெதுவாக கிரிக்கெட்டினுள் நுழைந்தன. ரசிகர்களின் கிரிக்கெட்டின் கடவுள்களையும் நாயகர்களையும் கொண்டு விளம்பரங்களை த் தயாரித்தன.

மக்கள் அன்றாடம் விழித்தது முதல் உறங்கும் வரையில் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களையும் கிரிக்கெட்டும் அது சார்ந்த வர்த்தக நிறுவனங்களுமே தீர்மானித்ததன.

இதற்காக ஏற்கனவே எம்முள் தூங்கியும் விழித்தும் இருக்கும் இனத் துவேசத்தையும் பிரதேச வாதத்தையும் தூண்டிவிட்டார்கள். விளைவு அரசியலிலும் தாக்கம் செலுத்தும் அளவிற்கு போனது நிலைமை. இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் எல்லைகளில் நடைபெறும் போர்களாக பார்க்கப்பட்டது. அதன் வெற்றி போரின் வெற்றியாக ரசிகர்களிடத்தில் கொண்டாடப்பட்டது.

அதுபோலவே இலங்கை , இந்தியா இடையிலான கிரிக்கெட் போட்டிகளும் அரசியல் பழிவாங்கல்களாகவும் ஈழத்தமிழர்களுக்கான தீர்வாகவும் ரசிகர்கள் பார்க்கத் தொடங்கினர். உண்மையில் இவற்றில் வெற்றியும் பெற்றார்கள். அப்பாவி ரசிகர்கள் அல்ல அடங்காத ஆசை கொண்ட வர்த்தகர்களும் கிரிக்கெட் வீரர்களுமே.

இதனால் எந்த நாட்டு கிரிக்கெட் சபை இலாபமடைந்ததோ இல்லையோ இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை மேலும் பணம் கொழிக்கும் சபையாக மாறியது. கூடவே கிரிக்கெட்டும் வர்தகமாக மாற ஆரம்பித்தது. இதனால் இந்திய கிரிக்கெட் சபையின் செல்வாக்கு சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிலும் அதிகரித்தது.

இதற்கெல்லாம் காணிக்கையாக இந்திய, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களதேஷ் உள்ளிட்ட நாடுகளிலுள்ள ரசிகர்களின் பொன்னான நேரமும் பணமும் பறிபோனது. இது தலையை தடவி கண்ணை பிடுங்கிய கதையானது.

இந்நிலையில் வெறிபிடித்த ரசிகர்களின் பணத்தை மேலும் கொள்ளையடிக்க வந்தது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் ஆதரவின்றி கபில்தேவினால் ஆரம்பிக்கப்பட்ட ஐ. சி.எல் (இன்டியன் கிரிக்கெட் லீக்) என்ற அமைப்பு. இதனை கிரிக்கெட் துரோமாக அறிவித்த இந்திய கிரிக்கெட் சபை, ஐ.சி.எல்.லைவிட பெரிய வியாபார யுக்தியுடன் ஆரம்பித்ததே இந்த ஐ.பி.எல்.

கொள்ளை இலாபம் ஈட்டுவதை மட்டும் இலக்காக கொண்டு இந்த அமைப்பை உருவாக்கிய லலித் மோடி, 2008ஆம் ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி போட்டிகளுடன் தனது திட்டங்களையும் செயற்படுத்த ஆரம்பித்தார்.

இதில் பிரதேச ரீதியான அணிகளை உருவாக்கியதில் ஒரே நாடென இணைந்திருந்த ரசிகர்கள் பிரதேச மற்றும் மொழி ரீதியாக மேலும் பிளவுபட்டதில் ஐ.பி.எல் என்ற வணிக சினிமா, இந்தியா தாண்டி தொடர்ச்சியாக வெற்றியை ருசித்தது.


விளைவு குறித்த செல்வந்தர்கள், தரகர்கள், மற்றும் வீரர்களால் கிரிக்கெட் ரசிகர்களின் பணங்களை அட்டையாக உறுஞ்சுவதற்கு வழிவகுக்கப்பட்டது.

போட்டியில் எவர் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் இவர்களுக்கு தோல்வியே இல்லை என்ற நிலைமை உருவானது.

இதனை மறைக்க கவர்ச்சிப்பெண்களின் ஆட்டம், பொலிவூட் நடிகர்கள் மற்றும் நடிகைகள், வெளிநாட்டு பாடகர்கள் மற்றும் பாடகிகள் என கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமன்றி பொதுவானவர்களையும் ஈர்க்கும் கழியாட்டங்கள் மூலம் ஐ.பி.எல் மேலும் பிரபலமடைந்தது.

ஒரு கட்டத்தில் இவற்றை எல்லாம் ஓரளவு உணர்த்தும் வகையில் ஐ.பி.எல் இல் ஸ்பொட் பிக்ஸிங், மெட்ச் பிக்ஸிங், பாலியல் சர்ச்சைகள் என வரிசையாக பிரச்சினைகள் வர ஐ.பி.எல்லில் இருக்கும் சூழ்ச்சிகளும் வெளியில் தெரியவந்தது. மக்களும் கதையை உணர ஆரம்பித்தனர்.

இதனையடுத்து அரசியல், கலாசாரம், விளையாட்டு துறைகளிலிருந்து ஐ.பி.எல் போட்டிகளுக்கு எதிர்ப்பு கிளம்ப ஆரம்பித்தன. இருப்பினும் பணம் பாதளம் வரையல்லவா பாயும்? ஐ.பி.எல் போட்டிகள் தொடர்ந்தும் நடைபெற்றன. ஆனாலும் சர்ச்சைகளுக்கு மட்டும் பஞ்சமில்லை.

இந்நிலையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.பி.எல். தொடரில் ஸ்பொட் பிக்ஸிங்கில் இந்திய வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூவர் கைதாகினர்.

இதனால் ஐ.பி.எல் இனை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் இதுவென கருத்துக்கள் வலுத்தது. மக்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் ஐ.பி.எல் தொடரினை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை இணையத்தளம், ஆர்ப்பாட்டம் மற்றும்  சுவரொட்டிகள் மூலம் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடிய, ஸ்ரீசாந்துடன், அன்கீட் சவான், அஜித் சாண்டிலா ஆகியோர்  சூதாட்ட முகவர்களுக்கு சாதகமாக ஸ்பொட் பிக்ஸிங்கில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டுள்ளனர். இவர்களுடன் குறைந்தபட்சம் 11 சூதாட்ட முகவர்கள், பொலிவூட் நடிகர் வின்டு தாரா சிங் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பி.சி.சி.ஐ இன் தலைவரான என். ஸ்ரீனிவாசன் இது தொடர்பில் கூறுகையில், "இந்த ஊழல் விவகாரத்தில் இந்திய டெஸ்ட் அணி  வீரர் ஸ்ரீசாந்த் மாட்டியிருப்பதைப் பார்க்கிறபோது வேதனையாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஊழலால் ஐ.பி.எல். போட்டியை நிறுத்தி விட வாய்ப்பு இல்லை.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆடிய ஒரு வீரர் சூதாட்ட புகாரில் சிக்கி இருக்கிறார் என்பது என்னைப் போலவே, ஏனையவர்களுக்கும் வருத்தத்தை அளித்துள்ளது. இதற்காக ஒட்டு மொத்த போட்டியும் ஊழல் என்று அர்த்தமாகி விடாது. ஐ.பி.எல். போட்டியை நிறுத்த வேண்டும் என்று நான் கருதவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐ.பி.எல் தொடர்பில் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் ரசிகர்களால் முன்வைக்கப்படும் கேள்விகள் இவ்வாறு உள்ளன:

இந்திய மதிப்பில் 10 கோடி முதற் பரிசை தட்டிச் செல்ல ஒவ்வொரு அணியும் சுமார் 1500 கோடிவரை செலவு செய்வது எதற்காக?
கிரிக்கெட்டினை அழிக்கும் ஐ.பி.எல் இற்கு பி.சி.சி.ஐ இன் பலம்வாய்ந்த ஆதரவு எதற்காக?
ஐ.பி.எல். விளையாட்டில் பங்குபெறும் அணியின் முதலாளிகள் தங்களுக்குள் பேசி முடித்து "மேட்ச் பிக்ஸிங்' செய்வதே கிடையாதா? அது குற்றமில்லையா?
ஐ.பி.எல் இல் குற்றம் செய்தார் என தெரிவிக்கப்பட்ட உடனே முழுமையாக நிரூபிக்கப்படாமலேயே அவசரமாக தடை விதி க்கக்கோருவது எதற்காக?
என இன்னும் ஏராளமான கேள்விகளை எழுப்பி இணையத்தளங்களினூடாக ஐ.பி.எல் மீது மண்ணை வாரி இறைக்க ஆரம்பித்துள்ளனர் ரசிகர்கள்.


5 வருடத்திற்கு சுமார் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு மட்டும் வருமானம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனவே இவ்வாறு பணத்தை அள்ளித் தரும் தங்க முட்டையிடும் வாத்தான ஐ.பி.எல்இனை இப்போதைக்கு விட்டுத்தர சி.பி.பி.ஐயும் தயாராக இல்லை என்பதே உண்மை.

"முடிவு" என்ற விடயம் இறுதிவரை தெரியாமலிருப்பதே அதன் மீதான ஈர்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால் மெட்ச் பிக்ஸிங் மற்றும் ஸ்பொட் பிக்ஸிங் போன்றவற்றால், முடிவு தெரிந்த பரீட்சை போன்று அமைந்துள்ள போட்டிக ளில் இளைஞர்களும் சிறுவர்களும் நேரத்தையும் பணத்தையும் கரியாக்கும் செயற்பாடுகள் இனியும் வேண்டுமா? என்பது கிரிக்கெட் ரசிகர்கள் பலரின் கேள்வியாக உள்ளது.

அமானுல்லா எம். றிஷாத்

இக்கட்டுரை 23.05.2013ஆம் திகதியன்று மெட்ரோ நியூஸ் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.

Friday, May 24, 2013

சம்பியன்ஸ் தொடரிலிருந்து நீக்கப்பட்டார் அசாத் ரவுப் : சூதாட்ட சர்ச்சையின் எதிரொலி

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் நடுவரான ஆசாத் ரவுப் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.பி.எல் சூதாட்டங்களில் தொடர்புபட்டிரக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சம்பியன்ஸ் போட்டித் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு ஊழல் மற்றும் சூதாட்ட சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள ஐ.பி.எல் கேளிக்கை கிரிக்கெட்டில் முதன் முறையாக நடுவர் ஒருவர் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதன் எதிரொலியாக சம்பியன்ஸ் கிரிக்கெட் தொடரிலிருந்து அதிரடியாக அசாத் ரவுப் நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் கூறுகையில், நடுவர் அசாத் ரவுப்பின் நடவடிக்கைகளை கண்காணித்து, அது குறித்து மும்பை போலிசார் விசாரித்து வருவதாக வெளியான தகவலை தொடர்ந்து, அவரது நலனுக்காகவும், கிரிக்கெட் விளையாட்டின் நலனுக்காகவும், சம்பியன்ஸ் தொடரிலிருந்து அவரை நீக்குவது என தீர்மானித்தோம் எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த ஆண்டில் மும்பை மொடல் அழகி லீனா கபூருடன் அசாத் ரவுப் பாலியல் தொடர்பு குறித்த சர்ச்சையில் சிக்கியமை  குறிப்பிடத்தக்கது.

By : AM. Rizath/Metronews

Saturday, October 20, 2012

World Eleven vs Pakistan XI - Live Stream

World Eleven மற்றும் Pakistan XI அணிகளுக்கிடையேயான இருபதுக்கு இருபது போட்டியின் நேரலையை வொண்டர்ஸினூடாக கண்டு மகிழுங்கள்...






World Eleven vs Pakistan XI Live stream 

Sunday, October 14, 2012

Champion League T20 - Live Stream


20 மடங்கு சுவாரஸ்யமிக்க சம்பியன்ஸ் லீக் போட்டிகளை வொண்டர்ஸில் 20 மடங்கு உற்சாகத்துடன் கண்டு மகிழுங்கள்...

துல்லியமாகவும் அதேசமயம் தடைகள் குறைந்த நேரலையை இந்த Live stream ஊடாக காணலாம். ஆரம்பமாவதற்கு மட்டும் 30செக். வரை தாமதமாகலாம் எனவே பொறுமையுடன் செயற்படவும்.

Enjoy the Champion League T20 matches with Wonder

Action Begins now!

Wednesday, October 3, 2012

இந்திய அணி மீது கொலைவெறி தாக்குதல்!

நடைபெற்றுவரும் 4ஆவது இருபதுக்கு 20 உலக்கிண்ணப் போட்டிகளின் சுப்பர் 8 போட்டிகளுடன் நேற்றுமுன்தினம் தொடரிலிருந்து வெளியேறியது இந்திய அணி.

இதனையடுத்து ரசிகர்கள் ஆத்திரமடைந்து இந்திய அணி வீரர்கள் மீது ரசிகர்கள் தாக்குதல் நடத்துவர் என ஏற்கனவே பரவலாக பேச்சுக்கள் வெளியாயின இருப்பினும் இம்முறை ரசிகர்கள் தங்களை மறந்து உணர்ச்சிவசப்பட்டு வீரர்களின் வீடுகளை தாக்கவோ வீரர்களை தாக்வோ இதுவரையில் முற்படவில்லை என்பதால் சாதரண கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இதனை வரவேற்றதோடு மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

ஆனால் எதிர்பாராத விதமாக இம்முறை புதிய முறையில் இந்திய அணிக்கு எதிரான தாக்குதல்களை கொலைவெறியாக ஆரம்பித்துள்ளனர் இந்திய அணி ரசிகர்கள் அல்லது ரசிகர்கள் போலி என்பது மட்டும் நிதர்சனம்.

காரணம் கடந்த 2 நாட்களாக சமூகவலைத்தளங்களில் இந்திய அணியின் ரசிகர்கள் மற்றும் தற்போது இந்திய அணியை எதிர்ப்பதற்காகவே இருக்கும் ரசிகர்கள் கூட்டம் என அனைவரும் இந்திய அணி வீரர்களை கிழி கிழி எனக் கிழித்துவருவதை நாம் காணலாம்.

குறிப்பாக இம்முறை இந்திய அணி விளையாடிய போட்டிகளில் இந்திய அணியை எதிர்த்தாடிய அணிகளுக்கே மைதானத்தில் ஆதரவு அதிகமாக இருந்தது உண்மையில் இவர்கள் ஏனைய அணிகளுக்கு ஆதரவு என்ற போர்வையில் உருவான இந்திய அணிக்கு எதிரான ஆதரவாளர்களே என்பதை இப்போது உணர்த்துகின்றது சமூகவலைத்தளங்கள்.

என்றுமில்லாவது இம்முறை இந்திய அணியை கேலி செய்து படங்கள் மற்றும் வசனங்கள் என வசைபாடுகின்றனர். இதில் ஆச்சரியம் இந்திய அணியின் ரசிகர்கள் கூட இதில் களமிறங்கியதுதான்.

ஒரு முறை கிண்ணத்தை கைப்பற்றலாம் ஒவ்வொரு முறையும் நடக்கிற காரியமா இதெல்லாம்... என்ன கொடுமை சார்! 

இனி என்ன செத்தாண்டா சேகர் என்ற பாணியில் ரசிகர்கள் வெறி ஆட்டத்தை சொல்லும் போதே கண்ணக்கட்டுதே செப்பா... அப்படின்னா பார்க்க உங்களுக்கு எப்படி கண்ணக்கட்டும்... 

அந்த கண்ணைக்கட்டும் கொலைவெறித் தாக்குதல்கள் இதோ...




   












Monday, September 24, 2012

சுயசரிதை ௭ழுதுகிறார் யுவராஜ்!


இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் யுவராஜ்சிங் தனது தந்தை மற்றும் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்த புத்தகம் ஒன்றை ௭ழுதுகிறார்.

இது குறித்து அவரது தந்தையும் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய நடிகருமான யோகராஜ் சிங் கருத்து தெரிவிக்கையில், யுவராஜ் சிங் ௭ன்னைப் பற்றி புத்தகம் ௭ழுதுகிறார். அத ற் கு "அரோகன்ட் மாஸ்டர்" ௭ன்று பெயரிட்டுள்ளார்.

நாங் க ள் இருவரும் ஒன்றாக வசித்த காலத்தில் நடந்த சம் பவ ங்க ள் உள் ளிட்டவற்றைப் பற்றிய விடயங்கள் இதில் இட ம் பெ று கி ன் றன. இதேபோல் அவர் கிரிக்கெட் வீரர் ஆனது அத்துட ன் புற் றுநோயுடன் போராடியது பின் அதிலிருந்து மீண்டு வந் தது உள் ளிட்ட விடயங்க ளு ம் இந்த புத்தகத்தில் இடம்பெறும் ௭ன் றார்.


புத்தகத்திற்கு “அரோகன்ட் மாஸ்டர்" என்று பெயர் வைக்கப்பட்டிருப்பது குறித்து கேள்வியெழுப்பியபோது,

“யுவராஜ் சிறுவனாக இருந்தபோது ஸ்கேட்டிங் மீது ஆர்வமாக இருந்தார். டென்னிஸ் விளையாடவும் விரும்பினார். அவர், கிரிக்கெட் வீரராக வர வேண்டும் என்று நான் விரும்பினேன். கிரிக்கெட்டுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டே அவரை கிரிக்கெட் விளையாட வைத்தேன். அதனாலேயே அவர் “அரோகன்ட் மாஸ்டர்’ என்று புத்தகத்துக்கு பெயரிட்டுள்ளார்.

யுவராஜ் சிங், விரைவில் தொலைக்காட்சியிலும் தோன்றுகிறார். அப்போது புற்றுநோயுடன் போராடிய தனது அனுபவத்தை அவர் பகிர்ந்து கொள்வார். புற்றுநோய் அவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் புனிதமான மனிதராக இருக்க வேண்டும். அதிகாலையில் எழுந்து கடவுளை பிரார்த்திக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். புற்றுநோய்க்குப் பிறகு முதிர்ச்சியடைந்த மனிதனாக மாறியுள்ளார். மிகவும் அமைதியாக இருக்கிறார். அவருடைய ஒட்டுமொத்த குணமும் மாறிவிட்டது. அவருக்கு ஆதரவாக இருந்த கடவுளுக்கும், லட்சக்கணக்கான மக்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன்’ என்றார்.

யுவராஜின் தந்தை யோகராஜும் “மை லாஸ்ட் டேய்ஸ்" என்ற பெயரில் புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறார். கடும் போராட்டத்துக்குப் பிறகு புற்றுநோயிலிருந்து மீண்ட யுவராஜ் சிங், இப்போது இலங்கையில் நடைபெற்று வரும் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

-நன்றி இணையம்

Wednesday, September 19, 2012

T20 Live Stream

எந்தவொரு தடையும் இன்றி விளம்பரங்களின் தொல்லைகள் குறைந்த 20-20 உலகக்கிண்ண போட்டிகளை Wonders இல் கண்டு மகிழுங்கள்.

Enjoy the T20 World Cup matches with Wonder

Action Begins now!

ஆரம்பிப்பதற்கு சற்று தாமதமானாலும் துல்லியமான காட்யினை இதில் காணமுடியும் எனவே நேரலை ஆரம்பமாகும் போது பொறுமையுடன் செயற்படவும்