Total Pageviews

Tuesday, April 9, 2013

வீடற்றவருக்கு லொத்தரில் 50 ஆயிரம் அமெரிக்க டொலர் பரிசு : தொடர்ந்தும் கூடாரத்திலேயே வசிக்க முடிவு

அமெரிக்காவில் சேர்ந்த வீடற்ற நபரொருவருக்கு லொத்தரில் 50 ஆயிரம் அமெரிக்க டொலர் பரிசினை வெற்றிபெற்றுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, அமெரிக்காவின் இந்தியான மாநிலத்தில் இல்லினோய்ஸ் எனுமிடத்தில் 1978ஆம் ஆண்டு முதல் வசித்து வரும் டென்னிஸ் மகுரும் என்பவரே குறித்த பரிசுத் தொiகையை லொத்தரில் வெற்றி பெற்றுள்ளார்.

இவருக்கு சொந்த வீடு கூட இல்லை. மரத்தினாலான சிறிய கூடாரத்தில் வசிக்கின்றார். தற்போது 58 வயதாகும் டென்னிஸுக்கு கூடாரத்திலிருந்து வெளியேறும் எண்ணமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், எனக்கு இவ்வளவு பெரிய பணத்தொகை விழும் அதிர்ஷ்டம் இருக்கும் என நான் நம்பவில்லை. இந்த டிக்கெட்டினை கடந்த வாரம் எரிபொருள் நிலையத்திற்கு அருகில் வாங்கினேன்.

பின்னர் தான் வசிக்கும் கூடாரத்தில் இருந்து சுரண்டினேன். சுரண்டும் போது எனக்கு பரிசு கிடைத்திருப்பதை உணர்ந்தேன். ஆனால் இவ்வளவு பெரிய தொகையாக இருக்கும் என நான் நினைக்கவில்லை.

இது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும் பணம் கிடைத்து விட்டதால் எனது கூடாரத்திலிருந்து வெளியேறும் எண்ணமில்லை. சில வசதிகளை எனது கூடாரத்தில் ஏற்படுத்தவுள்ளேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

AM.Rizath/Metronews