Total Pageviews

Tuesday, April 30, 2013

செவ்வாய் கிரகத்தில் இலவசமாக குடியேற 20 ஆயிரம் விண்ணப்பங்கள்


இலாப நோக்கமற்ற டச்சு நிறுவனமொன்று செவ்வாய்க்கு மனிதர்களை இலவசமாக அனுப்பி அங்கு நிரந்தரமாக குடியேற்றும்  திட்டத்திற்கான விண்ணப்பங்களை கடந்த 4 நாட்களாக ஏற்க ஆரம்பித்துள்ளது.

'Mars One' என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டதிற்கு உலகம் முழுவதிலிருந்து இதுவரையில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இதில் ஆச்சரியம் என்னவெனில் அதிகளில் சீனாவிலிருந்தே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 18 - 30 வயதிற்கிடைப்பட்டவர்களே அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இலவசமாக ஒரு வழி டிக்கெட்டினை செவ்வாய் கிரகத்திற்கு வழங்குவதற்காக தெரிவு செய்யப்படும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க மட்டும் கட்டணம் அறவிடப்படுகின்றது. விண்ணப்பிக்கும் நாட்டினைப் பொறுத்து விண்ணப்ப கட்டணம் 7-25 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக தவல்களை http://applicants.mars-one.com/ என்ற இணையத்தளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.

விண்ணப்ப முடிவுத் திகதி குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. மேலும் இதுவரையில் இலங்கையிலிருந்து எவரும் விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.