Total Pageviews

Monday, April 8, 2013

சுறாக்கள் நிறைந்த ஆபத்தான கடலை ஹீலியம் பலூனில் கடந்த நபர் : மண்டேலா சிறுவர் வைத்தியசாலைக்கு நிதி சேகரிக்கும் திட்டம்


தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நபரொருவர் நெல்சன் மண்டேலா 18 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த தீவிலுள்ள சுறா நிறைந்த கடலின் சுமார் 4 மைல் தூரத்தினை ஹீலியம் பலூலின் பறந்து சாதனை படைத்துள்ளார்.


மெட் சில்வர் வல்லன்ஸ் என்ற 37 வயதான தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நபரொருவரே ஆபத்து நிறைந்த இப்பயணத்தை மேற்கொண்டு சாதித்துள்ளார். இச்சாதனைப் பயணத்தின் மூலம் கிடைக்கும் பணத்தினை நெல்சன் மண்டேலா சிறுவர் வைத்தியசாலை வளர்ச்சிக்கு வழங்குதனை நோக்கமாகக் கொண்டே வல்லன்ஸ் செயற்பட்டுள்ளார்.


இந்தச் சாதனை மூலம் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட முடியும் என வல்லன்ஸ் எதிர்பார்த்துள்ளார்.


ஹீலியம் நிரப்பட்ட 160 பலூன்களை மட்டுமே பயன்படுத்தி 3.7 மைல் தூரத்தினை ஒரு மணி நேரத்தில் கடந்துள்ளார் வல்லன்ஸ்.


வல்லன்ஸ் கடந்த கடற் பகுதியான ரொப்பன் தீவிலேயே முன்னாள் தென்னாபிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலா 18 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளார். மண்டேலா மொத்தமாக 27 வருடங்களை சிறையிலேயே கழித்தார்.


தற்போது 94 வயதாகும் மண்டேலா கடந்த சனிக்கிழமை வைத்தியசாலையிருந்து வீடு திரும்பினார். அன்றைய தினமே இம்முயற்சியை மேற்கொண்டார் வல்லன்ஸ்.


இது குறித்து வல்லன்ஸ் கூறுகையில், நெல்சன் மண்டேலா எதிர்கொண்ட ஆபத்துடன் நான் செய்தது ஒன்றும் பெரிய விடயமல்ல. ஆனால் இன்னுமொரு நிச்சயமாக இப்பயணத்தை மேற்கொள்ள மாட்டேன். கடல் மட்டத்திலிருந்து 1000 அடிகள் உயரம் வரை பறந்தேன். இதுவொரு ஆபத்துமிக்க பயணம் எனத் தெரிவித்துள்ளார்.


AM.Rizath/Metronews