Folder, Lock, Advanced File Lock, dirLock, Folder Security Personal, Folder Latch, Folder Guard, Folder Access Pro, Lock and Hide Folder என கோப்புக்களை (Folders) குறிச்சொல் (Password) மூலம் பாதுகாப்பதற்கு ஏராளமான மென்பொருட்கள் (Software) இருந்த போதிலும் அவற்றை உங்களது கணனியில் நிறுவியே (Install செய்தே) பயன்படுத்த முடியும். இதனால் நீங்கள் கோப்புக்களை மறைத்து வைத்திருப்பதை நிறுவப்பட்டுள்ள மென்பொருள் காட்டிக்கொடுத்துவிடும். எனவே வேறு ஒரு பயனர் அந்த மென்பொருளின் குறிச்சொல்லினை (Password) கேட்கையில் சங்கடங்கள் ஏற்படுகின்ற வாய்ப்புக்கள் அதிகம்.
ஆனால் Software இல்லாமல் பயன்படுத்தும் இம்முறையில் இவ்வாறான சங்கடங்களை தவிர்த்துக்கொள்ளலாம் (அத நாங்க பார்த்துக்கிறம் மேட்டருக்கு வாடி... என்று முணுமுணுக்காதிங்க மேட்டருக்கு வந்துட்டன்). அதாவது ஒரு .bat உருவாக்குவதன் மூலம் இலகுவாக கோப்பு ஒன்றுக்கு குறிச்சொல்லினை ஏற்படுத்த முடியும். அது எவ்வாறெனில்,
கீழே உள்ள இந்த html CodeஇனைCopy செய்து Note Padஇல் Paste செய்து கொள்ளுங்கள்
html Code :
cls
@echo off
title Folder Locker
IF EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" GOTO UNLOCK
IF NOT EXIST Locker GOTO MDLOCKER
echo Folder Created.
:CONFIRM
echo Are you sure you want to lock the folder? (Y/N)
set/p "cho="
IF %cho%==Y GOTO LOCK
IF %cho%==y GOTO LOCK
IF %cho%==N GOTO END
IF %cho%==n GOTO END
echo Invalid Choice.
GOTO CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder Locked.
GOTO END
:UNLOCK
echo Enter password to unlock the Folder :
set/p "pass="
IF NOT %pass% == YourPasswordHere GOTO FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" LOCK
echo Folder Unlocked Successfully.
GOTO END
:FAIL
echo Invalid Password!
GOTO END
:MDLOCKER
md Locker
echo Folder created.
GOTO END
:END
PAUSE
பின்னர் இதில்YourPasswordHere (பார்க்க, படம் - 1) என்பதை உங்களுடைய Password (Eg : 1234) ஆக மாற்றிக்கொண்டு இதனை .bat என்ற பெயரில் (File name - .bat) Save as (பார்க்க, படம் - 2) முறையில் உங்களுக்கு தேவையான இடத்தில் (Local Disk (C:, D: ) / Desktop / My document ) செய்துகொள்ளுங்கள்.
படம் - 1 |
படம் - 2 |
படம் - 3 |
படம் - 4 |
படம் - 5 |
குறிப்பு : .bat Fileஇனை அழித்து விட்டாலும் ஏற்கனவே நீங்கள் பயன்படுத்திய Passwordஇனை கொடுத்து மீண்டும் .bat Fileஇனை உருவாக்கி உங்களது மறைக்கப்பட்ட Fileகளை பெற்றுக்கொள்ளலாம்.