ஏனெனில் இணையப் பாவனை என்பது அந்தளவிற்கு எம்மிடையே பரந்துகிடக்கின்றது (என்ன பண்ண பேஸ்புக்கும் கூகுளும்தான் இணையம் என்கிற ஒரு கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது). இதனால் ஏராளமான நன்மைகளும் கூடவே சில தீமைகளும் வளர்ந்துகொண்டே இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனாலும்; முடிந்தவரை நன்மைகளைப் பெற நாம் முயற்சிப்போம்.
வளர்ந்து நிற்கும் இணையத்தினால் இன்று தமிழ் இணையத்தளங்கள் மற்றும் ப்ளொக்கர்கள் அதிகரித்துள்ளமை வரவேற்கத்தக்கவைதான். ஆனால் இந்த வளர்ச்சியானது தேவையான விடயங்களில் கிளர்ச்சியை ஏற்படுத்தினால் பரவாயில்லை அதற்குப் பதில் சில பல விடயங்களின் வீழ்ச்சிக்கு காரணமாவதே வருத்தம்.

அந்த வகையில் இந்த வருடமும் கடந்த வருடமும் அதிகளவிலான தமிழ் திரைப்படங்கள் தோல்வியடைய இணையத்துடன் சேர்ந்து ஈயடிக்கும் தொழில்நுட்பம் வளர்ந்ததும் ஒரு காரணம். (தமிழ் பட நாயகர்கள் மற்றும் இயக்குனர்களிடையேயும் இந்த தொழில்நுட்பம் ரொம்பவே அதிகம்தான்)
உண்மையில் ஓரளவு நல்ல படங்களையும் சிறந்த மொக்கை படங்களாக்கிய பெருமை பரந்தளவில் வெளியாகும் ஈயடிக்கும் விமர்சனங்களுடன குறித்த நடிகர்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுமே.
அஜித், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், கார்த்தி போன்ற முன்னணி நாயகர்களுக்கு எதிராகவும் அவர்களின் படங்களுக்கு எதிராகவும் குறி வைத்து பேஸ்புக்கில் ஆரம்பிக்கப்படுகின்ற குரூப்கள் அனைத்தும் ஒரு படத்தினை சாதாரணமாக திரையரங்கு களிலிருந்து விரைவில் வெளியேற்றுவதற்கு காரணமாகின்றது.

உண்மையில் பாட்ஷா படமும் தோல்வியை சந்தித்திருக்கும், அப்போது இணையம் இருந்திருந்தால் ஏனெனில் பாட்ஷா படத்திற்கு ஏராளமான பத்திரிகைகள் எதிர்மறை விமர்சனங்களை அள்ளி வீசியது பலருக்கும் நினைவிருக்கும் (தெரியாதவங்க கேட்டு தெரிஞ்சிக்கங்க). ஆனாலும் பாட்ஷா மெகா ஹிட்.
ஆனால் அன்று இணையம் வளர்ந்திருந்தால் ஈயடிக்கும் வல்லமை படைத்தவர்களும் ரஜினி ஹேட்டர்ஸ்ஸும் இணைந்து படத்தை துவம்சம் செய்திருக்கலாம் (பாபாவுக்கு நடந்த மாதிரி... ஆமா... பாபா நல்ல படமா? கெட்ட படமா?). ஏனெனில் நடிகர்களின் ஹேட்டர்ஸ் மற்றும் ஈயடிப்பவர்களை தாண்டி மக்களை திரையரங்குக்கு வரவழைப்பது அத்தனை கடினமான காரியம்.
இருப்பினும் சில மொக்கை படங்கள் விமர்சனங்களால் ஓரளவு தப்பித்தும் இருக்கிறது (இதுக்கு உதாரணம் வேணாமே... சிலர் மனம் வருத்தப்படும்).
அதேவேளை சில சமயங்களில் இத்தனை தடைகளையும் தாண்டி சில படங்கள் வெற்றிபெற்றுள்ளது. உதாரணமாக எதிர்மறையான பல விமர்சனங்களை கடந்து பில்லா ஒன்று, எஸ்.எம்.எஸ் போல வெகு சில படங்களே வெற்றி பெற்றுள்ளது. இந்த வரிசை தொடர வேண்டும் அவை நல்ல படங்களாக இருந்தால்.
அந்த வகையில் விரைவில் வெளியாவுள்ள துப்பாக்கி படத்திற்கும் விஜய்க்கும் எதிராக இன்று பேஸ்புக்கில் வேலைகள் ஆரம்பமாகிவிட்டது (இதெல்லாம் விஜய்க்கு புதுசா... ஏன்னா பேஸ்புக்கில் அதிகமா கலாய்க்கப்படுற நடிகர் இவர்தான் இத நான் சொல்லல்ல போய் பாருங்க). எனவே துப்பாக்கி ஒரு நல்ல படமாக இருந்தால் அதற்கெதிரான வேலைகள் அத்தனையும் ஏற்றுக்கொள்ள முடியாதவையே!. (விஜய்க்கிட்ட இருந்து நல்ல படமா? நடக்காதே... இப்படியெல்லாம் சொல்லப்படாது)

ஏற்கனவே பாடல்கள், போஸ்டர் மற்றும் ட்ரெய்லரை தாரளமாக கிண்டல் செய்து எதிர்மறை எண்ணத்தையும் தோற்றுவித்துவிட்டனர். மேலும் படம் வெளியானதும் முதலாவது விமர்சனத்தை ஈயடிக்கவும் இணையத்தளங்கள் தயார். அந்த விமர்சனம் எதிர்மறை எனில் செத்தாண்டா சேகர் நிலைமைதான் துப்பாக்கி படத்திற்கும்.
எனவே ஈயடிக்கும் இணையத்தளங்கள் இனிமேலாவது வருகின்ற படங்கள் மீது கொஞ்சம் கருணை காட்டுங்க சாமி மேலும் ஈயடிக்கும் தொழில்நுட்பத்தை குறைக்க முயற்சி எடுங்க.
இப்போ தெரியுதா துப்பாக்கி எப்படி தோல்வியடைப்போகுதுன்னு... அப்ப பார்த்து சூதானமா நடந்துக்குறீங்களாண்ணா... கொஞ்சோண்ணு ஸ்லிப்பாச்சு சாங்குதாண்டியோவ்!!!