செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் வாழ ஏதுவான சூழல் இருப்பதாக விஞ்ஞானிகளிடத்தில் நம்பிக்கைகள் அதிகரித்துவருகின்றது. இதனால் செவ்வாய் கிரகத்தின் மீதான ஆராய்ச்சிகளும் பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையின் விண்வெளி ஆராய்ச்சியின் முன்னோடியான ரஷ்யாவும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக ரஷ்ய விஞ்ஞானிகள் எலி, பல்லி மற்றும் உள்ளிட்ட உயிரனங்களை 'பயோன்-எம்' என்ற விண்கலத்தினை விண்வெளிக்கு அனுப்பினர்.
இதன் மூலம் புவி ஈர்ப்பு இல்லாத விண்வெளியில் உயிரினங்களின் இதயம், நரம்பு, தசை போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிய ரஷ்ய விஞ்ஞானிகள் முற்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் விண்வெளிக்கும் அனுப்பட்ட 45 எலிகள் மற்றும் 15 பல்லிகள் உள்ளிட்ட மேலும் சில உயிரினங்கள் நேற்று தரையிறக்கப்பட்டது. இதேவேளை திரும்பு வந்த உயிரினங்களில் எவ்வகையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அவற்றில் எத்தனை உயிருடன் உள்ளது என்பது தொடர்பில் தகவல்கள் எதனையும் விஞ்ஞானிகள் வெளியிடவில்லை.
AM. Rizath/Metronews