Total Pageviews

Friday, May 24, 2013

விண்வெளி குப்பைகளுடன் ஈக்குவடோர் செய்மதி மோதியது

ஈக்குவடோர் நாட்டின் ஒரேயொரு செய்மதியான 'பேகஸோ' விண்வெளிக் குப்பைகளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதையடுத்து அச்செய்மதியிருந்து மீண்டும் சமிக்ஞைகள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கான தீவிர முயற்சிகளில் ஈக்குவடோர் விண்வெளி முகவரகம் ஈடுபட்டுள்ளது.

இச்செய்மதி ஒரு மாதத்துக்கு முன்னர் சீனாவின் ஜியுகுவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து விண்வெளிக்கு ஏவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அச்செய்மதி நேற்று விண்வெளி சிதைவுடன் மோதியுள்ளது. பூமியிலிருந்து 650 கி.மீ. உயரத்தில் இச்செய்மதி பூமியை வலம்வந்துகொண்டிருந்தது.

1985ஆம் ஆண்டு சோவியத் யூனியனால் ஏவப்பட்ட ரொக்கெட் ஒன்றின் சிதைவுகளுடன் ஈக்குவடோரின் செய்மதி மோதியுள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அச்செய்மதியிலிருந்து மீண்டும் சமிக்ஞைகளை பெற முடியுமா என்பதை 3 அல்லது 4 நாட்களின் பின்னரேஅறிய முடியும் என ஈக்குவடோர் விண்வெளி முகவரகத்தின் தலைவரான ரொனி நாடர் தெரிவித்துள்ளார்.