செல்லிடத் தொலைபேசி பற்றரிகளை 20 விநாடிகளுக்குள் சார்ஜ் செய்யக்கூடிய கருவியொன்றை 18 வயதான யுவதியொருவர் கண்டுபிடித்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசிக்கும் இஷா குராய் எனும் யுவதியே இக்கருவியை கண்டுபிடித்துள்ளார்.
இக்கருவிக்கு சுப்பர் கெப்பாசிட்டர் (Super Capacitor) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
செல்லிடத் தொலைபேசி பற்றரியை சார்ஜ் செய்வதற்காக மணித்தியாலக் கணக்காக காத்திருக்கும் நிலையை மாற்றக்கூடிய புரட்சிகரமான கண்டுபிடிப்பு இது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இக்கருவியை கண்டுபிடித்தமைக்காக இன்டெல் சர்வதேச விஞ்ஞான மற்றும் பொறியியல் கண்காட்சியின்போது இஷாவுக்கு இன்டெல் இளம் விஞ்ஞானிக்கான விருதும் 50 ஆயிரம் டொலர் பணப் பரிசும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதைக் கண்டுபிடிப்பதற்கு உநது சக்தியாக இருந்தது எதுவென தொலைக்காட்சி செவ்வியொன்றின்போது இஷாவிடம் வினவப்பட்டது. எனது செல்லிடத் தொலைபேசி பற்றரி எப்போதும் சார்ஜ் இறங்கியிருப்பதே எனக்கு இக்கண்டுபிடிப்புக்கான சிந்தனையைத் தூண்டியது என அவர் பதிலளித்தார்.
எதிர்காலத்தில் கார்களுக்கான பற்றரிகளையும் விரைவாக சார்ஜ் செய்வதற்கு தனது கண்டுபிடிப்பு வழிவகுக்கும் என இஷா கருதுகிறார்.
By : Metronews
Monday, May 20, 2013
20 விநாடிகளுக்குள் தொலைபேசி பற்றரியை சார்ஜ் செய்யும் கருவி : 18 வயதான யுவதியின் கண்டுபிடிப்பு
10:09:00 PM
America, Inventor, Phone, Smart Phone, Super Capacitor, Technology