Total Pageviews

Monday, September 17, 2012

கெமரா வாங்கப்போகிறீர்களா? அப்படியானால் வாங்க கெமரா பார்க்கலாம்...


கால மாற்றத்தை எத்தனை கண்ணாடிகள் காட்டினாலும் கெமரா எனும் கண்ணாடி காட்டும் விம்பத்திற்கு உள்ள பெறுமதி வார்த்தைகளில் அடங்காதவை. என்றாலும் அத்தனை பெறுமதிமிக்க விம்பங்களைத் தரும் கெமரா பற்றி நம்மில் பலரும் அறிந்திருப்பதில்லை.

நாம் காணும் காட்சிகள் அனைத்தையும் கண்கள் மூளைக்கு காட்டினாலும் அவை அனைத்தையும் எம்மால் நியாபகம் வைத்திருக்க முடிவதில்லை. இதற்கு சரியான தீர்வினை புகைப்படங்களாக எம்மிடத்தில் சேர்க்க உதவும் கருவியே கெமரா.

எம் வாழ்வின் ஒவ்வொரு கால கட்டத்தின் போதும் கண்ட காட்சிகளையும் கொண்ட கோலங்களையும் பாதுகாக்க நாம் பயன்படுத்தும் கெமரா, இன்று தொழில்நுட்ப வளர்ச்சியினால் அனைவரினாலும் வெகுஇலகுவாக கையாளக்கூடிய வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனாலோ என்னவோ தற்போது புகைப்படங்களில் நாட்டம் காட்டாதவர்கள் மிக மிக குறைவானவர்களே எனலாம். அதிலும் குறிப்பாக இளம் தiமுறையினர் பலருக்கும் புகைப்படங்களில் அலாதி பிரியம் உண்டு. இதனால் இன்றைய தலைமுறையினர் டிஜிடெல் கெமராக்களில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.

இப்போது புகைப்படங்கள் எடுக்க பல சாதனங்கள் எம் கைவசம் இருந்தாலும் அவை ஒருபோதும் கெமராக்களுக்கு ஈடாவதில்லை என்பது மறுப்பதற்கில்லை. எனவே நாமும் கெமராக்கள் பற்றி அறிந்திருப்பது சிறப்பானதாக அமையும்.

நம் மனங்களை கொள்ளை கொள்ளும் டிஜிடெல் கெமராக்கள்; பல இன்று சந்தையில் கிடைக்கின்றது. அவற்றில் குறிப்பிடத்தக்க படைப்புக்களில் சில...

நிக்கொன் கெமராக்கள் (Nikon Cameras)
01.கெமரா உற்பத்தியில் முன்னனி நிறுவனமான நிக்கொன்னின் எஸ் (S) வரிசை டிஜிடெல் கெமராக்களில் 3 மாதிரிகளான கூல்பிக்ஸ் எஸ்70, கூல்பிக்ஸ் எஸ்570 மற்றும் கூல்பிக்ஸ் எஸ்640 (Coolpix S70, S570, S640) ஆகியவற்றின் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம். இம் மாதிரிகள் நியாயமான விலைகளில் கிடைக்கக்கூடிய டிஜிடெல் கெமராக்கள் (Digital Cameras).

நிக்கொன் கூல்பிக்ஸ் எஸ்70 (Coolpix S70) : எஸ்60 மாதிரியை ஒத்ததாக இருந்தபோதிலும் இதில் அகலமான ஒ.எல்.ஈ.டி தொடு சட்டம் (OLED Touch Panel) உள்ளது முக்கிய அம்சமாகும். மேலும் எஸ்60 மாதிரியைப் போன்று இதன் பின்புறம் பொத்தான்கள் இல்லை.

தொடுகையினால் இயக்கக்கூடிய இம் மாதிரி 10.0 முதல் 12.1 மெகா பிக்சல்கள் ரெசலுசன் (12.1 MP Resolution) மற்றும் 4000X3000 பிக்கஸல் அளவு வரையான படங்களை துல்லியமாக எடுக்க முடியும். மேலும் 20 எம்பி உள்ளக மெமரி (20 MP internal memory), வேகமான ஸட்டர் அமைப்பு, 5 வழி வி.ஆர் இமேஜ் ஸ்டெபிலைசேசன் (5X Zoom), உயர் வேக யூ.எஸ்.பி மற்றும் நீண்ட நேர பாவனை மின்கலம் (சுமார் 200 படங்கள் வரையில்) போன்ற மேலும் பல வசதிகளை கொண்டுள்ளது.

நிக்கொன் கூல்பிக்ஸ் எஸ்640 (Nikon Coolpix S640) : இது தரமான செயல் திறனை வழங்குகிறது. இந்த கெமரா 0.7 வினாடிகளில் இயங்கக்கூடியது. மேலும் இது இலகுவில் கையாளக்கூடிய வகையில் அமைந்துள்ள ஒரு எடை குறைந்த கெமரா ஆகும்.

இதில் 12.2 மெகா பிக்சல் கொண்ட சிசிடி சென்சர் மற்றும் நிக்கர் லென்ஸ் போன்ற வசதிகளும் உள்ளன. மேலும் இந்த கேமரா ஆப்டிக்கல் ஸ்டெபிலைசேசனோடு 4 விஆர் இமேஜையும் வழங்குகிறது. இதில் தன்னியக்க போக்கஸ் வசதி, திரைப்படங்களை மிக நன்றாக பதிவு செய்யும் ஆற்றல், 45எம்பி உள்ளக நினைவகம், அதிர்வை குறைக்கும் தொழில்நுட்பம், உயர் வேக யூ.எஸ்.பி மற்றும் நீண்ட நேர பாவனைக்குரிய மின்கலம் (சுமார் 300 படங்கள் வரையில்)

நிக்கொன் கூல்பிக்ஸ் எஸ்570 (Nikon Coolpix S570) : இது 12.0 மெகா பிக்சலைக் (12 Mega pixel) கொண்டுள்ளது. இதன் திரையானது 2.7 இன்ச் அளவில் உள்ளது. மேலும் இந்த கெமராவில் டாட் எல்சிடி மற்றும் 5எக்ஸ் நிக்கர் லென்சும் உள்ளது (dot led and nikkor lenses).

இது ஐ.எஸ்.ஒ 3200 உணர்திறனைக் கொண்டுள்ளது. மேலும் இதில் 4 வழி வி.ஆர் இமேஜ் ஸ்டெபிலைசேசன் (5X VR image stabilization) மற்றும் 640X480 பிக்ஸல் வீடியோ (640X480 pixel Video) பதிவு மற்றும் 4000X3000 பிக்கஸல் அளவு வரையான படங்களையும் துல்லியமாக எடுக்க முடியும்.

02. நிக்கொன் 1 (Nikon 1) என்ற வரிசை கெமராக்கள் கண்ணாடி இல்லாத வசதியையும் அதே நேரத்தில் லென்ஸ்களை மாற்றிக் கொள்ளும் வசதியும் கொண்டுள்ளன. இந்த கெமராக்கள் டி.எஸ்.எல்.ஆர் கெமராக்களை விட மிக அடக்கமானதாகும். மேலும் இவை உயர்ரக விலை கூடிய கெமராக்கள்.

நிக்கன் வி1 (Nikon V1) : இதன் லென்ஸ் மிக உயர் தரத்தில் அமைந்துள்ளது. அதேபோல ஒரு புதுமையான சிஎக்ஸ் வடிவ சென்சரையும் இந்த கெமராக்கள் கொண்டுள்ளது.

இம்மாதிரியில் நிக்கர் லென்ஸ் தொகுதி, உயர் வேகம் கொண்ட தன்னியக்க போக்கஸ் சிஎம்ஒஎஸ் இமேஜிங் உணரி (Sensor) அகலமான ஐஎஸ்ஒ எல்லை, 10.1 மெகா பிக்சல், தூசு தடுக்கும் வசதி, கண் சென்சர், சுயமாக நேரத்தை பதிவு செய்யும் ஆற்றல், வெளிப்படுத்தலை அளவிடும் தொகுதி (exposure metering system)  போன்ற பல வசதிகள் உள்ளன.

மேலும் வினைத்திறனான மின்சக்தி சேமிப்புக்காக இஎன்-இஎல்15 லித்தியம் ஐயன் மின்கலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மின்கலம் 350 படங்கள் வரை எடுக்க வழி செய்கின்றது. இம்மாதிரியின் நிறை 294 கிராம்கள் மட்டுமே.

நிக்கன் ஜே1 (Nikon J1) : இதில்; முழு எச்.டி வீடியோ (Full HD Video) பதிவானது ஒரு நிமிடத்திற்கு 30 சட்டங்களை (Frames) கொண்டுள்ளது. மேலும் இவற்றில் நிக்கன் 1 லென்ஸ் மவுண்ட், 3 இன்ச் எல்சிடி திரை (LCD Screen), எலக்ட்ரானிக் சட்டர் (Electtronic Shutter), பில்ட் இன் ப்ளாஷ் (built in flash), சுயமாக நேரத்தை பதிவு செய்யும் ஆற்றல், உயர்ரக தன்னியக்க போக்கஸ் தொகுதி போன்ற வசதிகளை வழங்குகின்றன.

இவ்வகை கெமராவில் வினைத்திறனான மின்சக்தி பயன்பாட்டிற்கு இஎன்-இஎல்20 லித்தியம் ஐயன் மின்கலம் (Lithium Battery) உள்ளது. இந்த மின்கலம் 230 படங்களை எடுக்க உதவுகின்றது. இம்மாதிரியின் நிறை 234 கிராம்கள் மட்டுமே.

03.நிக்கொன் நிறுவனம் தனது கூல்பிக்ஸ் கெமரா வரிசையில் எல் (L) பிரிவில் ஒரு புதிய மாதிரி கெமராவை அறிமுகப்படுத்தியுள்ளது. கூல்பிக்ஸ் எல்810 என நாமம் கொண்ட இந்த கெமரா ஒரு மேம்படுத்தப்பட்ட சாதனமாக வெளிவந்துள்ளது.

கூல்பிக்ஸ் எல்810 (Cool pix L810) : இது 16.1 மெகா பிக்ஸல் சி.சி.டி இமேஜ் சென்சரைக் கொண்டுள்ளது. மேலும் இதில் 26X ஒப்டிக்கல் பெரிதாக்கும் (26X Zoom) நிக்கர் லென்ஸ் உள்ளது. அதேவேளை இதன் லென்ஸ் அதிர்வவை குறைக்கும் (VR-Vibration Reduction) வசதியையும் கொண்டுள்ளது.

இந்த கெமராவின் அகல எல்லை 22.5 மிமீ முதல் 585 மிமீ ஆகும். கூல்பிக்ஸ் எல்வரிசை கெமராதான் முதன் முதலாக உயர் மின் திறன் கொண்ட உருப்பெரிதாக்கத்தை (Zoom) கொண்டுள்ளது. 3 இன்ச் அளவில் டி.எப்.டி திரை (DFD display) இதில் உண்டு.

இந்த கேமராவின் வடிவமைப்பு சிறப்பாக உள்ளது. மேலும் இந்த கெமரா ஒரு தரம் வாய்ந்த உறுதியான கெமராவகும். விஆர் மற்றும் உறுதியின் காரணமாக அசையாமல் தெளிவான படங்களை எடுக்க முடியும்.

இம்மாதிரி பாவனைக்கு அடக்கமாக இருந்தபோதும் தொழில் ரீதியிலான புகைப்படங்களையும் எடுக்கவல்லது. அத்துடன் இதிலுள்ள தொழில் நுட்பங்களினால் தொலைவிலுள்ளவற்றையும் துல்லியமான படங்களாக எடுக்க முடியும்.

04.வெளிப்புறங்களில் பல்வேறு தட்ட வெப்ப நிலைகளிலும் புகைப்படங்களை எடுக்கவென குறிப்பாக காட்டுவாழ்க்கைப் படம் எடுக்க, பாலைவனம், மலைப் பிரதேசம் மற்றும் பனிப் பிரதேசம் போன்ற இடங்களில் புகைப்படங்கள் எடுக்கவென நிக்கொன் நிறுவனம் விசேட கெமராவினை வெளியிட்டுள்ளது. 

நிக்கொன் ஏ.டபள்யூ 100 (Nikon AW 100) : இதன் மிக விசேட அம்சம் என்னவென்றால் நீரினாலும் இந்த கெமரா பாதிப்படையாது. நீரில் சுமார் 10 மீறறர் ஆழத்திலிருந்தும் துல்லியமான படங்களை பிடிக்கக் கூடியதாக அமைக்கபட்டுள்ளது.  மேலும் இது வன்மையான முறைப் பயன்பாட்டிற்கு மிகவும் உகந்தது.

அதேபோல இந்த மாதிரி கெமரா பெரிய அதிர்ச்சியையும் தாங்கும் திறன் கொண்டது (15மீற்றர் உயரத்திலிருந்து விழுந்தாலும் பாதிப்பு இல்லை). கீழே விழும்போது அவ்வதிர்ச்சியினால் பழுதடைவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவு. வெப்பம், குளிர்(-10டிகிரி வரை தாங்கும்) தாக்கங்களினால் பாதிப்படையாது.

மேலும் வன்மையான பயன்பாட்டுக்கு உகந்தது என்றாலும் புகைப்படங்களின் துல்லியத் தன்மைக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. 16 மெகா பிக்ஸல் சிஎம்ஒஎஸ் சென்சர் (CIOS sensor) உள்ளது. 5 எக்ஸ் பார்வை பெரிதாக்கம் (sX Optical Zoom) மற்றும் 1080p வீடியோ பதிவு வசதியும் உண்டு.

இதன் வடிவமைப்பும் பார்வைக்கு சிறப்பாக உள்ளது. அத்துடன் இதிலுள்ள கட்டுப்பாட்டு பொத்தான்கள் மிக உறுதியானவை. 82எம்பி உள்ள நினைவகத்தினை கொண்டது (82MP internal memory). SD/SDHC/SDXC  போன்ற வகை நினைவகங்களை இதில் இணைத்துப் பயன்படுத்தலாம்.

ஒரு முறை சார்ஜ் செய்கையில் 250 படங்களை எடுக்க முடியும். இதன் 178 கிராம்கள் மட்டுமே எனவே எடுத்துச் செல்வதும் மிகச் சுலபம்.

கெனொன் கெமாராக்கள் (Canon Cameras)
01.கெமரா உற்பத்திகளில் முக்கியமான நிறுவனங்களில் ஒன்று கெனொன். கெமராவினைப் பற்றி அறிந்தவர்கள் பலரும் நிக்கொன் கெமராக்களை போல கெனொன் கெமராக்களையும் நிச்சயம் அறிந்திருப்பார்கள். கெமரா சந்தையில் கெனொன் கெமராக்களுக்கும் தனியான ஒரு எதிர்பார்ப்பு உண்டு. இவ்வாண்டின் ஆரம்பத்திலேயே கெனொன் தனது புதிய நவீன கெமராக்களை களமிறக்கியுள்ளது. இதில் ஐ.எக்ஸ்.யு.எஸ் வரிசையில் ஐ.எக்ஸ்.யு.எஸ் 125 எச்.எஸ் (IXUS 125HS) மற்றும் ஐ.எக்ஸ்.யு.எஸ் 500 எச்.எஸ் (IXUS 500HS) களமிறக்கியுள்ளது.

ஐ.எக்ஸ்.யு.எஸ் 500 எச்.எஸ் (IXUS 500 HS) : இது அல்ரா கொம்பெக் எனும் உடலமைப்பை கொண்டது. 10.1 எம்பி உயர் சென்சிட்டிவிட்டி சி.எம்.ஒ.எஸ் சென்சர், புகைப்படங்கள் 3648X2736 பிக்ஸல் ரெசலுசன்,  வீடியோ 1920X1080 (24fps) பிக்ஸல் அளவு, 28-336 மி.மீ குவியத்தூரம், 12X பார்வை பெரிதாக்கம் (Optical Zoom), தன்னியக்க போக்கஸ், எல்சீடி திரை, ஸ்டீரியோ மைக்ரோ போன் மற்றும் ஸ்பீக்கர் என அனைத்தும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் நிறை 155 கிராம் ஆகும்.

ஐ.எக்ஸ்.யு.எஸ் 125 எச்.எஸ் (IXUS 125 HS) : இது அல்ரா கொம்பெக் எனும் உடலமைப்பை கொண்டது. 16.1 எம்பி உயர் சென்சிட்டிவிட்டி சிஎம்ஒஎஸ் சென்சர், புகைப்படங்கள் 4608X3456 பிக்ஸல் ரெசலுசன்,  வீடியோ 1920X1080 (24fps) பிக்ஸல் அளவு, 24-120 மி.மீ குவியத்தூரம், 5X பார்வை பெரிதாக்கம் (Optical Zoom), தன்னியக்க போக்கஸ், எல்சீடி திரை, மொனோ வடிவ மைக்ரோ போன் மற்றும் ஸ்பீக்கர் என வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு கெமராக்களும் சாதாரணமாக படம் பிடிப்பதற்கும் பெரிதாக்கம் செய்து படம் பிடிப்பதற்கும் மிக ஏதுவானதாக இருக்கும். மேலும் இவற்றில் காணப்படும் இன்டலிஜென்ட் தன்னியக்க முறை (Intelligent Auto Mode) மிகத் தெளிவான படங்களைத் தருகின்றது.

இது முழு எச்டி வீடியோ ரெசலுசனை வழங்குகின்றது. படங்கள் எடுக்கையில் அசைவுகள் ஏற்பாட்டாலும் இன்டலிஜென்ட் ஐஎஸ் மிகத் தெளிவான படங்களை வழங்க உதவுகின்றது.

02.கெனொன் நிறுவனத்தின் மனங்கவரும் பவர் ஷொட் வரிசை கெமராக்களின் மாதிரிகளான பவர் ஷாட் எல்ப் 520 எச்எஸ் மற்றும் பவர் ஷாட் எல்ப் 110 எச்எஸ் கெமராக்கள் தன்னியக்க நிலைபேறுடமை (automated stabilization) கொண்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்டலிஜென்ஸ் ஐஎஸ் என்ற முக்கிய அம்சத்தை கொண்டிருக்கிறது.

பவர் ஷொட் எல்ப் 520 எச்.எஸ் (Powershot elph 520 HS) :  இது பவர் ஷொட் வரிசையில் எல்ப் 500 எச்எஸ் மாதிரிக்கு அடுத்த மாதிரியாக வருகிறது.
இந்த கெமராவில் கெனொன் மைக்ரோ எஸ்டி கார்டுகளை முதல் முறையாகப் பயன்படுத்துகின்றது. இதனால் இம்மாதிரி கெமரா அடக்கமாக உள்ள அதேவேளை அதிகமான படங்களை சேமிக்க கூடியதாக உள்ளது. இந்த கெமரா 0.88 இன்ச் தடிப்பினையே கொண்டுள்ளது.

மேலும் இந்த கெமரா சதுர வடிவாக காணப்படுகிறது. இதில் இல்லுமினேட்டட் சி.எம்.ஒ.எஸ் சென்சர் உள்ளது மேலும் 10 மெகா பிக்ஸலை வழங்கவல்லது. இதனால் உயர் ரெசலுசன் படங்களை எடுக்க முடியும். அத்துடன் இதன் பெரிதாக்கம் 28 மிமீ முதல் 336 மிமீ எல்லையைக் கொண்டு காணப்படுகிறது.

இதன் பின்புறம் 3 இன்ச் எல்சிடி திரையைக் கொண்டுள்ளது. இருப்பினும் இதன் முந்தைய மாதிரியைப் போல இது தொடுதிரையல்ல. இந்த கேமரா 1080பி வீடியோவை பதிவு செய்யும் திறன் கொண்டது. இதன் வேகத்தைப் பார்த்தால் ஒரு வினாடிக்கு 24 பிரேம்களாகும். இத்துடன் சேர்த்துஸ்டீரியோ இசையையும் பதிவு செய்யும் திறன் மற்றும் 58 காட்சி முறைமைகள் என அசத்தலாக உள்ளது.

பவர் ஷொட் எல்ப் 110 எச்எஸ் (Powershot elph 110 HS) : இது 16 மெகா பிக்சல் ரெசலுசனை வழங்கும் அதேவேளை பவர் ஷொட் எல்ப் 520 எச்எஸ் போல இதன் பெரிதாக்கத் திறன் இல்லை. ஆனாலும் இதில் டிஜிக் 5 இமேஜ் ப்ராசஸர் மற்றும் பேஸ் ஐடி வசதியும் காணப்படுகிறது. இந்த கெமரா 5எக்ஸ் சூம் (5X Zoom) மற்றும் 25 காட்சி முறைகைள் உண்டு.

03.கெனொன் நிறுவனத்தின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க படைப்பு பவர் ஷொட் வரிசையைச் சேர்ந்த கெமரா. விடுமுறை கால பயணத்தின் போது உற்ற தோழனாக பயன்படுத்தும் வண்ணம் அமைத்துள்ள இக்கெமரா பார்வைக்கு சிறப்பாகவும் உயர்தர கெமராவாகவும் இருக்கும்.

பவர் ஷொட் எஸ்.எக்ஸ் 260 எச்.எஸ் (Powershot SX 260 HS) : இதில் விசேடமாக எச்டி வீடியோ பதிவு செய்யும் வசதி மற்றும் 20 மடங்கு பெரிதாக்கும் திறன் (20X Zoom) என்பனவற்றுடன் இதில் நவீன டிஜிக் 5 பவர்ட் எச்.எஸ் சிஸ்டம் மற்றும் ஐஎஸ் தொழில் நுட்பம் கொண்டுள்ளதனால் இந்த கெமரா எடுக்கும் படங்கள் மிகத் துல்லியமாக இருக்கும். மேலும் லென்ஸ் 4 ஸ்டாப் இமேஜ் ஸ்டெபிலைசரைக் கொண்டுள்ளது.

இம்மாதிரியின் மற்றுமொரு சிறப்பாக ஜிபிஎஸ் வசதியும் உண்டு இதனால் பயணத்தின் போது உச்ச பயனை இந்த கெமரா மூலம் அனுபவிக்கலாம்.
12.1 மெகா பிக்ஸல் ரெசலுசன் (12 Mega Pixel Resolution), கேமரா 20 மடங்கு பெரிதாக்கும் திறன், 25 முதல் 500 மிமீ நீளம் அளவிற்கு போக்கஸ் செய்யும் ஆற்றல், தன்னியக்க போக்கசில் (Automatic focus) பேஸ் ஐடி (Face ID) மற்றும் கொன்ட்ராஸ்ட் சென்சர் (Contraste) போன்ற வசதிகளும் உண்டு.

மேலும் இதில் எப்3.5 முதல் எப்6.8 வரை அபர்ச்ரைக் (aperture) கொண்டிருக்கிறது. இதன் ஷட்டரின் குறைந்த வேகம் 15 வினாடிகளாகும். அதிகூடுதல் வேகம் 1/3200 வினாடிகள். இந்த மாதிரி கெமராவில் தன்னியக்கம், க்ளவ்டி மற்றும் டேலைட் போன்ற சகல வசதிகளை கொண்டது.

இனி என்ன கெமராவ வாங்குங்க enjoy பண்ணுங்க...

ஏ.எம்.ஆர்