Total Pageviews

Tuesday, September 4, 2012

அன்ரொய்ட் கைபேசிகளை முழுமையாக பெக்கப் (Backup) செய்வது எப்படி?


தற்போது அன்ரொய்ட் தொலைபேசிகளின் பாவனை அதிகரித்துள்ளது. அதில் சேமிக்கப்படும் தகவல்கள் அப்பிளிகேஷன்கள் அதிகரித்துச் செல்லும் போது, ஒரு சந்தர்ப்பத்தில் அன்ரொய்ட் டிவைஸை பெக்கப் (Backup) செய்ய வேண்டிய நிலை உருவாகலாம்.

ஏற்கனவே ரூட்டிங்க் செய்து அல்லது Bootloader Unlock  மூலம் பெக்கப் (Backup) செய்வது அனைவருக்கும் ஏற்ற முறையல்ல. ஏனெனில் சிறிய பிழை ஏற்பட்டால் கூட முழுமையாக டிவஸை ரீஸெட் செய்தே மீண்டும் பயன்படுத்த முடியும்.

இவற்றுக்கெல்லாம் தீர்வாக Gigadroid என்ற பிரபல அன்ரொய்ட் கருத்துக்கள டெவெலப்பர்கள் Ultimate Backup Tool ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

விண்டோஸில் இயங்கும் இந்த டூலைக்கொண்டு அன்ரொய்ட் 4.0 டிவைஸ்களை முழுமையாக பெக்கப் (Backup) செய்து பின்னர் ரீஸ்டார் செய்யவும் முடியும் என்கிறார்கள்.

Galaxy Nexus, Galaxy S II தொலைபேசிகளிலும் பரிசோதனை செய்துள்ளனர்.

Ultimate Backup Tool பின்வரும் முறைகளில் பெக்கப் (Backup) செய்கின்றது.

• Backup all without system apps.
• Backup all with system apps.
• Backup app and device data.
• Backup apps.
• Backup device shared storage/SD card contents.

முழுமையாக பெக்கப் (Backup) செய்ய முன்னர் உங்கள் அன்ரொய்ட் டிவைஸில் Developer option சென்று USB debugging ஐ தெரிவு செய்யுங்கள். அதன் பின்னர் Desktop Backup password optionஇல் பாஸ்வேர்ட் தந்து சேமிக்குமாறு அறிவுறுத்துகின்றனர்.

அவ்வாறு செய்த பின்னர் கணனியில் அன்ரொய்ட் டிவைஸின் யுஎஸ்பியை செருகியதும் கிடைக்கும் ஸ்கீரினில் பெக்கப்பை (Backup) செயற்படுத்த அல்லது நிறுத்துவதற்கு முடிகின்றது.