Total Pageviews

Thursday, September 13, 2012

வெளியானது அப்பிள் ஐ போன் 5 : ஸ்டீவ் ஜொப்ஸின் அருமையை புரிய வைக்கிறதா? (Apple I Phone 5 Release : Will it Challenge?)


தொழில்நுட்ப உலகின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அப்பிள் நிறுவனமானது தனது ஐ போன் வரிசையில் அடுத்த வெளியீடான ஐ போன் 5 இனை நேற்று அறிமுகப்படுத்தியது. சென்பிறான்ச்சில் கோலாகலமா இடம்பெற்ற இந்நிகழ்வினை Wonders நேரடியாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

அப்பிளின் நிறைவேற்று அதிகாரியான டிம் குக் ஐ போன் 5 இனை அறிமுகப்படுத்த உலகளாவிய சந்தைப்படுத்தலுக்கான சிரேஷ்ட உப தலைவரான பில் ஸ்ஸிலர் ஐ போன் 5 இன் தொழில்நுட்ப வசதிகள் தொடர்பில் விளக்கமளித்தார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஐ போன் 4 எஸ் வெளியாகியது. அப்பிளின் இந்த 4எஸ் மாதிரியானது 2010 ஆண்டில் ஜூன் மாதம் வெளியான ஐ போன் 4 இன் தோற்றத்தினை ஒத்திருந்ததுடன் எதிர்பார்த்தளவு தொழில்நுட்ப அம்சங்களை உள்ளடக்கியிருக்கவில்லை என்ற கருத்து நிலவியது.

எனவே அப்பிளின் தீவிர விசிறிகள் ( Apple Fan boys) ஐ போன் 5 இனை மலை போல் நம்பி ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்களையும் நம்பிக்கைகளையும் வைத்திருந்தனர். பல புதிய வசதிகளையும் தோற்றத்தினையும் அப்பிள் ஐ போன் கொண்டுவருமென அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

தற்போது இவர்களின் எதிர்பார்ப்பினையும் நம்பிக்கையினையும் அப்பிள் பூர்த்திசெய்ததா? மேலும் தற்போதைய ஐ போன் 4எஸ் மற்றும் ஐ போன் 4 பாவனையாளர்களுக்கு ஐ போன் 5 சிறந்த மாற்றுத்தெரிவாக அமையுமா? எனப் பார்ப்போம்.

ஐ போன் 5



தோற்றம்

ஐ போன் 5 ஆனது கண்ணாடி மற்றும் அலுமினியத்தாலான வெளிப்புறத்தினைக் கொண்டுள்ளதுடன் இதன் பருமன் 123.8 x 58.6 x 7.6 mm.

இதுவரை வெளியாகிய ஐ போன்களில் மிக மெல்லியதாக இது கருதப்படுகின்றது. இது 7.6 மில்லி மீற்றர்கள் மட்டுமே தடிப்பானது.

மேலும் இதன் நிறை வெறும் 112 கிராம்கள் மட்டுமேயாகும்.

முன்னைய வெளியீடான ஐ போன் 4 எஸ் இன் பருமன் 115.2 x 58.6 x 9.3 mm என்பதுடன் ஐ போன் 3 ஜிஎஸ் இன் பருமன் 115.5 x 62.1 x 12.3 mm ஆகும்.

ஐ போன் 5 ஆனது கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கவுள்ளன.

ஸ்மார்ட் போன்களின் தோற்றத்தில் முதலில் நமது கவனத்தை ஈர்ப்பது அவற்றின் திரையாகும்.  ஐ போன் 5 ஆனது 4 அங்குல ரெட்டினா திரையைக்கொண்டுள்ளது.

இதன் ரெசலுயுஷன் 1136x640 பிக்ஸல்ஸ் என்பதுடன் 326 (Pixels per inch) படவணு அடர்த்தியைக் கொண்டது.


தொழில்நுட்ப அம்சங்கள் 


புரசசர் (Processor) 

ஐபோன் 5 ஆனது ஐ போன் 4எஸ் கொண்டிருந்த A5 ஐ புரசசரை விட இருமடங்கு வேகமாக இயங்கக்கூடிய A6 புரசசரைக் கொண்டுள்ளதாக அப்பிள் தெரிவிக்கின்றது.

இது மேம்பட்ட கிராபிக்ஸ் செயற்பாடுகளுக்கும் ஏற்றதென அப்பிள் தெரிவிக்கின்றது.

எனினும் புரசசர்களின் கோர்களின் எண்ணிக்கை மற்றும் வேகம் தொடர்பில் அப்பிள் எதனையும் தெரிவிக்கவில்லை.
                
கெமரா (Camera)

 ஐ போன் 4எஸ் கொண்டிந்ததனைப் போல ஐ போன் 5 உம் 8 மெகாபிக்ஸல் ( 3264x2448 pixels) கெமராவினையே கொண்டுள்ளது.

ஐ போன் 5  சென்சரானது 4எஸ்ஸினை விட சற்று சிறியதாகும்.

8 மெகாபிக்ஸல் கெமாராவினைக் கொண்டுள்ள போதிலும் 28 மெகாபிக்ஸலில் பரந்த தோற்ற (பெனோரமிக்) ஷொட்களை இதன்மூலமாக படம்பிடிக்க முடியும்.

மேலும் மேம்படுத்தப்பட்ட 1.2  மெகா பிக்ஸல் புரண்ட் கெமராவினையும் ஐ போன் 5 கொண்டுள்ளது.

இவற்றைத்தவிர 4ஜி எல்.டி.இ. வேகத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் ஐபோன் 5 ஆனது தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐஓஎஸ் 6 இயங்குதளத்தின் மூலம் இது இயங்குகின்றது. இதில் கூகுள் மெப்புக்குப் பதிலாக அப்பிளின் சொந்த மெப் சேவை பயன்படுத்தப்பட்டுள்ளமை நாம் அறிந்ததே.

சார்ஜ் செய்வதற்கான கெனக்டர் மற்றும் போர்ட்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது அப்பிள். இந்த மாற்றம் அப்பிள் வாடிக்கையாளர்களிடம் பெரியளவில் அதிருப்தியை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 21.09.2012 வெள்ளிக்கிழமை அன்று முதல் இந்த அப்பிள் ஐ போன் 5எஸ் விற்பனைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த அப்பிள் ஐ போன் 5 வெளியீட்டு நிகழ்வின் போது புதிய வடிவிலான ஹெட்போன்கள், புதிய ஐ பொட் டச், ஐ பொட் நெநோ மற்றும் மேம்படுத்தப்பட்ட டெக்ஸ்ட் டொப் ஐ டியூன்ஸ் அப்ளிகேஷன் போன்றவற்றையும் அறிமுகப்படுத்தியிருந்தனர் அப்பிள் நிறுவனத்தினர்.

தற்போதைய அப்பிள் பாவனையாளர்கள் ஐ போன் 5 க்கு மாறவிரும்பினால் மாறுவதற்கான பல நல்ல தொழில்நுட்ப அம்சங்கள் அதில் உள்ளன. இருப்பினும் அப்பிள் ஐ போன் 5இன் வசதிகளிலிருந்து வேறுபட்ட பல்வேறு வசதிகளைக் கொண்ட செம்சுங் கெலக்ஸி எஸ்3,  அண்மையில் நொக்கியா அறிமுகப்படுத்திய லுமியா920 போன்ற ஸ்மார்ட் போன்களும் சந்தையில் உள்ளன.

இதனால் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அப்பிள் ஐ போன் 5 ஒப்பீட்டு ரீதியில் புரட்சிகரமான படைப்பாக இல்லை என்றே ஸ்மார் போன் சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

செம்சுங், எச்.டி.சி போன்ற நிறுவனங்கள் தங்களது ஒவ்வொரு பிரதான ஸ்மார்ட்போனிலும் பல்வேறு நவீன வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. வடிவத்திலும் அவை நல்ல மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அப்பிள் அதன் திரையில் அளவை சற்று அதிகரித்து, கண்ணாடி மற்றும் அலுமினியத்தை உபயோகித்தபோதும் பெரிய அளவிலான ஐ போன் 4எஸ் என்ற எண்ணத்தை மட்டுமே தருகின்றது.

செம்சுங், எச்.டி.சி நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்களில் காணப்படும் தொழில்நுட்ப அம்சங்களுடன் ஒப்பிடும் போது  புரட்சிகரமானதும் சந்தையில் புதுமைகளைப் புகுத்திய நிறுவனம் என்ற வகையிலும் அப்பிளின் தொழில்நுட்ப அம்சங்கள் சற்றுக் குறைவே என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஸ்டீவ் ஜொப்ஸின் தேவையை உணர்த்தி நிற்கும் மற்றுமொரு படைப்பாகவே இந்த ஐ போன் 5 களமிறங்கியிருப்பதாக எண்ணத்தோன்றுகிறது.

எதுவாகினும் ஸ்டீவ் ஜொப்ஸ் ஆரம்பித்த இந்த அப்பிள் தொழில்நுட்பத்திற்கான மதிப்பின் காரணமாக போட்டிபோட்டுக்கொண்டு கண்ணைமூடிக்கொண்டு கொள்வனவு செய்ய இருக்கும் கூட்டம் ஐ போன் 4எஸ் படைப்பை தூக்கியது போல இதனையும் தூக்கிவிடலாம் எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

ஓவர் confident உடம்புக்கு ஆகாமல் போயிருமோ!!!



Post has been summerised in English

Apple I Phone 5 Release : Will it Challenge?

Despite the excitement surrounding the new iPhone5. But after the i Phone 5 launch it getting mixed review from technology marcket analysers end.

***Many fans were left angry last month when images allegedly showing the iPhone 5's new design leaked out, showing the traditional 30-pin dock connector - used for charging, syncing files and pumping audio to hi-fis - had been re-designed into a smaller shape.

***There will be adapters available so that the new phone will be able to connect to sound docks and other accessories designed for the old phones.
Speaking at today's launch, Phil Schiller, Apple's senior vice president of worldwide marketing, said: '
‘The iPhone from its start used the 30 pin connector, and it has served us well. A lot has changed and it is time for the connector to evolve - and our new connector is called Lightning.’

***The 'nano-SIM' slot, containing the SIM card which connects a phone to the carrier network, has also been redesigned to be thinner, although this will be unlikely to cause much disruption to users as networks will provide replacements SIMs if necessary.

There are also rumours, reported on iMore, that the iPad 3, which was released in the Spring, will get a slight tweak this Autumn to brink the dock connector in-line with the rest of the range.

***The 4G network - which offers speeds up to five times faster than 3G - will be available on HTC, Samsung, Nokia and Huawei devices, as well as 'one more to come', widely expected to be the Apple product.

***The 4G services will allow uninterrupted access to the web on the go, high definition movies to be downloaded in minutes and TV to be streamed without buffering.

***The battle for domination of the mobile market has become increasingly heated recently with Apple's competitors taking it on with a series of new products.

***Nokia and Microsoft recently joined forces to launch two new phones which will run on the Windows operating system.

***The Nokia Lumia 920 and Nokia Lumia 820 are the Finnish company's attempt to claw back lost ground since it lost its position as the world's biggest phonemaker to Samsung.

***Now experts believe the iPhone 5 could dwarf them all, with 'unprecedented demand' expected for the handset.

***Today Apple was preparing to open online pre-orders for the hugely anticipated gadget, which goes on sale on Friday 21st September.