இந்த அரிய காட்சியினை 2013ஆம் ஆண்டில் வடக்கு ஹெம்ஸ்ஸபெயரில் நவம்பர் மற்றும் டிசம்பர் காலப்பகுதியில் காணக்கூடியவாறு 2 மில்லியன் மைல் தொலை தூரத்தில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கொமட் ஆனது கடந்த நூற்றாணடிலேயே வந்த வால்வெள்ளிகளில் அதி வெளிச்சமானதொன்றாக அமையும். தற்போது வியாழன் கிரகத்தினூடாக பயணிக்கும் கொமட்டானது சூரிய குடும்பத்தை ஒரு தடவையே சுற்றிவரும். புவியில் அவதானிக்கும் போது இதன் வெளிச்சம் தெளிவான பகல் வேளையிலும் அவதானிக்கும் வகையில் இருப்பதுடன் நிலவின் வெளிச்சத்தையும் மிஞ்சும் என்று தெரிவிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.
கொமட் வால்வெள்ளியானது International Scientific Optical Network telescope இனூடாக ரஷ்ய வானியலாளர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரும் இதே போன்று பூமியை வலம் வந்திருக்கக் கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது சுமார் மில்லியன் ஆண்டுகளின் பின்னர் பூமியை வந்தடைகிறதாம்.
அம்மாடியோவ் அவ்வளவா ஆகுது!
How Hale-Bopp looked above Alaska: Next year's comet is predicted to be even more spectacular, and remain in the skies for weeks |
Look to the skies next year: Comet ISON could produce a spectacular show when it flies by next year - similar to the 1997 appearance of Hale-Bopp (pictured) |
கொமட் (Comet) என்பது ஒருவகை வால்வெள்ளியாகும். "Dirty Snowballs," என்று பெரும்பாலும் வர்ணிக்கப்படும் வால்வெள்ளிகள், பெருமளவு உறைந்த காபனீரொட்சைட்டு (CO2), மெத்தேன் (CH4) மற்றும் நீர் (H2O) என்பவற்றுடன் தூசி,கனிம aggregates என்பனவும் கலந்து உருவானவை.
இதற்கு முன்னும் ஹெலிஸ் என்றழைக்கப்படும் கொமட் 1910 புவியை அண்மித்துள்ளது ஆனாலும் அதனை தெளிவாக அவதானிக்கமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.