தனது 9ஆவது வயதில் மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் உயர் தொழில் கணனி விருதினை வென்று உலகிலேயே மிக இளம் வயது கணனி பொறியியலாளர் என்ற சாதனை படைத்து தனது நாட்டிற்கும் இஸ்லாமிய சமூகத்திற்கும் பெருமை ஈட்டிய சிறுமி அர்பா கரீம் ராந்தவாவின் மரணம் இஸ்லாமிய சமூகத்திற்கு மட்டுமல்லாது தொழில் நுட்ப உலகிற்கு பாரிய இழப்பே.
முஸ்லிம் சமூகத்தில் பெண்களுக்குக்கு சுதந்திரம் என்பது எண்ணிப்பார்க்க முடியாத அல்லது கூடாத ஒரு விடயம் என ஏனைய சமூகத்தில் வியாபித்திருக்கும் பிரம்மையை அவ்வப்போது உடைத்தெறியும் இஸ்லாமிய பெண்கள் வரிசையில் நிச்சயம் இந்த சிறுமிக்கும் இடமுன்டு.
பாகிஸ்தானின் பைசலபாத்தில் அம்ஜத் கரீம் ராந்தவா, திருமதி. கரீம் ராந்தவா தம்பதியினருக்கு 1995ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி இம்மண்ணிற்கு சாதனைகள் நிகழ்த்த பிறந்தார்.
அர்பா கரீமின் குடும்பப் பின்னணி விவசாய சார்ந்ததாகவே காணப்பட்டது. கணனித் துறையை சார்ந்து அப்போது வரை அக்குடும்பத்தில் யாரும் இருக்கவில்லை இருப்பினும் சிறுவயது முதலே அர்பா, கணனியில் திறமை வாய்ந்த ஒருவராகவே இருந்ததனால் பாடசாலையின் ஆச்சரிமிக்க சிறுமியாகவே ஆசிரியர்களுக்கு அர்பா தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.
5 வயது குழந்தை பருவத்தில் தான் வசித்த பிரதேசத்தில் காணப்பட்ட கணனி ஆய்வகங்களை கடந்து செல்லும் போது என்னுள் ஏற்பட்ட கணனியின் தொடர்பான எண்ணங்களே என்னை கணனித்துறைக்கு கொண்டுவதந்ததாக அர்பா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அர்பாவிற்கு குழந்தை பருவத்தில் ஏற்பட்ட இந்த தூண்டலின் துலங்கலாகவே ஆறு வயதில் சொந்தமாக கணனியை இயக்கவும் ஏபிடெக்(APTECH) எனும் கணனி நிறுவனத்தில் இணையவும் முடிந்துள்ளது.
ஏ.பி.டெக் நிறுனத்தினால் அர்பாவினுடைய அசாத்திய திறமையினை உணர்ந்த ஆசிரியர்கள் முறையான பயிற்சிகள் மூலம் இவரை உச்சத்திற்கு கொண்டு செல்லமுடியும் என நம்பியுள்ளனர். இதன் விளைவாகவே மைக்ரோ சொப்ட் நிறுவனத்தினால் வழங்கப்படும் உயரிய விருதான உயர் தொழில் கணனி ((Microsoft Certified Professionals (MCPs)) விருதுக்கு அர்பாவை தயார் செய்தனர்.
ஆர்பா மீது ஆசிரியர்கள் கொண்ட நம்பிக்கை வீண் போகவில்லை. தனது 9 ஆவது வயதிலேயே எம்.சி.பி எனப்படும் கணனிக் கற்கையினை பூர்த்தி செய்து உலகின் பிரசித்த நபர்களில் ஒருவராக தன்னை அடையாளப்படுத்தும் ஆண்டாக 2004ஆம் ஆக்கிக்கொண்டார் அர்பா.
அவ்வாண்டில் மைக்ரோ சொப்ட் நிறுவனத்தில் வழங்கப்பட்ட உயர் தொழில் கணனி விருதினை உலகின் மிக இளம் வயதுடைய பொறியியலாளர் என்ற சாதனையுடன் தனது 9ஆவது வயதிலேயே தன் நாட்டிற்கும் தான் வாழும் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் அவ்விருதினை வென்றெடுத்து தனது வாழ்க்கையினை சிறார்களுக்கு முன்னுதாரண அமையும் வகையில் அமைத்து பாகிஸ்தானிய மக்களை மட்டுமல்லாது உலகயே தன்னை அண்ணார்ந்து பார்க்கும் படி உயர்ந்து நின்றார் அர்பா.
இந்த விருது அர்பாவின் சாதனை வாழ்க்கைக்கான பாதையாக அமைந்தது. எம்.சி.பி விருது வென்ற அர்பாவினை பாராட்டி மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் தலைவர் அமெரிக்காவுக்கு வரவழைத்து அவ்விருதினை தனது கைகளினாலேயே வழங்கி பெருமைப்படுத்தினார்.
எம்.சி.பி விருதினை பெற்ற பிறகு 2005 ஆண்டில் பலரின் கனவு இலட்சியமாக இருக்கும் வொசிங்கடனில் அமைந்துள்ள மைக்ரோ சொப்ட் நிறுவனத்தினுடைய ரெட்மென்ட் வளாகத்தின் ஆய்வகத்தின் நிர்வாகிகளை பில்கேட்ஸின் அழைப்பின் பெயரில் தனது 10ஆவது வயதில் சந்தித்து வருமளவிற்கு தனது திறமையை வளர்த்துக்கொண்டார் அர்பா.
மேலும் 2005 ஆண்டு காலப்பகுதியில் முறையே பாகிஸ்தானின் உயரிய விருதுகளில் ஒன்றான பாத்திமா ஜின்னா தங்க விருது மற்றும் சலாம் பாகிஸ்தான் யௌவன விருது மற்றும் ஜனாதிபதி செயல்திறன் பெருமை விருது போன்ற விருதுகளையும் அள்ளிக் குவித்தார். இந்த விருதுகள் அனைத்தும் தனது 10ஆவது வயதில் வந்து சேரும் வகையில் தனது திறமைகளை வெளிப்படுத்தியதே அர்பாவின் சிறப்பம்சம்.
சிறுபிள்ளை வேளான்மை வீடு வந்து சேராது என்பார்கள் ஆனால் அர்பாவின் விடயத்தில் அது பொய்யாயிற்று பாகிஸ்தான் சார்பாக பல கருத்துக்களங்களுக்கு அர்பா தன்னை பிரதிநிதித்துவப்படுத்தும் அளவிற்கு தன்னை அச்சிறுவயதிலே பட்டை தீட்டிக்கொண்டார்.
இதுமட்டுமல்;லாமல் டுபாயில் நடந்த பாகிஸ்தான் தொழில்நுட்பக் கருத்துக்களம் ஒன்றிற்கு பாகிஸ்தான் நாட்டுத்தூதுவராக அர்பா சென்றிருந்தார். அதில் பல பரிசுகளை அள்ளிக்குவித்து ஏராளமானோரை ஆச்சரித்திற்குள்ளாக்கி வெற்றிபெற்றார். தொடர்ந்து 2006ஆம் ஆண்டில் பார்ஸிலோனாவில் இடம்பெற்ற 5000 தொழில்நுட்ப உருவாக்குனர்கள் (Developers) மட்டுமே பங்கு கொண்ட டெக் எட் உருவாக்குனர் மாநாட்டில் பாகிஸ்தானிலிருந்து சென்ற ஒரே உருவாக்குனர் என்ற பெருமை பெற்றதுடன் அங்கு அர்பா ஆற்றிய உரையும்
இவ்வாறான பல சாதனைகளின் அங்கீகாரமாக 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதமளவில் பாகிஸ்தான் தொலைத்தொடர்பாடல் நிறுவனத்தின் கம்பியில்லா 3ஜீ தொழில் நுட்ப சேவையின் தூதுவராக அறிவிக்கப்பட்டார்.
தன்னகத்தே இவ்வாறான பல பெருமைகளைச் சேர்த்த மூளைக்கு 2011இல் சோதனை காத்திருந்தது. கடந்த ஆண்டின் டிசம்பர் மாதம் 22ஆம் திகதி அர்பாவுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதனையடுத்து லாகூர் மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னரே கார்டியல் அரஸ்ட் மற்றும் முயலகப்பீடிப்பு (Epileptic seizure) எனும் மூளை தொடர்பான நோய் அர்பாவை தாக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து சில நாட்களில் அர்பாவின் உடல்நிலை மேலும் நலிவடைய ஆரம்பித்தது எனவே உயிருக்காக போராடிய அர்பாவை டிசம்பர் 29ஆம் திகதி லாகூர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி ஜனவரி 14ஆம் திகதி அன்று இவ்வுலகிற்கு தன் சாதனைகளை மக்கள் மனங்களில் பதித்து மரணித்தபின்னரும் வாழ்வோர் கூட்டத்தில் தன்னையும் இடம் பெறச்செய்து எம்மை விட்டு அந்த உயிர் இறைவனடி சேர்ந்தது. இன்னாலின்னாஹி வயின்னா இலைஹி ராஜீஊன்.
எவ்வளவுக்கு வேகமாக பல சாதனைகளையும் விருதுகளையும் குவித்ததோ அதே வேகத்தில் மரணத்தையும் எட்டிப்பிடித்ததில் பாரிய இழப்பு அர்பாவின் குடும்பத்திற்கு மட்டுமல்ல முழு சமூகத்திற்கும் தான். 16 வயதில் அர்பா மரணமாகியிருந்தாலும் அவரின் தேவை எமது சமூகம் உணர முடியாவிட்டாலும் ஏனைய சமூகம் நிச்சயம் உணர்ந்திருக்கும் காரணம் மரணப்படுக்கையின் போதும் அர்பா நாசாவிற்கான ஒரு திட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அர்பாவின் மறைவிற்கு பின்னர் அர்பாவிற்கு கௌரவம் அளிக்கும் விதமாக லாகூர் தொழில்நுட்ப பூங்கா என்ற பெயரினை அர்பா மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா என பெயர் மாற்றம் செய்துள்ளதாக பாகிஸ்தானின் பஞ்சாப் முதலமைச்சர் ஷஹ்பாஸ் ஷெரிப் அறிவித்துள்ளார்.
இவரின் மறைவுக்கு பில் கேட்ஸ், பாகிஸ்தானின் பஞ்சாப் முதலமைச்சர் ஷஹ்பாஸ் ஷெரிப், பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி மற்றும் பிரமர் யூஸுப் ரஸா கிலானி என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
எம்முடன் அர்பாவின் உடல் பயணிக்காவிட்டாலும் இவரின் சாதனைகளும் உந்துதல்களும் நிச்சயம் எம்முடன் பயணிக்கும் என்பது திண்ணம்.
இறைவனால் எமக்கு கிடைத்த பரிசு அர்பா இப்போது அப்பரிசினை இறைவனே மீளப்பெற்றுவிட்டான்...!
ஏ.எம்.ஆர்
This article has been published in Tamil news paper
Notable points from this post
Arfa was born to a family from the village of Chak No. 4JB Ram Dewali in Faisalabad, Punjab. After returning to Pakistan from a visit to Microsoft headquarters, Arfa gave numerous television and newspaper interviews. S. Somasegar, the vice president of the Software Development Division, wrote about her in his blog. On 2 August 2005, Arfa Abdul Karim was presented the Fatimah Jinnah Gold Medal in the field of Science and Technology by the then Prime Minister of Pakistan Shaukat Aziz on the occasion of 113th birth anniversary of Fatima Jinnah. She also received the Salaam Pakistan Youth Award again in August 2005 from the President of Pakistan. Arfa Abdul Karim is also the recipient of the President's Award for Pride of Performance, a civil award usually granted to people who have shown excellence in their respective fields over a long period of time. She is the youngest recipient of this award. Arfa was made brand ambassador for Pakistan Telecommunication Company's 3G Wireless Broadband service named EVO in January 2010.
Arfa Abdul Karim has represented Pakistan on various international forums, and was invited by the Pakistan Information Technology Professionals Forum for a stay of two weeks in Dubai. A dinner reception was hosted for her there, which was attended by the dignitaries of Dubai including the Ambassador of Pakistan. During that trip, Arfa was presented with various awards and gifts including a laptop. In November 2006, Arfa attended the Tech-Ed Developers conference themed Get ahead of the game held in Barcelona on an invitation from Microsoft. She was the only Pakistani among over 5000 developers in that conference.
In 2011, at the age of 16, Arfa Abdul Karim was studying at the Lahore Grammar School Paragon Campus in her second year of A-levels. On 22 December 2011 she suffered a cardiac arrest after an epileptic seizure that damaged her brain, and was admitted to Lahore's Combined Military Hospital (CMH) in critical condition.
On 9 January 2012, Bill Gates, chairman of Microsoft, contacted Arfa's parents and directed his doctors to adopt "every kind of measure" for her treatment. Gates set up a special panel of international doctors who remained in contact with her local doctors through teleconference. The panel received details about her illness and provided assistance in diagnosis and treatment. Local doctors dismissed the option of moving Arfa to another hospital owing to her being on a ventilator and in critical condition. Members of Arfa's family have lauded Bill Gates for offering to bear her treatment expenses.
On 13 January 2012, Arfa Abdul Karim started to improve and some parts of her brain showed signs of improvement. Her father, Amjad Abdul Karim Randhawa, said Microsoft had raised the possibility of flying Arfa to the US for care.
On 14 January 2012, 16-year-old Arfa Abdul Karim died at 9:50 pm (Pakistan Standard Time) at Combined Military Hospital (CMH) Lahore. Her Namaz-e-Janaza was offered in Cavalry GroundLahore at 10 am on 15 January 2012, then at 2:00 pm in D Ground Faisalabad, and later in her village Chak Ram Divali at 4:00 pm the same day. The funeral was attended by the Chief Minister of Punjab, Shahbaz Sharif. She was buried at her ancestral village Chak No. 4JB Ram Dewali, Faisalabad.
On 15 January 2012, Chief Minister Shahbaz Sharif announced that the name of Lahore Technology Park would be changed to Arfa Software Technology Park.
On 14 January 2012, 16-year-old Arfa Abdul Karim died at 9:50 pm (Pakistan Standard Time) at Combined Military Hospital (CMH) Lahore. Her Namaz-e-Janaza was offered in Cavalry GroundLahore at 10 am on 15 January 2012, then at 2:00 pm in D Ground Faisalabad, and later in her village Chak Ram Divali at 4:00 pm the same day. The funeral was attended by the Chief Minister of Punjab, Shahbaz Sharif. She was buried at her ancestral village Chak No. 4JB Ram Dewali, Faisalabad.
On 15 January 2012, Chief Minister Shahbaz Sharif announced that the name of Lahore Technology Park would be changed to Arfa Software Technology Park.