முதலில் சிலைகளை படம் பிடித்துவிட்டு அதே கோணத்தில் நண்பர்களை உடை உடுத்தி படம்பிடித்து அவை இரண்டையும் அலெக்ஸிஸ் பெர்ஸானி என்ற கலை இயக்குனரின் உதவியுடன் பண்டைய நாகரீக சிலைகளை நவநாகரீக மனிதர்களாக டிஜிட்டல் வடிவில் சித்தரித்துள்ளார் கைலார்ட்.
இந்த படைப்பின் நோக்கம் குறித்து கைலார்ட் கூறுகையில், பார்வையாளர்களுக்கு பண்டைய காலத்திற்கும் நவ நாகரீக காலத்திற்குமான இடைவெளியை காண்பிப்பதே இதன் நோக்கம் என்று கூறியுள்ளார்.
உண்மையில் இரண்டு உலகத்திற்குமான இடைவெளியை சிறப்பாகவே காண்பிக்கிறது கைலார்ட்டின் கைவண்ணம்.