Total Pageviews

Monday, September 24, 2012

சுயசரிதை ௭ழுதுகிறார் யுவராஜ்!


இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் யுவராஜ்சிங் தனது தந்தை மற்றும் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்த புத்தகம் ஒன்றை ௭ழுதுகிறார்.

இது குறித்து அவரது தந்தையும் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய நடிகருமான யோகராஜ் சிங் கருத்து தெரிவிக்கையில், யுவராஜ் சிங் ௭ன்னைப் பற்றி புத்தகம் ௭ழுதுகிறார். அத ற் கு "அரோகன்ட் மாஸ்டர்" ௭ன்று பெயரிட்டுள்ளார்.

நாங் க ள் இருவரும் ஒன்றாக வசித்த காலத்தில் நடந்த சம் பவ ங்க ள் உள் ளிட்டவற்றைப் பற்றிய விடயங்கள் இதில் இட ம் பெ று கி ன் றன. இதேபோல் அவர் கிரிக்கெட் வீரர் ஆனது அத்துட ன் புற் றுநோயுடன் போராடியது பின் அதிலிருந்து மீண்டு வந் தது உள் ளிட்ட விடயங்க ளு ம் இந்த புத்தகத்தில் இடம்பெறும் ௭ன் றார்.


புத்தகத்திற்கு “அரோகன்ட் மாஸ்டர்" என்று பெயர் வைக்கப்பட்டிருப்பது குறித்து கேள்வியெழுப்பியபோது,

“யுவராஜ் சிறுவனாக இருந்தபோது ஸ்கேட்டிங் மீது ஆர்வமாக இருந்தார். டென்னிஸ் விளையாடவும் விரும்பினார். அவர், கிரிக்கெட் வீரராக வர வேண்டும் என்று நான் விரும்பினேன். கிரிக்கெட்டுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டே அவரை கிரிக்கெட் விளையாட வைத்தேன். அதனாலேயே அவர் “அரோகன்ட் மாஸ்டர்’ என்று புத்தகத்துக்கு பெயரிட்டுள்ளார்.

யுவராஜ் சிங், விரைவில் தொலைக்காட்சியிலும் தோன்றுகிறார். அப்போது புற்றுநோயுடன் போராடிய தனது அனுபவத்தை அவர் பகிர்ந்து கொள்வார். புற்றுநோய் அவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் புனிதமான மனிதராக இருக்க வேண்டும். அதிகாலையில் எழுந்து கடவுளை பிரார்த்திக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். புற்றுநோய்க்குப் பிறகு முதிர்ச்சியடைந்த மனிதனாக மாறியுள்ளார். மிகவும் அமைதியாக இருக்கிறார். அவருடைய ஒட்டுமொத்த குணமும் மாறிவிட்டது. அவருக்கு ஆதரவாக இருந்த கடவுளுக்கும், லட்சக்கணக்கான மக்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன்’ என்றார்.

யுவராஜின் தந்தை யோகராஜும் “மை லாஸ்ட் டேய்ஸ்" என்ற பெயரில் புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறார். கடும் போராட்டத்துக்குப் பிறகு புற்றுநோயிலிருந்து மீண்ட யுவராஜ் சிங், இப்போது இலங்கையில் நடைபெற்று வரும் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

-நன்றி இணையம்