இது குறித்து அவர் நடிகை லீ கார்சியா தெரிவிக்கையில், இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட போது இது இஸ்லாத்தையும், முஹம்மது நபியையும் இழிவுபடுத்தும் படம் என்று எனக்குத் தெரியாது. இயக்குனர் உண்மையைச் சொல்லாமல் ஏமாற்றிவிட்டார்.
பாலைவன போர் வீரன் என்ற தலைப்பிலேயே என்னிடம் திரைக்கதையைக் சொன்னார்கள். மேலும் இது எகித்தில் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவற்றை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட கதை என்றும், மதத்திற்கும் இப்படத்திற்கு எதுவித சம்மந்தமும் இல்லை எனவும் தெரிவித்தனர்.
ஆனால் தற்போது படத்தின் பெயரை Innocence of Muslims என மாற்றியது மட்டுமல்லாது படத்தில் முஹம்மது நபி குறித்தும், கடவுள் குறித்தும் நான் பேசாத வசனங்களை எல்லாம் சேர்த்துள்ளனர். படத்தை எடுக்கையில் முஹம்மது என்ற பெயரே வரவில்லை இருப்பினும் இப்போது 'மாஸ்டர் ஜோர்ஜ்' எனற இடங்களிலெல்லாம் முஹம்மது என்று மாற்றம் செய்து வெளியிட்டுள்ளனர் என்றார்.
கடந்த புதன் கிழமை வழக்கை விரசாரணை செய்த நீதிமன்றம் யூ டியூப்பில் உள்ள படத்தின் பகுதிகளை நீக்குமாறு கூகுளுக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.