Total Pageviews

Friday, September 7, 2012

வாங்க பழகலாம்... 'டொரன்ட்' தரவிறக்கம் : விரும்பியதையெலாம் இலவசமாக தரவிறக்கலாம்

கணனி உலகைப்பொறுத்தவரை ஏராளமான மென் பொருட்கள் (Softwares) இன்று சந்தையில் உலாவருகிறது. இதில் அனைத்தும் அனைவருக்கும் தேவைப்படாவிடினும் சில சந்தர்ப்பங்களில்சில மென்பொருட்கள் தேவையாகவே இருக்கும். இது கணனியை தேவைக்கென உபயோகிக்கும்பலருக்கும் அடிக்கடி இவ்வாறான தேவைகள் ஏற்படும். உடலையும் உயிரையும்வைத்துக்கொண்டு மனிதனால் இயங்க முடியாததைப் போன்று கணனியையும் இதனை இயக்கத்தேவையான இயங்கு தளத்தினையும் (Operating System) வைத்துக் கொண்டு நாம்கணனியின் உபயோகங்களை அனுபவிக்க முடியாது.

கணனியின் உச்சப் பயன்களை அனுபவிக்க வேண்டுமாயின் உங்களுக்கு தேவையைப் பொறுத்துஉங்களுக்கு ஒரு மென்பொருளின் சேவை நிச்சயம் தேவை. உதாரணமாக ஒரு புகைப்படத்தினைஉங்கள் எண்ணம் போல வடிவமைக்க வேண்டுமாயின் '  Photoshop' என்ற மென்பொருள் எமக்குத் தேவைப்படுகிறது.

இன்று சந்தையில் தேவைக்கேற்ப ஏராளமான மென்பொருட்கள் கிடைக்கின்றது. இதனை நாம் இன்றைய காலகட்டத்தில் இலவசமாக வாங்கிவிட முடியாது. ; ' Photoshop' மென்பொருளினை எடுத்துக்கொண்டால் இதனை நாம் சீடி கீயுடன் வாங்க வேண்டுமாயின்இலங்கை நாணயப்படி சுமார் 80 ஆயிரம் வரை செலவாகும். இதனை பல இணையத்தளங்களில்ஊசநனவை ஊயசன மூலம் கொள்வனவு செய்யக்கூடியவாறு இருக்கும். எமது நாட்டில் சில மென்பொருட்களை சிறிய கடைகளில் கிறேக் செய்யப்பட்டமென்பொருட்களை குறைந்த விலையில் வாங்கக்கூடியதாக இருக்கிறது.

ஆனால்,வெளிநாடுகளை பொறுத்தளவில் இது சாத்தியமில்லை. இதற்கென சட்டங்கள் பல் அமுலில்உள்ளதால் நினைத்தபடி கடைகளில் விற்பனை செய்யமுடியாது. அது மட்டுமன்றி எமக்குதேவையான சில அரிய வகை மென்பொருட்களினை கணனிச் சந்தையில் பெறமுடியாது இருக்கும்.

எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் தான் இந்த டொரன்ட் எனப்படும் விடயம் எமக்குஉதவி செய்கிறது. பல ஆயிரங்களுக்கு விற்பனை செய்யப்படும் மென்பொருட்களைடொரன்ட் இன் உதவியினால் இலவசமாகவே தரவிறக்கம் செய்துவிடலாம். இதற்குஇணையமும் டொரன்ட் இனை பயன்படுத்தி தரவிறக்கம் செய்ய டொரன்ட் தரவிறக்கியும் (வுழசசநவெ னுழறடெழயனநச) இருந்தால் போதும். டொரன்ட் தரவிறக்கியினை ஏராளமான இணையத்தளங்கள் இலவசமாகவே வழங்குகின்றது.இவ்வாறு வழங்கப்படும் இணையத்தளங்கள் மூலம் ஏதாவதொரு தரவிறக்கியினை (Downloader) முதலில் தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

உதாரணமாக பிட் டொரன்ட் (Bit torrent) எனும் இணையத்தளம் உள்ளது இதில் பிட் டொரன்ட் என்ற தரவிறக்கிக்கியினை இலவசமாக வழங்குகிறது. இதனை முதலில் தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
தரவிறக்கச்சுட்டி இதோ
http://www.bittorrent.com/downloads/complete
இந்த இணைய முகவரியைபயன்படுத்தி குறித்த தரவிறக்கினை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நீங்கள் தரவிறக்கம் செய்த தரவிறக்கியினை உங்களது கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள் (Install). தற்போது உங்களுக்கு டொரன்ட் கோப்புக்களினை (Torrent Files) இந்ததரவிறக்கி மூலம் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். இனி அடுத்த கேள்வி எமக்குதேவையான மென்பொருட்களினை தரவிறக்கம் செய்யத் தேவையான டொரன்ட்கோப்புக்களை எங்கிருந்து பெறுவது என்பது.

தற்போது இணையத்தில் பல இணையத்தளங்கள் இந்த டொரன்ட் கோப்புக்களை வழங்கிவருகிறது. இதற்கென நீங்கள் த பைரேட் பேபி (The Pirate Bay),டொரன்ட்ஸ் (Torrentz), கிக்காஸ் டொரன்ட் (Kickass torrent), டிமோனொயிட் (Demonoid) போன்ற இன்னும் பல இணையத்தளங்களினை உபயோகிக்கமுடியும். குறித்த டொரன்ட் இணையத்தளங்கள் சிலவற்றின் இணையத்தள முகவரி இதோ
http://thepiratebay.org/,
http://torrentz.eu/,
http://www.kat.ph/,
http://www.demonoid.me/
மேலே தரப்பட்ட இணையத்தளங்களில் ஏதாவதொன்றினுள் நுழைந்தீர்களானால் சேர்ச் பொத்தான் (Search Button) காணப்படும். இதனருகே நீங்கள் டைப் (Type) செய்வதற்கான வசதி காணப்படும்.

குறித்த அந்த இடத்தில் உங்களுக்குத் தேவையான மென்பொருளின் பெயரைடைப் செய்து சேர்ச் பொத்தானை அழுத்துங்கள். பின்னர் தோன்றும் திரையில் உங்களுக்குத் தேவையான மென்பொருட்களின் பெயரில் நிறைய பகுதிகள் காணப்படும். இதில் உங்களுக்குத் தேவையான மென்பொருளின் அருகே தரவிறக்கம் செய்வதற்கு பலதேர்வுகள் இருக்கும் இதில் டொரன்ட் டௌன்லோட் (Torrent Download) என்பதை கிளிக் செய்து. அதனைஉங்களது கணனில் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

இனி நீங்கள் தரவிறக்கம் செய்த டொரன்ட் கோப்பினை (File) இரட்டை கிளிக் (Double Click) செய்தால் தானகவே உங்களது டொரன்ட் தரவிறக்கி திறந்து அதில் நீங்கள் திறந்த டொரன்ட் கோப்பிற்கான மென்பொருள் தரவிறங்கஆரம்பித்துவிடும்.

நீங்கள் தரவிறக்கம் செய்யும் போது அங்கே சீட்ஸ் (Seeds) எனும் பகுதிகாணப்படும். முடிந்த வரை இதில் சீட்ஸ் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பகுதியினைதரவிறக்கம் செய்யுங்கள். அப்போது உங்களுக்கு அது விரைவில் தரவிறக்கம் செய்துகொள்ளக்கூடியதாக இருக்கும். மேலும் நீங்கள் தரவிறக்கும் பகுதி தொடர்பாக அதில்கருத்துக்களும் காணப்படும் அவற்றையும் வாசித்து பயன்பெறலாம்.

அத்துடன் நீங்கள் தரவிறக்கம் செய்யும் போது தானாகவே (Automatically) நீங்கள் தரவிறக்கம் (Download) செய்யும் கோப்பு தரவேற்றமாகும். இவ்வாறு தரவவேற்றப்படுவதே அந்த சீட்ஸின்அளவாகும். நீங்கள் தரவிறக்கம் செய்யும் கோப்பு முடிந்ததன் பிறகும் தரவேற்றம்நடைபெறும் நீங்கள் விரும்பினால் அதனை நிறுத்திவிட்டாலும் உங்களுடைய கோப்பிற்குஎந்த ஆபத்துமில்லை. இருப்பினும் முழுமையாக நீங்கள் தரவேற்றத்திற்கு அனுமதிக்கும்போது சீட்ஸின் அளவு அதிகரிப்பதானால் இன்னொருவருக்கு பயனாக அமையும். எனவேபகிர்தலுக்கு முடியுமானால் உதவுங்கள்.

மேலும் இந்த டொரன்ட் மூலம் மென்பொருட்களை மட்டுமன்றி மேலே குறிப்பிட்டவழிமுறைகள் மூலம் புத்தகங்கள், பத்திரிகைகள், அப்லிகேஷன்ஸ், பாடல்கள், திரைப்படங்கள் (Books, Papers, Applications, Songs, movies, etc...) என நீங்கள் பலவற்றினை இலவசமாகவே தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

This post all about Introduction of Torrent