Total Pageviews

Sunday, September 16, 2012

ஐபோன் 5 Vs கலெக்ஸி எஸ்3 (I Phone 5 Vs Galaxy S3)


குழந்தை ஒன்று பிறந்து வளர்ந்த பின்னர் சாதனைகள் படைப்பதொன்றும் அரிதுமல்ல புதிதல்ல பிறப்பிலேயே சாதனை படைக்கும் குழந்தைகள் அரிதிலும் அரிது. அந்த வகையில் இந்த வருடத்தில் வெகு விரைவில் எமது கைகளில் ஒருசேர தவழவுள்ள அப்பிள் ஐபோன் 5 மற்றும் சம்சுங் கலெக்ஸி எஸ்3 (I Phone 5 & Galaxy S3) இவ்விரண்டு மாதிரிக் குழந்தைகளும் பிறப்பிலேயே சாதனை படைத்வை.

சென்ற வருடத்தில் டொப் 10 ஸ்மார்ட் போன்களில் (Top 10 Smart phones) முதலிரு இடங்களையும் பெற்ற அப்பிளின் வெற்றிகரமான படைப்பான அப்பிள் ஐபோன் 4எஸ் (I Phone 4S) மற்றும் வெளியாகி சில நாட்களில் அப்பிள் ஐபோன் 4எஸ் இற்கு சவால் விடுத்த சம்சுங் கலெக்ஸி எஸ்2 (Gallexy S3)ஆகிய இரண்டு ஸ்மார்ட் போன்களினின் தொடர்ச்சியாக வெளியாகவுள்ள அடுத்த இரு மாதிரிகளும் இவ்வருடத்தின் ஆரம்பத்திலேயே ஸ்மார்ட் போன் சந்தையில் தனக்கென பெரும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியது.

குறித்த இந்த இரண்டு வகை மாதிரிகளுக்கும் கிடைத்துள்ள இந்த வரவேற்பிற்கு காரணம் கடந்த வருடத்தில் வெளியான ஐபோன் 4எஸ் மற்றும் கலெக்ஸி எஸ்2 மக்கள் மத்தில் அந்தளவிற்கு வரவேற்பினை பெற்றமையே.


கடந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து உலகின் ஒவ்வொரு பாகங்களாக சம்சுங் கலெக்ஸி எஸ்2 வெளியாக ஆரம்பித்தது. ஆரம்பம் முதலே இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. பின்னர் அப்பிள் ஐபோன் 4எஸ் இன் வருகையினால் இதற்கு சற்று சரிவு ஏற்பட்ட போதிலும் அப்பிள் ஐபோன் 4எஸ் மாதிரி (IPhone 4S Model) ஐபோன் 4 இலிருந்து சற்றே வித்தியாசப்பட்டதனால் கலெக்ஸி தொடர்ந்தும் அதனுடைய ஸ்திர தன்மையை பாதுகாத்துக்கொண்டது.

ஆனாலும் அப்பிளின் ஐபோன் 4எஸ் மாதிரியும் கலெக்ஸியிடம் சரணடையவில்லை. காரணம் ஸ்டீவ் ஜொப்ஸ் (Steve Jobs) இல்லாமல் அப்பிள் வெளியிட்ட முதல் படைப்பு என்பதனால் சற்று அதிகமாகவே 4எஸ் எதிர்பார்க்கப்பட்டது.

ஆரம்பத்தில் சற்று எதிர்மறையான விமர்சனங்களை ஐபோன் 4எஸ் எதிர்கொண்ட போதிலும் அப்பிள் என்றைக்கும் அப்பிள் தான் என்ற பாணியில் ஸ்மார்ட் போன் சந்தையில வீறுநடை போட்டு வெற்றி கண்டது.

இறுதியில் கலெக்ஸி எஸ்2 மற்றும் ஐபோன் 4எஸ் இரண்டு படைப்புக்ளும் மக்களை ஆட்கொண்டு சென்ற ஆண்டின் வெற்றி வகை சூடிய முக்கிய இரு தயாரிப்புக்களும் இவைதான்.
இனி மாற்றங்களை புகுத்தி மக்களின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் வெளியான கலெக்ஸி எஸ்3 மற்றும் ஐபோன் 5 பற்றிய சில முக்கிய குறிப்புக்களை பார்ப்போம்.

இயங்குதளத்தினை பொறுத்தவரை ஐபோன் 5 (Iphone 5) ஆனது தனித்தன்மையுடன் இயங்கும் ஐஓஸ் 6 (IOS 6) இயங்குதளத்தினைக் கொண்டிருக்கின்றது. கலெக்ஸி எஸ்3இல் ஸ்மார்ட் போன் அன்ரொய்ட் ஜெல்லி பீன் 4.1 (Android jelly bean) இயங்குதளம் காணப்படுகின்றது. இதில் சிஸ்டம் அப்டேஷனையும் (System Updation), அன்ட்ரொய்ட் பீம் அப்ளிக்கேஷன் , உயர்ந்த துல்லியம் கொண்ட கொன்டக்ட் போட்டோஸ் (Contact photos), ஒன்-ஸ்கிரீன் நெவிகேஷன் பட்டன் (On Screen navigation Button) ஆகியவற்றையும் இதில் பயன்படுத்தலாம்.





இதனால் ஐபோன் 5 இன் இயங்கு தளத்திற்கு வலுவான போட்டியினை ஏற்படுத்தும் பொருட்டு உயர் தொழில் நுட்பத்தினை கொண்டதாகவே அன்ரொய்ட் ஜெல்லி பீன் 4.1 இயங்குதளம் அமைந்திருந்தபோதிலும் அப்பிள் மெப்ஸ் (Apple maps ), மேம்படுத்தப்பட்ட சிரி அப்ளிக்கேஷன் (Siri Application), புதிய சஃபாரி அப்ளிக்கேஷன் (New Safari Application), ஐக்ளௌட் ஸ்டோரேஜ் (i cloud storage), புதிய போட்டோஸ்ட்ரீம் அப்ளிக்கேஷன் (Photostream application), பேஸ்புக் அப்ளிக்கேஷன் (Facebook Applicatio), டீப்பர் இன்டகிரேஷன் ட்விட்டர் (Twitter), பேஸ்புக் (Facebook) போன்ற ஏராளமான புதிய வசதிகளை (New features) ஆப்பிள் ஐஓஎஸ்-6 இயங்குதளத்தில் பெறலாம்.

தொடுதிரையானது (Touch Screen) ஐபோன் 5 இல் கலெக்ஸி எஸ்3 இனை விட சற்று சிறிதாகவே உள்ளது. ஐபோன் 5இல் 1136 × 640 ரெசலுசன் (Resolution) தொடுதிரையானது ரெடினா எல்.சீ.டி திரையாகவும் (Retina LCD display) 4 இன்ச் அளவுடையதாகவும் காணப்படும் அதேவேளை கலெக்ஸி எஸ்3 இல் 4.8 இன்ச் அமோல்டு தொடுதிரை (AMOLED Plus touchscreen) 1280×720 ரெசலுசன் (Resolution) ஆக உள்ளது.

ஐபோன்-5 ஸ்மார்ட் போனில் ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ-6 புரசசர் (A6 Processor) பொருத்தப்பட்டுள்ள அதேவேளை சம்சுங் கலெக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில் குவாடு கோர் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் (1.4 GHz quad-core Cortex-A9) எக்ஸைனோஸ் 4212 புரசசர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் நோக்கினால் அதி வேகத்தினையும், சிறந்த தொழில் நுட்ப வசதியினையும் கலெக்ஸி எஸ்3 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளமை தெளிவாகின்றது.

அத்துடன் இவ்விரண்டு மாதிரிகளிலும் இதில் 8 (3264 x 2448) மெகா பிக்ஸல் கெமரா காணப்படுகிறது. புகைப்படங்களை இன்னும் அழகாக எடுக்க உதவும். மேலும் மேம்படுத்தப்பட்ட 1.2 மெகா பிக்ஸல் புரண்ட் கெமராவினையும் (1.2 MP front Camera) ஐ போன் 5 கொண்டுள்ளது.

எனவே இந்த இரண்டு தயாரிப்புக்களும் மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் உயர் தொழில் நுட்பங்களின் மூலம் மக்களை விரைவில் தன்வசப்படுத்தும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. இதில் முதலாவதாக வெளியான எஸ்3 ஏற்கனவே வெற்றி நாயகனாக உலா வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த கெலக்ஸி எஸ்3 போட்டியாக அமையும் வண்ணம் ஐபோன் 4எஸ் இற்கு முன்பதாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட் ஐபோன் 5 ஸ்மார்ட் போன் பல மாற்றங்களுடன் இப்போது வெளியாகியுள்ளது.

மேலும் ஐபோன் 5 என்ற மாதிரி 2013ஆம் ஆண்டு 142 மில்லியன் விற்பனையை எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சி இன்னும் அதிகமாகலாம் என்று இந்நிறுவனத்தின் உயர் அதிகாரியான ஜெனி மன்ஸ்டர் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும் ஐபோன் 5 இற்கு நிச்சயம் சவால் விடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சம்சுங் கலெக்ஸி எஸ3 இன் வெளியீடு அமைந்துள்ளமையால் பொறுத்திருத்திருந்தே இவ்விரண்டு மாதிரிகளுக்குமான வியாபார போட்டியினை அவதானிக்கலாம்.
குறிப்பாக சம்சுங் நிறுவனம் அப்பிளின் தொழில்நுட்பத்தினை உரிமம் பெறாமல் பயன்படுத்தியமையினால் நீதிமன்றத்தினால் நட்டஈடு விதிக்கப்பட்ட இந்நிலையில் அப்பிள் ஐ போன் 5 வெளியாவதனால் எதிர்பார்ப்புகளுக்கு பஞ்சமில்லை என்பது மட்டும் உறுதி.

ஸ்மார்ட் போன் சந்தைக்கு புதிதாக களமிறங்கியுள்ள இந்த இரண்டு உற்பத்திகளும் ஏனைய உற்பத்திகளுக்கு பலத்த பலத்த சவால் விடுக்குமளவுக்கு வளர்ந்து நிற்பதனால் ஸ்மார்ட் போன் சந்தையில் மேலும் பல உயர் தொழில் நுட்ப ஸ்மார்ட் போன்களை இந்த வருடத்தில் அனுபவித்து மகிழ வாய்ப்புக்கள் அதிகமாகவே உள்ளது.

சம்சுங் நிறுவனத்தின் கெலக்ஸி எஸ்3 ஸ்மார்ட்போன் அறிமுகமாக 2 மாதங்களிலேயே 10 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியது. இந்நிலையில் அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 5 ஸ்மார்ட்போனின் விற்பனை எப்படியிருக்கும்? நுகர்வோராகிய உங்களின் கைகளிலுள்ள பணத்திலேயே...!

ஏ.எம்.ஆர்