இவவாறான ஒரு மேதைக்கு ஹொங்கொங்கிலிருக்கும் மெடமே டுசாட்ஸ் (Madame Tussauds) என்ற நிறுவனம் ஸ்டீவ் ஜொப்ஸ் மறைந்து ஓராண்டு முடிவறும் இத்தருணத்தில் அவருடைய உருவத்தை மெழுகில் வடித்திருக்கிறது.
இந்த மெழுகு உருவச் சிலையை செப். 27ல் திறந்து வைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்டீவ் ஜொப்ஸ் இறந்த போது அப்பிள் இணையத்தளத்தின் முகப்பு பக்கத்தில் (Home Page) வெளியிட்ட படத்தினை ஒத்த உருவத்தையே குறித்த நிறுவனம் மெழுகில் வடிவமைத்திருக்கின்றனர்.
இந்த மெழுகுச் சிலையை வடிவமைக்க 15 லட்சம் ஹொங்கொங் டொலர்கள் செலவானதாக இதனை வடித்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர். மேலும் இந்த சிலையை வடிவமைக்க 3 மாதங்கள் தேவைப்பட்டதாகவும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.
ஸ்டீவ் ஜொப்ஸின் மெழுகுச் சிலையை இம்மாதம் 27 முதல் நவம்பர் 26 வரையில் இதனை வடிவமைத்த ஹொங்கொங் நிறுவனத்திலும் பின்னர் ஷாங்காயிலுள்ள அதன் கிளை நிறுவனத்திலும் வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கு முதல் ஹங்கேரியிலுள்ள கிராபி சொப்ட் என்ற நிறுவனம் ஸ்டீவ் ஜொப்ஸின் வெண்கல சிலை ஒன்றினை ஹங்கேரியிலுள்ள கிராபி சொப்ட் பார்க்கில் நிறுவிமை குறிப்பிடத்தக்கது.
அப்பிள் நிறுவனத்தினை உருவாக்கியருக்கு இதுவரையில் அப்பிள் நிறுவனம் மட்டும் மரியாதை நிமித்தமாக எதுவும் பெரிதாக செய்ததாகத் தெரியவில்லை. அது சரி மாற்றன் தோட்டத்து மல்லிகைக்கு மணம் கொஞ்சம் தூக்கல் என்பது உண்மைதான் போல தெரிகிறது.
வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி ஸ்டீவ் ஜொப்ஸ் மறைந்து ஓர் ஆண்டாவதை முன்னிட்டாவது அப்பிள் நிறுவனம் ஏதாவது செய்யுமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.
Madame Tussauds Unveils Pictures of Steve Jobs Wax Figure
To commemorate the one-year anniversary of Steve Jobs's death, Madame Tussauds Hong Kong will have on display a wax figure of the Apple co-founder starting at the end of September. To give fans a glimpse at what they could expect, the wax museum today unveiled some photos of the Jobs wax figure in the process of being made.
According to Madame Tussauds, the figure's pose was inspired by photographs Jobs took for the cover of Fortune magazine ins 2006. The statue will have him wearing his signature black mock turtleneck, blue jeans, and Lunor glasses. The museum says it took artists three months to create the statue and ran up a bill of $193,476.
That Steve Jobs wax figure will be on display at Madam Tussauds Hong Kong from September 27 to November 26. After that, it's going on a tour to Madame Tussauds Bangkok and then Madame Tussauds Shanghai.