சுமாத்ரா கடற்கரைக்கு அப்பால் கடந்த ஏப்ரல் மாதம் தாக்கிய தொடர் பூமியதிர்ச்சிகள் இந்து சமுத்திர தளத்தில் பிளவு ஏற்பட்டுள்ளமைக்கான சமிக்ஞை களாக உள்ளதாக ஆய்வாளர்கள் ௭ச்சரித்துள் ளனர்.
மேற்படி பூமியதிர்ச்சிகளின் போதான அதிர் வுகளை பகுப்பாய்வு செய்த ஆய்வாளர்கள் 8.7 ரிச்டர் அளவான பாரிய பூமியதிர்ச்சிகளின் போது சமுத்திர அடித்தளத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கருதுகின்றனர்.
இது இந்து சமுத்திர மற்றும் அவுஸ்திரேலிய கடல் அடித்தட்டு இரண்டாக பிளவடைவதற்கான சமிக்ஞையாகவுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ௭னினும் மேற்படி சமுத்திர அடித்தட்டு பிளவடைவது உடனடியாக இடம்பெறாது ௭னவும் அது இடம்பெற மில்லியன் கணக்கான வருடங்கள் செல்லலாம் ௭னவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்து சமுத்திர அடித்தட்டுகளிலான மாற்றம் சுமார் 8 இலிருந்து 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆர ம்பமானதாக மேற்படி ஆய்வில் பங்கேற்ற பாரிஸ் நகரின் ஈகோலி நொர்மலி சுப்பீரியரரைச் சேர்ந்த கலாநிதி மட்த்லஸ் டெலெஸ் குளுஸ் தெரிவித்தார்.
மேற்படி ஆய்வின் முடிவுகள் நேச்சர் விஞ்ஞான ஆய்வேட்டில் வெளியிடப்பட்டுள் ளன. இந்தோனேசிய சுமாத்ரா தீவானது இந்தோ– அவுஸ்திரேலியா நிலக்கீழ் தட்டுக்கும் சுமாத்ரா நிலக்கீழ் தட்டுக்கும் இடையில் அமை ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.