இருப்பினும் இதுவரையில் அங்கு நீர் இருப்பதனை உறுப்படுத்தும் அளவிற்கு திருப்திகரமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது நீர் இருப்பதனை ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலமைந்த படங்களை நாசாவிற்குச் சொந்தமான கியூரியோசிட்டி என்ற விண்கலம் மூலம் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பிவைத்துள்ளது.
இதில் உருளையான கூழாங்கற்கள் நிறைந்த நிலப்ப பரப்புக்கள் பல மிகத் தெளிவாக காணப்படுகிறது. இதனால் ஆராய்ச்சியாளர் பெரும் மகிழ்சியில் உள்ளதுடன் இதனை செவ்வாய்க் கிரகம் தொடர்பான ஆராய்ச்சிகளின் அடுத்த கட்டமாகவும் கருதுகின்றனர்.
இது தொடர்பில் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதம விஞ்ஞானி ஜோன் கிரொட்சின்கர் கருத்து வெளியிடுகையில், உண்மையில் கியூரியோசிட்டி மூலமான ஆராய்ச்சிகள் மகிழ்சியைத் தருகின்றது.
Spot the difference: The Martian landscape, left, is similar to bedrock formations on Earth, right |
ஆனால் செவ்வாய் கிரகத்தின் காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆச்சரியத்தக்க வகையில் அமைந்துள்ளது. இரவு நேரங்களில் சாதாரணமாக -70 பாகை வரையில் வெப்பநிலை குறைவடையும்.
இதனால் உறைந்த பாலை நிலமாக காணப்படும் ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் ஆராய்சியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றோம் என்றார்.
தற்போது செவ்வாயின் வெப்பநிலை 0 பாகையிலிருந்து 20 பாகை வரையில் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களும் அவ்வப்போது ஏற்படுகின்றமையால் நீர் இருப்பின் அதனை கண்டுபிடிப்பது சற்று இலகுவாக அமையும் என்பதே தற்போதையே எதிபார்ப்பாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Carved out: These rounded rocks on Mars were probably caused by running water, according to scientists |