Total Pageviews

Sunday, September 9, 2012

நீருக்காக ஓர் உலகப்போர்!


தக்கன பிழைத்தலும் தகாதன அழிதலும் உலகில் உயிரினங்களின் அழிவிற்கும் உருவாக்கத்திற்கும் காரணம் என சொல்லப்படுகிறது. இக் கொள்கையின் அடிப்டையிலேயே மனிதன் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.
உலகில் ஒரு சில விடயங்களைத் தவிர்த்து ஏனைய அனைத்து விடயங்களுக்கும் மாற்றீட்டினை மனிதனால் உருவாக்கிக்கொள்ள முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் இயற்கையின் சித்தம் எதுவாக இருந்தபோதிலும் மனிதன் அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.


வலியது உயிர்பிழைக்கும் ஆனால் எத்தகைய ஆற்றல் மிக்க ஜீவராசியும் உயிரின் ஆதாரமான நீர் இன்றி உயிர் வாழ்வதென்பது சாத்தியமாகாது என்பது நிதர்சனமானது. அவ்வாறானதொரு நிலையிலேயே இன்று நாம் பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் வாழப்போகின்றோம்.

ஆனால் இன்று நீரின் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை உலக மக்களிடையே பெரும் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. இன்று உலகில் தங்கம்இ வைரம்இ வைடூரியம் என மதிப்புமிக்க பல பொருட்களாகக் கருதி அவற்றையெல்லாம் சேமிக்கின்றோம். இருப்பினும் இந்த சேமிப்புக்கள் ஒரு போதும் எமது அடுத்த சந்ததியினைக் காப்பாற்றப்போவதில்லை.

2100இல் உலக தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அப்படி இருக்கும் இப்படி இருக்கும் எனக் கனவு காணும் நாம் 2100 க்கு பின்னர் நீர் இருக்குமா என்று ஒருபோதும் சிந்திப்பதில்லை. பதிலாக நீரை சிந்தவிட்டுக்கொண்டிருக்கின்றோம். 2100ஆம் ஆண்டு காலப்பகுதியில் அதிக விலைமிக்க பொருளாக நீர் அமைந்துவிட்டாலும் ஆச்சரியமில்லை. அந்தளவுக்கு குடி நீரின் அளவு வெகுவாகக் குறைந்து வருவதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகில் ஒரு சில விடயங்களைத் தவிர்த்து ஏனைய அனைத்து விடயங்களுக்கும் மாற்றீட்டினை மனிதனால் உருவாக்கிக்கொள்ள முடியும் என்பது மறுக்கவோ மறைக்வோ முடியாத உண்மை. ஆனால் இயற்கையின் சித்தம் எதுவாக இருந்தபோதிலும் மனிதன் அதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.


கண்டுபிடிப்புக்களின் உச்சத்தில் மனிதன் இருக்கிறான் என நாம் தற்பெருமையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். உண்மையில் இயற்கையின் கண்டுபிடிப்புக்களுடன் எமது கண்டுபிடிப்புக்கள் ஒன்றும் ஒருபோதும் உயர்ந்து விட வில்லை என்ற உண்மையை மானிடக் கண்டுபிடிப்புக்கள் மறைத்துக் கொண்டிருக்கிறது.

இதனால் கண்டுபிடிப்புக்கள் அவசியமில்லை என ஒரு போதும் கூறிவிட முடியாது. இயற்கைக்கு சவால் விடும் கண்டுபிடிப்புக்களே அவசியமில்லை. ஆனால் மனித வர்க்கத்தின் கண்டுபிடிப்புக்கள் ஒவ்வொன்றும் இயற்கைக்கு சவால் விட்டுக்கொண்டுதான் இருக்கின்றது.ஏனெனில் இது வரையில் இல்லாத அளவிற்கு தற்போது இயற்கை மனித குலத்திற்கு மாறு செய்கின்றது. காரணம் நாம் இயற்கைக்கு எதிராக விதைத்தது திணைகளை அல்ல வினைகளைத்தான் என்பது எண்ணிப் பார்க்கும் போதே புரிகிறது.

நாம் செய்த வினைகளின் விளைவில் ஒன்றுதான் பூமியில் மனிதன் வாழ மிக முக்கிய காரணிகளில் ஒன்றான நீர் எம்மை விட்டு செல்ல முனைகிறது. புவி எனும் கிரகத்தை தவிர்த்து உயிரினங்கள் வாழ இதுவரையில் மனித குலம் வேறு எந்த கிரகத்தினையும் கண்டு பிடிக்கவில்லை.

எனவே ஜீவராசிகள் பயன்படுத்தத்தக்க நீர் இந்த பூமியில் இல்லாது போனால் ஜீவராசிகளின் நிலை என்ன? தக்கன பிழைத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை காரணம் உயிரினங்களின் ஆதாரமே நீர் தான்.
நீரின்றி அமையாது உலகெனில் யார்யார்க்கும்
வானின்றி அமையாது ஒழுக்கு.
என்ற வள்ளுவரின் வரிகளும் எமக்கு எடுத்தியம்புவது உயிர்களின் அடிப்படை நீர் என்பதனையே.

உடலில் மட்டுமல்ல உலகிலும் மூன்றிலிரண்டு பங்கு நீர்தான் காணப்படுகிறது. பூமியில் மொத்தம் 71 சதவீதம் நீரின் பகுதியாகும். இதில் 97.5 சத வீதம் சமுத்திரங்களில் காணப்படுகிறது. எஞ்சிய 2.5 சத வீதமான நீரே நிலத்தடி நீராகவுள்ளது. இதிலும் பனிப்பாறைகள், பனித்தரைகளிலிருந்து மிச்சமான 0.26 வீதமான நீரையே உலகிலுள்ள சுமார் 7 பில்லியன் மக்களும் பயன்படுத்துகின்றனர்.

தற்போதுள்ள சனத்தொகையில் வாழும் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் மக்கள் சுத்தமான குடிநீர் இன்ற தவிக்கின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் 2025ஆம் ஆண்டளவில் உலக சனத்தொகை 8 பில்லியன்கள் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அப்போதைய நிலைமையை சிந்தித்துப் பாருங்கள்.

இதனை உணர்த்துவதற்காக 1992 ஆம் ஆண்டு சுற்றுச் சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த கூட்டத்தில் உலக நீர் தினத்தினை உருவாக்கி மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த திட்டம் வகுத்தது.

நீரின் தேவை அதிகரிக்கின்ற போதிலும் அதன் உற்பத்தி போதுமானதாக இல்லை. இதற்கு காரணம் இயற்கை அல்ல மனிதர்களாகிய நாமே என்பதில்தான் வருத்தம்.

சொந்த செலவில் சூனியம் வைப்பதில் வல்லவர்கள் நாம். எமது நிலைகளை உயர்த்த தொழிற்சாலைகள், குடியிருப்புக்கள் மற்றும் பல தேவைகளுக்கென ஓங்கி வளர்ந்த மழை தரு காடுகளை அழித்து மழை நீருக்கு முட்டுக்கட்டை போட்டது யார் குற்றம்?

தண்ணீருக்கு மாற்றுப்பொருள் இதுவரையிலும் இல்லை இனியும் வரப்போவதில்லை என்ற உண்மையை அறிந்திருந்தும் மனிதனின் மழைக்கும் நீருக்கும் எதிரான செற்பாடுகளை குறைத்தாக தெரியவில்லை. எனவே மனிதனின் தற்போதைய கண்டுபிடிப்புக்கள் மின்சாரம் இல்லாத ஊருக்கு மின்குமிழ் விற்கப்போனவன் கதையாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.


மென்பானங்கள் தயாரிப்புக்கு என நிறுவப்படும் தொழிற்சாலைகளில் நிலத்தடியிலிருந்து குழாய் மூலம் உறுஞ்சப்படும் நீரினால் தொழிற்சாலை அமைந்திருக்கும் குறித்த பிரதேசத்தில் வறட்சி ஏற்படும் என்பது திண்ணம் இருந்தாலும் மென்பானங்களினால் ஈட்டும் வருமானத்தை நிறுத்த மனிதனுக்கு மனம் இடம் கொடுக்காதது ஏனோ?

இவ்வாறான தொழிற்சாலைகள் உறுஞ்சுவது நீரினை அல்ல மனித இரத்தத்தையும் அடுத்த சந்ததியின் கருமூலங்களையும் என்பதை உணர்ந்தும் இவ்வாறான தொழிற்சாலைகளை தவிர்ப்பதற்கான எவ்வித நடவடிக்கைளும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

இதே போன்று வேறு சில தொழிற்சாலைகள் தங்களது கழிவுகளை ஆறுகள், குளங்களில் வெளியேற்றுவதனால் இரசாயண மாற்றங்களினால் நீரின் தன்மை மாற்றடைகின்றது. இதனால் பயன்பாட்டுக்கு உகந்த நிலையை நீர் இழக்கிறது.

இப்போதுதான் காற்றிலிருந்து நீரினை பிரித்தெடுக்கும் இயந்திரம், அசுத்தமான, கடல் நீரிலிருந்து பருகும் நீரினை பெற்றுக்கொள்ள இயந்திரம் என எங்களது கண்டுபிடிப்புக்கள் எங்களை பாதுகாக்கும் எனவே எப்படியெல்லாம் நீரினை அசுத்தப்படுத்தினாலும் எங்களது கண்டுபிடிப்புக்கள் எங்களை காப்பாற்றும் என நிச்சயம் எண்ண வேண்டாம்.

பயன்படுத்ததக்க நீரினை குறைக்குமளவுக்கு பயன்படுத்த முடியாத நீரினை அதிகரிக்கவும் காரணமாக நாம் அமைந்துவிட்டோமே இதனால் ஏற்படப்படப்போகும் ஆபத்து மிகப்பெரியது.

உலக வெப்பமயமாதலினால் துருவப்பனிப்பாறைகள் ஒரு நாளல்ல ஒவ்வொரு நாளும் உருகிக்கொண்டிருப்பதனால் கடல் நீர் மட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் அடுத்த 90 ஆண்டுகளில் கடல் நீர் மட்டம் 2 அடி உயரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த 1 தொடக்கம் 2 நூற்றாண்டுகளில் 6 அடி வரை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கடல் நீர் மட்ட உயர்ச்சியின் காரணமாக உலகின் பல தீவுகள் அழியும் அபாயத்தை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறது. எனவே கால ஓட்டத்தில் வெப்பமயமாதலினால் பனிப்பாறைகளின் உருகல் அதிகரித்து மொத்த பனிப்பாறைகளும் உருகினால் உலகில் மனிதன் வாழ நிலப்பரப்புக்களே காணப்படாமல் போய்விடும் சாத்தியம் உண்டென்பதால் எமது கண்டுபிடிப்புக்களை எங்கே சுமந்து செல்வது.

செல்லுவதற்கு திக்கற்று நிற்கும் எமக்கு எதற்காக இந்த வீணான வீராப்புக்கள். நீரின் மகத்துவங்களை உணர்ந்த நாம் அதனை பாதுகாப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

இனி ஒரு உலகப் போர் ஏற்படுமேயானால் அது நீருக்கான ஒரு போராகவே இருக்குமே அன்றி வேறு எதற்காகவும் அல்ல என கடந்த 20 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் அறிவியலாளர்களும் சமூக அறிஞர்களும் கூறிவருகின்றார்கள் உண்மையில் இதற்கான அறிகுறிகள் பெரிய அளவில் இன்று காணப்படுகிறது.

முன்னொரு காலத்தில் கோடை காலங்களில் வீட்டுகளுக்கு வெளியே குடங்களில் நீர் நிரப்பி வைப்பார்களாம் தாகத்தில் வரும் வழிப்போக்கர்களுக்காக இன்றும் வீடுகளுக்கு வெளியே குடங்கள் உள்ளது ஆனால் இவை எதிர்பார்த்துக்கொண்டிருப்பது வழிப்போக்கர்களை அல்ல நீரின் வருகையை.இது வீடுகளுக்கு மட்டுமல்ல நாடுகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.

 2006ஆம் ஆண்டு ஐ.நா அறிக்கையில் 'அனைவருக்கும் போதுமான நீர் உள்ளது' என தெரிவித்திருந்தது. ஆனாலும் தவறான நிர்வாகம், அரசியல் பின்னணியே தனி நபருக்கான நீரின் அளவை மட்டுபடுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவும் ஒரு வகையில் உண்மையாக இருக்கலாம். இந்தியா என பெயர் வர காரணமா இருந்த சிந்து நதியே இன்று பாகிஸ்தானில் தானே பாய்ந்து கொண்டிருக்கிறது. இந் நதி கேஷ்மீர் ஊடாகவும் செல்கின்றது.

கேஷ்மீரில் ஓடும் முக்கிய 6 நதிகளில் 3 நதிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது மீதி 3 நதிகளுக்காக இரு நாடுகளும் முட்டிக்கொண்டுதான் இருக்கிறது.

இதே போல ஆபிரிக்காவின் பல நாட்டு வயல்களுக்குச் செழிப்பும், மனிதருக்கு உயிரும் ஊட்டுவதுடன், எகிப்தின் நாகரீக வளர்ச்சிக்குப் பல்லாயிரம் ஆண்டுகள் உறுதுணையும் புரிந்த உலகின் அதி நீளமான நைல் நதிக்காகவும் குறித்த நாடுகளிடையே பிணக்குகள் காணப்படுகிறது.

சிங்கப்பூர், மலேசியா இடையே, டைக்ரீஸ், யூபரடீஸ் நதிகளால் துருக்கிக்கும் சிரியாவுக்மிடையே என பல நாடுகளிடையே இன்று நீரினால் பிரச்சினைகள் பல முற்றிக்கொண்டு வருகிறது.

அரசியல் ஆசைகளுக்காகவும் தனிமனிதர்களின் ஆசைகளுக்கு நிலங்களை கூறு போட்ட நாம் நீரினை கூறு போட முனைவதால் எத்தனை உயிர்கள் மாய்க்கப்படுகின்றது.

தனிமனிதர்களுக்கான ஜீவனை வழங்கும் ஜீவ நதிகள் பல இருந்தும் பயன்படுத்த முடியாக துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம். இம்மாதிரியான செயற்பாடுகளினால் நீரின் தேவைகளை பூர்த்தி செய்முடியாமல் இன்று நீர் தொடர்பான நோய்களால் வளரும் நாடுகளில் 80 சதவீதமானோர் நீர் சார்ந்த நோயினால் பலியாகின்றனர் இப்படி ஒரு நாளைக்கு இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 40 ஆயிரம் என தெரிவிக்கப்படுகிறது.

காரணங்களை அறிந்த பின்னாலும் பிரச்சினை முற்றுப்புள்ளி வைக்க நாம் முன்வராவிட்டால் மனிதர்களுக்கு ஆறறிவு என மார்தட்டிக்கொள்வதில் அர்த்தம் இல்லை.

எம்மை நோக்கி வந்து மட்டுமல்ல விலகிச் சென்றும் அழிக்கும் வல்லமை கொண்ட நீரினை எம்மை விட்டு விலகிச்செல்லாமல் இருக்க இனியாவது வழி சமைப்போம் இன்றே.

உலகம் மனிதனுக்கானதல்ல உலகில் ஒரு அங்கமே மனிதன் என்பதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ளவேண்டி ஒன்று. உலகை நம்பி வாழும் ஒட்டுண்ணிகளில் நாமும் ஒன்று என்பதால் நாம் உலகிற்கு உதவியாக இல்லாவிட்டாலும் உபத்திரவம் இல்லாமல் இருக்கலாமே.

இனி நாம் எதிர்கால சந்ததிகளுக்காக பாதுக்காக்க வேண்டியது (Sustainable Usage) பெற்றோல், மூங்கில், இயற்கை இறப்பர் என்று எவற்றையெல்லாமோ வகைப்படுத்திக் கொண்டிருக்கிறோம் ஆனால் உண்மையில் எதிர்கால சந்ததிக்காக விட்டுசெல்ல மட்டுமல்ல எதிர்கால சந்ததியையே விட்டுவைக்க நாம் பாதுகாக்க வேண்டியது நீர் என்பதனை நினைவில் வைத்து இன்று முதல் எமது கண்முன்னே குழாய் வழியாக சிந்தும் நீரினை அடைப்பது முதல் எமது நீருக்கான சேமிப்புக்களை ஆரம்பிப்போம்.

இனியும் வேண்டாம் ஒரு உலகப்போர் காரணம் ஏற்படப்போவது அணுகுண்டால் அல்லவே அதனை விட ஆபத்தை விளைவிக்கக் கூடிய நீரினால் என்பதனால்.

ஏ.எம்.ஆர்.




This post has been published in Tamil News paper which article Heading world war for Water

Notable datas  :

***Water covers 71% of the Earth's surface, and is vital for all known forms of life. On Earth, 96.5% of the planet's water is found in oceans, 1.7% in groundwater, 1.7% in glaciers and the ice caps of Antarctica and Greenland, a small fraction in other large water bodies, and 0.001% in the air as vapor, clouds (formed of solid and liquid water particles suspended in air), and precipitation. Only 2.5% of the Earth's water is freshwater, and 98.8% of that water is in ice and groundwater. Less than 0.3% of all freshwater is in rivers, lakes, and the atmosphere, and an even smaller amount of the Earth's freshwater (0.003%) is contained within biological bodies and manufactured products.

***Safe drinking water is essential to humans and other lifeforms. Access to safe drinking water has improved over the last decades in almost every part of the world, but approximately one billion people still lack access to safe water and over 2.5 billion lack access to adequate sanitation. There is a clear correlation between access to safe water and GDP per capita. However, some observers have estimated that by 2025 more than half of the world population will be facing water-based vulnerability. A recent report (November 2009) suggests that by 2030, in some developing regions of the world, water demand will exceed supply by 50%. Water plays an important role in the world economy, as it functions as a solvent for a wide variety of chemical substances and facilitates industrial cooling and transportation. Approximately 70% of the fresh water used by humans goes to agriculture.

***The Ancient Greek philosopher Empedocles held that water is one of the four classical elements along with fire, earth and air, and was regarded as the ylem, or basic substance of the universe. Water was considered cold and moist. In the theory of the four bodily humors, water was associated with phlegm. The classical element of Water was also one of the five elements in traditional Chinese philosophy, along with earth, fire, wood, and metal.

***Water is also taken as a role model in some parts of traditional and popular Asian philosophy. James Legge's 1891 translation of the Dao De Jing states "The highest excellence is like (that of) water. The excellence of water appears in its benefiting all things, and in its occupying, without striving (to the contrary), the low place which all men dislike. Hence (its way) is near to (that of) the Tao" and "There is nothing in the world more soft and weak than water, and yet for attacking things that are firm and strong there is nothing that can take precedence of it—for there is nothing (so effectual) for which it can be changed.

***In a report published in June 2007, the United Nations Environment Programme estimated that global warming could lead to 40% of the world population being affected by the loss of glaciers, snow and the associated meltwater in Asia. Historically Meltwater pulse 1A was a prominent feature of the last deglaciation and took place 14.7-14.2 thousand years ago

***Water conflicts can occur on the intrastate and interstate levels. Interstate conflicts occur between two or more neighboring countries that share a transboundary water source, such as a river, sea, or groundwater basin. For example, the Middle East has only 1% of the world's freshwater shared among 5% of the world's population.[23] Intrastate conflicts take place between two of more parties in the same country. An example would be the conflicts between farmers and industry (agricultural vs industrial use of water).

***According to UNESCO, the current interstate conflicts occur mainly in the Middle East (disputes stemming from the Euphrates and Tigris Rivers among Turkey, Syria, and Iraq; and the Jordan River conflict among Israel, Lebanon, Jordan and the Palestine territories), in Africa (Nile River-related conflicts among Egypt, Ethiopia, and Sudan),[2] as well as in Central Asia (the Aral Sea conflict among Kazakhstan, Uzbekistan, Turkmenistan, Tajikistan and Kyrgyzstan). At a local level, a remarkable example is the 2000 Cochabamba protests, depicted in the 2010 Spanish film Even the Rain by Icíar Bollaín.

***Some analysts estimate that due to an increase in human consumption of water resources, water conflicts will become increasingly common in the near future.
During World War One, the Battle of Beersheba (1917) was fought with the expressed intention of securing water resources in Palestine.

***World Water Day has been observed on 22 March since 1993 when the United Nations General Assembly declared 22 March as World Day for Water