Dr. ஸ்ரீனிவாசனின் ஆதரவாளர்கள் பலரும் இந்த விடயம் குறித்த உண்மை நிலை தெரியாமல் திண்டாட்டத்தில் உள்ளனர்.
மேலும் 10 கோடி ரூபா பண மோசடி குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தான் தயாரிக்காத சங்கரின் ஐ, சந்தானத்துடன் கண்ணா லட்டு தின்ன ஆசையா உட்பட ஏராளமான படங்களிலும் சொந்தத் தயாரிப்பில் சுமார் 7 படங்களிலும் நடித்துவருகிறார் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்.
இந்நிலையில், இன்று சென்னை பொலிஸ் நிலையத்திலிருந்து வந்த அழைப்பின் பெயரில் அங்கு சென்ற போது 10 கோடி ரூபா பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி ஸ்ரீனிவாசன் மீது விசாரணை நடத்தியாக தெரிவிக்கப்படுகிறது.
உண்மையில் பவர் ஸ்டாரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்தே மேற்படி விசாரணை இடம்பெற்றாதாக அதிகாரபூர்வமற்ற சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
நான் பணம் சம்பாதி;ப்பதற்காக திரைப்படத்துறையில் நுழையவில்லை என ஒவ்வொரு பேட்டியிலும் கூறிவருகிறார் ஸ்ரீனிவாசன். அது உண்மையாகவே இருக்கும் என நம்பலாம் ஏனெனில் அவரின் படங்களை பார்க்கும் போதே அது தெரிகிறது.
ஒரு படத்தினை தயாரிக்கும் போது அதில் சுமார் 200 குடும்பங்களை வாழ வைக்க முடியும் என நம்புகிறார் அவர் மேலும் அதனை செய்தும் வருகிறார்.
எனவே நல்லெண்ணத்தில் சினிமாவிற்கு வந்த அடிப்படையில் செல்வந்தரான இவர் வெறும் 10 கோடியினை மோசடி செய்திருப்பாரா? என்ற கேள்வியே தற்போது அனைவரது மனதிலும் உள்ளது.
நீயா? நானா? நிகழ்ச்சியில் கோபிநாத்தின் ஏளனப்பார்வையில் சிக்கிய ஸ்ரீனிவாசன் சற்றும் அசராமல் அவருக்கு பதிலளித்த அந்த நிகழ்வின் பின்னர் பலரது ஆதரவினை பெறத்தொடங்கினார் ஸ்ரீனிவாசன். தற்போது பவர் ஸ்டார் என்ற நாயகனுக்கு ரசிகர்கள் இல்லாமல் இருக்கலாம் ஸ்ரீனிவாசன் என்ற மனிதனுக்கு ஏராளமான ஆதரவாளர்கள் இன்று தமிழகத்தில் உள்ளனர்.
இதனால் ஸ்ரீனிவாசன் தொடர்பில் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகளவான கருத்துக்கள் வெளிவருவதுடன் அவற்றில் பலவும் அவருக்கு ஆதராவாக இருப்பதனையும் அவதானிக்கலாம்.
இது மட்டுமல்லாமல் இந்த மோசடி குற்றாச்சாட்டு தொடர்பிலான அதிகாரபூர்வ தகவல்களை அறிய பலரும் ஆர்வமாக உள்ளனர் என்பதும் நன்கு புலப்படுகிறது. எனவே நாமும் காத்திருப்போம் உண்மை வெளிச்சத்திற்கு வரும் வரை...
சமூக வலைத்தளத்திலிருந்து பெற்ற பவர் ஸ்டாருக்கு ஆதரவான கருத்தில் ஒன்று இது : ஆரம்பத்தில் ஸ்ரீனிவாசனை விளையாட்டாக எடுத்துக்கொண்ட பலர் தற்போது அவரின் வளர்ச்சியை கண்டு ஆச்சரிப்படுகின்றனர் என்பது மட்டும் திடமான உண்மை.
எது பவர் ஸ்டார் கைதா? இனி தமிழ் நாடே பத்திக்குமே!
Power Star has been arrested!
Power Star Dr. Sreenivasan has been taken into police custody for interrogation in the 10-crore scam. The actor is currently playing an important role in the Shankar-directed I and has several other films in his pipeline.
While sources say that Power Star has been called in for interrogation by the Chennai police, other unconfirmed sources point out that he has been arrested and taken into custody. Power Star’s fans are deeply agonized over this news and are waiting for official confirmation on this.