Total Pageviews

Thursday, October 11, 2012

பேரு 'மினி' போட்டி மெகா : அப்பிளைத் தொடந்து சம்சுங்


அப்பிள் நிறுவனத்தின் ஐ பேட் மினி விரைவில் சந்தைக்கு வரவுள்ள இந்நிலையில் சம்சுங் நிறுவனமானது எஸ் 3 மினி எனும் ஸ்மார்ட் போனை வெளியிட திட்டமிட்டுள்ளது.

அப்பிளிற்கு எப்போது சிம்மசொப்பனமாக திகழும் சம்சுங் நிறுவனம் எப்போதுமே அப்பிளிற்கு போட்டியாகவே ஒவ்வொரு உற்பத்திகளையும் வெளியிட்டு அதில் வெற்றி பெற்றும் வருகின்றது. ஆனால் அப்பிள் போட்ட வழக்கில் தான் சம்சுங்கால் வெற்றி பெற முடியவில்லை.

சம்சுங் உற்பத்திகளில் பயன்படுத்திய சில தொழில்நுட்பங்கள் அப்பிளிலிருந்து திருடப்பட்டதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் அப்பிள் நிறுவனம் வெற்றிபெற்றதோடு பல கோடி ரூபாவினையும் நஷ்ட ஈடாக பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது அப்பிள் நிறுவனம் ஐபேட் மினி என்ற தயாரிப்பினை இம்மாதம் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு சில நாட்களில் சம்சுங் நிறுவனம் எஸ்3 மினி என்ற ஸ்மார் போன் ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

கீரைக்கடைக்கே எதிர்க்கடை இருக்கையில் அப்பிள் கடைக்கு இருக்காத என்ன? என்ற வகையில் அமைந்துள்ளது சம்சுங் நிறுவனத்தின் இத்திட்டம். ஆனாலும் இது சம்சுங் உற்பத்திகளை விரும்புவோருக்கு இனிப்பூட்டும் செய்தியாகவே உள்ளது.

எஸ் 3 மினி ஆனது விற்பனையில சாதனை படைத்த எஸ் 3 வரிசையில் விலை குறைந்த ஸ்மார்ட் போனாக வெளிவரவுள்ளது. மேலும் ஐரோப்பிய சந்தையில் 4.0 அங்குல திரையைக் கொண்ட ஸ்மார்ட் போன்களுக்கு நல்ல கேள்வி நிலவுவதை கருத்தில் கொண்டே இம்மாதிரியை வெளியிடவுள்ளதாக சம்சுங் தெரிவிக்கின்றது.



இதன் தோற்றமானது செம்சுங் கெலக்ஸி எஸ் 3 இனை ஒத்தது எனினும் சற்று சிறியது. மேலும் Samsung Galaxy S3 Mini GT-I8190 தொடர்பாக வெளியாகியுள்ள சில தகவல்கள் இங்கே


Display: 4.0 inch Super AMOLED display with 800 × 480 pixels, 16.67 million colors, capacitive touchscreen, multi-touch
CPU: STE U8420 dual-core 1.0 gigahertz
wireless standards: HSPA 14.4/5.76 900/1900/2100, EDGE / GPRS 850/900/1800/1900
Camera: 5 megapixel with auto focus and LED Flash, Resolution 2592 x 1944 pixels / VGA front
RAM: 1 GB
flash memory: 16 GB, MicroSD card slot (max 32 GB)
Operating System: Google Android 4.1 “Jelly Bean”
Connections: MicroUSB port, 3.5mm Audiojack
Wireless: Bluetooth 4.0, WiFi a / b / g / n 2.4/5GHz, DLNA, NFC (UICC , optional)
Battery: 1500 mAh
Dimensions: 121.55 x 62.95 x 9.85 mm
Housing Material: Plastic


இம்மாதிரியானது அப்பிள் ஐபேட் மினி வெளியாவதற்கு முன்னேரே வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேருதான் மினி ஆனாலும் போட்டி மெகா!!!