சிட்டிக்கு பதில் இங்கு சிகிச்சை மேற்கொண்ட ரோபோ 'டாவின்சி' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரோபோவிற்கு 4 கைகள் உண்டு. இச்சத்திரசிகிச்சையின் போது டாவின்சியை ரிமோட் ஒன்றினூhடாகவே கட்டுப்படுத்தியுள்ளனர். (வசீகரன் கண்டுபிடிச்ச மாதிரி ஒரு ரோபோ கண்டுபிடிக்க வெள்ளைக்காரர்களுக்கு இன்னும் காலம் இருக்கு)
இதன்போது நோயாளியின் இதயத்தினை அதி துல்லியமான முப்பரிமாண கெமராவின் ஊடாக வைத்தியர்கள் அவதானித்துள்ளனர்.
வழமையாக மார்பை கிழித்தே இருதய சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் (மாற்றானிலும் அப்படித்தானே காட்டினார்கள்) இருப்பினும் குறித்த அறுவைச்சிகிச்சை டாவின்சியின் கரங்களை நோயாளியின் விலா எலும்புகளுக்கிடையே செலுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உல்வர்ஹெம்டன் பகுதியில் அமைந்துள்ள நிவ் குரஸ் வைத்தியசாலையிலேயே இச் சத்திரசிகிச்சை இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சிகிச்சைக்குட்படுத்தப் பட்டவர் ஸ்டவுர்பிரிச்சைச் சேர்ந்த 22 வயதான நடாலி ஜோன்ஸ் என்ற பெண் ஒருவர்.
சுமார் 9 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட இச்சத்திர சிகிச்சையின் போது வலி குறைவு இருந்ததாகவும் விரைவாக குணமடையும் சாத்தியம் அதிகம் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
ரோபோ மூலமான இருதய சத்திரசிகிச்சைகள் ஏற்கனவே சுவீடன் மற்றும் பின்லாந்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால் பிரித்தானியாவில் ரோபோ மூலம் மேற்கொள்ளப்பட்ட முதல் இருதய சத்திரசிகிச்சை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.