Total Pageviews

Wednesday, October 17, 2012

Facebook எதனை வளர்த்ததோ இல்லையோ ஆனால் இதனை வளர்த்தது


சமூகவலைத்தளங்களின் பாவனையானது போதைப்பொருளுக்கு அடிமையாவதை விடவும் கொடிய விளைவுகளை ஏற்படுத்துவதாக அண்மைய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றது. அதிலும் குறிப்பாக Facebook சமூகவலைத்தளமே பாரிய விளைவுகளை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் எந்தவொரு கெட்ட விடயத்திலும் ஒரு நல்லது நடக்கும் என்பதிற்கிணங்க பேஸ்புக் இணையத்தளம் எத்தனை பல தீமைகளை ஏற்படுத்திய போதும் ஏராளமான மனிதர்களின் (மனிசனுங்க... சத்தியமா நாமதாங்க) மனங்களில் ஒரு நல்ல விடயத்தை விதைத்திருப்பதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்.

அதாவது இவ்வுலகத்திலேயே மிகப்பெரிய விடயங்களில் ஒன்று 'அடுத்தவனை பாராட்டி அங்கீகரிப்பது' (சொம்பு ரொம்ப அடிவாங்கியிருக்குமோ...ன்னு சந்தேகப்படாதிங்க). இதனை எந்தவொரு முன்னோடியினாலும் மனித மனங்களில் புகுத்த முடிவதில்லை. ஏனெனில் அது அடுத்தவர்வர்களின் மனங்களை சுத்தப்படுத்துவதைப் போல கடினமானவொரு இலக்கு.

ஆனால் Facebook வலைத்தளமோ சாத்தியமற்ற அந்த மனமாற்றத்தினை எம்மிடையே சாதாரணமாக ஏற்படுத்திருப்பதினை ஒவ்வொருவரினதும் Facebook சுவரிலுள்ள Status, Photos மற்றும் இதர விடயங்களில் விழுந்துள்ள Like உறுதிப்படுத்திக்கொண்டிருக்கிறது.

இருப்பினும் Facebook ஆல் கூட திருத்தமுடியாத பல ஜென்மங்கள் இன்னும் Facebookஇல் இருப்பதே ஆச்சரியம்! ஒரு Like இல்லை ஒரு Comment இல்லை பின்னர் எதற்காக இவர்கள் Facebook Account வைத்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. (அட வெக்கம் கெட்டவெய்ங்களா இதுக்கெதுக்கு வெள்ளையும் சொள்ளையுமா அலையணும்).

அதற்காக கண்டவற்றுக்கெல்லாம் Like மற்றும் Comment பண்ணவேண்டும் என்றில்லை மனதிற்கு பிடித்திருந்தால் செய்யலாமே...

ஆனாலும் இந்த அளவிற்காவது மனித மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தியவரைக்கும் திருப்திகொள்ளத்தான் வேண்டும். எனவே Facebook என்ன சாதித்துள்ளது என்றால் உருப்படியாக வேறேதுமில்லையென்றாலும் (தொலைந்தவர்களை ஒரு சில சந்தர்ப்பங்களில் மீளப்பெற உதவியுள்ளது) அடுத்தவனை பாராட்டி அங்கீகரிக்கும் விடயத்தினை எம்மிடையே வளர்த்திருக்கின்றமை மகிழ்ச்சிதான்.