அவதார் படத்தில் பெண்டோரா எனும் கிரகத்தில் வைரத்தினை விட விலைமதிப்புமிக்க அனப்டோனியம் என்ற தாதுப் பொருளை கண்டுபிடித்து அதனை பூமிக்கு கொண்டு வர திட்டமிடுவார்கள். கிட்டத்தட்ட அதனையொத்த விடயமொன்று அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து 40 ஒளியாண்டுகள் தொலைவில் வைரத்தினாலான கோள் ஒன்று இருப்பதை ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
குறித்த வைரத்தினாலான் 55 கான்கிறி என்ற கோள் பூமியை விட இரண்டு மடங்கு பெரிதானது என்றும் இக்கோளானது கடக நட்சத்திர தொகுதியில் அமைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எமது பால்வெளியிலுள்ளது கோள்கள் யாவும் சூரியனைச் சுற்றுவது போல இக்கோளும் அது அமைந்துள்ள அண்டத்தில் சூரியனையொத்தவொரு அமைப்பை வலம் வருகின்றது. மேலும் இக்கோளை வெற்றுக் கண்ணால் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பூமியுடன் இக்கோளை ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு பெரிய ஆரையைக் கொண்டதோடு 8 மடங்கு அடர்த்தியும் கூடியது. அத்துடன் குறித்த கோளின் மேற்பரப்பு வெப்பநிலை 3900 பாகை பரனைட்டாகும்.
இக்கோளின் விசேட அம்சம் என்னவெனில் கோளின் மேற்பரப்பில் நீரையோ அல்லது கற்பாரையையோ கொண்டிருப்பதற்கு பதிலாக வைரத்தால் மூடப்பட்டுள்ளதாக தென்படுகிறது அதுமட்டுமன்றி மேற்படி கோளின் திணிவில் மூன்றில் ஒரு பகுதி வைரமாக இருப்பதற்கான சாத்தியம் உள்ளது என அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வுக் குழுவில் பங்கேற்ற ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
நம்மடவன் நம்புற மாதிரி படமெடுத்தாலே நம்பமுடியல்ல ஆனா வெள்ளைக்காரன் நம்பமுடியாத மாதிரி படம் எடுத்தாலும் நம்பும்படியா ஆகிடுதே...