தமிழில் முதலாம் பாகம், இரெண்டாம் பாகம் என்று இதுவரை இரண்டு திரைப்படங்களே வெளிவந்துள்ளது. அதில் பில்லா 2 இற்கு பிரம்மாண்டமான ஆரம்பம் கிடைத்திருந்தாலும் அதனைத் தக்கவைக்க முடியாது போனது. சிம்பு மன்மதன் 2 எடுக்கப்போவதாக பல வருடங்களாக கூறிக்கொண்டு இருக்கிறார்.வெளி வந்தால்தான் உண்மை. அது வரைக்கும் வரும் ஆனா வராது தான்.
ஆனால் Hollywood திரைப்படங்களைப் பொறுத்தவரையில் இரண்டாம், மூன்றாம் பாகங்கள் என்று தொடர்ந்து வெளியிடும் நோக்கத்திலேயே அனைத்து திரைப்படங்களும் எடுக்கப்படுகின்றன. அவை வெற்றியும் பெறுகின்றன. அத்திரைப்பட கதாபாத்திரங்களுடன் நாமும் வருடக்கணக்காக கூடவே பயணிப்பது போன்ற ஒரு தாக்கத்தை அவை ஏற்படுத்துவதே அவற்றின் வெற்றிக்கான காரணம்.
அந்த வரிசையில் Iron Man 3 அடுத்ததாக வரவிருக்கும் அமெரிக்காவின் Super Hero திரைப்படம். Marval Comics இனால் உருவாக்கப்பட்ட Iron Man Comics கதாபாத்திரத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் இது.
ஏற்கனவே வெளியான Iron man 1 (2008), Iron Man 2 (2010) இன் தொடர்ச்சியாக இது வெளிவர இருக்கிறது. இதனைப் பற்றிய முழு விபரங்களும் திரைப்படம் வெளிவந்ததும் உங்களுக்கு விரிவாகத் தரப்படும். எனக்குப் பிடிக்காத Super hero திரைப்படம் இது. ஆனாலும் வெளியான இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றி அடைந்துள்ளன.
Tony Stark (Iron Man) இற்கு நெருக்கமானவர்களை வில்லன், அவரைப் பழிவாங்க கடத்தியதும் அவர்களை மீட்கும்போது அவரது ஹீரோயிசத்திற்கும், வெற்றிக்கும் காரணம் அவரது super hero உடையா அல்லது தனக்குள் இருக்கும் மனித நேயமும் நம்பிக்கையும், திறமையுமா என்பதை Iron Man உணர்வதுதான் மூன்றாம் பாகத்தின் கதை.
தற்போதைக்கு 2013 இல் வெளிவர இருக்கும் மூன்றாம் பாகத்தின் Teaser Trailer உங்களுக்காக...