சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

நாங்கள் பிரசுரித்த, உங்கள் தேடலுடன் தொடர்புடைய செய்திகள்....!!!
Here are the articles we written related to your search..!!!

Monday, May 20, 2013

5 ஜி தொழிற்நுட்பத்தினை பரீட்சித்த சம்சுங் : ஒரே செக்கனில் முழுப்படத்தையும் தரவிறக்கும் வேகம்

5 ஜி கம்பியில்லா தொழில்நுட்பத்தினை பரீட்சித்துப் பார்த்த்தில் ஒரே செக்கனின் முழுத் திரைப்படமொன்றினை தரவிறக்கும் அதி வேகத் திறமை கொண்டதென கண்டறிந்ததாக இன்று சம்சுங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த 5 ஜி தொழில்நுட்பமானது பரீட்சித்துப் பார்கையில் இதன் வேகம் செக்கனுக்கு ஜிகா பைட் வேகம் கொண்டது என ஆதாரபூர்வமாக அறிய முடிந்ததாக சம்சுங் நிறுவனம் கூறியுள்ளது.

இது தொடர்பில் அந்நிறுவனம் மேலும் கூறுகையில், இப்புதிய 5ஆம் தலைமுறை தொழில்நுட்பமான 5 ஜி இப்போது வணிக ரீதியான சந்தையில் 2020ஆம் ஆண்டுக்கு முன்னர் பயன்படுத்த முடியாது.

சாதாரணமாக இந்த 5 ஜி தொழில்நுட்பத்தின் இணைய வேகமானது 4 ஜி போன்று பல நூறு மடங்கு அதிகமானது. எனவே வாடிக்கையாளர்களுக்கு 3டீ கேம்ஸ், உயர் ரக துல்லிய விடீயோக்கள் உள்ளிட்ட பாரிய தரவு பரிமாற்ற சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

மேலும் இக்கம்பில்லா தொழில்நுட்பத்தின் மூலம் கூடிய தூரத்திற்கு விரைவான தரவுப் பரிமாற்றத்தினை மேற்கொள்ளலாம் என தென் கொரியாவை மையமாகக்கொண்ட நிறுவனம் சம்சுங் தெரிவித்துள்ளது.

உலகின் அதிகளவான 4 ஜி வாடிக்கையாளர்களைக்கொண்ட நாடு தென கொரியாவாகும். தற்போது அங்கு 20 மில்லியன் 4 ஜி வாடிக்கையாளர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

AM. Rizath / Metronews

Wednesday, November 21, 2012

மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்கிறது சம்சுங்

பாவனையாளர்களின் தேவைகள் கருதி பல்வேறு தொழில்நுட்பங்களுடன் வெளிரும் ஸ்மார்ட்போன்களில் முதன் முறையாக மடிக்கக்கூடியதும் நெகிழக்கூடியதுமான ஸ்மார்ட் போன்களை (Flexible Smart Phones) அறிமுகப்படுத்தவுள்ளது Samsung நிறுவனம்.

அடுத்த வருடம் வெளிவரவுள்ள இத்தொழில்நுட்பமானது ஸ்மார்ட் போனின் மற்றுமொரு பரிமாணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வளையும் தன்மையும், உடைபடக்கடினமான தன்மையுமுடையதாக வடிவமைக்கப்படவுள்ள ஸ்மார்ட் போன்களை எமது பணப்பையில் மடித்துவைத்துக்கொள்ளும் வகையில் அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

organic light emitting diodes (OLEDs) பயன்படுத்தி தயாரிக்கப்படவுள்ள நெகிழ்தன்மையுள்ள ஸ்மார்ட் போன்கள் மெலிதாகவும் அதேவேளை பிளாஸ்டிக் அல்லது உலகத்தகடு போன்ற நெகிழ்தன்மையுள்ள பொருட்களால் ஆக்கப்படும்.

மேலும் அடுத்த ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள சம்சுங் எஸ் 4 ஆனது அனேகமாக நெகிழ்தன்மை கொண்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போனாக அமையலாம் என சம்சும் தெரிவித்துள்ளது.

இதேவேளை Samsung நிறுவனம் மட்டுமன்றி Sony மற்றும் LG நிறுவனங்களும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போன்களை தாயாரிக்க முயற்சிகள் எடுத்துள்ளது.




Monday, November 5, 2012

தொடரும் கெலக்ஸி எஸ் 3இன் சாதனைகள்


சம்சுங் கெலக்ஸி எஸ் 3 ஸ்மார்ட் போன் வெளியாகி கிட்டத்தட்ட 5 மாதங்களில் சுமார் 30 மில்லியன் போன்கள் இதுவரையில் விற்பனை செய்துள்ளதாக சம்சுங் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் ஸ்மார்ட் போன் விற்பனையில் இதுவொரு வரலாற்று மைல் கல் என்றும் எதிர்வரும் நாட்களில் எஸ் 3 இன் விற்பனை மேலும் அதிகரிக்கும் எனவும் சம்சுங் நம்புகின்றது.

இதேவேளை கெலக்ஸி நோட் 2 ஸ்மார்ட் போனானது வெளியிடப்பட்டு 37 நாட்களில் 3 மில்லியன் விற்பனையாகியுள்ளதாகவும் சம்சுங் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்சுங் கெலக்ஸி எஸ் 3 ஸ்மார்ட் போனின் வெற்றியினால் அதே வரிசையில் குறைந்த விலையில் கெலக்ஸி எஸ் 3 மினி என்ற இன்னொமொரு 'ஸ்மார்ட் போன்' ஒன்றினை சம்சுங் அறிமுகப்படுத்தியுள்ளது.

எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக விற்பனைக்கு வரவுள்ள கெலக்ஸி எஸ் 3 மினியானது ஸ்மார்ட் போன் விரும்பிகளிடத்தில் பெரும் எதிர்பார்ப்கை துண்டியுள்ளது.

ஐரோப்பிய சந்தையில் 4.0 அங்குல திரையைக் கொண்ட ஸ்மார்ட் போன்களுக்கு சிறந்த கேள்வி நிலவுவதை கருத்தில் கொண்டே இம்மாதிரியை வெளியிடவுள்ளதாக சம்சுங் தெரிவிக்கின்றது.

கெலக்ஸி எஸ் 3 ஐ ஒத்த எஸ் 3 மினியின் தொழில்நுட்ப அம்சங்கள் இவ்வாறு அமைந்துள்ளது

General: GSM 850/900/1800/1900 MHz, UMTS 900/2100 MHz, HSDPA 14.4 Mbps

Form factor: Touchscreen bar


Dimensions: 121.55 x 63 x 9.85 mm, 111.5 g


Display: 4" 16M-color WVGA (480 x 800 pixels) Super AMOLED capacitive touchscreen


Chipset: 1GHz dual-core processor, Mali-400MP GPU, 1GB RAM


OS: Android 4.1 (Jelly Bean); TouchWiz UX


Memory: 16 GB of inbuilt storage, microSD card slot (up to 32 GB)


Camera: 5 megapixel auto-focus, face and smile detection; 720p (1280 x 720) video recording at 30fps


Connectivity: Wi-Fi b/g/n, Wi-Fi hotspot, Wi-Fi Direct, DLNA, stereo Bluetooth 4.0, standard microUSB port, GPS receiver with A-GPS and GLONASS, 3.5mm audio jack, stereo FM radio with RDS, NFC


Misc: built-in accelerometer, multi-touch input, proximity sensor, Swype text input


Thursday, October 11, 2012

பேரு 'மினி' போட்டி மெகா : அப்பிளைத் தொடந்து சம்சுங்


அப்பிள் நிறுவனத்தின் ஐ பேட் மினி விரைவில் சந்தைக்கு வரவுள்ள இந்நிலையில் சம்சுங் நிறுவனமானது எஸ் 3 மினி எனும் ஸ்மார்ட் போனை வெளியிட திட்டமிட்டுள்ளது.

அப்பிளிற்கு எப்போது சிம்மசொப்பனமாக திகழும் சம்சுங் நிறுவனம் எப்போதுமே அப்பிளிற்கு போட்டியாகவே ஒவ்வொரு உற்பத்திகளையும் வெளியிட்டு அதில் வெற்றி பெற்றும் வருகின்றது. ஆனால் அப்பிள் போட்ட வழக்கில் தான் சம்சுங்கால் வெற்றி பெற முடியவில்லை.

சம்சுங் உற்பத்திகளில் பயன்படுத்திய சில தொழில்நுட்பங்கள் அப்பிளிலிருந்து திருடப்பட்டதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் அப்பிள் நிறுவனம் வெற்றிபெற்றதோடு பல கோடி ரூபாவினையும் நஷ்ட ஈடாக பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது அப்பிள் நிறுவனம் ஐபேட் மினி என்ற தயாரிப்பினை இம்மாதம் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு சில நாட்களில் சம்சுங் நிறுவனம் எஸ்3 மினி என்ற ஸ்மார் போன் ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

கீரைக்கடைக்கே எதிர்க்கடை இருக்கையில் அப்பிள் கடைக்கு இருக்காத என்ன? என்ற வகையில் அமைந்துள்ளது சம்சுங் நிறுவனத்தின் இத்திட்டம். ஆனாலும் இது சம்சுங் உற்பத்திகளை விரும்புவோருக்கு இனிப்பூட்டும் செய்தியாகவே உள்ளது.

எஸ் 3 மினி ஆனது விற்பனையில சாதனை படைத்த எஸ் 3 வரிசையில் விலை குறைந்த ஸ்மார்ட் போனாக வெளிவரவுள்ளது. மேலும் ஐரோப்பிய சந்தையில் 4.0 அங்குல திரையைக் கொண்ட ஸ்மார்ட் போன்களுக்கு நல்ல கேள்வி நிலவுவதை கருத்தில் கொண்டே இம்மாதிரியை வெளியிடவுள்ளதாக சம்சுங் தெரிவிக்கின்றது.



இதன் தோற்றமானது செம்சுங் கெலக்ஸி எஸ் 3 இனை ஒத்தது எனினும் சற்று சிறியது. மேலும் Samsung Galaxy S3 Mini GT-I8190 தொடர்பாக வெளியாகியுள்ள சில தகவல்கள் இங்கே


Display: 4.0 inch Super AMOLED display with 800 × 480 pixels, 16.67 million colors, capacitive touchscreen, multi-touch
CPU: STE U8420 dual-core 1.0 gigahertz
wireless standards: HSPA 14.4/5.76 900/1900/2100, EDGE / GPRS 850/900/1800/1900
Camera: 5 megapixel with auto focus and LED Flash, Resolution 2592 x 1944 pixels / VGA front
RAM: 1 GB
flash memory: 16 GB, MicroSD card slot (max 32 GB)
Operating System: Google Android 4.1 “Jelly Bean”
Connections: MicroUSB port, 3.5mm Audiojack
Wireless: Bluetooth 4.0, WiFi a / b / g / n 2.4/5GHz, DLNA, NFC (UICC , optional)
Battery: 1500 mAh
Dimensions: 121.55 x 62.95 x 9.85 mm
Housing Material: Plastic


இம்மாதிரியானது அப்பிள் ஐபேட் மினி வெளியாவதற்கு முன்னேரே வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேருதான் மினி ஆனாலும் போட்டி மெகா!!!


Monday, October 8, 2012

வருடத்தின் சிறந்த ஸ்மார்ட் போனாக எஸ்3 தெரிவு


லண்டனில் நடைபெற்ற 12 ஆவது வருடாந்த மொபைல் சொய்ஸ் விருது வழங்கும் விழாவில்  இவ்வருடத்தின் சிறந்த ஸ்மார்ட் போனாக சம்சுங் நிறுவனத்தின் கெலக்ஸி S3 தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

குறித்த விருது வழங்கும் விழாவில் சம்சுங் நிறுவனத்திற்கு வருடத்தின் சிறந்த ஸ்மார்ட் போன் விருது உட்பட மொத்தமாக 4 விருதுகள் கிடைத்துள்ளது.

கெலக்ஸி S3 ஆனது ‘best media phone’ மற்றும் ‘phone of the year’ ஆகிய இரு விருதுகளையும், கெலக்ஸி நோட் ‘most innovative device’ விருதினையும், செம்சுங் ‘manufacturer of the year’ என்ற விருதினையும் பெற்றுக்கொண்டது.

மேலும் எச்.டி.சி நிறுவனத்தின் HTC One X ஸ்மார்ட் போனானது ‘best video phone’ மற்றும் ‘best social networking phone’ ஆகிய விருதுகளை வென்றது.

நொக்கியாவின் Pureview 808 "Best Camera Phone" விருதினைப் பெற்றுக்கொண்ட அதேவேளை நொக்கியாவின் Nokia 800 ஆனது "Best Smartphone Design" விருதினை வென்றது.
 சொனியின்  Xperia U ' Best Value Phone' விருதினையும் அப்பிளின் புதிய ஐ பேட் "Tablet Of The Year" விருதினை வெற்றி கொண்டது.

ஆனாலும் அப்பிளிற்கு எதுவித விருதுகளும் இம்முறை கிட்டவில்லை மாறாக சம்சுங் நிறுவனம் விருதுகளில் ஆதிக்கம் செலுத்தியுள்ளமை சம்சுங் நிறுவனத்தின் வளர்ச்சியை காட்டும் வண்ணம் அமைந்துள்ளது.