நியாயம் என்ற ஒன்று ஒன்று எங்கேயாவது இருக்கும். அதை தோண்டி
எடுக்கபோகிறேன் எனத் தேடினால் நியாயத்தை அநியாய விலையில் விற்கின்ற முதலாளியிடமே
அதன் கடப்பாறையும் சிக்கிக்கொண்டிருக்கிறது.
10:1 என்ற விகிதத்திலேயே எனக்கு மொழிபெயர்ப்பு கதைகள் பிடிக்கும் அப்படி
பிடித்ததில் இதுவும் ஒன்று. புது அனுபவத்தை தருகிறது இந்தக் கதை. இந்தக் கதையை
மொழிபெயர்த்தது யார் எனத் தெரியவில்லை. அவருக்கு வாழ்த்துக்கள்.
அறிவியல் புனைகதை - ஜீன் திருடனின் விநோத வழக்கு
(மூலம் நான்ஸி க்ரெஸ்)
(இன்றைய விஞ்ஞானக் கதை எழுத்தாளர்களில் முக்கியமானவர் நான்ஸி க்ரெஸ். சிக்கலான
மரபணு விஞ்ஞானக் கதைகளுக்குப் பெயர் போனவர். அமெரிக்கர்.
நெபுலா, ஹ்யூகோ
போன்ற விருதுகள் பெற்றவர். Asimov 's இதழில் 2002-ஆம் வருடம் வெளிவந்த Patent
Infringement என்ற கதையின் தமிழாக்கம் இது. இவர் எழுதிய 'ட்ரினிட்டி ' போன்ற மிகச்
சிறந்த விஞ்ஞானக் கதைகள் அளவில் பெரியவை. தமிழில்
மொழிபெயர்க்கக் கடினமானவை.
இது சாதாரணமான கதையே என்றாலும் அளவில் சிறியது. பத்திரிகை
செய்தி, கடிதங்கள்,
அலுவலக மெமோக்கள் மூலம் சொல்லப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சம். நான்ஸி
க்ரெஸ்ஸின்
இணைய தளம்: www.nancykress.com)
- - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
- -
நியூயார்க் போஸ்ட்
விஷக் காய்ச்சலுக்குப் புதிய மருந்து கண்டுபிடிப்பு !
கெகல்மான்-பால்ஸ்டன் கம்பெனியினர் ஹாலிடெக்ஸ் என்ற புதிய
மரபணு மருந்தை
மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
அல்பர்ட்டன் விஷக் காய்ச்சலுக்குப் பத்து
மாத்திரைகளில் முற்றிலும் குணம் தெரியும் என்று கம்பெனி
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை அமெரிக்கா முழுவதும் மூன்று கோடி பேருக்கு மேல் இந்தக் கடுமையான தொற்று
நோய்க்கு ஆளாகியிருக்கிறார்கள். மிக வேகமாகப் பரவி வரும் இந்த வைரஸ்
பாதித்தவர்களுக்கு இருமல், உடல் வலி, களைப்புடன் காய்ச்சல் ஏற்படும். நோய் அறிகுறிகள்
மறைந்த பிறகும் வைரஸ் உடலுக்குள்ளேயே தங்கியிருப்பதால்
எப்போது வேண்டுமானாலும்
மறுபடி காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. இந்த வைரஸை முதன் முதலில்
அடையாளம்
கண்டுபிடித்தவர் ப்ரொபஸர் அல்பர்ட்டன்.
அல்பர்ட்டன் வைரஸின் பாதிப்பால் அமெரிக்காவில் இந்த வருடத்தில் மட்டும் 4 பில்லியன்
டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக முதன்மைக் கணக்காயர்
அலுவலகக் குறிப்பொன்று
தெரிவிக்கிறது. ஹாலிடெக்ஸ் மருந்து நோயாளிகளின் உடலில் இந்த வைரஸுக்கு மாற்று
மரபு
அணுக்களைச் செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது.
மறுபடி காய்ச்சல் வராமலும்
பாதுகாக்கிறது. கெகல்மான்-பால்ஸ்டன் கம்பெனி −ரண்டு வருட
ஆராய்ச்சியின் பயனாக
இந்த மருந்தைக் கண்டுபிடித்திருக்கிறது. நாடு முழுவதும்
ஹாலிடெக்ஸ் பரவலான வரவேற்பு
பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
- - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
ஜோனதன் மீஸ்
538, ப்ளெஸன்ட் தெரு
ஆஸ்பன் ஹில், மேரிலாண்ட் 20906
அன்புள்ள திரு.கெகல்மான்- திரு. பால்ஸ்டன் அவர்களுக்கு,
உங்கள் கம்பெனி அல்பர்ட்டன் விஷக் காய்ச்சலுக்கு ஹாலிடெக்ஸ்
என்ற ஜீன் சிகிச்சை
மருந்தை அறிமுகப் படுத்தியிருப்பதாக செய்தித்தாள்கள் மூலம்
அறிந்தேன். இந்த மருந்தில்
நீங்கள் உபயோகித்திருக்கும் ஜீன்கள் என்னுடையவை என்று
நம்புகிறேன்.
இரண்டு வருடம் முன்பு - மே 5ம் தேதி - என்னுடைய குடும்ப டாக்டரிடம்
பேசிக்கொண்டிருந்த போது என்னைச் சுற்றியிருக்கும்
எல்லாருக்கும் அல்பர்ட்டன் காய்ச்சல்
பரவியிருக்கிறது என்று தெரிவித்தேன். (எங்கள் அலுவலகத்தின்
அக்கவுண்ட்ஸ்
டிபார்ட்மெண்ட் முழுவதற்கும் காய்ச்சல். என் மனைவி, குழந்தைகள், மாமியார்
எல்லோருக்கும் படுத்து விட்டார்கள். எங்கள் வீட்டு
நாய்க்குக் கூட இந்த வைரஸ்
தாக்கியிருப்பதாக சந்தேகம்- ஆனால் வெட்னரி டாக்டர்தான்
ஒத்துக் கொள்ளவில்லை.)
இத்தனைக்கு நடுவிலும் எனக்கு மட்டும் ஜுரம் வரவில்லை.
என்னுடைய ஜீன்களில் ஏதோ
தனிப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி −ருப்பதாக என்
டாக்டர் சந்தேகித்து உடனே உங்கள்
ஆராய்ச்சிசாலைக்கு அனுப்பி அங்கே என் ரத்தம், திசு சாம்பிள்கள்
எடுக்கப்பட்டன. உங்கள்
விஞ்ஞானிகள் என்னுடைய ஜீன்களை எதற்காவது பயன்படுத்தினால்
தகவல் சொல்வதாகச்
சொல்லி அனுப்பி வைத்தார்கள். ஆனால் இன்றுவரை ஒரு தகவலும்
வரவில்லை.
இதற்கிடையில் −ந்தப் பத்திரிகை
செய்தியைப் பார்த்தேன்.
ஆகவே உங்கள் புதிய மருந்தில் என்னுடைய ஜீன்கள் எப்படிப்
பயன் பட்டிருக்கின்றன
என்பதையும், லாபத்தில் எனக்கு நியாயமாகச் சேர வேண்டிய பங்கு எவ்வளவு
என்பதையும்
தயவு செய்து தெரிவிக்கவும். மிக்க நன்றி.
தங்கள் உண்மையுள்ள,
ஜோனதன் மீஸ்
- - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
- -
கெகல்மான்-பால்ஸ்டன் கம்பெனி
அனுப்புநர்: ராபர்ட் பால்ஸ்டன்
பெறுநர் : மார்ட்டின், சட்டத் துறை
பொருள் : கடிதம் (இணைப்பு)
மார்ட்டி,
யார் இவன், கிறுக்கனா ? இதில் ஏதும் பிரச்சினை வருமா ?
- பாப்
- - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
கெகல்மான்-பால்ஸ்டன் கம்பெனி
அனுப்புநர்: மார்ட்டின்
பெறுநர் : ராபர்ட் பால்ஸ்டன்
பொருள் : மரபணு உரிமை - ஜோனதன் மீஸ் கடிதம்
பாப்,
ஆராய்ச்சிப் பிரிவில் விசாரித்து விட்டேன்; துரதிர்ஷ்டவசமாக, இந்த ஜோனதன் மீஸ்
என்கிற
ஆளின் மரபணுக்களை வைத்துத்தான் நாம் ஹாலிடெக்ஸையே
தயாரித்திருக்கிறோம். அதற்கு
எல்லா ரெக்கார்டும் −ருக்கிறது. அதைவிட
சங்கடம் என்னவென்றால், ஜீன் சாம்பிள்
தருபவர்களின் உரிமைகளை ரத்து செய்ய நாம் சட்டம் கொண்டுவரச்
செய்தோமே, அதற்குச்
சற்று முன்புதான் அவன் வந்துபோயிருக்கிறான்.
எப்படியிருந்தாலும், இந்த ஆசாமிக்கு சட்டப்படி எந்த உரிமையும் கிடையாது
என்பதுதான்
என் கருத்து. மருந்துப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படும்
ஜீன்களின் பேடண்ட் எல்லாம்
கம்பெனிக்கே சொந்தம் என்பதற்குப் பல கோர்ட் தீர்ப்புகள்
வந்திருக்கின்றன. இந்தக்
கடிதத்தை வைத்துப் பார்த்தால் மீஸ் அப்படி ஒன்றும் விவரமான
ஆளாகவும் தெரியவில்லை.
(நாய்க்காவது, வைரஸாவது!) திரு. கெகல்மான் செத்துப் பத்து வருஷம் ஆகிவிட்டது என்பது
கூட இவனுக்குத் தெரியவில்லையே....அவன் இன்னும் வக்கீல் யாரையும் பார்க்கவில்லை
என்பது நிச்சயம்.
ஏதோ போனால் போகிறதென்று கொஞ்சம் சில்லறையை வீசியெறிந்து
அவனை வாயை மூடிக்
கொண்டிருக்கச் சொல்லலாம். ஆனால் இந்த மாதிரி
பேராசைக்காரர்களுக்கெல்லாம் காசு
தருவதே தப்பு. என்னைக் கேட்டால் இவனைக் கடுமையாக மிரட்டி
ஒரு லெட்டர்
அனுப்பினால் போதும். பயத்தில் பாண்ட்டிலேயே கொஞ்சம்
பாத்ரூம் போய்விட்டு, அத்துடன்
அடங்கிவிடுவான்.
என்ன சொல்கிறீர்கள் ?
- மார்ட்டி
- - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
கெகல்மான்-பால்ஸ்டன் கம்பெனி
அனுப்புநர்: ராபர்ட் பால்ஸ்டன்
பெறுநர் : மார்ட்டின், சட்டத் துறை
பொருள் : J. மீஸ்
அதைச் செய்!
- பாப்
- - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
மார்ட்டின் ப்ளேக்
தலைமை சட்ட ஆலோசகர்
கெகல்மான்-பால்ஸ்டன் கம்பெனி
அன்புள்ள திரு மீஸ்,
எங்கள் கம்பெனியால் காப்புரிமை பெறப்பட்டுள்ள ஹாலிடெக்ஸ்
மருந்தைப் பற்றிய உங்கள்
கடிதம், என் பார்வைக்குக் கொண்டுவரப் பட்டது. ஹாலிடெக்ஸின்மீது உங்களுக்குச்
சட்டபூர்வமான எந்த உரிமையும் இல்லை என்பதை இதன்மூலம் அறியவும்.
(தங்கள்
தகவலுக்காக, சில சட்ட முன்னுதாரணங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.) −க்கடிதம்
பெற்ற பிறகும் தங்கள் தாவாக்களை உடனே விலக்கிக்
கொள்ளவில்லையென்றால், தாங்கள்
என் கட்சிக்காரருக்கு மன உளைச்சல் தருவதற்காக சட்டப்படி
நடவடிக்கை எடுக்கப்படும்
என்பதை அறியவும்.
உண்மையுள்ள,
மார்ட்டின் ப்ளேக்
- - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
ஜோனதன் மீஸ்
538, ப்ளெஸன்ட் தெரு
மேரிலாண்ட் 20906
அன்புள்ள திரு ப்ளேக்,
இது கொஞ்சம் கூட நியாயமல்ல. அத்தனையும் என்னுடைய ஜீன்கள்!!
நான் ஒரு வக்கீலிடம்
போகப் போகிறேன். விரைவில் அவர் உங்களிடம் பேசுவார்.
- ஜோனதன் மீஸ்
- - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
கேத்ரின் அட்வகேட்,
அன்புள்ள திரு ப்ளேக்,
என் கட்சிக்காரர் திரு. ஜோனதன் மீஸ் அவர்களின் சார்பில்
நான் இதை எழுதுகிறேன்.
அவருடைய மரபணுக்களை அடிப்படையாக வைத்து நீங்கள் ஹாலிடெக்ஸ்
என்ற மருந்தைத்
தயாரித்திருக்கிறீர்கள் என்று அறிகிறேன். உங்கள்
கம்பெனிக்கு லட்சக் கணக்கான - அல்லது
கோடிக்கணக்கான - டாலர்களைப் பெற்றுத் தரக்கூடிய இந்த மருந்தில் என்
கட்சிக்காரரின்
கணிசமான பங்களிப்பை ஒப்புக் கொண்டு, அவருக்குச்
சேரவேண்டிய பொருளாதார
ஈட்டையும் செய்வதே முறையாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இதைப் பற்றி விரிவாக
நேரில் பேசுவதற்கு விரைவில் ஒரு நேரம் ஒதுக்குமாறு கேட்டுக்
கொள்கிறேன்.
உண்மையுள்ள,
கேத்ரின்
- - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அனுப்புநர்: ராபர்ட் பால்ஸ்டன்
பெறுநர் : மார்ட்டின், சட்டத் துறை
பொருள் : J. மீஸ்
மார்ட்டி,
நாசமாய்ப் போச்சு! இந்த மாதிரி ஐந்தாம் படை வேலை செய்யும் மட்டிப் பயல்களைக்
கண்டாலே எனக்கு அடிமடியில் எரிகிறது. ஞாயிற்றுக் கிழமையன்று
கோல்ப் விளையாடும்
போது ஸாம் ஒரு விஷயம் சொன்னான். (ஸாமைத் தெரியுமல்லவா
உனக்கு ? நம் போட்டிக்
கம்பெனிகளைப் பற்றித் தகவல் கசியவிடுவானே, அவன்தான்). இர்வின்-லாஸி
கம்பெனிக்காரர்கள்தான் நம்மை ஒழித்துக் கட்டுவதற்காக −ந்த வக்கீல்
நோட்டாஸ்
அயோக்கியனைத் தூண்டிவிடுவதாக ஸாம் நினைக்கிறான்.
அந்த அப்பன் பேர் தெரியாத ராஸ்கல் - இர்வினும் இதே வைரஸுக்கு மருந்து
தயாரிக்கப்
படாத பாடு பட்டுக் கொண்டிருந்தான். நாம்
முந்திக்கொண்டுவிட்டோமே என்று அவனுக்கு
வயிற்றெரிச்சல்! நிச்சயம் அவன்தான் இதெல்லாம் செய்கிறான்.
இதில் சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவன் தாராளமாகக்
கேஸ் போடட்டும்.
கோர்ட்டுக்கு வரட்டும். பார்த்துவிடலாம் ஒரு கை!
- பாப்
- - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அனுப்புநர்: மார்ட்டின்
பெறுநர் : ராபர்ட் பால்ஸ்டன்
பொருள் : மரபணு உரிமை - ஜோனதன் மீஸ்
பாப்,
அதை விட நல்ல ஐடியா : நாமே முந்திக்கொண்டு மீஸ் மீது கேஸ்
போட்டால் என்ன ?..
வைரஸ் தடுப்பு ஜீன்களுக்கான பேடண்ட் நம்மிடம் இருக்கும்போது அவன் எப்படி
அந்த
ஜீன்களைச் சுமந்துகொண்டு திரியலாம் ? ஹாலிடெக்ஸை
வாங்கிச் சாப்பிட்ட நம்
வாடிக்கையாளர்களுக்கு மட்டும்தான் −ந்த ஜீன்கள் −ருக்கலாம். எனவே
அவன் நம்முடைய
மருந்தைப் போலவே வேறு எதையோ கள்ளச்சந்தையில் வாங்கித்
தின்றிருக்கிறான் என்று
வாதாட முடியும்.
இதனால் பல விதத்தில் லாபம் : மீஸின் வக்கீல் நோட்டாசுக்குப்
பதிலடி தருகிற மாதிரியும்
இருக்கும்; போட்டிக் கம்பெனிகளின் காற்றைப் பிடுங்கிவிட்ட மாதிரியும் இருக்கும். நம்
ஹாலிடெக்ஸுக்கு இன்னும் கொஞ்சம் விளம்பரம் கிடைக்கும் (பூக்கடைக்கு விளம்பரம்
தேவையில்லை என்றாலும்). நம்மைப் பார்த்துக் காப்பியடித்துத்
திருட்டு மருந்து தயாரிக்க
நினைப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் அமையும்.
அப்புறம் இன்னொரு விஷயம் : நம் ஆராய்ச்சிப் பிரிவில் மறுபடியும் நன்றாக விசாரித்தேன்.
ஜோனதன் மீஸ் என்று யாரும் நம்மிடம் வந்ததாகவோ, மரபணு சாம்பிள்
கொடுத்ததாகவோ
எந்த ரெக்கார்டும் கிடையாது.
- மார்ட்டி
- - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அனுப்புநர்: ராபர்ட் பால்ஸ்டன்
பெறுநர் : மார்ட்டின், சட்டத் துறை
பொருள் : J. மீஸ்
மார்ட்டி,
என்ன மூளைய்யா உனக்கு!.. செய், ராஜா!.
ஆமாம், கேஸை விசாரிக்க யாராவது நல்ல ஜட்ஜ் வருகிறமாதிரி ஏற்பாடு பண்ண முடியுமா ?
திரு. பர்மிங்ஹாம் போல பிஸினஸ்காரர்களின் கஷ்டத்தைப்
புரிந்துகொண்ட ஒரு நீதிபதி
கிடைத்தால் நன்றாக இருக்கும்.
- பாப்
- - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
நியூயார்க் டைம்ஸ்
ஹாலிடெக்ஸ் கள்ளச் சந்தை வழக்கு இன்று ஆரம்பம்
சட்ட விரோதமாக மரபணு மருந்துகள் சாப்பிட்டதாகக் கூறி ஜோனதன்
மீஸ் மீது தொடுக்கப்
பட்ட வழக்கு −ன்று மன்ஹாட்டன்
கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. பிரபல மருந்து
தயாரிப்பாளர்களான கெகல்மான்-பால்ஸ்டன் கம்பெனியினர்
தொடுத்துள்ள இந்த வழக்கு சில
மாதங்களாகவே பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. குற்றம்
சாட்டப் பட்ட ஜோனதன் மீஸ்,
தனியார் கம்பெனி ஒன்றில் அக்கவுண்டண்ட் ஆகப் பணியாற்றி
வருகிறார்.
இது மரபணு காப்புரிமை, உயிரியல் பொருள்களின் மீதான உரிமை போன்றவற்றின் சட்ட
நுணுக்கங்களைப் பற்றிய மிக முக்கியமான தீர்ப்பாக அமையும்
என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மரபணு பேடண்ட்டுகளை ரத்து செய்யக் கோரும் சில தன்னார்வ
அமைப்புகள் நேற்று
இரவிலிருந்தே கோர்ட் வாசலில் தங்கி ஆர்ப்பாட்டம் நடத்தத்
தயாராக உள்ளன.
இந்த வழக்கை விசாரிக்கும் நீதியரசர் பர்மிங்ஹாம், கடந்த காலத்தில்
பெரிய மருந்துக்
கம்பெனிகளுக்கு சாதகமான பல தீர்ப்புக்களை வழங்கியவர் என்பது
குறிப்பிடத் தக்கது.
- - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
கேத்ரின் அட்வகேட்,
அன்புள்ள திரு ப்ளேக்,
என் கட்சிக்காரர் திரு. ஜோனதன் மீஸ் இப்போதும் தங்கள்
கம்பெனியுடன் சமாதான
உடன்படிக்கை காணத் தயாராக உள்ளார் என்பதை நினைவு படுத்த
விரும்புகிறேன்.
உண்மையுள்ள,
கேத்ரின்
- - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
மார்ட்டின் ப்ளேக்
தலைமை சட்ட ஆலோசகர்
கெகல்மான்-பால்ஸ்டன் கம்பெனி
மகளே கேத்ரின்,
நீ எந்தக் காலேஜில் சட்டம் படித்தாய் ?... பாவம், ஏதோ தேங்காய்
மூடி வக்கீல்
போலிருக்கிறது. எப்படியும் நாங்கள்தான் ஜெயிக்கப் போகிறோம்.
எனவே, தோற்கிற
கட்சியிடம் பேச்சுவார்த்தைக்கு என்ன இருக்கிறது ?
உன்னுடைய அடுத்த கேஸாவது உருப்படியாக அமைய வாழ்த்துக்கள்.
வாஞ்சையுடன்,
மார்ட்டின் ப்ளேக்
- - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
- -
நியூயார்க் டைம்ஸ்
ஜோனதன் மீஸுக்கு சிறை!
ஜீன் திருட்டு வழக்கில் தீர்ப்பு!
கெகல்மான்-பால்ஸ்டன் கம்பெனி உரிமம் பெற்றுள்ள மரபு
அணுக்களைத் திருடியதாகத்
தொடுக்கப்பட்ட வழக்கில் ஜோனதன் மீஸ் குற்றவாளிதான் என்று
நீதிபதி பர்மிங்ஹாம் −ன்று
தீர்ப்பளித்தார்.கம்பெனியிடம் அனுமதி பெறாமல் நோய்
எதிர்ப்பு ஜீன்களை உடலில்
சுமந்துகொண்டு அலைந்த குற்றத்திற்காக மீஸுக்கு ஆறு மாத
சிறைத்தண்டனை விதித்த
நீதியரசர்....
- - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அனுப்புநர்: ராபர்ட் பால்ஸ்டன்
பெறுநர் : மார்ட்டின், சட்டத் துறை
மார்ட்டி,
நான்தான் அப்போதே சொன்னேனே, உனக்கு உடம்பெல்லாம் மூளை! என்ன மாதிரி
விளம்பரம் கிடைத்திருக்கிறது நமக்கு, பைசா
செலவில்லாமல்... ஜீனியஸ் !
உனக்காகவே ஒரு சின்ன வெற்றி விழா ஏற்பாடு செய்திருக்கிறேன்
: பெண்டாட்டியை
அழைத்துக் கொண்டு ஜாலியாக ஒரு ட்ரிப் அரூபா தீவுக்குப்
போய்விட்டு வாயேன்; கம்பெனி
செலவில்.
- பாப்
- - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அனுப்புநர்: ராபர்ட் பால்ஸ்டன்
பெறுநர் : மார்ட்டின், சட்டத் துறை
மார்ட்டி,
அந்தப் பயல் ஜெயிலுக்குப் போனதுடன் நமக்கு எல்லா
பப்ளிஸிடியும் அடங்கிவிட்டது.
மறுபடியும் என் தோள் தினவெடுக்கிறது - இந்தப் புது ஐடியா
சரிவருமா பார் : என்
பெண்தான் சொல்லிக் கொண்டிருந்தாள் - ஏதோ விஞ்ஞானப்
பத்திரிகையில் படித்தாளாம்,
அந்த புரொபசர் அல்பர்ட்டன் இருக்கிறார் இல்லையா ? அவர் சில ஜீன்களை
வைத்துக்
கொண்டு ஆராய்ச்சி செய்து கடைசியில் வைரஸைக்
கண்டுபிடித்தார். அதே வைரஸ்
ஜீன்களைத்தான் நாம் மீஸிடமிருந்து எடுத்த ஜீன்களுடன்
சேர்த்து மருந்து தயாரித்தோம்.
எனக்கு இந்த விஞ்ஞான இழவெல்லாம் ஒன்றும் விளங்கவில்லை - ஆனால் ஒன்றுமட்டும்
புரிகிறது - நாம் பேடண்ட் வாங்கியிருக்கிற ஜீன்களை
வைத்துத்தான் அந்த மனிதர்
ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி உலகமெல்லாம் பிரசுரித்துப் பெயர்
வாங்கிவிட்டார். ஆகவே
நாம் புரொபசர் அல்பர்ட்டன் மீதே ஒரு கேஸ் போட்டால் என்ன ? . . .