பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மணிக்கு 263 கி.மீ வேகத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்து சாதனை படைத்துள்ளார்.
பிரான்கொய்ஸ் கிஸ்ஸி என்ற இளைஞனே இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். இது சாதாணரமான துவிச்சக்கரவண்டி போன்றதுததான். ஆனால் இதில் ஹைட்ரஜன் பேரொக்சைடில் இயங்கும் ரொக்கட் சாதனத்தைப் பொருத்தி பிரான்கொய்ஸே இந்த துவிச்சக்கரவண்டியை உருவாக்கியுள்ளார்.
இந்த துவிச்சக்கரவண்டியைக்கொண்டு பிரானஸின் வடகிழக்கு பகுதிலுள்ள மன்ச்ஹொவுஸ் என்ற இடத்திலுள்ள பழைய ரன் வே ஒன்றிலே இச்சாதனை நிகழத்தப்பட்டுள்ளது. மின்னல் வேகத்தில் சென்ற இந்த துவிச்சக்கரவண்டிக்கு 'ரொக்கெட் துவிச்சக்கரவண்டி' என பிரான்கொய்ஸ் பெயரிடப்பட்டுள்ளது.
இது குறித்து பிரான்கொய்ஸ் கூறுகையில், ஹைட்ரஜன் பேரொக்சைட் நிரப்பப்பட்டிருக்கும் ரொக்கெட் மூலமே இந்த சைக்கிள் மிக வேகமாக ஓடுகிறது. இதனால் எதுவிதமான தீங்கும் இல்லை என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே துவிச்சக்கரவண்டியில் மணிக்கு 242.6 கி.மீ வேகத்தில் சென்றமையே சாதனையாக இருந்தது. இச்சாதனை 2002ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.