செவ்வாய் கிரகத்திலிருந்து கியூரியோசிட்டி அனுப்பிய புகைப்படத்தில் பல்லி வகையைச் சேர்ந்த ஒரு உயிர் காணப்படுவதாக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நபரொருவர் படமொன்றினை வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.
நீண்டகாலமாகவே செவ்வாய் கிரகத்தில் உயிரனங்கள் வாழ முடியுமா? என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
இதில் நாசா அனுப்பிய கியூரியோசிட்டி விண்கலத்தின் பங்கு முக்கியமாக அமைந்துள்ளது. ஏற்கனவே ஆறொன்று ஓடிமைக்கான ஆதாரங்களை அனுப்பி வைத்தது கியூரியோசிட்டி விண்கலம். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் கியூரியோசிட்டி விண்கலம் அனுப்பிய புகைப்படங்களை அண்மையில் நாசா வெளியிட்டது.
இந்நிலையில் அப்படத்தில் முதலையை ஒத்த ஒரு பல்லி வகை தென்படுவதாக ஜப்பானைச் சேர்ந்த பெயர் வெளியிடாத ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஆனால் இப்படத்தினை ஏற்கமுடியாது. இருப்பினும் உயிரினங்கள் செவ்வாயில் வாழ முடியுமா? என தொடர்ந்தும் ஆராய்ச்சிகள் நடைபெறும் என நாசா தெரிவித்துள்ளது.
ஏற்கனவே செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட படத்தில் பெண் சிலை இருப்பதாக ஒரு போலியான படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
By AM.Rizath | Metronews