இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதி ஒன்று சிறந்த உடற்கட்டுக்கான உலக சம்பியன்ஸ் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் உலக உடற்கட்டு சம்பியன் பட்டம் வென்ற முதல் தம்பதி என்ற பெருமையைப் பெற்றுள்ளனர்.
43 வயதான டொன் அகிம் மற்றும் 33 வயதான ரோசன்னா பெக்கட் என்ற தம்பதியே இந்த பெருமைக்குரியவர்களாவர். இத்தம்பதிக்கு கார்மென் என்ற மகள் ஒருவர் இருக்கிறார்.
டொன் கப்பல் தொழிலாளியாகவும் அவரது மனைவி நடனக் கலைஞராகவும் பணி புரிகின்றனர். இத்தம்பதி சிறந்த உடற்கட்டுள்ளவர்களுக்கா செய்ன்ட் ஒல்பன்ஸ் நகரில் நடத்தப்பட்ட மியாமி சிறந்த உடற்கட்டு உலக சம்பியன்ஸ் போட்டியில் கலந்து கொண்டே இச்சாதனையை நிகழ்த்தியு;ளளனர்.
200க்கும் அதிகமானோர் கலந்துகொண்ட இப்போட்டியில் இத்தம்பதி 3 பிரிவுகளில் பரிசுகளை வெற்றிபெற்றுள்ளனர். இதன் மூலம் சிறந்த உடற்கட்டு உலக சம்பியன் பட்டம் வென்ற முதல் தம்பதியாக இவர்கள் தடம் பதித்துள்ளனர்.
இதில் ஆண்களுக்கான மிஸ்டர் மஸ்ஸல் மொடல் ஏ மற்றும் ஆண்களுக்கான உடற்கட்டு ஆகிய இருபிரிவுகளில் டொன் வெற்றி பெற ரோசன்னா மிஸ் பிகினி பி பிரிவுக்கான பட்டத்தை தனதாக்கினார்.
இது குறித்து ரோசன்னா கூறும்போது, இப்போட்டி குறித்த அறிவிப்பினை இணையதளத்தில் பார்த்தோம். பின்னர் இப்போட்டிக்காக கடந்த 4 மாதங்களாக நாங்கள் இருவரும் பயிற்சிகளை மேற்கொண்டோம். இதன்போது வாரத்திற்கு சுமார் 14 மணி நேரம் வரையில் நாங்கள் இருவரும் பயிற்சிகளை மேற்கோண்டோம்.
இதேவேளை வெற்றியின் பின்னர் டொன் கூறுகையில், நாங்கள் இருவரும் தம்பதிகள் என நாங்கள் கூறும் வரையில் நடுவர்களை அதனை அறிந்திருக்கவில்லை. முதலில் ரோசன்னாவே பரிசுக்குத் தெரிவானார். அப்போது நான் மகிழ்ச்சியடைந்தேன். இந்நிலையில் நானும் பட்டத்திற்கு தெரிவானேன் எனத் தெரிவித்துள்ளார்.
By : AM. Rizath / Metronews