எம்.ஜி.ஆர்க்கு அடுத்து அதிகமான ரசிகர்களைக் கொண்டவர் நடிகர் அஜித்தான் என நடிகரும், விமர்சகரும், மூத்த பத்திரிக்கையாளருமான சோ ராமசாமி தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கையாளரும், நடிகருமாகிய சோ ராமசாமி பாராட்டுவதென்றால் அளவுக்கு அதிகமாகவே கஞ்சப்படுவார். இவர் வயாயால் ஒருவர் பாராட்டு பெறுவதென்றால் சாதரணமான விடயமல்ல.
விமர்சனமின்றி, குறைகளை சுட்டிக்காட்டாமல் அவர் எந்த ஒரு ஆளுமையையும் இதுவரை பாராட்டியது இல்லை என்று கூறலாம்.
இது குறித்து சோ ராமசாமி கூறுகையில், எம்.ஜி.ஆர். தான் பலராலும் இன்றும் போற்றப்படும் ரசிக்கப்படும் மிகப்பெரிய தலைவர், அவரால் மிகப்பெரிய அளவுக்கு ரசிகர் பட்டாளத்தை ஈர்க்க முடிந்தது. அவரை வழிபடவே செய்யத் தொடங்கிவிட்டனர் அவரது ரசிகர்கள்.
அப்பேர்பட்ட எம்.ஜி.ஆர். போன்று இன்று அஜித் உள்ளார். மிகப்பெரிய ரசிகர்களை தன் பக்கம் ஈர்ப்பதில் எம்.ஜி.ஆர்.க்கு அடுத்தது அஜித்தான். ஆனாலும் எம்.ஜி.ஆர்.க்கு ஈடு இணை இல்லை என தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். மறைந்து சுமார் 25 வருடங்களான பின்னரும் அவர் மீது பற்றுக்கொண்ட ரசிகர்கள் இன்றுவரையில் அதிகமாகவே காணப்படுகின்றனர். தற்போது அந்தளவிற்கு அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகர் 'தல' அஜித் என்கிறார் சோ.
தகவலறிந்த ரசிகர்கள் 'தல' போல வருமா என்று மகிழ்ச்சியடைவது கேட்குதுங்களாண்ணா...