கடல் நீரில் இருக்கும் யுரேனியத்தை பிரிப்பது தொடர்பில் நீண்ட நாட்களாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்த விஞ்ஞானிகள் தற்போது அதில் வெற்றிபெற்றுள்ளனர்.
அணு உற்பத்தியில் முக்கிய பங்கு வகுக்கும் யுரேனியத்திற்கு இன்று உலகளவில் பாரிய கேள்வி உண்டு. மிக அரிய மூலகமான யுரேனியம் நிலத்திலுள்ளதைப் போல பல்லாயிரம் மடங்கு அதிகமாக கடலில் உள்ளதாக விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து கடல் நீரிலிருந்து யுரேனியத்தை எவ்வாறு பிரித்தெடுப்பது என பல வருடங்களாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதில் அமெரிக்காவிலுள்ள வடக்கு கரோலினா பல்கலைக் கழகத்தின் இரசயான துறை பேராசிரியர் வென்பின்லின் தலைமையிலான விஞ்ஞானிகளும் ஆய்வில் ஈடுபட்டனர்.
இவர்களின் ஆய்வின் பயனாக தற்போது கடல் நீரிலிருந்து யுரேனியம் பிரித்தெடுக்கும் முயற்சி வெற்றிகரமாக அமைந்துள்ளது. இது யுரேனியம் தொடர்பான ஆராய்ச்சிகளின் ஒரு மைல்லாக மாறி அறிவியல் உலகின் மற்றுமொரு வெற்றியாக அமைந்துள்ளது.