சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே உலகம் புகழும் விஞ்ஞானியான ஸ்டீபன்!

'எதனை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்!'

செவ்வாயில் விவசாயம் செய்யலாம் வாங்க : நம்பிக்கை அளிக்கும் கியூரியோசிட்டி

ஆறடி நிலம் மட்டுமே சொந்தம் என ஆறுதல் தத்துவங்கள் பேசினாலும் ஆகாயத்தையும் தாண்டி நிலத்தை சொந்தமாக்கும் ஆராய்ச்சிகளுக்கு...

மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில...

அதிகரிக்கும் தகவல் திருட்டு : பாதிப்படையும் அமெரிக்க நிறுவனங்கள்

காலத்தின் தேவைக்கேற்ப ஒவ்வொரு விடயமும் பரிணாமமடைந்து வருவதைப் போல திருட்டும் ஒரு வழியாக தனது அடுத்த பரிணாமத்தை நோக்கி...

புத்தம் புதிய பூமி தேடும் கெப்ளர்

தேடலிள்ள சுவாரஸ்யத்தினை எப்போதும் அனுபவித்துக்கொண்டிருப்பதே அறிவியல் உலகிற்கு...

Total Pageviews

நாங்கள் பிரசுரித்த, உங்கள் தேடலுடன் தொடர்புடைய செய்திகள்....!!!
Here are the articles we written related to your search..!!!

Wednesday, May 22, 2013

கடல் நீரில் யுரேனியம் பிரிப்பு : வெற்றிபெற்றனர் விஞ்ஞானிகள்


கடல் நீரில் இருக்கும் யுரேனியத்தை பிரிப்பது தொடர்பில் நீண்ட நாட்களாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்த விஞ்ஞானிகள் தற்போது அதில் வெற்றிபெற்றுள்ளனர்.


அணு உற்பத்தியில் முக்கிய பங்கு வகுக்கும் யுரேனியத்திற்கு இன்று உலகளவில் பாரிய கேள்வி உண்டு. மிக அரிய மூலகமான யுரேனியம் நிலத்திலுள்ளதைப் போல பல்லாயிரம் மடங்கு அதிகமாக கடலில் உள்ளதாக விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.


இதனையடுத்து கடல் நீரிலிருந்து யுரேனியத்தை எவ்வாறு பிரித்தெடுப்பது என பல வருடங்களாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதில் அமெரிக்காவிலுள்ள வடக்கு கரோலினா பல்கலைக் கழகத்தின் இரசயான துறை பேராசிரியர் வென்பின்லின் தலைமையிலான விஞ்ஞானிகளும் ஆய்வில் ஈடுபட்டனர்.


இவர்களின் ஆய்வின் பயனாக தற்போது கடல் நீரிலிருந்து யுரேனியம் பிரித்தெடுக்கும் முயற்சி வெற்றிகரமாக அமைந்துள்ளது. இது யுரேனியம் தொடர்பான ஆராய்ச்சிகளின் ஒரு மைல்லாக மாறி அறிவியல் உலகின் மற்றுமொரு வெற்றியாக அமைந்துள்ளது.

Tuesday, May 21, 2013

கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க தேனீக்களுக்கு பயிற்சி


குரோஷிய நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்ணிவெடிகளை கண்டுபிக்க தேனீக்களுக்கு பயிற்சியளிக்கும் திட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.

ஐரோப்பிய நாடான குரோஷியாவிற்கும், செர்பிய கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே, 1991ல் நடந்த போரின்போது, ஏறக்குறைய, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், கண்ணிவெடியில் சிக்கி, 2,500க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்த சண்டையின்போது, 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் புதைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

இந்த சூழலில், மிர்ஜனா பிலிபோவிக் என்பவர், தன் ஆண் நண்பருடன் குரோஷிய நகர் ஒன்றில், மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, கண்ணிவெடி வெடித்ததில், அவரது நண்பர் அதே இடத்தில் பலியானார். மிர்ஜனாவின் இடது கால் துண்டிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து, ஏறக்குறைய, 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில், இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க, தேனீக்களை பயன்படுத்த, குரோஷிய ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, தேனீக்களின் நடத்தைகளை பற்றி நன்கு அறிந்தவரும், தேனீக்களின் நிபுணருமான நிகோலா கிசெக், சமீபத்தில், ஆராய்ச்சியாளர்களுடன், ஜாக்ரெப் பல்கலைக்கழகத்தில், ஆலோசனை நடத்தினார். அப்போது, கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க, தேனீக்களை பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து நிகோலா கிசெக் கூறுகையில், தேனீக்கள், நறுமணத்தை முகர்வதில் அபாரத்திறமை கொண்டவை. எனவே, அவற்றிற்கு, கண்ணிவெடிகளின் மணம் குறித்து பயிற்சி அளிக்கும் போது, அவற்றால் கண்ணிவெடிகளை எளிதாக கண்டுபிடித்து விடமுடியும். தேனீக்களுக்கு வழக்கமாக அளிக்கப்படும் உணவுடன், கண்ணிவெடியின் நறுமணம் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். அப்போது, அவற்றால் பூமியில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை எளிதாக கண்டுபிடித்து விடமுடியும்.

இது ஒன்றும் அவ்வளவு கடினமான செயல் அல்ல ஆனால், ஆயிரக்கணக்கான தேனீக்களுக்கு பயிற்சி அளிப்பதுதான், சற்று சவாலான காரியம் என தெடரிவித்துள்ளார்.

Saturday, December 8, 2012

ஐ போனாக மாறப்போகும் ஐ (கண்) : புதியதோர் அறிவியல் கண்டுபிடிப்பு


கொலிவூட் படங்களிளில் வருவது போன்று text messageகளை வாசிக்கக்கூடிய புதிய வகை தொடுவில்லை (contact lens)  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 'விரைவான செய்திகள் ('instant messaging')' என்பதற்கு புதிய அர்த்தத்தினை ஏற்படுத்தும் வகையில் விரைவில் அறிமுகமாகவுள்ளது.

கையடக்கத் தொலைபேசிகளிலிருந்து electronic messagesகளை நேரடியாக குறித்த contact lensஇனை அணிந்திருப்பவருக்கு சென்றடையும் வகையிலான புதிதோர் தொழில்நுட்பத்தினை விஞ்ஞானிகள் மேம்படுத்தியுள்ளனர்.

இதற்காக பயன்படுத்தப்படும் கோளவடிவ எல்.சீ.டி திரை, பெல்ஜியம் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாராய்சியானது எம்மை தொடர்பாடல் ரீதியாக முற்றிலும் மாற்றியமைக்கும் அதாவது தொலைக்காட்சி பெட்டிகள் போன்ற துல்லியமான படங்களை பார்க்கக்கூடிய ஐ உருவாக்கும் திட்டத்தினை நோக்கிச் செல்லும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இது தொடர்பில் பேராசிரியர் ஹேர்பேர்ட் டி ஸ்மெட் கருத்துத் தெரிவிக்கையில், இப்போது நாங்கள் அடிப்படை தொழில்நுட்பத்தினை நிறுவியுள்ளோம்.

இதன் உண்மையான பயன்பாடுகளினூடாக நாம் விரைவில் வேலைகள் செய்ய முடியும். இது அடுத்த ஒரு சில வருடங்களிலே இது சாத்தியமாகும்.

அதாவது துல்லியமான படங்கள் மற்றும் தகவல்களை பெற குறித்த contact lensஇனைப் பயன்படுத்த முடியும்.

மேலும் இவ்வகை இனை ஒத்த சன் கிளாஸ்களை கண்டுபிடிக்கவும் ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்த்தள்ளனர். ஆனால் இது ஒன்று அறிவியல் புனைக்கதைகள் அல்ல. எனவே இது படங்களை பார்க்கும் திரையரங்கை மாற்றீடாக அமையவே மாட்டாது.

இருப்பினும் பாதை வழிகள், ஸ்மார்ட் போன்களிலுள்ள மெசேஜ் போன்றவற்றை நேரடியாக கண்களிலேயே பார்க்ககூடியவாறு அமையும் என தெரிவித்துள்ளார்.






Sunday, November 18, 2012

ஏன் ஐன்ஸ்டைனின் மூளைக்கு அபார திறமை? : மூளையைக் குடையும் தற்கால விஞ்ஞானிகள்


20ஆம் நூற்றாண்டில் தலைசிறந்த விஞ்ஞானியான அல்பேர்ட் ஐன்ஸ்டைன் உலகில் தோன்றிய மனிதர்களில் அதிக அறிவாற்றல் வாய்ந்த ஒருவராக கருதப்படுகிறார். (நாங்கெல்லாம் அறிவாளிகளாக இனங்காணப்படல்லை என்று சிலர் இன்று வரையில் சந்தர்பங்களை உருவாக்க முயற்சித்திக்கொண்டிருக்கிறார்கள்)

ஐன்ஸ்டைன் மரணமடைந்து 5 தசாப்தங்கள் கடந்து விட்ட நிலையிலும் இவரது அறிவுக்கூர்மைக்கான காரணம் என்னவென அவரது மூளையை வைத்து இப்போதைய விஞ்ஞானிகள் தங்களது மூளையை கசக்கிப் பிளிந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் இன்றுவரையில் ஐன்ஸ்டைனின் அபார அறிவு மற்றும் அவரது மூளை தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு முடிவு கிடைக்கவில்லை.

ஐன்ஸ்டைனின் மரணத்திற்கு பின்னர் அவரது மூளை தோம்ஸ் ஹார்வே எனும் மருத்துவரினால் திருடப்பட்டமை பின்னர் அவர் அவற்றை அனுமதியின்றி ஆராய்ச்சிகளுக்காக உபயோகப்படுத்தப்பட்டமை என ஏற்கனவே பல சர்ச்சைகளைத் தோற்றுவித்தது ஐன்ஸ்டைனின் மூளை.

இந்நிலையில் தற்போது ப்ளோரிடா மாநில பல்கலைக்கழகத்தின் மானுடவியலாளரான டீன் பாக் தலைமையிலான குழுவினர் தங்களது மூளைகளைக் குடைந்து ஐன்ஸ்டைனின் அறிவுக் கூர்மைக்கு அவரது மூளையின் சில உட் பகுதிகளே காரணமென தெரிவித்துள்ளனர்.

அவர்கள் தமக்கு கிடைக்கப்பெற்ற ஐன்ஸ்டைனுடைய மூளையின் 14 அரிய புகைப்படங்களைக் கொண்டு சுமார் 85 சாதாரண மனிதர்களுடைய மூளையுடன் ஒப்பிட்டே இம்முடிவுக்கு வந்துள்ளனர்.

ஐன்ஸ்டைனின் மூளையின் மொத்த அளவு, நிறை மற்றும் வடிவம் சாதாரண மனித மூளையைப் போன்றதே எனினும் மூளையின் உட்பிரிவுகளான prefrontal, somatosensory, primary motor, parietal , temporal and occipital cortices ஆகியன அசாதாரணமாக உள்ளதாகவும் இதுவே அவரது அபார அறிவுத்திறனுக்கான காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐன்ஸ்டைனின் மூளை தொடர்பாக டீன் பாக் குழுவினரின் ஆராய்சியான The cerebral cortex of Albert Einstein: a descriptioன் and preliminary analysis of unpublished photographs  தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவருடைய மூளை குடையப்போய் நம்ம மூளை குழம்பாமல் இருந்தால் சரி!



Why Albert Einstein's brain is best?  


Albert Einstein, The great scientist of 20th centaury is the most intellectual human ever in the world, studies believe so far. Why Einstein's brain different than others? experts have still been trying to find the answer since his death with no proper answer.

Einstein brain had been stolen by Dr. Thomes harway and used for research without official permission. It became big issue and criticized by many in that days.

Meanwhile ,


Tuesday, November 6, 2012

Angry Birds விளையாடி நேரத்தை வீணடிக்கின்றீர்களா? அப்படின்னா நீங்கதான் புத்திசாலி : ஆய்வில் முடிவு


எந்த நேரம் பார்த்தாலும் ஏதாவது கணனியில் விளையாடிக்கிட்டே இருக்கிறான் தாண்டவத்தில் வருகிற வீரக்கத்தி மாதிரி. உருப்படுகிற வழிய பார்க்கவே மாட்டான் என்று இனி யாரும் யாரையும் திட்டித் தீர்க்க முடியாத வகையில் அமைந்துள்ளது அண்மைய ஆராய்ச்சி முடிவு.

இன்று அதிகளவில் விளையாடப்படும் கணனி விளையாட்டுக்களில் ஒன்று Angry Birds. ஏன் நீங்கள் கூட பல முறை இவ்விளையாட்டில் நேரத்தை வீணடித்திப்பீர்கள். அப்படியாயின் நீங்கள் ஒரு புத்திசாலி என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

உண்மையில் வேலைகளின் போது இடைநடுவே Angry Birds விளையாடினால் நீங்கள் சாமர்த்தியமான ஊழியராக மாறுவீர்கள் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் Angry Birds போலுள்ள கணனி விளையாட்டுக்கள் ஊழியர்களை நெகிழ்திறன் வேலையாட்களாக மாற்றுவதுடன் வேலையில் கவனம் செலுத்துபவராக மாற்றுவதாகவும் குறித்த ஆய்வு சில முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அலுவலகத்தில் இருப்பவர்களின் இறுக்கங்களை குறைப்பதுடன் ஊழியர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்க சிறந்து வழிகளில் இதுவும் ஒன்று என Harvard Business Review (HBR) இன் கட்டுரை ஒன்றும் சுட்டிக்காட்டியுள்ளது. (ம்கும் வெளங்கிரும்... சமூகவலைத்தளங்களில் பயன்கள் தெரியாமலும் புரியாமலும் பேஸ்புக் பயன்படுத்துதையே குற்றம் என்கிற அலுவலங்களுக்கு இது தெரியுமா இல்ல புரியுமா???)

இன்று உலகளவில் மொத்தமாக Angry Birds விளையாட ஒரு நாளைக்கு 300மில்லியன் நிமிடங்கள் செலவாவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் கெமருன் விளையாடுவதும் உள்ளடங்குகிறது. நிஜமாகவே டேவிட் கெமருனும் Angry Birds விளையாட்டின் ஒரு அடிமையாம்.

என்ன செய்வது வெள்ளைக்காரன் விளையாடினால் அறிவு வளரும் எம்மவர்கள் விளையாடினால் உருப்படமாட்டார்கள் என்கிற ஒரு கூட்டம் இருக்கும் வரையில நாம் வளருவது கஸ்டம் தான்.

இருந்தாலும் நாம் விளையாடாமல் இருக்கலாமா பைத்தியக்காரன் பட்டம் வாங்கியவர்கள்தானே பிற்காலத்தில் கலாநிதி பட்டம் பெற்ற விஞ்ஞானிகளாக மாறியுள்ளார்கள்.

ம்ம்ம்.... இனியென்ன நல்லா விளையாடி நேரத்தை வீணடிங்க புத்திசாலியா மாறுங்க. மேலும் விரைவில் Angry Birds இன் புதிய பதிப்பு ஒன்று வெளியாகவுள்ளது மறந்திடாதிங்க!

Sunday, October 21, 2012

காற்றிலிருந்து பெற்றோலை தயாரிக்கும் தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு


வட இங்கிலாந்திலுள்ள நிறுவனம் ஒன்று காற்றிலிருந்து பெற்றோலை தயாரிக்கும் தொழில் நுட்பத்தை கண்டுபிடித்து தொழில்நுட்ப உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இத் தொழில்நுட்பத்தின் முதற்கட்டமாக சோடியம் ஐதரொட்சைட்டை காபனீரொட்சைட்டுடன் இணைத்து பெறப்படும் சோடியம் காபனேற்றை மின்னேற்றி தூய காபனீரொட்சைட் பெறப்படும். அதனைத் தொடர்ந்து நீராவியை மின்னேற்றி பெறப்படும் ஐதரசன் வாயுவை காபனீரொட்சைட்டுடன் இணைத்து மெதனோல் பெறப்படும். அது மண்ணெண்ணெய் எரிபொருள் பிறப்பாக்கியூடாக செலுத்தப்பட்டு பெற்றோல் தயாரிக்கப்படுகின்றது.

சிறிய எரிபொருள் சுத்திகரிப்பு சாலை ஒன்றில் 3 மாதங்களுக்கும் குறைந்த காலப்பகுதியில் இத் தொழில்நுட்பத்தினூடாக 5 லீற்றர் பெற்றோலை தயாரித்துள்ளதாக வளி எரி பொருள் ஸ்தாபனம் என்ற மேற்படி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளொன்றுக்கு ஒரு தொன்னுக்கும் அதிகமான பெற்றோலை காற்றைப் பயன்படுத்தி தயாரிக்க தங்களது தொழில்சாலையை பாரிய அளவில் விருபடுத்த வே;ண்டும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இநநிலையில் இந்த தொழில்நுட்பத்துக்கு பிரித்தானிய இயந்திர பொறியிலாளர் நிறுவனம் ஆதரவளித்துள்ளது.

அதுமட்டுமன்றி இத்தொழில்நுட்பமானது இந்த வாரம் லண்டனில் இடம்பெறவுள்ள பொறியியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளவை குறிப்பிடத்தக்கது.

அப்படின்னா அடுத்த சந்ததிக்கும் பெற்றோல் உண்டென்பது மகிழ்ச்சிதான் ஆனால் அரசாங்கங்கள் காற்றுக்கு வரியுடன் கூடிய விலை விதித்தால்... எப்பா தாங்காதுடா சாமி.






Friday, October 19, 2012

விலங்குகள் அனர்த்தங்களை எதிர்வுகூறுமா... கடல்வாழ் உயிரினங்கள் சுனாமியை உணர்த்துமா?


ஆறறிவு என்று கூறப்படும் விலங்குகளான மனிதர்கள் தவிர ஏனைய விலங்குகள் இயற்கை அனர்த்தங்களை எதிர்வுகூறும் திறன் படைத்தது என்ற நம்பிக்கை எம்மில் பரவிக்கிடக்கின்றது. இது உண்மையா பொய்யா என்பது குறித்த பல்வேறு ஆராய்ச்சிகள் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

உண்மையில் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய தேவை ஒன்று தற்போது ஏற்பட்டுள்ளதைத் தவிர்க்க முடியவில்லை. ஏனெனில் அண்மைக்காலமாக இலங்கையின் கிழக்குப் பிரதேசத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் தற்போது மீன்கள் அதிகளவில் பிடிபடுவதுடன் ஒரு சில பிரதேசங்களில் கடவாழ் (கடல் பாம்பு, காடலாமை, மீன்கள்) உயிரினங்கள் கரையொதுங்கின்றது.

இதனால் அப்பகுதி மக்களிடையே ஒரு வகையான அச்சம் காணப்படுகின்றது. 2004இல் ஏற்பட்ட சுனாமிக்கு முன்னரும் இவ்வாறே அப்பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் கரையொதுங்கியதுடன் ஏராளமான மீன்களும் பிடிக்கப்பட்டது. இதனால் மீண்டுமொரு சுனாமி எம்மை நோக்கி வருகிறதா என்ற சந்தேகம் அப்பகுதி மக்களிடையே நிலவுகின்றது. அதுவொரு வகையில் நியாமும் கூட.

ஏனெனில் அப்பகுதி மக்களே ஏற்கனவே 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் அதிகளவு உயிர்கள் மற்றும் உடைமைளை இழந்தவர்கள் என்பதே அதற்குக் காரணம். (ஆனாலும் அவர்களின் நிலைமைகளை படம் பிடித்து வேறு பிரதேசத்தினை போல் சித்திரித்து உலக நாடுகளுக்கு காட்டினார் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மின்னல் நாயகனும் என்பது வேறு கதை. அப்பகுதி மக்களுக்காவது உதவினாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது! ஐயய்யோ நமக்கெதுக்கு அரசியல்... ஒரு ஆதங்கத்தில் பேசித் தொலைச்சிட்டன்)

சரி அப்படியானால் தற்போது கிழக்கில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் சுனாமி, சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான அபாயச் சங்குகளா என்றால் நிச்சயமாக இல்லை என்கிறார்கள் ஆராய்சியாளர்கள்.

அவ்வாறெனில் பல சந்தர்ப்பங்களில் விலங்குகளின் செயற்பாடுகள் அனர்த்தங்களை எச்சரிப்பதாக அமைந்துவிடுகிறதே அது ஏன்? 2004ஆம் ஏற்பட்ட சுனாமியின் போது கடலோரத்தில் இருந்த பல விலங்குகள் உயிர்பிழைத்திருந்தது ஏன்? இவற்றையெல்லாம் விட சுனாமியை எச்சரிப்பது போல சுனாமி ஏற்படுவதற்கு முன்னர் கடலை விலத்திய விலங்குகளின் நகர்வுகள், ஏராளமான மீன்கள் கரையை வந்தடைந்தது போன்றவை ஏற்படக்காரணம் என்ன? என்ற ஏராளமான கேள்விகளுக்கு ஆராய்ச்சியாளர்களின் தேடலின் முடிவுகள் இவ்வாறு அமைகிறது.
கரையொதுங்கிய மீன்கள்

விலங்குகளால் காலநிலை மாற்றங்களை உணர்ந்துகொள்ள முடியும். இதனால் சூடு, குளிர், அமுக்கம், மனிதர்களுக்கு கேட்கமுடியாத சத்தங்கள், வாயுக்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள் என பலவற்றை உணரக்கூடிய ஆற்றல் உண்டு. இவை ஒவ்வொரு வகையான இனங்களுக்கும் வித்தியாசப்படும்.

இவ்வாறான மாற்றங்களை உணரும் சந்தர்ப்பங்களில் குறித்த விலங்குகள் தங்களுக்கு ஏதுவான வாழும் சூழல் இல்லை என்பதை புரிந்துகொண்டு இடம்பெயர ஆரம்பிக்கும். தவிர விலங்குகளுக்கு அனர்த்தங்களை உணரக்கூடிய எந்தவித விஷேட சக்திகளும் இல்லை என்பதே உண்மை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இவர்களின் விளக்கங்களும் நியாயமாகவே உள்ளன. ஏனெனில் எமது வீடுகளில் மேல் நோக்கி எறும்புகள் பயணிக்கும் போது மழை வரப்போகிறது என்று எதிர்வுகூறுவார்கள் சில வேளைகளில் மழை வரலாம் வராமலும் போகலாம் ஆனால் எறும்புகள் எறிக்கொண்டுதான் இருக்கிறது. எனவே காலநிலை மாற்றத்தினை உணர்ந்துகொண்ட எறும்புகள், தமது பாதுகாப்பை உறுதி செய்கிறதே தவிர மழை வருவதை அவை உறுதி செய்யவில்லை என்பது தெளிவாகின்றது.

இதே போலவே கடலிலும் ஏற்படுகின்ற மாற்றங்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றது. இதன் விளைவே கரையை நோக்கி அவை படையெடுக்க ஆரம்பித்திருக்கிறதே அன்றி சுனாமி அல்லது வேறு அனர்த்தங்களுக்கான எச்சரிக்கை அல்ல என்பது உறுதி என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
உயிருடன் மீன்கள் கரையை நோக்கி...

மேலும் கடலில் ஏற்படுகின்ற எண்ணெய்க்கசிவு, சிறியளவிலான நில அதிர்வுகள் போன்ற காரணிகளும் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் இதனால் இறந்தும் கடல் வாழ் உயிரினங்கள் கரையொதுங்க வாய்ப்புக்கள் உள்ளது. அத்துடன் உயிருடன் உள்ளவை கரையை நோக்கி நகரும் இந்நிலையே மீனவர்களுக்கு அதிகளவிலான மீன்கள் சிக்கக் காரணமாகின்றது.

எனவே மீன்கள் அதிகளவில் கிடைப்பது மற்றும் கரையொதுங்குவது தொடர்பில் அச்சம் கொள்ளவேண்டிய அவசியமில்லை என்கிறது விஞ்ஞானம். மேலும் வதந்திகள் மூலம் அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என்போம் நாம்.

மொட்டு வெடிச்சாலும் சரி கள்ளன் குதிச்சாலும் சரி நாய் குரைக்கத்தான் செய்யும். ஆனால் அது பேய், பிசாசுக்களை பார்த்துத்தான் குரைக்கின்றது என்ற மூடநம்பிக்கைளில் எம்மவர்கள் மூழ்கியது போன்று மீன்கள் கரையொதுங்கினால் சுனாமி வரும் என்ற மூடநம்பிக்கை ஏற்படாமல் இருப்பதே நல்லது.

ஏனெனில் சுனாமி ஏற்படுதவதற்கு முன்னர் மீன்கள் கரையொதுங்கலாம் ஆனால் மீன்கள் கரையொதுங்கும் போதெல்லாம் சுனாமி ஏற்படாது.

குறிப்பு : படங்கள் யாவும் இலங்கையின் கிழக்குப் பகுதிகளில் (காத்தான்குடி, சாய்ந்தமருது, மருதமுனை, காரைதீவு) இடம்பெற்றவை.

காரைதீவு பிரதேசத்தில் பிடிபட்ட மீன்கள்


காத்தான்குடியில் கரையொதுங்கிய ஆமை




Can animals predict the natural disaster?


Most of us believing that animals can predict the natural disaster excluding 6 sense animal of human. Researchers have been trying to clarify that is it true or not for a long time.  This is the right time to concentrate on it as dead sea life such as tortoise, new kind of strange fishes, sea snakes washing up on shore in eastern part of Sri Lanka.

After the tsunami when fisherman catch unusual amount of fish that makes people afraid of natural disaster in this region.