Total Pageviews

Tuesday, November 6, 2012

Angry Birds விளையாடி நேரத்தை வீணடிக்கின்றீர்களா? அப்படின்னா நீங்கதான் புத்திசாலி : ஆய்வில் முடிவு


எந்த நேரம் பார்த்தாலும் ஏதாவது கணனியில் விளையாடிக்கிட்டே இருக்கிறான் தாண்டவத்தில் வருகிற வீரக்கத்தி மாதிரி. உருப்படுகிற வழிய பார்க்கவே மாட்டான் என்று இனி யாரும் யாரையும் திட்டித் தீர்க்க முடியாத வகையில் அமைந்துள்ளது அண்மைய ஆராய்ச்சி முடிவு.

இன்று அதிகளவில் விளையாடப்படும் கணனி விளையாட்டுக்களில் ஒன்று Angry Birds. ஏன் நீங்கள் கூட பல முறை இவ்விளையாட்டில் நேரத்தை வீணடித்திப்பீர்கள். அப்படியாயின் நீங்கள் ஒரு புத்திசாலி என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

உண்மையில் வேலைகளின் போது இடைநடுவே Angry Birds விளையாடினால் நீங்கள் சாமர்த்தியமான ஊழியராக மாறுவீர்கள் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் Angry Birds போலுள்ள கணனி விளையாட்டுக்கள் ஊழியர்களை நெகிழ்திறன் வேலையாட்களாக மாற்றுவதுடன் வேலையில் கவனம் செலுத்துபவராக மாற்றுவதாகவும் குறித்த ஆய்வு சில முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அலுவலகத்தில் இருப்பவர்களின் இறுக்கங்களை குறைப்பதுடன் ஊழியர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்க சிறந்து வழிகளில் இதுவும் ஒன்று என Harvard Business Review (HBR) இன் கட்டுரை ஒன்றும் சுட்டிக்காட்டியுள்ளது. (ம்கும் வெளங்கிரும்... சமூகவலைத்தளங்களில் பயன்கள் தெரியாமலும் புரியாமலும் பேஸ்புக் பயன்படுத்துதையே குற்றம் என்கிற அலுவலங்களுக்கு இது தெரியுமா இல்ல புரியுமா???)

இன்று உலகளவில் மொத்தமாக Angry Birds விளையாட ஒரு நாளைக்கு 300மில்லியன் நிமிடங்கள் செலவாவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் இங்கிலாந்தின் பிரதமர் டேவிட் கெமருன் விளையாடுவதும் உள்ளடங்குகிறது. நிஜமாகவே டேவிட் கெமருனும் Angry Birds விளையாட்டின் ஒரு அடிமையாம்.

என்ன செய்வது வெள்ளைக்காரன் விளையாடினால் அறிவு வளரும் எம்மவர்கள் விளையாடினால் உருப்படமாட்டார்கள் என்கிற ஒரு கூட்டம் இருக்கும் வரையில நாம் வளருவது கஸ்டம் தான்.

இருந்தாலும் நாம் விளையாடாமல் இருக்கலாமா பைத்தியக்காரன் பட்டம் வாங்கியவர்கள்தானே பிற்காலத்தில் கலாநிதி பட்டம் பெற்ற விஞ்ஞானிகளாக மாறியுள்ளார்கள்.

ம்ம்ம்.... இனியென்ன நல்லா விளையாடி நேரத்தை வீணடிங்க புத்திசாலியா மாறுங்க. மேலும் விரைவில் Angry Birds இன் புதிய பதிப்பு ஒன்று வெளியாகவுள்ளது மறந்திடாதிங்க!