Total Pageviews

Wednesday, November 14, 2012

துப்பாக்கியும் விஜய் ரசிகர்களின் அலம்பலும்


இந்தப்பதிவில் பேச்சு வழக்கு கொஞ்சம் தூக்கலா இருக்கும்.
நடுநிலையான துப்பாக்கி விமர்சனத்திற்கு, துப்பாக்கி - விமர்சனம் 
எனக்கொரு சந்தேகம் அது பதிவின் முடிவில் பார்க்க

ஆமாங்க விஜயின் துப்பாக்கி படம் பார்க்க கூடியமாதிரிதான் இருக்கு அதுக்காக தமிழ்சினிமாவை புரட்டிப்போடுற படம், வசூலில் ரஜினி மற்றும் அஜித் ஓப்பனிங்க தூக்கி சாப்பிடுற படம், ஸ்டைல் என்டா என்னவென்று கிளாஸ் எடுக்கிற படம் அது இதுன்னு இந்த ஆணி புடுங்கிற அளவுக்கு விஜய் ரசிகர்களின் அலம்பல் பேச்சு தாங்க முடியலடா சாமி.

இத்தனைக்கும் படத்தின் கதை இதற்கு முதல் 1000 தடவை அடிச்சுப் புழிஞ்சி துவைச்சிப்போட்ட கதைதான். என்ன விஜயகாந்த்தும் அர்ஜுனும் செங்சிக்கிட்டு இருந்த வேலையை சில வருடங்களாக செய்ய ஆளில்லை என்ற குறையை தீர்த்திருக்கிறார் விஜய் அவ்வளவுதான்.

கண்டிப்பா திரைக்கதை மட்டுமே படத்திற்கு வலுச்சேர்க்கிறது. மற்றபடி படத்தில் விஜய் மாஸ், பிச்சி ஒதறிட்டார் என்றோ சொல்லுவதற்கு ஒன்றுமேயில்லை. ஆனாலும் படம் ஓவரோலா நல்லா இருக்கு இதனாலேயே விஜய கலாய்க்க வேண்டாமென இம்முறை எல்லோரும் கொஞ்சம் மாரியாதை குடுத்தா வாங்கிட்டு போகாம வடிவேலு பாணியிலே நாங்க போவம் இல்ல இங்கேயே மல்லா...க்க படுப்போம் மற்றது நின்னு அடி வாங்குறவந்தாண்டா உண்மையான ரவுடி என அடம்பிடிச்சதாலதான் இந்தப் பதிவு அவசியமா போச்சு. உண்மையான விஜய் ரசிகர்கள் மன்னிச்சு...

இத்தனைக்கும் விஜயின் ஆதி தொடக்கம் நண்பன் வரையிலான ஏராளமான படங்கள் திரையரங்குகளுக்கு பதில் போஸ்டரிலியே 100, 200 நாட்கள் ஓட்டப்பட்டது. இது உலகத்துக்கே தெரியும். அதெல்லாம் பரவாயில்லை இப்போ இந்த துப்பாக்கி படத்திற்கு தியேட்டரில் கூச்சல் போட எஸ்.ஏ.சி 30 லட்சம் செலவு பண்ணி கூட்டம் சேர்த்திருக்கிறாராம். எல்லா அப்பனுங்களுக்கும் மகன் எம்.ஜி.ஆர் ஆகணும் என்ட ஆசை இருக்கும் ஆனா உங்க ஆசை ரொம்ப ஓவராத் தெரியல.

சரி இதெல்லாம் நமக்கெதுக்கு படத்திற்கு வருவோம். படத்தின் திரைக்கதையால் படத்திலுள்ள ஓட்டைகளை மறந்து மன்னித்து படம் நல்லா இருக்கு என்று பெருவாரியான கருத்துக்கள் வெளியானதும் வழக்கமான அலம்பல்களை ஆரம்பித்துவிட்டார்கள் விஜய் ரசிகர்கள். ரஜினின்னா தூசு அஜித்ன்னா பீசு சூர்யான்னா கேசு விஜய்ன்னாதான் மாசுன்னு ஏன் மத்தவங்களை கொலைவெறியாக்குறயள்?

வழக்கமாக நான் அடிச்சா நீ பீசுடா என்டு சொடக்கு போட்டு பேசுவார் விஜய் அப்போ படம் பார்க்க வந்த எங்களுக்கு என்ன தோணும்னா 'நீ நடிக்கிறத பார்க்க வந்த நாங்கெல்லாம் லூசுடா' என அது மட்டும் இந்தப் படத்துல இல்லை. அடுத்தது கொஞ்சூன்னு சைட்ல முடி வெட்டிட்டுட்டு கூளிங் கிளாஸ் போட்டிருக்கார் அது கூட எப்படி இருகுன்னா 'க்ர்ர்ர்.. முதல்ல அந்த கண்ணாடிய களட்டுடா' என்று சொல்லத் தோணுது.

விஜய பொறுத்தளவில் வித்தியாசமா நடிச்சிருக்கிறாராமா. இதுக்கு காரணம் உண்மையான விமர்சனங்களை நக்கலா வெளியிட்ட ஏனைய நடிகர்களின் ரசிகர்களின் வெற்றியே. இதனாலதான் கொஞ்சம் வித்தியாசமான விஜயை இந்த படத்தில பார்க்க முடிஞ்சது இது தெரியாம ஏன் விஜய் ரசிகர்கள், விஜய் மாதிரியே சொடக்கெல்லாம் போடுறாங்க.

இத்தனைக்கும் படத்தின் கதை சாதாக் கதை அதாங்க விஜய்காந்த் காஷ்மீரிலிருந்த கன்னியாக்குமரி வரைக்கும் விரட்டிப்புடிச்ச தீவிரவாதிய மும்பையில மட்டும் புடிச்சிருக்கார் விஜய். அதே முஸ்லிம் தீவிரவாதி, அதுக்குதவுற பாதுகாப்பு துணை துணை துணை செயலாளர் அப்பதானே அவர் புரமோசனுக்காக தீவிரவாதிக்கிட்ட போட்டுக்குடுக்கிற வேலையைச் செய்யலாம். எத்தனை படத்துல பார்த்திருப்போம். சீ.எம். ஆக மந்திரியாக தீவீவீரவாதிகளுக்கு உதவுறத.

இப்பவரைக்கும் ஹீரோயினோட நெருக்கமான சீன விடமாட்டேங்கிறாரே 
இந்த கதைக்கு விஜயை கொஞ்சம் பொருந்தச் செய்து திரைக்கதையில் சிறப்பாக நகர்த்தி வெற்றி பெற்றிருப்பது இயக்குனர் முருகதாஸ் மட்டுமே. நடிக்க வேண்டிய காட்சியொன்றில் (போத்தல கீழ் வழியா அனுப்பி ராணுவ வீரன கொலை செய்யுறதா சொல்லுற காட்சி) விஜய் நல்லாவே சொதப்புறார். சுட்டுப்போட்டாலும் டாக்டருக்கு நடிப்பு மட்டும் வராது. அதை முருகதாஸ் உணர்ந்து கொண்டு அந்த கட்டத்தை நல்ல சுருக்கமா முடிச்சி நம்மள காப்பாத்திட்டார்.

அப்ப விஜய் இதுல என்னதான் செய்யுறார் என்டா முருகதாஸ் சொன்னதுல பாதிய செஞ்சி படத்தை கேவலமாக்க பாத்திருக்கார். எப்பிடியென்டா நீங்க ஆணியே புடுங்க வேணா... எல்லாத்தையும் நான் பார்க்கிறன் சார் என்டு முருகதாஸ் சொன்னத வெச்சிட்டு பாதி ஆணி புடுங்கியிருக்கார் நம்ம டாக்டர். அவர்தான் ஆப்பரேசன் கிங் ஆச்சே!

ஒப்பனிங் சீன்ல ஒரு ஆளை தோக்கடிச்சிட்டு அவரை விஜயின் நண்பனா காட்டுற அலுப்படிக்கும் சீன் இன்னும் எத்தனை படத்துல வந்து தொலைய இருக்கோ. இயக்குனர்கள்தான் காப்பத்தணும். திருமலையில மோட்டர் பைக் ரேஸ்ல ஜெயிச்சிட்டு குத்தொன்னு போடுவாங்களே அதே மாதிரிதாங்க... எப்பா கேக்கும் போதே கண்ண கட்டுதானே!!!

படத்துல எக்கச்சக்க ட்விஸ்ட்டாம். அப்படி ஒரு மண்ணும் கெடயாது ஈசியா அடுத்த சீன கண்டுபிடிக்கலாம். ஒரு சீன் தவிர தங்கச்சிய கடத்திட்டு போனதும் (இது சத்தியமாக ஆரம்பத்துலய கணிச்சுடலாம்) நாய விட்டு கண்டுபிடிக்கிறது எதிர்பார்க்கல்ல. ஆனாலும் அதுவும் மும்பையிலுருந்து மூணாறு வரைக்கும் போய் கண்டுபிடிக்கிற அளவுக்கு நாய்க்கு முடியுமான்னு என்னை கேட்காதிங்க! அவ்வளவு தூரம் போகுதுங்க அந்த நாயி (சத்தியமா நாயத்தான் சொன்னன்)

இது தவிர படத்துல ட்விஸ்ட் என்று சொல்லுறவங்க கண்டிப்பா விஜய் பேனாத்தான் இருக்கும் ஏன்னா விஜய் பேனாகுறதுக்கு முதல் தகுதியே மூளை கொஞ்சம் மந்தமா இருக்க வேண்டியதுதானே.

கத்திக்குத்து, போத்தல் சண்டைக் காட்சி கருமம் நல்லாவே இல்லை ஏன்னா இதவிட பல மடங்கு ஸ்டைலிஸ்ஸா இந்த சீன பில்லா 2வில் அஜித் செஞ்சிட்டார்.

மிஷன் இம்போசிஸிம்பிள் வர்ர அந்த சிப் மேட்டர், வில்லனை வீட்டுக்குள்ள வெச்சி காரியம் பண்ற மேட்டர் (இது ஏற்கனவே பார்த்த டெக்னிக் எளவு என்ன படம் என்டு ஞாபகம் வந்துதொலையுதில்லை),  கில்லி மாதிரி க்ளைமேக்ஸ்ல வில்லன மாங்க மடையனாக்குற மொக்கை வேலை (இந்த சீன் வெள்ளைப் படத்துல கூட இருக்கு) இதெல்லாம் பரவாயில்லை.

ஏன்னா... பஸ்ஸில பிக்பொக்ட் அடிச்சனவே கண்டுபிடிக்க விஜய் முயற்சிக்கும் போது குண்டு கொண்டுவந்தவன் பஸ்ஸிலிருந்து ஏன் சம்மந்தமே இல்லாமல் ஓடனும்? அப்படி மட்டும் செய்யாம இருந்திருந்தால் குண்டும் ஒழுங்கா வெடிச்சிருக்கும் அப்போ பஸ்ஸோட சேர்ந்த விஜயும் செத்திருப்பார் நாமளும் தப்பி இருப்போம்.

அப்புறமென்ன படத்திற்கு கதை இல்லையென்டு படத்தை முடிச்சிருப்பாங்க. இந்த கொசுத் தொல்லைகளிடமிருந்த பேச்சும் வந்திருக்காது. இந்த இடத்திலதாங்க விஜய அறிவாளியாக்கப் போய் முருகதாஸ் முட்டாள் ஆகிடுறார். அதே இடத்திலதான் எனக்கும் சந்தேகம் வருது

என்ன எளவுக்குடா அவன் ஓடினான்?
ஓடி கொஞ்ச நேரத்துல குண்டு வெடிக்கும் என்டு தெரிஞ்சா ஏன் அவ்வளவு நேரமா பஸ்ஸிலேயே இருந்தார்ர்ர்ர்?
சரி... பிக்பொக்கட்தான் அடிக்கல்ல குண்டையும் பஸ்ஸில வெச்சிட்டார் அப்புறமும் எதுக்கு ஓடினார்ர்ர்?
சரி... தற்கொலைக் குண்டுதாரின்னா என்ன எளவுக்கு ஓடினார்ர்ர்ர்?
(ர்ர்ர்ர்ரு ரொம்ப டர்ர்ர் இருக்கோ?)

So படத்திற்கு ஆரம்பமே இல்லை பின்ன எதுக்கு முடிவு வரை பேசுவான். அதவிட்டுட்டு 15 நாள் பட்டினி இருந்த பிச்சக்காரனுக்கு சட்னியில்லா இட்லி கிடைச்மாதிரி 2004க்கு பிறகு விஜய் பேன்ஸுக்கு இந்தப்படம் கெடச்சிருக்கு விடுவனா மாமன். சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுறவங்களாச்சே....

ஆனாலும் வாயால கார் ஓட்டுறது, ஊர் விட்டு அடுத்த ஊர் ட்ரெய்னுக்கு பறக்கிறது, புள்ளட்ஸ விட வேகமாக இயங்குறது என இதுல எதுவும் இல்லாதது கொஞ்சம் ஆறுதலளிக்கிறது.