நினைத்ததை முடித்து இன்று 653 மில்லியன் தடவைகள் யூடியூப்பில் பார்வையிடப்பட்டு யூடியூப் இணையத்தளத்தில் அதிகளவில் பார்வையிடப்பட்ட 2ஆவது வீடியோவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Park Jai-Sang, Yoo Gun-Hyung எனும் இருவரே இப்பாடலை எழுதி தயாரித்துள்ளனர்.
கங்ணம் என்பது கொரியாவிலுள்ள Seoul எனும் பிரதேசத்திலுள்ள ஒரு இடத்தின் பெயர். மேலும் Oppan Gangnam Style என்பதனை 'Big Brother is Gangnam Style ' எனவும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
கங்கணம் பாடலானது கங்ணம் பிரதேசத்திலுள்ள மக்களின் வாழ்க்கையை விளக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்திலுள்ள மக்கள் தங்களால் நிச்சயமாக முடியாது என்று தெரிந்த வேலைகளைக் கூட வீம்புக்காக செய்துகாட்ட கங்கணம் கட்டிக்கொண்டு அலைவார்களாம் அவர்களை கிண்டல் செய்ய நகைச்சுவையாக எடுக்கப்பட்டதே இந்த கங்ணம் பாடல். (அதான் நம்ம ஏரியாவிலும் இந்த பாட்டு பேமஸு...)
Park Jai-Sang |
ஜுலை மாதம் 15ஆம் திகதி வெளியான இப்பாடல் ஆரம்பத்தில் கொரியாவில் மேலும் சில நாடுகளிலும் பிரபல்யமாக இருந்ததனால் 09.15.2012 வரை சுமார் 250 மில்லியன் தடவைகள் மட்டுமே யூடியூப்பில் பார்வையிடப்பட்டிருந்தது. ஆனால் கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் 400 மில்லின் தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது.
இந்த வளர்ச்சிக்கு கிறிஸ் கைலும் ஒரு காரணம். 20க்கு 20 உலக்கிண்ணப் போட்டிகளில் அவர் ஆடியதன் பின்னரே எம்மவர்களிடையே பிரபல்யமானது. (கைல் ஆடுவதற்கு முதல் எனக்கு சத்தியமா தெரியாதுங்க)
மேலும் கடந்த மாதம் பாங்கி மூனால் உலக சமாதானத்திற்கான பாடலாக இதனை அறிவித்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த பாட்டுல ஏதோ இருக்கத்தான் செய்யுது நீங்களே கொஞ்சம் கேட்டுப்பாருங்க...
இது அசல் பதிப்பு தற்போது இது போல வெவ்வேறு மொழிகளில் வெளியான பதிப்புக்களும் உலாவுகின்றது.